வெள்ளி, 4 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – மாஞ்சோலைக்குள் நீச்சல் குளம் – இரவு உணவுஇரு மாநில பயணம் – பகுதி – 34

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!சென்ற பதிவில் சொன்னது போல, Gகிர் வனப் பகுதியில் இருக்கும் Bபோஜ்டே கிராமத்தில் அமைந்திருக்கும் Shiv Farm House எனும் இடத்தில் தான் எங்களது இரவுத் தங்கலுக்காக நான் தேர்ந்தெடுத்திருந்த இடம். இந்த இடம் வனப்பகுதியில் ஒரு சிறிய கிராமம். உரிமையாளர் மோஹித் அவரது பரம்பரை சொத்தான மாந்தோப்பில் சில அறைகளைக் கட்டி வாடகைக்கு விடுகிறார். வாயில் எப்போதும் Gகுட்கா மென்று கொண்டிருக்கும் இளைஞர் – தங்குபவர்களுக்கு எல்லா ஏற்பாடுகளையும் சுறுசுறுப்பாகச் செய்து கொடுக்கிறார். சுற்று வேலைகளை பார்த்துக் கொள்ள சில சிப்பந்திகள் உண்டு. சமையல் பார்த்துக் கொள்ள ஒரு பெண்மணி. வீட்டுச் சாப்பாடு போலவே சமைத்து நன்றாக பரிமாறுகிறார்கள்.  
தோப்பிற்குள் ஒரு நீச்சல் குளமும் உண்டு. நாங்கள் சென்ற போது எங்கள் ஐந்து பேரைத் தவிர வேறு சுற்றுலாப் பயணிகள் இல்லை என்பதால் மொத்த இடமும் எங்களுக்கே! சென்று எங்கள் உடைமைகளை அறைக்குள் வைத்து ஊஞ்சலிலும், கட்டிலும் அமர்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருக்க, தேநீரும் பக்கோடாவும் வந்தது. அதைச் சுவைத்து மோஹித்-உடன் பேசிக் கொண்டிருந்தேன். இந்த இடத்தினைத் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்வதற்காக பலமுறை பேசி இருந்ததால், நண்பர் போலவே பேசிக் கொண்டிருந்தார். தேநீருக்குப் பிறகு அனைவரும் நீச்சல் குளத்தில் குளியல்! எத்தனை நேரம் தண்ணீரில் இருந்திருப்போம் என எங்களுக்குத் தெரியாது! அப்படி ஒரு குளியல்! ரொம்பவும் புத்துணர்ச்சி கிடைத்த உணர்வு.


நீச்சல் குளத்தில் யார்....

ஒரு சிறு கிராமம் என்பதால் சீக்கிரமாகவே ஊர் உறங்கி விடுகிறது. நாங்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து வெளியே வந்து கொஞ்சம் ஊரைச் சுற்றிப் பார்க்கலாம் என வெளியே வந்தோம். பக்கத்தில் ஒரு மாட்டுப் பண்ணை – 100 மாடுகளுக்கு மேல் வளர்க்கிறார்களாம். மாட்டுப்பண்ணை உரிமையாளரிடம் பேசிக் கொண்டிருந்த பிறகு ஊருக்குள் செல்ல, அங்கே பாகவத சப்தாஹம் நடந்து கொண்டிருக்கிறது. யாரோ பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் – ஊர் முழுவதும் வரவேற்புத் தோரணங்கள், தென்னங்கீற்றுகள் கொண்டு அலங்காரம், உணவு விநியோகம் என அமர்க்களப் பட்டுக் கொண்டிருந்தது. சிறிது நேரம் அங்கே இருந்து பிரசங்கத்தினைக் கேட்டு அங்கிருந்து திரும்பினோம்.


படம் - இணையத்திலிருந்து...

