வியாழன், 31 மே, 2018

யார் உண்மையான வாரிசு – ஒரு வட இந்திய கதை…


”நிறுத்துங்க!”

”எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்யலாம்” இடுகாட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு திரும்பிப் பார்க்கிறார்கள்.

புதன், 30 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – விண்டேஜ் வில்லேஜ் – கார்களின் மதிப்பு கோடிகளில்இரு மாநில பயணம் – பகுதி – 45

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!அடலாஜ் கி வாவ் – ரூதாபாய் படிக்கிணறுகளைப் பார்த்த பிறகு நாங்கள் புறப்பட்டுச் சென்ற இடம் – Dastan Auto World - விண்டேஜ் வில்லேஜ் - இந்த இடத்திற்கு கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என கேரள நண்பர் ப்ரமோத் திட்டமிட்டிருந்தார் – அப்படி என்ன ஸ்பெஷல் அங்கே? ஒரு தனி நபர் எத்தனை கார்கள் வைத்திருக்க முடியும்? அதுவும் மிகவும் புராதனமான விண்டேஜ் வகைக் கார்கள் எத்தனை வைத்திருக்க முடியும் – ஒன்று, அல்லது இரண்டு – அதிக பட்சமாக 10! இந்த இடத்தில் மட்டும் இருக்கும் கார்கள் 106! இதைத் தவிர இவர் பங்க்ளாக்களில் இருக்கும் கார்களின் எண்ணிக்கை 134 – ஆக மொத்தம் 250 கார்கள்! அத்தனை கார்களின் மதிப்பு கோடிக் கணக்கில்.

செவ்வாய், 29 மே, 2018

கதம்பம் – கொழுக்கட்டை – கோவை வீடு – நரகப் பேருந்து – சுட்டெரிக்கும் திருச்சிகொழுக்கட்டை:

நம்ப சொப்புச் சாமான் வைத்து சிறுவயதில் விளையாடியிருக்கிறோமே. அதே போல் இவங்களும் நிறைய ரெசிபி செஞ்சு காட்டியிருக்காங்க. மகள் தேடியதில் கிடைத்தது. பார்க்கவே ஆசையா இருக்கு. கண்டிப்பா பாருங்க.

திங்கள், 28 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – அடலஜ் கி வாவ் – இன்னுமொரு படிக்கிணறுஇரு மாநில பயணம் – பகுதி – 44

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


தண்ணீரில் பிம்பம்.... கூடவே வெள்ளையாய் சிறு சிறு புள்ளிகள் - 
அது என்ன? இதைப் புகைப்படப் புதிராக வைத்துக் கொள்ளலாம்!
அடலஜ் கி வாவ்....

காந்திஜியின் சபர்மதி ஆஸ்ரமத்திலிருந்து புறப்பட்டு அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் ஒரு படிக்கிணறு – அஹமதாபாத் நகரின் எல்லைக்குள்ளேயே அமைந்திருக்கும் இந்த படிக்கிணற்றின் பெயர் அடலஜ் கி வாவ்.  இந்தப் பயணத் தொடர் ஆரம்பிக்கும் போது எழுதிய ராணி கி வாவ் பதிவுகள் உங்களுக்கு நினைவிலிருக்கலாம். இல்லாதவர்கள் மீண்டும் ஒரு முறை படித்து, படங்களைப் பார்த்து விடுவது நல்லது – அந்த படிக்கிணற்றுக்கும் இந்த படிக்கிணற்றுக்கும் இருக்கும் வித்தியாசங்கள் உங்களுக்குப் புலப்பட ஏதுவாக இருக்கும். அடலஜ் கி வாவ் – இங்கே என்ன இருக்கிறது, இந்த இடத்தில் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

ஞாயிறு, 27 மே, 2018

தலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 2சென்ற வாரம் தலைநகரில் எங்கள் வீட்டின் வெகு அருகிலேயே திருமலா திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் பெருமாள் கோவில் பிரஹ்மோத்ஸவ நிகழ்விலிருந்து சில புகைப்படங்கள் பகிர்ந்து கொண்டேன். இன்று அதன் தொடர்ச்சியாக இன்னும் சில படங்கள் – இந்த படங்கள் வேறு ஒரு நாள் உற்சவத்தின் போது எடுத்தது – முதலில் பகிர்ந்த அலங்காரத்தில் இருந்து மாறுபட்ட அலங்காரம்.சனி, 26 மே, 2018

கதம்பம் – சொர்க்கமே என்றாலும் – பள்ளி பருவ நட்புகளுடன் சந்திப்பு


சமீபத்தில் கோவைக்கு ஒரு பயணம் – பள்ளிப் பருவ நட்புகளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. அதற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள்….

