சனி, 31 ஆகஸ்ட், 2019

காஃபி வித் கிட்டு – சச்சரவு – தோசை – அத்தி வரதர் – ஊர் சுற்றல்



காஃபி வித் கிட்டு – பகுதி – 43

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

இதயபூர்வமாய் வெற்றி பெறவே பிறந்தவர்கள் என நம்புகிறவர்கள், மிக எளிதாக உச்சிக்குச் சென்று விடுகிறார்கள். அதிர்ஷ்டமில்லாதவர்கள் என்று இதயபூர்வமாக நம்புகிறவர்கள் அப்படியே தோற்றுப்போய் விடுகிறார்கள்.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

கடைசி கிராமம் – கல்பா எனும் கிராமத்தில் ஓர் இரவு

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

கவலைகளின் அளவு கையளவாக இருக்கும் வரைதான் கண்ணீருக்கும் வேலை. அது மலையளவு ஆகும்போது மனமும் மரத்துப் போகும்கவிஞர் கண்ணதாசன்.

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

கடன் அன்பை முறிக்கும் – சோமு அண்ணா


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம்.

நீ எதைச் செய்தாலும் அதன் பொருட்டு உனது மனம், ஆன்மா, முழுவதையும் அர்ப்பணித்து விடுஸ்வாமி விவேகாநந்தர்.

புதன், 28 ஆகஸ்ட், 2019

ஹிமாச்சலப் பிரதேசம் – கடைசி கிராமம் நோக்கி ஒரு பயணம்


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஒரு சிறப்பான வாழ்க்கைத் தத்துவத்துடன் ஆரம்பிக்கலாம்.

காயங்களோடு சிரிப்பது அவ்வளவு எளிதல்ல. அப்படிச் சிரிக்கப் பழகிக் கொண்டால் எந்தக் காயமும் அவ்வளவு பெரிதல்ல…!

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

கதம்பம் – சாலை உலா – நம்பிக்கை – ஓவியம் – மணிகர்ணிகா – ஹெல்தி கேக்



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

நம்பிக்கை என்பது ஒரு நாளில் உதிர்ந்து விடும் பூவாக இருந்துவிடக் கூடாது. மேலும் மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும்அரிஸ்டாட்டில்.

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

எங்கே போகலாம் – உத்திராகண்ட் அல்லது ஹிமாச்சலப் பிரதேசம்


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, கவிஞர் கண்ணதாசனின் இனிமையான வரிகளுடன் ஆரம்பிக்கலாம்.

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்…

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

அழகை ரசிப்போம் வாங்க – நிழற்பட உலா – பகுதி ஒன்று



நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு பொன்மொழியுடன் துவங்கலாம்…

குறிக்கோளை அடையும் முயற்சியில் தான் மகிமை இருக்கிறது. அந்த குறிக்கோளை அடைவதில் இல்லைமகாத்மா காந்தி

சனி, 24 ஆகஸ்ட், 2019

காஃபி வித் கிட்டு – ஓயோ விளம்பரம் – ராஜா காது – கவிதை – வானவில் – காஃபி ஓவியம்





காஃபி வித் கிட்டு – பகுதி – 42

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:


வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

கோட்டைப்புரத்து வீடு…




ஏர்போர்ட்டில் இருந்து வெளிவருகிறான் விசு. அதாவது தற்போதைய கோட்டைப்புர சமஸ்தானத்தின் இளைய மஹாராஜா விஸ்வநாத ரூபசேகர கோட்டைபுரத்தார். அவனை அழைத்துச் செல்ல ஏர்ப்போர்ட்டிற்கு வந்திருந்தார் ”கார்வார் கருணாமூர்த்தி”. காரில் செல்லும் போது பைக்கில் வந்து இடைமறிக்கிறாள் அழகான இளம் யுவதி அர்ச்சனா. விசுவின் காதலி.

