ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

மீண்டும் மாணவியாக…!!

 





சிறுவயது முதலே நிறைய படிக்கணும்னு ஆசை! தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டே படிக்கணும்! எனக்கென்று அடையாளம் ஏற்படுத்திக்கணும் என்றெல்லாம் ரொம்ப ஆசைப்பட்டேன்! அப்போது பள்ளி, கல்லூரி படிப்புகளைத் தாண்டி ஹிந்தி தேர்வுகள், Autocad, CNC milling & Turning என்று தனியே தேர்வுகள் பல எழுதியும் சில கோர்ஸ்களும் முடித்திருக்கிறேன் என்றாலும் வாழ்க்கைப் பாதை மாறியதில் கற்றல் என்பது நின்றே போய்விட்டது!


கற்றலுக்கு வயது ஒரு தடையே இல்லை! இந்நாளில் எந்த வயதிலும் எளிதில் கற்கலாம்! அதுவும் ஆன்லைனில் கற்றல் மிக மிக எளிமையானது! இதற்காக அலைய வேண்டாம்! வேலை இருக்கிறதே என கவலையும் வேண்டாம்! நம் நேரத்திற்கு ஏற்றாற் போல் வகுப்புகளை அமைத்துக் கொள்ளலாம் என்பதெல்லாம் எவ்வளவு சிறப்பு! 


சமீபத்தில் ‘சமஸ்கிருத’ மொழியை வீட்டிலிருந்தே  ஆன்லைன் வழியே கற்கலாம் என்ற பதிவு ஒன்றை எழுத்தாளர் ‘வித்யா சுப்ரமணியம்’ மேம் தன் பக்கத்தில் பகிர்ந்திருந்ததை பார்த்த போது சட்டென என்னுள் ஒரு ஆர்வம்! என்னவரிடம் இதைப் பற்றிச் சொல்லி அவரின் அனுமதி பெற்றதும், மகள் என்னை வகுப்பில் சேர்த்து விட்டாள்!


நேற்று தான் என் முதல் வகுப்பு Zoom meetingல் துவங்கியது! எனக்கு தான் எல்லாமே perfectஆக preparedஆக இருக்கணுமே…:) வகுப்பு துவங்குவதற்குள் இரவு உணவிற்கு அரிசி உப்புமாவை வெங்கலப் பானையில் கிளறி இறக்கி விட்டு அரிசி நிரப்பிய தாம்பாளத்துடன் வகுப்பில் அமர்ந்தேன்..:) அக்ஷ்ராப்யாஸம் செய்து தானே முறைப்படி கற்க வேண்டும் இல்லையா!


அப்பா பித்து கொண்ட பெண்ணான எனக்கு சிறுவயது முதலே எந்த ஒரு செயலைத் துவங்க வேண்டும் என்றாலும் அப்பா தான் செய்து கொடுக்க வேண்டும் என்பேன்! இப்போது மீண்டும் மாணவியாக உருவெடுத்திருக்கும் எனக்கு ஆரம்பித்து கொடுக்க அப்பா இல்லையே! என்னவரும், மகளும் தான் எனக்கு வாழ்த்துச் சொல்லி வகுப்பிற்குள் உள்நுழைய உதவி செய்தார்கள்!


இனி! எனது பாதையில் அன்றாட  வகுப்புகள், வீக்லி டெஸ்ட்டுகள், எக்ஸாம்ஸ் என்று இருக்கும்! நிச்சயம் இது ஒரு புதுவிதமான அனுபவம்! பல்வேறு பகுதிகளிலிருந்தும் கற்பவர்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! எங்களுடைய குருஜி மிகவும் மென்மையாக, பொறுமையாக சொல்லிக் கொடுக்கிறார்!