திருச்சி ஜங்ஷனில் – தூய்மை இந்தியாவெள்ளி, 25 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – தமிழனும் மலையாளியும்இரு மாநில பயணம் – பகுதி – 43

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!சென்ற பகுதியில் சபர்மதி ஆஸ்ரமத்தின் சில காட்சிகளையும் தகவல்களையும் பார்த்தோம். அங்கே சொல்லாமல் விட்ட சில விஷயங்கள் இங்கே இன்றைக்கு தனிப்பதிவாக…..  ஆஸ்ரமத்தின் நுழைவாயிலில் ஒரு அறிவிப்புப் பலகை – இங்கே இருக்கும் தபால் பெட்டியில் போடும் தபால் அட்டையில் சர்க்கா அதாவது இராட்டை வடிவம் பொறித்து அனுப்பப்படும் – சாதாரண வட்ட வடிவ Seal போல இல்லாது இராட்டை வடிவ Seal வைத்து அனுப்புவார்கள் என தகவல் தெரிவித்தது. அதற்கான தபால் அட்டைகளும் ஆஸ்ரமத்திற்குள்ளேயே கிடைக்கிறது. வெளியில் பார்த்தபோதே ஒரு தபால் அட்டை வாங்கி மகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

வியாழன், 24 மே, 2018

திருமண நாள்.....பதினாறு வருட நிறைவான வாழ்க்கை! ஒருசில கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் பெரும்பாலும் ஒன்று போலவே சிந்திப்போம்.. கைப்பிடித்த நாளில் இருந்த அன்பும், அக்கறையும் இன்றும் தொடர்கிறது..

திருமணம் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இருவருமே கரம் பற்றியிருக்கிறோம்..அப்படியே ஏற்றுக் கொண்டு புரிதலுடன் வாழ்கிறோம்.. அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் மனம் ஒன்றித் தான் செயல்படுகிறோம்..

வாழ்வில் இனி வரும் தருணங்களிலும் இதே அன்பு நீடித்து, நல்ல உடல்நலத்தோடும், மன வலிமையோடும், புரிதலோடும் வெற்றி பெற கடவுளின் அருளோடு உங்கள் வாழ்த்துகளும், ஆசிகளும் கிடைக்கட்டும்!!

மீண்டும் சந்திப்போம்....

ஆதி வெங்கட்

புதன், 23 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – காலை உணவு – சபர்மதி ஆஸ்ரமம்இரு மாநில பயணம் – பகுதி – 42

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


ஆஸ்ரமத்தின் நுழைவாயில்....

சபர்மதி ஆஸ்ரமம்....அமைதியான சூழலில்...
சபர்மதி ஆஸ்ரமம்....

முதல் நாள் இரவு வந்து தங்குமிடத்தில் படுத்ததும் உறங்கி விட்டோம். அடுத்த நாள் காலை எழுந்த போது மணி 7-க்கு மேல் ஆகியிருந்தது. அனைவரும் குளித்து தயாரான பிறகு தங்குமிடத்தின் உள்ளேயே இருந்த உணவகத்திற்குச் சென்றோம். இந்த தங்குமிடத்தில் [ஹோட்டல் க்ரிஸ்டல்] காலை உணவும், WIFI-யும் Complimentary என்பதால் தனியாக அதற்குக் கட்டணம் தேவையில்லை – தங்குமிடக் கட்டணத்திலேயே சேர்த்திருப்பார்கள் – சும்மாவா கொடுக்க முடியும்! இதெல்லாம் ஒரு வித வியாபார தந்திரம். Buffet உணவு தான் – வேண்டியதை எடுத்துச் சாப்பிடலாம் –பரோட்டா, தயிர், ஊறுகாய், மிக்ஸ் சப்ஜி, ப்ரெட்-பட்டர் டோஸ்ட், கார்ன் ஃப்ளேக்ஸ் [பாலுடன்], மற்றும் தேநீர் – வேண்டியதை எடுத்துச் சாப்பிடலாம். அவரவர்களுக்குத் தேவையானவற்றை போட்டு எடுத்துக் கொண்டு அமர்ந்து சாப்பிட்டோம்.

செவ்வாய், 22 மே, 2018

உத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்
சமீபத்தில் ஒரு நாள் இரவு வீட்டிலிருந்து உணவுக்குப் பிறகு கொஞ்சம் நடந்து வரச்சென்ற போது பக்கத்தில் இருந்த பூங்கா ஒன்றிலிருந்து பாட்டின் சப்தம். இசையைக் கேட்டவுடன் அங்கே சென்று பார்க்கலாம் எனத் தோன்றியது. தலைநகரில் இந்தியாவின் எல்லாப் பகுதி மக்களும் இருப்பதால், அவ்வப்போது அந்தந்த பகுதி மக்கள் சேர்ந்து ஏதாவது விழா நடத்துவது வழக்கம். உத்திராகண்ட் பகுதி மக்கள் சிலர் சேர்ந்து அவர்களது மாநிலத்திலிருந்து கலைஞர்களை அழைத்து வந்து இசை/நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்கள். சில பெண் கலைஞர்கள் மேடையில் ஆடிக் கொண்டிருக்க, கீழே ஆண்கள் ஒருபக்கமும் பெண்கள் ஒரு பக்கமும் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

சின்ன இடம் தான் என்றாலும் இருக்கைகள் போட்டு பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதியும் இருந்தது. பக்கத்தில் இரவு உணவுக்கான ஏற்பாடும் செய்திருந்தார்கள். நடனத்தினை விட பக்கத்து பந்தலில் இருந்து வந்த உணவின் வாசம் இரவு உணவை முடித்து விட்ட என்னையும் அங்கே செல்லத் தூண்டியது – யாராவது பார்த்து "உங்களை நாங்க கூப்பிடலையே" எனச் சொல்லிவிடுவார்களோ என்ற எண்ணம் தோன்றியதால், என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டேன். பாடல் ஒரே மெட்டில் இருப்பதாகத் தோன்றியது. நடனமும் ஒரு சில Movement மட்டுமே திரும்பத் திரும்ப வருவதாக இருந்தது.