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

பேயின் மூக்கு…



நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளில் இப்பதிவின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு பொன்மொழியுடன் துவங்கலாம்…


புதன், 21 ஆகஸ்ட், 2019

ஆண்டாள் பாட்டி…


நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளில் இப்பதிவின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு பொன்மொழியுடன் துவங்கலாம்…

உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்ஸ்வாமி விவேகாநந்தர்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

பெத்த மனம் பித்து…



நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு பொன்மொழியுடன் துவங்கலாம்…

பணிவுடன் பழகாதவனும், நாணத்தகும் செயல்களில் இருந்து விலகிக் கொள்ளாதவனும் உண்மையான மனிதனாக மாட்டான்நபிகள் நாயகம்

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

கதம்பம் – டோரேமான் – சிக்கனம் சின்னு – வேஸ்ட் அல்ல - கோலம்



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

குறை சொன்னது யார் என்பதை இரண்டாவதாகப் பார்… உன்னை யாரேனும் குறை சொன்னால்… சொல்லப்பட்ட குறை உன்னிடம் உள்ளதா என முதலாவதாகப் பார்.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

பொன்முடி – கேரளா – நிழற்பட உலா…



நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு பொன்மொழியுடன் துவங்கலாம்…


வெளிநாடுகளிடமிருந்து நம் நாட்டைக் காப்பது போலவே, நம் நாட்டின் இயற்கை வளங்களையும் காக்க வேண்டும். இயற்கையை விடவும் பாதுகாக்க, நம்மிடம் வேறு என்ன இருக்கிறது?ராபர்ட் ரெட்ஃபோர்ட்


பொன்முடி! கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரம் கொண்ட மலைவாசஸ்தலம். 

மேற்கு தொடர்ச்சி மலைகளின் தொடர்ச்சியாக உள்ள இந்த ஸ்தலம் வருடம் முழுவதுமே இதமான வெப்ப நிலையை கொண்டுள்ளது. அதனால் எப்போதுமே சுற்றுலா பயணிகளின் வரவு இருக்குமாம். மலையின் அடிவாரத்தில் ”பெப்பரா வனவிலங்கு சரணாலயம்” அமைந்துள்ளது. இருட்டுவதற்குள் மேலே சென்று வர வேண்டும் என்பதால், இந்த சரணாலயத்திற்கு செல்ல முடியவில்லை.

மலையின் பாதி வழியில் GOLDEN VALLEY என்ற இடம் உண்டு. ஒருபுறம் மலைத் தொடர் மறுபுறம் பள்ளத்தாக்கு. முதலிலேயே தகவல் பலகை நம்மை வரவேற்று எச்சரிக்கிறது. பாறைகள் வழுக்கும் என்பதால் கவனமாக செல்ல வேண்டும் என்று… படிகளில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். பாசி படர்ந்து இருந்தது. குட்டீஸ்களை ஆளுக்கொருபுறம் பிடித்துக் கொண்டு, வழியில் தென்பட்ட மரங்களையும், கொடிகளையும் பார்த்துக் கொண்டு அமைதியான சூழலில் நடக்க ஆரம்பித்தோம். நிச்சயம் ரசிக்க வேண்டிய சூழல்….

பாறைகளின் ஊடே சலசலத்து ஓடி வரும் ஓடையைப் பார்க்கவே ஆனந்தமாக இருந்தது. காலணிகளை ஒருபுறத்தில் விட்டு விட்டு ஆற்றில் இறங்கினோம். பாறைகள் வழுக்குகின்றது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆற்றின் நடுவில் ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு தண்ணீரை ஒருவர் மீது மற்றொருவர் தெளித்து விளையாடினோம். சின்ன பசங்க தான் விளையாடுவாங்களா என்ன! நானும் இவர்களோடு சேர்ந்து கொண்டேன். என்னவரும் பிரமோத்தும் எங்களையும் தாண்டி ஆளுக்கொரு புறம் உயரமான பாறைகளை தேர்ந்தெடுத்து அங்கு நின்று கொண்டு எங்களையும் இயற்கையின் அழகையும் புகைப்படமெடுத்து தள்ளினார்கள்.

தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தாலும் இவர்களின் மேலும் ஒரு கண்ணை வைத்திருந்தோம்…:) மனமின்றி அங்கிருந்து கிளம்பி மேலே ஏறுவதற்கு முன் ஊஞ்சல் போலிருந்த மரத்தின் மீது அமர்ந்து கொண்டு படங்கள் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். அடுத்து நாம் செல்லப் போவது 21 கொண்டை வளைவுகளை கொண்ட பொன்முடியின் உச்சிக்கு….