காற்றாட கயிற்றுக் கட்டில்களில் சிலர் அமர, சிலர் ஊஞ்சல்களில் அமர்ந்து கொள்ள பயணம் பற்றிய நினைவுகளை பேசியபடி பொழுதினைக் கழித்தோம். சிறிது நேரத்திற்குள் மோஹித் வந்து இரவு உணவுக்கு என்ன வேண்டும் எனக் கேட்க, அவரையே மெனுவை தேர்ந்தெடுக்கச் சொன்னோம்.  பேங்கன் கா பர்த்தா, Dhதால், தவா ரொட்டி, கிச்டி, வெஜிடபிள் ராய்தா, கடி, சாலட், மோர் என மெனு சொல்லி, இது போதுமா இல்லை ஏதேனும் சப்ஜி செய்யச் சொல்லவா? என்று கேட்க, இதுவே அதிகம் தான். வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு நான்கைந்து நாட்கள் ஆகிவிட்டன, நன்றாக இருந்தால் போதும் எனச் சொல்ல, சமையல் செய்யும் பெண்மணியை அழைத்து அறிமுகம் செய்து வைத்தார். அவரும் வணக்கம் சொல்லி, சமையல் செய்கிறேன் சாப்பிட்ட பிறகு எப்படி இருந்தது என்பதைச் சொல்லுங்கள் என உள்ளே சென்றார்.


படம் - இணையத்திலிருந்து...

நாங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க, மோஹித் எங்கோ வெளியே சென்று காய்கறிகள், மற்றும் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வந்தார். வந்தவர் எங்களிடம் வந்து வனப் பகுதியில் இரவு உலா போக உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்று கேட்க, அது எப்படி முடியும் என்று எனக்குச் சந்தேகம், வனம் என்றால் Gகிர் வனப்பகுதிக்குள் அல்ல, அதைத் தொட்ட கிராமங்கள் சில உண்டு அங்கே போக வேண்டுமானால் நான் ஏற்பாடு செய்கிறேன். இரவு நேரத்தில் சிங்கங்கள் உணவு உண்பதைப் பார்க்க வாய்ப்பிருக்கிறது என்று சொன்னார். ஆஹா, சரிதான் நாளைக்குக் காலை வாகனத்தில் வனத்திற்குள் செல்வதற்கு முன்னர் இந்தப் பயணத்தினையும் செய்து பார்த்துவிடலாம் என முடிவு செய்தோம்.

அப்படி வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் சென்றோமா, சிங்கத்தினை பார்க்க முடிந்ததா? அங்கே என்ன அனுபவங்கள் கிடைத்தன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

60 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!!!!

  இன்று கரெக்ட்டாக லேன்ட் ஆகிட்டேன் ஹா ஹா ஹா

  படங்கள் செமையா இருக்கு அதுவும் திங்க படம் செம இதோ பதிவுக்கு போய்ட்டு வரேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் 🙏 கீதா ஜி.

   தங்களது உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. நீச்சல் குளம் டக்கென்று பார்த்ததும் ஆ!! என்று தோன்றிவிட்டது சிவப்பு நிறம்....என்னென்னவோ மனதில் தோன்றியது....

  என்ன என்று பார்க்கிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயப்பட வேண்டியதில்லை கீதாஜி. நீச்சல் குளத்தில் முங்கிக் குளிக்கும் போது எடுத்த படம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. குட்மார்னிங் வெங்கட். மோஹித்திடம் "குட்கா மெல்லாதே இளைஞா... அது ஆரோக்கியத்துக்கு கேடு" என்று சொல்லவில்லையா!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.

   சொன்னாலும் புரியாது அவர்களுக்கு. அடுமையாகி விட்டார்கள்.

   நீக்கு
 4. தாங்கள் வைத்திருக்கும் நிலத்தில் விவசாயம் செய்து பிஸினஸ் பண்ணுவது போல இதுவும் ஒரு ஸ்டைலாகிப்போனது போலும். இடம் வாடகைக்கு விடுவது. அங்கு தொடர்ந்து பயணிகள் வருகை இருக்குமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வனப்பயணங்கள் இருக்கும் வரை இவர்களுக்கு பிஸினஸ் இருக்கும் ஸ்ரீராம்.

   நீக்கு
 5. பிரசங்கம் எந்த மொழியில்? எதைப்பற்றி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாகவதப் பிரசங்கம் தான் - குஜராத்தி மொழியில் ஸ்ரீராம்.