மலைப் பிரதேசப் பெண்களின் தாலி பற்றி என்னுடைய பயணக் கட்டுரை ஒன்றில் எழுதி இருப்பதாக நினைவு. மூக்கில் ஒரு பெரிய வளையம் மாட்டி, அதிலிருந்து ஒரு செயின் காதுத் தோட்டுடன் இணைத்திருப்பார்கள். அந்த வளையம் போட்டுக்கொண்டு எப்படி தான் சாப்பிடுகிரார்களோ என்று தோன்றும். இந்த நிகழ்விலும் இப்படி பெரிய வளையம் அணிந்த பெண்களைப் பார்க்க முடிந்தது – குறிப்பாக நடனம் ஆடிக்கொண்டிருந்த பெண்கள்! அது சரி நீங்க மட்டும் இந்த மாதிரி நிகழ்வுகளைப் பார்த்து ரசித்தால் என்ன அர்த்தம்? எங்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாதா என யாரும் கேட்பதற்கு முன்னர் உத்திராகண்ட் மாநிலத்தின் இரண்டு பிரபலமான பாடல்களின் காணொளிகளை கீழே தந்திருக்கிறேன். நீங்களும் பார்த்து ரசிக்கலாம்!

முதலாவது பாடல்….


இரண்டாவது பாடல்….என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் ரசித்த பாடல்களாக கொடுத்திருக்கும் இந்த இரண்டு பாடல்களை ரசித்தீர்களா? உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

நட்புடன்

வெங்கட்
தமிழகத்திலிருந்து.....

திங்கள், 21 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா – எங்கே தங்குவது
இரு மாநில பயணம் – பகுதி – 41

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!சென்ற பதிவில் சொன்னது போல, கேரள நண்பர்கள் அசைவ உணவு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு [இரண்டு நாட்கள் முன்னர் தான் தியுவில் சாப்பிட்டார்கள் - இரண்டு நாளே ரொம்ப நாள் அவர்களுக்கு!] என்று குறைபட்டுக்கொள்ள ஆம்தாவாத் நகரின் எல்லையில் இருந்த ஒரு பெரிய உணவகத்தில் – உணவகத்தின் பெயரே கொஞ்சம் கார சாரமாக இருந்தது – மிர்ச் மசாலா என்பது தான் உணவகத்தின் பெயர்! மிர்ச் என்றால் மிளகாய்! – வாகனத்தினை நிறுத்தினார். அவரையும் சாப்பிட அழைக்க, இல்லை எல்லை நான் வீட்டுக்குச் சென்று என் மனைவியின் கையால் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டார். வெளி உணவு அடிக்கடி சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்குதான் வீட்டு உணவின் அருமை தெரியும்!

ஞாயிறு, 20 மே, 2018

தலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 1தலைநகரில் எங்கள் வீட்டின் வெகு அருகிலேயே திருமலா திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் பெருமாள் கோவில் இருப்பது பற்றி முன்னரே எழுதி இருக்கிறேன். சமீபத்தில் இந்த பெருமாள் கோவிலில் ப்ரஹ்மோத்ஸவம் விமரிசையாக நடைபெற்றது. தினம் தினம் ஒவ்வொரு வாகனத்தில் பெருமாளும் தாயார்களும் வீதி உலா கண்டார்கள். பிரஹ்மோத்ஸவம் நடக்கும் போது நானும் சில நாட்கள் கலந்து கொண்டேன். பிறகு தமிழகம் வந்து விட்டதால் கலந்து கொள்ள முடியவில்லை.

சனி, 19 மே, 2018

கதம்பம் – மயில்களும் குரங்குகளும் – கொழுக்கட்டை – பராய் மரம் - தூதுவளைமயில்களும் குரங்குகளும்…
ஏறக்குறைய பறவைகள் சரணாலயம் போல் உள்ளது திருவரங்கம். காலையும் மாலையும் மயில், புறா, தவிட்டுக் குருவி, இரட்டை வால் குருவி, இன்னும் பெயர் தெரியாத பட்சிகள் என மக்கள் வைக்கும் சாப்பாட்டுக்கும் அரிசிக்கும் வருகை தருகின்றன.

காடுகளை அழித்து வருவதால் செல்ல இடமின்றி அடுக்கு மாடி குடியிருப்புகளில் அங்கும் இங்கும் அலைகின்றது குரங்குகளும் பறவைகளும். சமீபத்தில் காலை கண்ட காட்சிகள்.

ரோஷ்ணி கார்னர்சமீபத்தில் ரோஷ்ணி செய்த காதணி – சில்க் த்ரெட் கொண்டு செய்தது….

