வெள்ளி, 24 மே, 2024

23ஆம் ஆண்டில் அடியெடுத்து….
இந்த மனதிற்கு தான் எத்தனை எத்தனை உணர்வுகள்! சட்டென்று திரும்பி பார்த்த போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது! மிகவும் பிரயத்தனப்பட்டு கடத்திய நாட்கள் தான் எங்கே!! இப்போது இவ்வளவு தூரமா வந்துவிட்டோம் என்று பிரமிப்பாக உள்ளது!


ஒரு பார்வையாளராக என்னை நானே உற்று பார்க்கிறேன்! காலம் தான் எனக்கு எவ்வளவு பரீட்சைகள் வைத்து பார்த்திருக்கிறது! என் ஆசைகளுக்கும், கனவுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் பதில் தந்திருக்கிறது! இப்படித்தான் இருக்கணும் என இறைவன் முடிவு செய்ய அதை நாம் எங்கே மாற்றுவது!! 


தனித்திருந்து தன்னம்பிக்கையை, தைரியத்தை, வாழ்க்கைக்கான பக்குவத்தை, யாரின் மீதும் பற்று வைக்காதிருக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளவும் சாதிக்கவும் நேரம் ஒதுக்கியதாக தான் நினைக்கிறேன்! இந்த எண்ணங்கள் எல்லாம் நேரம் காலம் பொறுத்து தான் வரும்!


வாழ்க்கைப் படகில் கரம் கோர்த்து பயணிக்கத் துவங்கி வருடங்கள் பல கடந்து விட்டாலும் துவக்கத்தில் இருந்த உற்சாகமும், ஈர்ப்பும் அந்தப் பயணம் முழுவதும் இருக்குமா என்றால் அது நம்மை நம் சுற்றியிருக்கும் சூழலை பொறுத்தே இருக்கும்!


ஒருவர் மீது மற்றவர் கொண்டிருக்கும் நம்பிக்கையும்,  அன்பும், புரிதலும் தான் சங்கிலி போல் பிணைந்து பெரும் காற்றுக்கும் மழைக்கும் புயலுக்கும் நடுவே அரண் போல் பாதுகாத்து அவர்களை கரை சேர உதவும்! கடந்து வந்த பயணத்தை அவ்வப்போது அசை போட்டு பார்த்தால் வாழ்வின் மீதான புரிதல்கள் புரிய வரும்!


இந்த இனிய நாளில் எங்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்ட நட்புகளான உங்கள் அனைவரின் வாழ்த்துகளும் ஆசிகளும் மாரி போல் மலர் தூவி எங்கள் மீது பொழிந்தால் மிகவும் மகிழ்வோம்!


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்.

24/5/24

ஞாயிறு, 19 மே, 2024

கதம்பம் - ரோல் நம்பர் 1 - பால் சர்பத் - மழை - சின்சியர் ஸ்டூடெண்ட் - ஆசை முகம் மறந்தாயோ


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட சித்திரைத் தேர் திருவிழா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். *******

வியாழன், 9 மே, 2024

சித்திரைத் தேர் திருவிழா - 2024 - திருவரங்கம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். *******

புதன், 8 மே, 2024

கதம்பம் - ஆரி ஒர்க் - ரங்கனின் பவனி - வாழ்க்கையின் ஓட்டம் - கருட சேவை - பலா - கோயில் உலா - கஸ்டர்ட் குல்ஃபி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட மீண்டும் மாணவியாக…!! பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். *******