   நீக்கு
 6. //பேங்கன் கா பர்த்தா//

  பர்த்தா என்றால் கணவர் என்று பொருளும் உண்டல்லவா? கத்தரிக்காயின் கணவர்!

  பதிலளிநீக்கு
 7. //சிங்கங்கள் உணவு உண்பதைப் பார்க்க வாய்ப்பிருக்கிறது//

  சிங்கங்கள் நம்மை உணவாக உட்கொள்ளாமல் இருந்தால் சரி!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்மை உணவாக உட்கொள்ளாமல் இருந்தால் சரி ஹாஹா. நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. இன்று நிஜம்ம்ம்ம்ம்ம்மா...கவே பிழைகள் எதுவும் இல்லாமல் பின்னூட்டங்கள்... (இருங்கள் எதற்கும் மறுபடி ஒருமுறை பார்த்து விட்டு வந்து விடுகிறேன்!) ஹையா.....! ஆமாம்! சூப்பர்டா ஸ்ரீராம்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ச்ரீராம் எழுத்துப் பிழை எனக்கும் இ கலப்பையில் வந்து கொண்டு தான் இருக்கு. இது சுரதா. காப்பி, பேஸ்ட் பண்ணறேன். ச்ரீ வரதில்லை இதில்!ஶ்ரீ இது கலப்பையோடது. சுரதாவில் வராது.

   நீக்கு
  2. // ச்ரீராம் //


   கீதா அக்கா... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்......!!!!!!

   நீக்கு
  3. ஹெஹெஹெஹெ, இதுவும் சுரதாவில் வராது. கெகெகெனு தான் சிரிக்க வேண்டி இருக்கு! அதனால் அதில் வராததை இதிலும் இதில் வராததை அதிலுமாகப் போட்டுத் திப்பிச வேலை செய்ய வேண்டி இருக்கு. ண் போட்டால் அப்புறமாப் போடும் எழுத்து வராமல் ௶ இப்படி வரும்! ஆகவே க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்ல வேண்(௶இ)டியது நான். அடைப்புக்குள் பாருங்க இப்படித் தான் கலப்பையிலே வருது! ரு எழுத முயலும் போது உர என வரும்! ஹெஹெஹ், சமாளீப்போமுல்ல!

   நீக்கு
  4. கீசா மேடம் - //ச்ரீராம் எழுத்துப் பிழை எனக்கும் இ கலப்பையில் வந்து கொண்டு தான் இருக்கு.// - ரொம்ப கலப்பைனால உழறீங்களோ? அதுனால்தான் நிறைய எழுத்துப்பிழையோ அல்லது எழுத்துக்கள் உடைந்துபோகிறதோ? ஹெ ஹெ ஹெ

   நீக்கு
  5. ஹெஹெஹெ, கலப்பையில் ஶ்ரீராம் என வருதே! சுரதாவில் தான் வரதில்லை! ////
   // ச்ரீராம் // என வருது. இது கலப்பை தட்டச்சு! என்ன ஷிஃப்ட் போடாமலேயே ஷிஃப்ட் எழுத்தெல்லாம் வந்துடும்! :) ஷிஃப்ட் போட்டால் வராது!

   நீக்கு
  6. ஹைய ச்ரீ ராம் சிரி ராம் நு வந்தா இன்னும் நல்லாருக்குமோ ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  7. ஆஹா பிழையின்றி கருத்துகள் - வாழ்த்துகள் ஸ்ரீராம்.

   நீக்கு
  8. இ கலப்பை, சுரதா ந்னு ஏன் ரொம்ப கஷ்டப்படறீங்க கீதாம்மா - NHM Writer ரொம்பவும் சுலபம்.

   நீக்கு
  9. ஹாஹா கிர்ர்ர்ர்ர் எல்லோருக்கும் பிடித்து விட்டது ஸ்ரீராம்.

   நீக்கு
  10. ரெண்டும் கலந்து கஷ்டப்படறீங்களே கீதாம்மா? Google input கூட பயன்படுத்தலாம் கீதாம்மா.