பொன்முடியைச் சுற்றி தேயிலைத் தோட்டங்களும், மரங்களும், செடி கொடிகளும் என என்னே இயற்கையின் பேரழகு!!! பசுமையின் வனப்பு எங்கும் தென்பட்டது. வரிசையாக கொண்டை ஊசி வளைவுகளையும், வழியில் தென்பட்ட குரங்குகள், பறவைகள் என ரசித்துக் கொண்டே சென்றோம். ஏறக்குறைய உச்சிக்கு சென்றடையும் நேரத்தில் வழக்கம் போல் மழை பெய்ய ஆரம்பித்து விட்டது :) மழை நின்றதும், ஒருபுறம் சூரியன் எட்டிப் பார்க்க மறுபுறம் வானவில் தோன்றியது. நல்ல சிலுசிலுவென காற்று வேறு…. கேட்கவா வேண்டும். புகைப்பட கலைஞருக்கு :)

இங்கு சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கி இயற்கையை ரசிக்க காட்டேஜ்கள் உள்ளன. சென்ற முறை பிரமோத்தின் குடும்பத்தினர் முதல் நாள் பொன்முடியின் உச்சிக்கு வந்து காட்டேஜ் எடுத்து தங்கி சுற்றி விட்டு மறுநாள் இறங்கும் போது வனவிலங்கு சரணாலயத்திற்கு சென்று விட்டு வந்தார்களாம். நமக்கு இந்த முறை நேரம் இல்லை. அடுத்த முறை அது போல் செய்ய வேண்டும்.

உச்சிக்கு சென்று விட்டோம். காவல் துறையின் வயர்லெஸ் அலுவலகம் இங்கு உள்ளது. மீண்டும் தூறல். இங்கு ஒரு இடத்தில் கட்டையால் தடுத்துள்ளனர். வண்டிகள் இந்த தடுப்பைத் தாண்டி செல்ல அனுமதியில்லை. தடுப்புக்கு அடுத்துள்ள 200 மீட்டர் இடம் தமிழகத்தினுடையதாம். சிறிது நேரம் வண்டியிலேயே அமர்ந்து கொண்டு ரசித்தோம். பின்பு நானும் என்னவரும் மட்டும் ஆளுக்கொரு குடை சகிதமாக இறங்கி தடுப்புக்கு அப்பால் உள்ள தமிழகத்தின் எல்லை வரை சென்று வந்தோம். அதற்கப்பால் வழி இல்லை. பள்ளத்தாக்கு தான். அமைதியான இயற்கை சூழ்நிலையில், சில்லென்ற காற்று உடனிருக்க, மழைத் தூறல் வேறு நம்மை சிலிர்க்க வைக்கிறது. நிச்சயம் மறக்க முடியாத அருமையான அனுபவம் :)

இருட்டத் துவங்கி விட்டதால் அடுத்த முறையும் இங்கு வந்து இரண்டு நாட்களாவது தங்கி இயற்கையின் அழகை அனுபவிக்க வேண்டும் என்று முடிவு செய்து அங்கிருந்து மனமின்றிக் கிளம்பினோம். பொன்முடியில் என்னவரும் நண்பர் ப்ரமோத்-உம் எடுத்த படங்கள் சில இங்கே ஒரு நிழற்பட உலாவாக…













































நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  நாளை வேறொரு பதிவில் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்.

பின்குறிப்பு: கோவை2தில்லி தளத்தில் எழுதிய பதிவு ஒன்றிலிருந்து தகவல்கள் – படங்கள் மட்டும் புதிதாக!

சனி, 17 ஆகஸ்ட், 2019

காஃபி வித் கிட்டு – ஐந்தாயிரம் – கவிதை – குறட்டை – ஏட்டா பயணம்



காஃபி வித் கிட்டு – பகுதி – 41

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

நேற்று நடந்தவற்றை உங்களால் மாற்ற முடியாது. நாளை நடப்பதைத் தடுக்க முடியாது. இன்றைய பொழுதில் இக்கணத்தில் வாழுங்கள். அது தான் எல்லாத் துன்பங்களுக்கும் ஒரே தீர்வு – புத்தர்.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

சௌந்திரம் – பாசத்தின் வாசம்…




டிங் டாங்… டிங் டாங்… வாசலிலிருந்து அழைப்பு மணியின் ஓசை. பொதுவாக நம்மைத் தேடி வருபவர் யாரும் கிடையாதே… வீடு தேடி நம்மை பார்க்க வந்தவர் யாரோ? குழப்பத்துடனேயே கதவைத் திறந்தேன். வாசலில் சௌந்தரம்மா…

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

சுதந்திர தினம் - வாழ்த்துகள்



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

எவன் ஒருவன் தன் தற்காலிக நலனுக்காகச் சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கிறானோ அவன் ஒரு பொழுதும் சுதந்திரம் பெறத் தகுதியுடையவனல்ல – ஃப்ராங்க்ளின்.