கொழுக்கட்டை:

சமீபத்திய பேருந்துப் பயணத்தில் பார்த்த சில வாசகங்கள்.

கண்ணீர் அஞ்சலி!! என்று ஒரு பாட்டியின் படத்துடன். பெயரைப் பார்த்ததும் நானும் மகளும் சிரித்துக் கொண்டோம்.

கொழுக்கட்டை (எ) மாரியாயி அம்மாள்!!

சிறுவயதில் கொழுக்கட்டை மாதிரி புஷ்டியாக இருந்திருப்பார் போல!

இன்னொரு இடத்தில் நாள்பட்ட வலி - நாள்பட்ட வளி என்று இருந்தது.

பஸ்லாரிவேன்!!!!

பஸ், லாரி மற்றும் வேன் வாடகைக்கு விடும் கடை போல!

பராய் மரமும் காய்களும்!பராய்மரம்!!! திருப்பராய்த்துறை உறையும் பராய்த்துரை நாதர் கோவிலின் ஸ்தலவிருட்சம்!! அதன் காய்களுடன்!!

தூதுவளை!தூதுவளை பார்த்திருக்கிறீர்களா? இது தான். இந்த இலைகளை வைத்து தூதுவளை தோசை செய்யலாம். திருப்பராய்த்துறை சென்ற போது எடுத்த படம்….

உலக புத்தக தினம்!

சிறுவயது முதல் அம்புலி மாமாவில் ஆரம்பித்து வார, மாத இதழ்கள், சிறுகதைகள், தொடர்கதைகள், நாவல்கள், பொட்டலம் கட்டி வரும் காகிதங்கள் என அன்றாடம் சிறிதேனும் வாசிக்காமல் இருந்ததில்லை.

அமைதியான இடத்தில் அமர்ந்து ஆழ்ந்து வாசிக்கப் பிடிக்கும். வாசிப்பினால் தெரிந்து கொண்ட விஷயங்கள் ஏராளம். தொடர்ந்து நிறைய வாசிக்கணும். இப்போது மகளும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறாள் என்பதில் மகிழ்ச்சி!

படித்ததில் பிடித்தது….எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும்.

அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது.

ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும்.

நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும்.

அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும் அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது.

மனிதனும் பல நேரத்தில் இப்படித்தான் பல பிரச்சினைகளிலிருந்து வெளியே வர தெரிந்தும் பொறுமை இல்லாததால் தனது வாழ்க்கையை துறக்கிறான்.

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

வெள்ளி, 18 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – வித்தியாசமான நெடுஞ்சாலை உணவகம்இரு மாநில பயணம் – பகுதி – 40

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


Gகிர் வனத்திலிருந்து ஆம்தாவாத் நோக்கி பயணம் செய்தபோது ராஜ்கோட் அருகே ஒரு உணவகத்தில் தேநீர் அருந்த வண்டியை நிறுத்தினோம்.  அந்த உணவகத்தின் பெயர் “Horn OK Please!”.  Bansal Petroleum என்ற பெட்ரோல் பங்க் உரிமையாளர் பெட்ரோல் பங்க் வளாகத்திலேயே நடத்தும் உணவகம் தான் இந்த Horn OK Please! முழுக்க முழுக்க நெடுஞ்சாலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் தான் இந்த உணவகத்தின் Theme! ஒரு லாரியின் முகப்பினை வைத்து அதிலிருந்து உணவு தருகிறார்கள்.  உணவகத்தின் சுவர்களில் லாரிகளில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை ஆங்காங்கே எழுதி வைத்திருக்கிறார்கள்.

வியாழன், 17 மே, 2018

தென் கொரியா சுற்றுப் பயணம் – சுபாஷினி ட்ரெம்மல்
பயணம் எனக்குப் பிடித்த விஷயம் என்பது உங்கள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே. பயணம் செய்வது மட்டுமின்றி பயணம் பற்றி படிக்கவும் எனக்குப் பிடிக்கும். வலையுலகில் பயணம் பற்றி எழுதுபவர்கள் என்று எடுத்துக் கொண்டால் துளசிதளம் வலைப்பூவில் எழுதும் துளசி டீச்சர் கண்டிப்பாக நினைவுக்கு வருவார். அதே போல், சுபாஷினி ட்ரெம்மல் அவர்களும். முன்பெல்லாம் வலைப்பூவில் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்த இவர் இப்போது எழுதுகிறாரா என்பது தெரியவில்லை. அப்படி வலைபூவில் எழுதிய ஒரு பயணத் தொடர் WWW.FREETAMILEBOOKS.COM தளத்தில் மின்புத்தகமாகவும் கிடைக்கிறது. மொத்தமே 34 பக்கங்கள் தான், என்பதால் சுலபமாக படித்து முடிக்கலாம்.

புதன், 16 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – கிர் வனத்திலிருந்து தங்குமிடம் – காலை, மதிய உணவு – அஹமதாபாத் நோக்கி…இரு மாநில பயணம் – பகுதி – 39

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


நாங்கள் பயணித்தது இந்த வாகனத்தில் அல்ல!
Gகிர் வனத்திலிருந்து அஹமதாபாத் நோக்கி....