   நீக்கு
  11. கலப்பையால் ரொம்ப உழறீங்களோ.... ஹாஹா நெல்லைத் தமிழன்.

   நீக்கு
  12. ஷிஃப்ட் போட்டு எழுத வேண்டியிருக்கு - கீதாம்மா.

   நீக்கு
  13. //NHM Writer ரொம்பவும் சுலபம்//அந்தத் தளம் போனாலே என்னோட ஆன்டி வைரஸ் ஒரே கத்து! திறக்க இடம் கொடுக்க மாட்டேங்குது!

   நீக்கு
  14. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 9. ஆஹா நீச்சல் குளத்தில் நீச்சல்....கிரமா உலா செமையா இருந்திருக்குமே...ஜி

  பெய்ங்கன் பர்தா நாவில் நீர் .இதுவே நன்றாக இருக்குமே...வேறு சப்ஜியும் கேட்டாரா நல்ல உபசாரம் தான்!! இல்லையா....உணவு எப்படி இருந்தது சொல்லுங்கள் அடுத்த பதிவில்....

  கீதா

  பதிலளிநீக்கு
 10. அன்பு, படத்தைப் பார்த்தால் நன்றாகத் தான் சமைத்திருக்கிறார் அந்தப் பெண்மணி என்று தோன்றுகிறது.
  சிங்கம் உங்களைப் பார்ப்பதற்கு முன்னால் நீங்கள் சிங்கத்தைப் பார்க்க வேண்டுமே.
  அருமையான ரிசார்ட்.

  @ஸ்ரீராம், ஸ்பெல்லிங்க் மிஸ்டெக் பார்த்தவருக்கு
  பிழை வரலாமோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // @ஸ்ரீராம், ஸ்பெல்லிங்க் மிஸ்டெக் பார்த்தவருக்கு
   பிழை வரலாமோ. //

   தன் குற்றம் காண்கிற்பின் தீதில்லைதான்! ஆனால் வருகிறதே... அவசரம் அம்மா... அவசரம்! சட்சட்டென பின்னூட்டம் போட்டு விட்டு ஓடும் அவசரம்!!!

   நீக்கு
  2. ஆஹா ஸ்ரீராம் அண்ட் வல்லிம்மா எனக்கும் அதுவும் சிலசமயம்... தில்லி வந்து விட்டு சென்னை போய் எபியில் கமென்ட் போடணும்னு அவசரம் அவசரமா தட்டி...தப்புத்தப்பா அடிச்சு ஹிஹிஹிஹி (கீதா சும்மா கதை வுடாத....சாதாரணமா டைம் இருக்கும் போது அடிச்சாலே தப்பா டைப்பற கேஸ் நீ...ஹா ஹா ஹா)

   கீதா

   நீக்கு
  3. அந்தப் பெண்மணி நன்றாக சமைத்து இருந்தார் வல்லிம்மா.

   நீக்கு
  4. சட் சட்டென்று பின்னூட்டம் போட்டு ஓடும் அவசரம் - காலையில் ஓட்டம் நல்லதுதான் ஸ்ரீராம்.

   நீக்கு
  5. சென்னை தில்லி சென்னை ஓட்டம் தினமும்! ஹாஹா என்ன ஒரு ஓட்டம் கீதாஜி.

   நீக்கு
 11. சிங்கங்களைப் பார்த்தீங்களா? விருந்து சாப்பிட்டதுங்களா? நீங்க கொடுத்திருக்கும் சாப்பாடு மெனு அருமை. கத்திரிக்காய் பர்த்தா செய்யனு இரண்டு முறை வாங்கிட்டுப் பண்ணலை. இப்போ நீங்க எழுதி இருப்பதைப் பார்த்தால் பண்ணணும்னு ஆசை! பார்ப்போம். கிர் காட்டுக்கும் நாங்க போனதில்லை. ரொம்ப அலையணும்னு சொல்லிட்டாங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பர்த்தா பண்ண ஆசை - சாப்பிடுங்க கீதாம்மா. அங்கு இருந்த சமயத்தில் பார்த்திருக்கலாம் கிர் வனமும்.