புதன், 14 ஆகஸ்ட், 2019

இரண்டாயிரம்…



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

ஒரு செயலை இதய பூர்வமாக செய்யும்போது தான் அந்தச் செயல் மதிப்பும் சிறப்பும் பெறுகிறது - புத்தர்

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

அலுவலக அனுபவங்கள் – அலங்கார பூஷிதை




அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

உன் உலகம் தலைகீழாகத் திரும்பினாலும் கவலை கொள்ளாதே… மறுபக்கத்தில் இன்னும் அழகான உலகம் உனக்காகக் காத்திருக்கலாம்…

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

நூற்றாண்டு உறக்கம் - கவிதைகள் – கிண்டில் வாசிப்பு



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லைசிசரோ.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

கதம்பம் – ஜோதிகாவின் ஜாக்பாட் – சோர்வு – ஓவியம் – டிப்ஸ்




அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒரு முறை சந்திப்பதே மேல் - டெஸ்கார்ட்டெஸ்.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

உங்கள் மனைவியிடம் அடிவாங்கிய அனுபவம் உண்டா


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, திருமணம் பற்றிய ஒரு ஆங்கில வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


வியாழன், 8 ஆகஸ்ட், 2019

மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது…


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்கள் எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதைத் தவிர மாறாதது உலகில் இல்லைகார்ல் மார்க்ஸ்.

புதன், 7 ஆகஸ்ட், 2019

அலமேலு போல வருமா…



அலமேலு…. அலமேலு போல வருமா… அவளோட கைப்பக்குவம், நறுவிசு, சுத்தம் இதெல்லாம் வேறு யாருக்குமே வராது… அவ ரசம் வைச்சு சாப்பிடணும்… ரசம் கொதிக்கும்போதே அதன் சுவை நாசி நரம்புகளில் ஏறும்… தெருவே அலமேலு மாமி ரசம் வைக்கறாங்கன்னு தெரிஞ்சுக்கும். அப்படி ஒரு ரசம் வைப்பா அலமேலு… நினைவுகளில் மூழ்கினார் ராமு தாத்தா.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

அலுவலக அனுபவங்கள் – ஹர்ஷத் மேஹ்தாவும் சாக்லேட் கிருஷ்ணாவும்




அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை சமீபத்தில் படித்து ரசித்த ஒரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

உனக்கு இன்று ஏற்பட்ட துன்பங்களுக்காக வருந்தாதே. ஏனெனில் அது தான் உனக்கு வருங்காலத்தில் எதையும் தாங்கும் இதயத்தை அளிக்கப் போகிறதுயாரோ.

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

டிஜிட்டல் கேண்டீன் – கீதா கல்யாணம் – கிண்டில் வாசிப்பு




அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறீர்களா, ஒரு நூலகத்துக்குச் செல்லுங்கள்டெஸ்கார்டஸ்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

ஜார்க்கண்ட் – சாலை காட்சிகள் – நிழற்பட உலா




அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி - இந்த மூன்று நற்குணங்களோடு அன்பும் சேர்ந்து விட்டால் உலகமே சொர்க்கமாகிவிடும்விவேகானந்தர்.

சனி, 3 ஆகஸ்ட், 2019

வாங்க பேசலாம் – போக்சோ – சிறையில் அடைக்கப்பட்டவர்




அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

மரணம் எந்த விதமாகவும் வரலாம். ஆனால், காரணம் மட்டும் கௌரவம் உடையதாக இருக்க வேண்டும்அலெக்சாண்டர் புஷ்கின்.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

நாற்பத்தி இரண்டு நாள் பயணம் – பயணங்கள் முடிவதில்லை…


அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்பதை, என் வலைப்பூவினை தொடர்ந்து படிப்பவர்கள் நன்கு அறிவார்கள். நான் சென்ற பயணம் பற்றிய பதிவு அல்ல இது. ஆனால் சமீபத்தில் பயணம் பற்றி படித்த இரண்டு கட்டுரைகளும், 31 பெண்கள் மட்டுமே சென்று வந்த ஒரு பயணம் பற்றிய தகவலும் தான் இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். அதற்கு முன்னர், இந்த நாளை இனியதோர் பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாமா! 


வியாழன், 1 ஆகஸ்ட், 2019

காஃபி வித் கிட்டு – ரசித்த சிற்பமும் கதையும் – கணக்கு தப்பாது – ரசித்த பாடல் – கார்ட்டூன் – என்ன ஆகும்






காஃபி வித் கிட்டு – பகுதி – 39

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.