வனப்பயணத்தினை முடித்து வனத்துறையின் அலுவலகத்திற்கு வந்து சில நினைவுப் பரிசுகளை வாங்கிக் கொண்டு வெளியே வந்த நாங்கள், எங்கள் வாகன ஓட்டுனர் முகேஷ்-ஐ அழைத்தோம். காலையில் எங்களை வன அலுவலகத்திற்கு அருகே விட்டுவிட்டு அவர் தங்குமிடம் சென்று விட்டார். வாகனத்தினை கொஞ்சம் நீராட்ட வேண்டும் – Water Wash – என்று சொல்லி இருந்தார். அவரை அழைத்து எங்கள் வேலை முடிந்ததைச் சொன்னோம். சில நிமிடங்களில் அவர் வந்து சேர வேண்டும் – அது வரை வெளியே நின்று கொண்டிருந்த எங்களை வனத்துறையைச் சேர்ந்த சிலர் சிங்கம் பார்க்க வேண்டுமானால் காட்டுக்குள் அழைத்துச் செல்கிறோம் என கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

செவ்வாய், 15 மே, 2018

டிங்கிரி டிங்காலே மீனாட்சி

படம்: இணையத்திலிருந்து....

இன்றைக்கு வேறு ஒரு ரசித்த பாடல். 1958-ஆம் ஆண்டு வெளிவந்த படம் – அன்பு எங்கே? எஸ்.எஸ். ராஜேந்திரன் நடிப்பில், வேதா அவர்களின் இசையில், டி. யோகாநந்த் அவர்களின் இயக்கத்தில் வெளி வந்த படம்! இந்தப் பாடலை பாடியது டி.எம்.எஸ்! அந்தக் காலத்திலேயே இப்படி ஒரு பாடல். முதல் முறை கேட்டாலும் ரொம்பவே பிடித்தது எனக்கு. உங்களுக்கும் பிடிக்கலாம். இந்த மாதிரி நிறைய பழைய பாடல்களை வேம்பார் மணிவண்ணன் என்பவர் Youtube-ல் தரவேற்றம் செய்து வைத்திருக்கிறார். முடிந்தால் அவரது யூ பக்கத்தில் பார்த்து பாடல்களை ரசிக்கலாம்!

திங்கள், 14 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – மான் கண்டேன் மயில் கண்டேன்இரு மாநில பயணம் – பகுதி – 38

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


மான் கண்டேன்...  மானும் எங்களைக் கண்டது...
Gகிர் வனத்திற்குள்....


எட்டு சிங்கங்களை அவ்வளவு கிட்டத்தில் பார்த்ததில் எங்கள் குழுவில் இருந்த அனைவருக்குமே மகிழ்ச்சி. வேறு எதைப் பார்க்க முடிகிறதோ இல்லையோ, சிங்கங்களுக்குப் பெயர் போன Gகிர் வனத்திற்குள் வந்துவிட்டு சிங்கங்களைப் பார்க்க முடியாமல் போனால் என்ன பலன்! அதுவும் கேரளத்திலிருந்து இதற்காகவே வந்து என்ன பலன்! அதனால் கேரளத்திலிருந்து வந்த நான்கு நண்பர்களும் “வாழ்க்கையின் பலனையே அடைந்த” ஒரு உணர்வில் இருந்தார்கள். நானும் இந்த மாதிரி நிறைய வனப்பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன் – அனைத்திலுமே எனக்கு பிடித்தது – அசாமின் காசிரங்காவும் குஜராத்தின் இந்த Gகிர் வனமும் தான். எங்களுடன் வந்திருந்த வழிகாட்டியும் நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள் போலும் என்று சொல்லிக் கொண்டு வந்தார். சிலர் ஒரே நாளின் இரண்டு மூன்று பயணங்களை மேற்கொண்ட பிறகும் சிங்கங்களைப் பார்க்க முடியாமல் போனதுண்டு என்றும் சொன்னார்.

ஞாயிறு, 13 மே, 2018

திருவரங்கத்து மயில்கள்….எங்கள் வீட்டின் அருகே மயில்கள் வரும் என்றாலும் இவ்வளவு அருகே பார்க்க முடிந்ததில்லை. சென்ற வாரத்தில் ஒரு நாள் மாமியார் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, மயில்கள் சாப்பிடட்டும் என்று தினமும் காலையில் மொட்டை மாடியில் கொஞ்சம் அரிசி போட்டு வருவார் அவர். சிறிது நேரத்தில் மயில் குரல் கேட்க ஆரம்பித்து விடும். மயில்கள் ரொம்பவே கூச்ச சுபாவம் அல்லது பயந்த சுபாவம் கொண்டவை. ஆள் நடமாட்டம் பார்த்தால் உடனே பறந்து/ஓடி விடும். படிக்கட்டுகள் அருகே மறைவாய் நின்று கொண்டு மயில்கள் அரிசியைக் கொத்தித் தின்பதை பார்க்க முடிந்தது. கொஞ்சம் தொலைவில் நின்று படமும் [மொபைல்] மூலம் படமும் எடுக்க முடிந்தது.