   நீக்கு
 12. தாங்கள் சிங்கத்தைப் பார்த்தக் காட்சியைக் காண நாங்களும் தயாராக இருக்கிறோம் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரைவில் அந்த அனுபவங்கள் பதிவில் வரும் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 13. சிங்கம் படத்துடன் உங்களையும் அடுத்த பதிவில் காணலாம்...

  பதிலளிநீக்கு
 14. சுவாரஸ்யத்துடன் அடுத்து காத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 15. ஆஹா.. விருந்து அருமை. குஜராத்தின் கிராமங்களின் வெகு அருகில் சிங்கங்கள் வருவதுண்டு. வயல் வெளிகளில் மனிதர்கள் இருக்கும்போதே அதன் அருகில் சிங்கங்கள் நடமாட்டம் உண்டு. இதனை டிஸ்கவரியில் பார்த்தேன். எனக்கும் அந்த்க் கிராமங்களுக்குச் சென்று சிங்கங்களைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம். (என்ன ஒரு பிரச்சனைனா, ஹிந்தி தெரியாம இங்கெல்லாம் எப்படி புக் பண்ணுவது, உங்களைப்போல்)

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிந்தி தெரியாமல் அப்படி ஒன்றும் கஷ்டமில்லை. இருந்தாலும் பயணிக்க நினைத்தால் சொல்லுங்கள் - ஏற்பாடுகள் செய்து விடலாம் நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 16. பயணம் அருமை.
  சிங்கம் பார்த்தீர்களா என்று பார்க்க அடுத்த பதிவை தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 17. நீச்சல் குளத்தில் அது நீங்களா ஜி?

  நைட் கிராம உலா ஆஹா அதுவும் சிங்கங்கள் உணவு உட்கொள்வதைப் பார்த்தல்....ஹையோ செம ஆர்வமா இருக்கு..வாசிக்கும் எனக்கே...காட்சி காணக் கிடைத்ததா ஜி உங்களுக்கு என்று அறிய ஆவல்....இந்த தங்கும் இடம் முகவரி நீங்கள் கொடுத்தீர்களா இல்லை என்று நினைக்கிறேன்..அருமையாக இருக்கிறது...இடம்

  படங்கள் செம....

  காலையில் கொடுத்த கமென்ட்.....இன்னும் போகலை
  இப்ப மீண்டும் முயற்சி போகும்னு நினைக்கிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீச்சல் குளத்தில் நான் தான். ரொம்பவும் ரசித்தோம் இந்த இடங்களில் கீதாஜி.

   நீக்கு
 18. கிர் வனம் நாளையா? அருமை!! ராத்திரி சிங்கம் பார்த்தீர்களா? அறிய ஆவல்.

  சாப்பாடு பார்க்க அழகாக இருக்கிறது. தொடர்கிறோம்..

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் சகோதரரே

  கிராம சூழல் மிகவும் அற்புதமாக இருந்திருக்கும். நீச்சல் குளத்தில் குளியல்.. இப்படி நீர் நிலைகளில் குளிக்க ஆரம்பித்து விட்டால் நேரம் போதே தெரியாமல் ஆனந்தமாக இருக்கும்.உண்மைதான். முன்பெல்லாம் ஊருக்கு செல்லும் போது ஆற்றங்கரை குளியல் மறக்க இயலாத அனுபவம் ஆகி விடும்.

  தங்கள் சாப்பாடு மெனு அருமை.படமும் நன்றாகவே உள்ளது.

  சிங்கத்தின் சாப்பாட்டை பார்த்து ரசித்தீர்களா.. அது எவ்வித இரை உண்டது என்று தெரிந்த கொள்ளவதற்கு அடுத்த பதிவை காண ஆவலாக காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆற்றங்கரை குளியல் - மிகவும் பிடித்த விஷயம் கமலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு
 20. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamilblogs.in

  பதிலளிநீக்கு
 21. உடன் பயணிக்கிறேன். நீச்சல் குள அனுபவம் அருமை.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....