ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

அழகை ரசிப்போம் வாங்க – நிழற்பட உலா – பகுதி ஒன்றுநண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த ஞாயிறின் காலையில் உங்களை இப்பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த நாளை இனியதொரு பொன்மொழியுடன் துவங்கலாம்…

குறிக்கோளை அடையும் முயற்சியில் தான் மகிமை இருக்கிறது. அந்த குறிக்கோளை அடைவதில் இல்லைமகாத்மா காந்தி

சென்ற வாரத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு பயணம் சென்று வந்தேன். முதுகுச் சுமையோடு ஒரு பயணம் – உள்ளூர் பேருந்துகளில் ஏறிக்கொண்டு நினைத்த இடங்களில் இறங்கி கால்நடையாகப் பயணித்து, நதிக்கரையோரங்களில் அமர்ந்து இயற்கையையும், அங்கே நிலவும் அமைதியான சூழலையும் ரம்மியமான காட்சிகளையும் ரசித்து வந்தேன். உடன் ஒத்த கருத்துகளை உடைய நண்பர் ப்ரமோத்! எத்தனை இன்பம் வைத்தாய் இறைவா என்று சொல்லாத மணித்துளி இல்லை இந்தப் பயணத்தில்! பயணம் எங்கே, என்ன பார்த்தோம் என்பதை எல்லாம் முடிந்தால் பிறகு எழுதுகிறேன். இப்போதைக்கு பயணத்தில் பார்த்த சில இயற்கை அன்னையின் அருட்கொடை காட்சிகள் சில ஒரு முன்னோட்டமாக!
நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  நாளை வேறொரு பதிவில் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி

28 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. படங்கள் சிறப்பு. அழகிய மலர்களின் அணிவகுப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி

  வாசகம் ஓகே..

  //உள்ளூர் பேருந்துகளில் ஏறிக்கொண்டு நினைத்த இடங்களில் இறங்கி கால்நடையாகப் பயணித்து, நதிக்கரையோரங்களில் அமர்ந்து இயற்கையையும், அங்கே நிலவும் அமைதியான சூழலையும் ரம்மியமான காட்சிகளையும் ரசித்து வந்தேன்.//

  ஆ ஆஹா...நான் மிக மிக விரும்பும் ஒன்று. இஷ்டத்திற்குப் பயணித்து அதுவும் பேருந்துகளில் அந்த மக்களோடு மக்களாக...பூமித்தாயின் அழகை ரசிக்க வேண்டும் இப்படியான இடங்களை என்று மனதில் தோன்றும். மகனிடம் சொன்னால் உடனே அம்மா கொஞ்சம் பொறு நான் செட்டில் ஆனதும் செய்துடுவோம் என்று சொல்வான்..

  நீங்கள் மிகவும் ரசித்து அனுபவித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது ஜி...மிக்க மகிழ்ச்சி. இப்படியானவை நம் வாழ்வில் மிக மிக அவசியம் நம்மை உற்சாகபடுத்திக் கொள்ள.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதாஜி!

   இப்படி பயணிப்பது கொஞ்சம் சிரமமானது என்றாலும் பிடித்திருக்கிறது. இந்தப் பயணம் மிகவும் பிடித்த பயணங்களில் ஒன்றாக அமைந்தது கீதாஜி. உங்களுக்கும் இப்படியான பயணம் விரைவில் அமையட்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. ஜி படங்கள் என்ன சொல்ல எதை விட எதைப் பாராட்ட என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒவ்வொன்றும் அத்தனை அழகு. நீங்கள் ரசித்து ரசித்து எடுத்திருப்பதும் தெரிகிறது...

  அந்த இலை வாவ்..கீழிருந்து மேலே ஆறாவது...அப்புறம் அந்த வண்டு...எல்லாமே செமையா வந்திருக்கு ஜி...அழகோ அழகு...மிக மிக ரசித்தேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பயணத்தில் இப்படித் தேடித் தேடி சில பூக்களையும், மனிதர்களையும் படம் எடுத்தேன். சில படங்கள் மட்டும் இங்கே. அடுத்த வாரத்திலும் சில படங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என வைத்திருக்கிறேன். பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 5. மிக அழகான படங்கள். படங்களில் நிறைய வேலை செய்திருக்கிறீர்களோ என நினைத்தேன். இயற்கையின் விசித்திரங்கள் அளவில் அடங்க முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //படங்களில் நிறைய வேலை செய்திருக்கிறீர்களோ// இல்லை. Crop மட்டுமே செய்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
  2. ஆஹா, நினைத்தேன்! இம்மாதிரிச் செய்த படங்களை விடச் செய்யாமல் அப்படியே இருக்கும் படங்களே அழகாய் இருப்பதாக என் கருத்து! ராமலக்ஷ்மி சொல்லிக் கொடுத்து நானும் சில, பல படங்களில் செய்தேன். ஆனால் என்னமோ எனக்கே பிடிக்கலை! :))))) அசங்கினாலும் பரவாயில்லைனு அப்படியே போட்டுடுவேன். :))))

   நீக்கு
  3. சில படங்களில் தேவையில்லாதவற்றை இப்படி வெட்டி விடுவது நல்லது. இது பெரும்பாலானவர்கள் செய்வது. இப்படிச் செய்வதால் எதை எடுக்க நினைத்தோமோ அதை மட்டுமே வைத்துக் கொள்ளலாம்.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 6. காலையில் அற்புதமான காட்சிகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 7. அழகான படங்கள் மனதிற்க்கு மகிழ்சியை அளித்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

   நீக்கு
 8. //உடன் ஒத்த கருத்துகளை உடைய நண்பர் ப்ரமோத்! //

  அதுதான் மிகசிறப்பு.

  படங்கள் எல்லாம் மிக அழகு.இயற்கையை ரசிக்க தெரிந்து விட்டால், நேரமும், உடலும் ஒத்துழைத்தால் பார்க்க இடங்கள் நிறைய இருக்கிறது.

  அழகான படங்கள். பார்க்கும் போது மகிழ்ச்சியை தருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /நேரமும் உடலும் ஒத்துழைத்தால் பார்க்க இடங்கள் நிறைய இருக்கிறது// உண்மை தான் மா... இந்தியாவின் உள்ளேயே நிறைய இடங்கள் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 9. மனதை உற்சாகமளிக்கும் படங்கள் ஜி... உங்களால் இதுவும் சாத்தியம்... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. இயற்கையின் எழிலை வெகு சிறப்பாகப் படமாக்கியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 11. மிக அழகான படங்கள் வெங்கட்.
  ஆமாம் க்ராப் செய்வதால் நாம் எடுக்க நினைத்த பிம்பம்
  கிடைக்கும். மிக அழகான மலர்கள்.
  மனம் நிறை வாழ்த்துகள் மா.
  நடைப் பயணம் மனதை இலேசாக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 12. படங்கள் கைபேசியில் எடுக்கப்பட்டவையா? தேன் சிட்டு படம் எடுக்க எவ்வளவு பாடு பட்டீர்கள்? ஷட்டர் ஸ்பீட் கொஞ்சம் குறைத்திருந்தால் இறக்கையும் தெரிந்திருக்கும். முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். பூக்கள் படங்கள் சிறப்பு.
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. DSLR Camera-வில் எடுத்த படங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 13. இயற்கை எமக்கு தந்திருக்கும் கொடைகள் . மிகுந்த ரசனை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....