நிறைய குரங்குகளும் இங்கே உண்டு. அப்படி வந்த குரங்குகளை மகள் படம் பிடித்து வைத்திருக்கிறார். அந்தப் படங்களை பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். இந்த ஞாயிறில் மயில்களின் படங்கள் – புகைப்பட உலாவாக….ஆஹா...  நமக்காக அரிசி போட்டு வச்சிருக்காங்களே.... ஒரு கை பார்த்துட வேண்டியது தான்!கொஞ்சம் இந்தப் பக்கத்திலிருந்தும் சாப்பிடலாம்...என்ன சத்தம்? யாராவது வராங்களா?


நல்லவேளை யாரும் வரல.... நம்ம சாப்பிடுவோம்!இந்த மனிதர்களை நம்ப முடியாது, மறைந்து இருந்தாலும் இருப்பாங்க... எதுக்கும் தயாரா ஒரு காலைத் தூக்கி நிற்போம்...
ஏவ்வ்....  நம்ம வயிறு நிறைஞ்சது... ஆனால் அரிசி மீதமிருக்கே.... நம்ம தோழி கூட வந்தாங்களே, அவங்களை கூப்பிடலாம்!எங்கே போயிட்டாங்க.... காணோமே....


அந்தப் பக்கம் போயிருப்பாங்களா?


இல்லை இந்தப் பக்கம் போயிருப்பாங்களோ.... 


அட அதோ அங்கே இருக்காங்க. போய் கூப்பிட்டு வருவோம்!


கண்ணே... எங்கே போற... இந்தப் பக்கம் அரிசி இருக்கு... வா போய் சாப்பிடலாம்!


என்ன நண்பர்களே புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்…. இன்னும் ஒரு விஷயம் - படங்களுக்குத் தந்திருக்கும் கமெண்ட்ஸ் – என்னவருடையது!

மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

சனி, 12 மே, 2018

கூனியும் சமோசாவும்படம்: இணையத்திலிருந்து....

எங்கள் வீட்டின் அருகே இருந்த குடிசைகளை இடித்தது பற்றி சில வாரங்களுக்கு முன்னர் எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம். அந்தப் பதிவினை படிக்காதவர்களின் வசதிக்காக இங்கே அந்தப் பதிவின் சுட்டி தந்து விடுகிறேன்….

வெள்ளி, 11 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – கிர் காட்டுக்குள் – கண்டேன் சிங்கங்களை


இரு மாநில பயணம் – பகுதி – 37

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!முந்தைய பதிவில் சொன்னது போல, சாஸன் Gகிர் வனப்பயணத்திற்காக, எங்களுக்குக் கிடைத்த Route – பாதையின் எண் இரண்டு – ஏழு பாதைகளில் எங்களுக்குக் கிடைத்த பாதையில் பயணித்துக் கொண்டிருந்தோம். சிங்கங்கள் எங்களுக்குக் காட்சி கொடுக்குமா, கொடுக்காதா என்ற எண்ணமே அனைவருக்கும் இருந்தது. காலை நேரத்திலேயெ பயணிப்பதால் கொஞ்சம் குளிரும் இருந்தது – பொதுவாக வனப்பகுதிக்குள் குளிர் சற்று அதிகமாகவே இருக்கும் என்பதால் அதற்குத் தகுந்த உடை அணிந்து செல்வது நல்லது. அதைப் போலவே சிவப்பு வண்ண உடைகளையும் தவிர்ப்பது நல்லது! மிருகங்களுக்கு சிவப்பு வண்ணம் பார்த்தால் “ஆஹா நமக்கு இரை கிடைச்சுதடா!” என்று உங்கள் மேல் தாவிட வாய்ப்புண்டு!

வியாழன், 10 மே, 2018

கதம்பம் – உனக்கு இது தேவையா? – என்ன பூ – சந்தேகம் – இலவம் பஞ்சுஉனக்கு இது தேவையா?சமீபத்தில் ஒரு நாள் இரவு சாப்பிட்ட பிறகு ஒரு நடை. வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது சாலையில் ஒரு இளைஞர் – பட்டன்கள் அவிழ்த்து விடப்பட்ட சட்டை, உள்ளே ஏதோ பெண்ணின் படம் போட்ட ஒரு பனியன், கீழே பல பாக்கெட்கள் கொண்ட ஒரு பேண்ட் – கைகளில் ஒரு பெரிய அட்டை, முதுகில் மூட்டை – அதாங்க Back Pack! – கழுத்திலும் கைகளிலும் விதம் விதமான கயிறுகள், உச்சியில் முடியைச் சேர்த்து, ரப்பர் பேண்ட் போட்டு ஒரு குடுமி! என்ன ஸ்டைலோ இது, பள்ளி/கல்லூரியில் படிக்கும் இந்த இளைஞர்கள்/ இளைஞிகளின் நடை உடை பாவனை எதுவுமே சரியில்லையே என்ற நினைத்தபடி கொஞ்சம் தூரத்திலிருந்தே பார்த்துக் கொண்டு வந்தேன்.

