புதன், 9 மே, 2018

குஜராத் போகலாம் வாங்க – சிங்கத்தின் இருப்பிடத்தில் - வனப்பயணம் - சில தகவல்கள்



இரு மாநில பயணம் – பகுதி – 36

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


வன அலுவலகத்தின் முன்னர் சிங்கங்களின் பொம்மை....

முதல் நாள் இரவு நேரத்தோடு உறங்கி அதிகாலையிலேயே விழித்து வனத்திற்குள் செல்வதற்குத் தயாரானோம். இந்த Gகிர் வனப்பகுதியின் முழுப்பெயர் சாஸன் Gகிர் என்பது தான். பெரும்பாலும் நாம் படிக்கும்போது Gகிர் என்று மட்டுமே படித்திருக்கிறோம் அல்லவா. இந்த சாஸன் Gகிர் வனத்திற்குள் செல்ல வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். நாள் ஒன்றுக்கு இவ்வளவு பெர்மிட் என்ற கணக்கு உண்டு. அதற்கு மேல் தருவதில்லை. அதனால் இணையம் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம். அங்கே சென்று பார்த்துக் கொள்ளலாம் எனப் போனால் வனப்பயணம் செய்வது சந்தேகம் தான்.



வன அலுவலகத்தின் ஒரு நுழைவாயில்....

இரண்டு விதமான வனப் பயணங்களை இங்கே வைத்திருக்கிறார்கள் – Gir Safari Trail மற்றும் Devalia Safari Park. இதில் பார்க்க வேண்டியது முதலாவது தான். அது கிடைப்பது தான் கடினம். இரண்டாவது சுலபம் – ஆனால் அத்தனை சுவாரஸ்யமான பயணம் அல்ல – விலங்கியல் பூங்கா போலத்தான் இரண்டாவது. அதனால் முதலாவது வனப்பயணத்தினை தான் நாங்கள் தேர்ந்தெடுத்தோம். வனம் வருடம் முழுவதும் திறந்திருப்பதில்லை – ஜூன், ஜூலை மாதங்களில் மூடி இருப்பார்கள் – அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் மூன்று Time Slots உண்டு இந்த வனப் பயணத்திற்கு – காலை 06 முதல் 09 மணி வரை, காலை 09 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மற்றும் மதியம் 03 மணி முதல் மாலை 06 மணி வரை. முன்பதிவு செய்ய இந்த இணைய தளம் தான் அரசின் இணையதளம் – நிறைய போலி வலைத்தளங்கள் உண்டு ஜாக்கிரதை. முன்பதிவு செய்யும்போது அடையாள அட்டைகளின் எண்களையும் கொடுக்க வேண்டும் – வனத்திற்குச் செல்லும்போது அதே அடையாள அட்டைகளின் Original உங்களிடம் இருக்க வேண்டும் என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்.


இணைய தளத்தின் முகப்பு....

இந்த மூன்று Time Slot-களில் காலை நேரத்தினைத் தேர்ந்தெடுப்பதே நல்லது. மதிய நேரத்தில் வெயிலுக்காக சிங்கங்கள் மறைவான இடங்களில் ஓய்வெடுக்க ஆரம்பித்து விடும். காலை நேரமாக இருந்தால் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பயணம் செய்தாலும் சிங்கங்களைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைப்பது ஒவ்வொருவருடைய அதிர்ஷ்டம் பொறுத்தது. நாங்கள் முன்னரே முன்பதிவு செய்திருந்ததால் வசதியாகப் போயிற்று. வனப் பயணம் காலை ஆறு மணிக்குத் துவங்கும் என்றாலும், அதிகாலையிலேயே அங்கே சென்று விடுவது நல்லது. ஏனெனில் வனப் பயணத்திற்கான Permit-ஐ இணையம் வழி காசு கொடுத்து முன்பதிவு செய்திருந்தாலும், வனத்தின் வெளியே இருக்கும் அலுவலகத்தில் அதைக் காண்பித்து இன்னும் கொஞ்சம் கட்டணத்தினை [வனக் காவலர், ஓட்டுனர் கட்டணம் மற்றும் வாகனத்திற்கான வாடகை] ஆகியவற்றை செலுத்திய பிறகு தான் நமக்கு எந்த வாகனம் வரும் என்பதைச் சொல்வார்கள்.


வன அலுவலகத்தின் மற்றொரு நுழைவாயில்...... 


வன அலுவலகத்தின் நுழைவாயில் அருகே நண்பர்களோடு.......