ஹிந்தி முன்பே தெரிந்திருப்பதால் கற்பதற்கு எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன்! சமஸ்கிருதத்திற்கு என தனியே எழுத்துக்கள் இல்லை! தேவநாகரி எழுத்துகள் தான்! பார்க்கலாம்! என்னுடைய ஆர்வம் எதுவரைச் செல்கிறது என்று..:) மகள் journalism சேரும் போதே எனக்கும் மிகுந்த ஆர்வம் இருந்தது! யோசித்து பார்த்ததில் அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவியாயிருக்கும்! அவள் படிக்கட்டும் என விட்டுவிட்டேன்..:)



டிஸ்கி - அப்போதைய என் புத்தகத்தில் அப்பாவின் எழுத்தும் என்னுடைய எழுத்தும்!


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்.

21/4/24

10 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்களின் பதிவை படித்து விபரங்களுடன் தெரிந்து கொண்டேன். தங்களின் படிப்பார்வத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து தயக்கமின்றி படித்து தேர்வுகளில் வெற்றியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இறைவன் அருள் தங்களுக்கு என்றும் உண்டு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், பதிவு குறித்த தங்களின் மேலான கருத்துகளுக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள் கமலா ஜி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், பதிவு குறித்த தங்களின் மேலான கருத்துகளுக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் என் மனமார்ந்த நன்றிகள் கில்லர்ஜி சார்.

      நீக்கு
  3. அரிசி தாம்பாளத்துடன் அக்ஷரபராசத்துக்கு அமர்ந்த உங்கள் ஆர்வம் வாழ்க...  (அதுவும் வெண்கலப்பானையில் இரவு உணவாக அரிசி உப்புமா கிளறிவிட்டு!)  உங்கள் அப்பா உங்கள் கூடவே நின்று வழி நடத்துவார்.  மீண்டும் கற்க வந்திருக்கிறீர்கள் என்று தெரிந்ததுமே உங்கள் அருவில் வந்து உங்கள் கையைப் பற்றியிருப்பார்.  உங்கள் ஆர்வம் வாழ்க.

    பதிலளிநீக்கு
  4. கற்றல் தொடர வாழ்த்துகள் ஆதி.
    அப்பாவின் ஆசிகள் உங்களுக்கு எப்போதும் உண்டு. இருவர் கையெழுத்தும் நன்றாக இருக்கிறது.
    என் கணவரும் சமஸ்கிருத மொழி படித்தார்கள்.
    10 வது படிக்கும் பொது விருப்ப பாடமாக எடுத்து படிக்க சொன்னார் சமஸ்கிருத ஆசிரியர் . நான் மாட்டேன் என்று சொல்லி வரலாறு எடுத்தேன். அவர் என்னை பார்க்கும் போது எல்லாம் "படிக்கமாட்டேன் என்று சொல்லி விட்டாயே" என்று ஆதங்க படுவார். என் மாமாவுடன் பணி புரிந்தவர்.

    பதிலளிநீக்கு
  5. சமஸ்கிருதம் கற்றுக் கொள்வதற்கு மகிழ்ச்சி..

    நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  6. சமஸ்க்ருதம், ஹிந்தி தெரிந்திருப்பதால் சிறிது சுலபமாக இருக்கும். அதில் தடுமாற்றம் பேசும் மொழியாக, கற்றலுன் பகுதி வரும்போதுதான் இருக்கும். நான் இப்படித்தான் ஓரிரு வருடங்கள் முன்பு வாட்சப் மூலமா கிரந்தம், கல்வெட்டு எழுத்துகள் படித்தேன் (பிறகு மறந்தது வேறு விஷயம்). ஞாயிறு வாட்சப் கேள்விகள் வந்து, பதில் நோட்டில் எழுதி ஸ்கேன் பண்ணி அனுப்பணும். ரொம்ப ஆர்வமாகச் செய்தேன்). அதுபோலவே நீங்களும் உங்களை பள்ளி மாணவியாக உணர்வீர்கள். உருப்படியான விஷயமாக அது இருக்கும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. ஆர்வமுடன் சமஸ்கிருதம் கற்றலுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா2 மே, 2024 அன்று AM 8:04

    ஆதி உங்க் ஆர்வத்திற்கு வாழ்த்துகள்! திறம்பட கற்பீங்க!!

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....