புதன், 9 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்இரு மாநில பயணம் – பகுதி – 36

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


வன அலுவலகத்தின் முன்னர் சிங்கங்களின் பொம்மை....

முதல் நாள் இரவு நேரத்தோடு உறங்கி அதிகாலையிலேயே விழித்து வனத்திற்குள் செல்வதற்குத் தயாரானோம். இந்த Gகிர் வனப்பகுதியின் முழுப்பெயர் சாஸன் Gகிர் என்பது தான். பெரும்பாலும் நாம் படிக்கும்போது Gகிர் என்று மட்டுமே படித்திருக்கிறோம் அல்லவா. இந்த சாஸன் Gகிர் வனத்திற்குள் செல்ல வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். நாள் ஒன்றுக்கு இவ்வளவு பெர்மிட் என்ற கணக்கு உண்டு. அதற்கு மேல் தருவதில்லை. அதனால் இணையம் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம். அங்கே சென்று பார்த்துக் கொள்ளலாம் எனப் போனால் வனப்பயணம் செய்வது சந்தேகம் தான்.

செவ்வாய், 8 மே, 2018

எங்கிருந்தோ வந்த ரதி….
இந்த ரதி வேறு ரதி!
படம்: இணையத்திலிருந்து...

ரதி – எங்கிருந்தோ வந்த ரதி… பதிவின் தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்த ரசிகப் பெருமக்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காகவே சீக்கிரம் பதிவினைப் பற்றி சொல்லி விட வேண்டும்.

திங்கள், 7 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – இரவின் ஒளியில் சிங்கம் – வயல்வெளிகள் வழியேஇரு மாநில பயணம் – பகுதி – 35

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


காட்டு ராஜா...

இரவு நேரத்தில் வனப்பகுதியில் உலா போகலாமா என்று மோஹித் கேட்க, போகலாம் என்று சொல்லி விட்டோமே தவிர, அதற்கு அனுமதி கிடையாதே, எப்படிச் செல்ல முடியும் என்று தோன்றியது. வனப் பகுதி என்றால் வனப்பகுதி அல்ல. இந்தப் பகுதியில் நிறைய கிராமங்கள் – Bபோஜ்டே கிராமம் போலவே நிறைய கிராமங்கள் உண்டு – வனப்பகுதிக்கு வெளியே அமைந்துள்ள இந்த கிராமங்களில் அவ்வப்போது சிங்கத்தின் நடமாட்டம் இருப்பதுண்டு. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அப்படி வெளியே நடமாடும் சிங்கத்தினைப் பார்க்க முடியும் என்று சொன்னார் மோஹித். இப்படி நடமாட்டம் இருந்தால் அதைப் பார்த்து தகவல் சொல்லிக் கொள்கிறார்கள் – இங்கே இருக்கும் தங்குமிட உரிமையாளர்கள்.

ஞாயிறு, 6 மே, 2018

அய்யூர் அகரம் – ஒரையூர் – திருவாமாத்தூர் – புகைப்பட உலா…இன்றைக்கு எங்கள் குலதெய்வம் கோவில் இருக்கும் இடமான அய்யூர் அகரம் எனும் கிராமத்தில் இருக்கிறேன். இன்றைக்கும் படங்கள் எடுத்திருக்கிறேன் என்றாலும் உடனே இங்கே பகிர்ந்து கொள்ள முடியாது என்பதால், இதே ஊரிலும், பக்கத்து ஊர்களிலும் சில வருடங்கள் முன்னர் எடுத்த படங்களை பகிர்ந்து கொள்கிறேன். ஒன்றிரண்டு படங்கள் முன்னரே பகிர்ந்திருக்கலாம்!


மரத்தடியில் விநாயகர்....

திருவாமாத்தூர்....சனி, 5 மே, 2018

அடுத்த பயணம் – தமிழகம் நோக்கி…வரைபடம் - இணையத்திலிருந்து...

என்னதான் தலைநகரிலேயே வாழ்க்கையின் பாதிக்கு மேலான வருடங்கள் இருந்துவிட்டாலும், தாய் தமிழகம் நோக்கி பயணிப்பது என்னவோ பிடித்துத் தான் இருக்கிறது. தலைநகர வாழ்க்கை ஒரு விதத்தில் பிடித்திருக்கிறது என்றால் தமிழக வாழ்க்கை வேறு விதத்தில். பொங்கல் சமயத்தில் வந்தது – அதன் பிறகு இப்போது தான் வர சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது. எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் நிறைய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கிறது – அலுவலகத்தில் விடுமுறை சொல்ல வேண்டும், சொன்ன மாதிரி விடுமுறை கிடைக்க வேண்டும், பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்ய வேண்டும், ஊருக்கு வரும்போது கொண்டு வரவேண்டியதை எல்லாம் நினைவாக எடுத்து வைக்க வேண்டும் என நிறையவே வேலைகள்.