நாங்கள் காலையிலேயே எழுந்து எங்கள் வாகனத்தில் சாசன் Gகிர் அலுவலக வாயிலை அடைந்த போது 05.20! அதற்குள்ளாகவே நிறைய வாகனங்கள் அங்கே காத்திருந்தன. சிறிது நேரம் வரிசையில் நின்ற பிறகு அனுமதிச் சீட்டினையும், முன்பதிவு செய்யும்போது குறிப்பிட்ட Original அடையாள அட்டைகளையும் காண்பித்து வனத்தின் உள்ளே செல்ல வேண்டிய கட்டணத்தினைக் கட்டிய பிறகு எங்களுடன் வரப் போகும் வாகன ஓட்டி, வனக்காவலர் பெயர், வாகனத்தின் எண் ஆகியவற்றைச் சொன்னார்கள். கூடவே ஒரு Boarding Pass தருவார்கள். இதைக் காண்பித்த பிறகு தான் வனத்திற்குள் நீங்கள் செல்ல முடியும். வாகனத்திற்குச் செல்வதற்கு முன்னர் கட்டணங்கள் எவ்வளவு என்பதையும் சொல்லி விடுகிறேன்.


வன அலுவலகத்தின் முன்னர் இருந்த புகைப்படத்தின் புகைப்படம்!....

இணையம் வழி பதிவு செய்யும்போது Permit ஒன்றுக்கு 800 ரூபாய் கட்ட வேண்டும் [ஒரு Permit-இல் அதிக பட்சமாக ஆறு பேர் மட்டும் பயணிக்கலாம்!]. இது தவிர நம்முடன் வழிகாட்டியாக வரும் வன அலுவலருக்கு 300 ரூபாய், ஜீப் வாடகை 1500 ரூபாய். இவ்வளவு தான் கட்டணம். இந்த கட்டணங்கள் Gir Jungle Trail-க்கு ஆனவை. மற்றதற்கு கட்டணம் குறைவு தான். எல்லா ஏற்பாடுகளையும் முடித்துக் கொண்டு அலுவலகத்தின் வாயிலில் இருந்த வாகனத்திற்கு வந்து சேர்ந்து அனைவரும் புறப்பட்டோம். எங்களுக்கு கிடைத்த வாகன ஓட்டியின் பெயர் கிம் Bபாய்! வழிகாட்டியின் பெயர் தேவ்சியா! இந்த மாதிரி வனப்பயணத்தில் நம்முடன் வரும் வன இலாகா அலுவர்களை நட்புடன் நடத்துவது நல்லது! அப்போது தான் நிறைய விஷயங்களை நமக்குச் சொன்னபடியே வருவார்கள். இல்லை என்றால் சும்மாவே சுற்றி விட்டு வெளியே கொண்டு வந்து விட்டுவிடுவார்கள்.


வன அலுவலகத்தின் முன்னர் நண்பர்களோடு....

வனப்பயணத்தில் மொத்தம் ஏழு விதமான வழி/பாதைகள். அதில் ஏதாவது ஒரு பாதையில் பயணிக்க மட்டுமே அனுமதி கிடைக்கும். ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு விதமான வழி. ஒரே நேரத்தில் அனைத்து வாகனங்களும் ஒரே வழியில் செல்வது விலங்குகளுக்கு தொந்தரவாக இருக்கும். எங்களுக்குக் கிடைத்த வழி – அதாவது Route – இரண்டாவது Route! வனத்திற்குள் சமீபத்திய கணக்கெடுப்பின் படி மொத்தம் 523 சிங்கங்கள் இருக்கின்றனவாம். சிங்கங்கள் பொதுவாக மனிதர்களை தாக்குவதில்லை. மனிதர்கள் தான் எல்லா விலங்குகளையும் தாக்குகிறார்கள் என்பது வேறு விஷயம்!  இந்தப் பாதையில் வனத்தினுள் நுழைந்த எங்களுக்கு சிங்கங்கள் காட்சி அளித்ததா, இல்லையா என்பதை அடுத்த பகுதியில் சொல்லட்டா!   

தொடர்ந்து பயணிப்போம்.
 
நட்புடன்

வெங்கட்
தமிழகத்திலிருந்து....

30 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். வன அலுவலகம் வரை வந்தும் இன்னும் உள்ளே போன விவரம் சொல்லவில்லை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வனத்தின் உள்ளே கிடைத்த அனுபவங்கள் அடுத்த பகுதியில் வரும் ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இணையதளம், எவ்வளவு பணம் செலுத்த வேண்டி இருக்கும் போன்ற விவரங்கள் பயனுள்ளவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அடுத்து செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ஸ்ரீராம்.

      நீக்கு
  3. மறக்காமல் அடையாள அதை, ஆதார் போன்றவற்றை எடுத்துக் கொண்டீர்கள் அல்லவா? ஒருவேளை உள்ளே சிங்கம் எதிரில் வந்தாலும் ஆதார் காட்டினாள் விட்டு விடும் அல்லவா?!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்கத்திடம் ஆதார் அட்டை காண்பித்தால் ரிஸ்க் அதிகம் - ஃபோட்டோவில் பார்க்க ஏதோ விலங்குன்னு நினைத்து ஒரு அறை விட்டாலும் விடலாம் ஸ்ரீராம். ஹாஹா.....

      நீக்கு
  4. ஒருவேளை உங்களைக் கண்டு பயந்து அவை எதிரிலேயே வரவில்லையா?

    ஸோ...

    சிங்கத்தை (சிங்கங்களை) அதன் குகையிலேயே சந்தித்து விட்டுத் திரும்பியிருக்கிறீர்கள். மாவீரர் வெங்கட் வாழ்க! நடந்தவைகளை அறிந்து கொள்ள அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாவீரர் வெங்கட் - ஹாஹா. சிங்கம் நல்ல தரிசனம் கொடுத்தது ஸ்ரீராம்.

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!!

    கணினி ஸ்லோ ஹேங்க் என்று பிரச்சனை தாமதம்...

    சிங்கங்கள் ஆஹா என்ன அழகு!! பதிவு வாசித்துவிட்டு வரேன்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணினி பிரச்சினை பெரும் பிரச்சனை ஆக இருக்கிறதே.... ஹாஹா

      நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. நல்ல தகவல்கள் ஜி. குறித்து வைத்துக் கொண்டேன். இணையதள முகவரியையும் நோட் செய்து கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. நிறைய ரூட்கள் இருப்பது தெரிகிறது. எந்த ரூட்டில் சென்றால் அதிகம் காண முடியும் என்பது எல்லாம் நமக்குக் கிடைக்கும் ரூட் ...லக் இல்லையா?

    செல்லும் நேரம் பற்றி சொல்லியதும் மிகவும்பயனுள்ள தகவல். பொதுவாகவே வேட்டையாடும் விலங்குகள் காலையில் மிகவும் ஆக்டிவாக இருக்கும்.

    சரி கடைசியில் சஸ்பென்ஸ் பார்த்தீர்களா இல்லையா என்று....மான் பார்த்தீர்கள் என்று தெரிகிறது...சிங்கம்?!!! ஆவலுடன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் - நமக்குக் கிடைக்கும் ரூட்டில் சிங்கம் தரிசனம் தருவது லக் மட்டுமே.

      ஆமாம் வெயில் அதிகமாக இருக்கும்போது வெளியே செல்லாது.

      பார்த்த கதை அடுத்த பகுதியில் கீதா ஜி.

      நீக்கு
  8. நல்ல பயனுள்ள தகவல்கள் வெங்கட்ஜி! சிங்கம் பார்த்தீர்களா என்பதை அறிய ஆவலுடன் தொடர்கிறோம்..

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து வருவது அறிந்து மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு
  9. கொடுத்துள்ள விவரங்கள் மிக உபயோகம். இன்னும் சிங்கம் பார்த்த கதை வரலையா? மான்கள் படம் இருப்பதால், சிங்கம் பார்த்தீர்களா இல்லையா என்று அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பகுதியில் அந்த தகவல்கள் வரும் நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    படங்கள் அருமை. வனத்திற்கு செல்லும் குறிப்புகள், நேரங்கள், பாதைகள், என பயனுள்ள தகவல்களாக தந்திருப்பது அருமை. இரண்டாவது பாதையில் பயணப்பட்ட உங்களுடன் நாங்களும் காட்டு ராஜாவை காணும் ஆவலில் தொடர்கிறோம். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. விலங்குகளைஅவற்றின் இயற்கை இடத்திலேயே காண்பதுதான் சிறப்பு இல்லையா எத்தனை சிங்கங்கள் பார்த்தீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கை சூழலில் விலங்குகளைப் பார்ப்பது தான் எனக்கு பிடித்த விஷயம் ஜி.எம்.பி. ஐயா

      நீக்கு
  12. பயண குறிப்புகள், நேரம், போன்றவை நல்ல பயனுள்ள குறிப்புகள்.
    அடுத்த பதிவுக்கு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. sசிங்கத்தின் அனுபவங்களைப் படிக்கக் காத்திருக்கேன். அது சரி, முன்ன்ன்ன்ன்ன்ன்னே ஒரு பதிவில் சிங்கம் டின்னர் சாப்பிடும்போது போய்ப் பார்க்கப் போவதாய்ச் சொன்ன நினைவு. அதை எதிர்பார்த்து ஆவலுடன் ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விட்டீர்களா அல்லது அந்தப் பதிவைத் தவற விட்டு விட்டேனா? போய்ப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. சிங்கத்தின் டின்னர். ஹாஹா

    சிங்கம் வந்து கொண்டே இருக்கிறது கீதாம்மா.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....