கொஞ்சம் முன்னரே பயணம் பற்றி திட்டமிட்டால், விமான பயணச்சீட்டுகள் இரயில் II AC கட்டணத்திற்குள்ளேயே கிடைத்துவிடும். இல்லை என்றால் இரயிலில் தான் வர வேண்டியிருக்கும். இரயிலில் பயணம் செய்வது ஒரு தனி சுகம் என்றாலும், தில்லியிலிருந்து திருச்சி சென்று சேர்வதற்கு 40 மணி நேரத்திற்கு மேலே ஆகிவிடுகிறது. போக வர என்று பார்த்தால் மூன்று-நான்கு நாட்கள் இரயிலிலேயே இருக்க வேண்டிய கட்டாயம். விமானம் என்றால் காலையில் தில்லியில் புறப்பட்டால் மாலைக்குள் திருச்சி! இந்த முறையும் முன்னரே திட்டமிட்டபடியால், விமானத்திலேயே பயணம் – யாருங்க அது, ஃப்ளைட் டீடெய்ல்ஸ் கேட்கறது – எனக்கு இந்த மாலை, மரியாதை எல்லாம் பிடிக்காது – சாரி – நான் சொல்ல மாட்டேன்!

அட மாலை மரியாதை செய்யவா கேட்டாங்க, கருப்பு கொடி காட்டத்தான் கேட்டோம்னு சொன்னாலும், எப்ப வருவேன்னு கண்டிப்பா சொல்லப் போறதில்ல! அரசியல் பிடிக்காதுன்னாலும், “எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது…. ஆனா வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன்!” அப்படின்னு சொல்லிக்கலாம்! தமிழகத்திற்கு வரும்போது சில பதிவர்களையும் சந்திக்க விருப்பம் உண்டு – குறிப்பாக தஞ்சை செல்லும் ஆர்வம் இருக்கிறது – பெரிய கோவிலுக்குச் சென்று கொஞ்சம் புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். அப்படி தஞ்சை சென்றால் கரந்தை ஜெயக்குமார் ஐயா, முனைவர் ஜம்புலிங்கம் ஐயா ஆகியோரைச் சந்திக்கும் விருப்பம் உண்டு.

சின்னச் சின்னதாய் சில பயணங்களும் உண்டு – குடும்ப நிகழ்வுகள், வேறு சில காரணங்களுக்காக பயணங்கள். அதில் ஒரு பயணம் பாண்டிச்சேரி நகருக்கு – அங்கே என் கல்லூரி நண்பர்கள் சிலரை அவரவர் குடும்பத்துடன் சந்திக்க இருக்கிறேன். இரண்டு நாட்கள் பாண்டிச்சேரியில்! சில நண்பர்களை கிட்டத்தட்ட 27 வருடங்கள் கழித்து சந்திக்க இருக்கிறேன் – கல்லூரியில் மூன்று ஆண்டுகள் மட்டுமே நட்பாக இருந்திருந்தாலும், கல்லூரி முடித்து 27 ஆண்டுகளுக்குப் பிறகும் நட்பு தொடர்கிறது – சிலரிடம் மட்டும். மற்றவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம் – சிலரை கண்டுபிடித்தாலும், தொடர்பில் இருக்க ஆவலில்லை அவர்களுக்கு! நண்பர்கள் அனைவரும் அவரவர் குடும்பத்துடன் வருகிறார்கள் – தொடர்பில் இருக்கும் அனைத்து நண்பர்களும் மிகவும் எதிர்பார்க்கும் சந்திப்பு இது. சந்திப்பு பற்றி பிறகு பகிர்ந்து கொள்கிறேன்.

வேறு சில பயணங்களும் உண்டு – சிவகங்கை, கோவை, கன்னியாகுமரி என சில இடங்களுக்குப் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. நடுவில் நெய்வேலிக்கும் பயணம் செய்ய எனக்கு ஆசை உண்டு. இருக்கிற மூன்று வார விடுமுறையில் எங்கெங்கே பயணம் செய்யப் போகிறேனோ எனக்கே புரியவில்லை! எல்லாப் பயணங்களுமே குடும்பத்துடன் தான் என்பதால் “வீட்டுக்குப் போயும் ஊரைச் சுத்த கிளம்பியாச்சா?” என்று கேள்விக் கணைகளை வீச வேண்டாம் என கண்டிப்பாக சொல்லி விடுகிறேன்! மூன்று வாரம் எவ்வளவு இடங்களுக்குச் சுற்ற முடியுமோ அவ்வளவு சுற்ற வேண்டும்! பார்க்கலாம் எங்கங்கே செல்ல முடிகிறது என!

சென்னை, here I come! சென்னையிலிருந்து உடனடியாக திருச்சி செல்லப் போவதில்லை. வேறு இடத்திற்கு பயணம்! பயணத்தில் இருக்கும் போது மற்ற நண்பர்களின் பதிவுகளைப் படிப்பதில் கொஞ்சம் தடங்கல் ஏற்படலாம். எனது பக்கத்திலும் பதிவுகள் சிலவற்றை Schedule செய்து வைத்திருக்கிறேன் – குறிப்பாக இரு மாநில பயணம் பயணத்தொடரின் பகுதிகள் மற்றும் இந்தப் பதிவு உட்பட! நடுவே சில நாட்கள் பதிவுகள் வராமல் இருந்தால் – I assure you that I will be back with loads of pictures and posts!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி