வெள்ளி, 12 ஜனவரி, 2018

சாப்பிட வாங்க – கேரட் தோசை….
குளிர் காலம் வந்து விட்டாலே தலைநகர் மட்டுமல்ல, வட இந்தியா முழுவதுமே காய்கறிகள் ஃப்ரெஷ்-ஆக கிடைக்க ஆரம்பித்து விடும். குறிப்பாக, முள்ளங்கி, கேரட், பச்சைப் பட்டாணி போன்றவை குளிர்காலத்தில் விலை குறைவாகவும் கிடைக்கும் என்பதால் நிறைய பயன்படுத்துவார்கள். கேரட், முள்ளங்கி போன்றவற்றை சமைக்காமலேயே சாப்பிடுவதுண்டு. அதிலும் இங்கே கிடைக்கும் கேரட், நம் ஊரில் இருப்பது போல, சுவையே இல்லாது மண்ணாந்தையாக இருக்காது – நல்ல சுவையுடன் இருப்பதால் தான் இந்த நாட்களில் கேரட் ஹல்வா செய்து சாப்பிடுவார்கள்.  அந்த கேரட் வைத்து வேறு என்ன செய்யலாம்? கேரட் தோசை கூட செய்யலாம் என ஒருவர் சொல்ல, உடனே செய்து பார்த்து விட்டேன் – நன்றாகவே இருந்தது.  எப்படிச் செய்வது என பார்க்கலாம்.

வியாழன், 11 ஜனவரி, 2018

கதம்பம் – புடவையின் கதை – கோலத்தட்டு – சொர்க்க வாசல்


ஸ்வீட் மெமரீஸ்: மார்க் தம்பியின் நினைவூட்டல்


இந்தப் புடவை அந்தப் புடவை அல்ல!

முகப்புத்தகத்தில் அவ்வப்போது ஒரு நினைவூட்டல் தருகிறது – இதே நாளில் போன வருடத்தில், 2 வருடத்திற்கு முன்பு என எதையாவது ஒரு பகிர்வை நினைவுபடுத்துகிறது.  அப்படி வந்த ஒரு இற்றை…. என்னவர் பரிசளித்த புடவையைப் பற்றி எழுதியது. பதினாறு வயது அந்த புடவைக்கு! இன்றும் பத்திரமாய் இருக்கு.  மூன்று வருடங்களுக்கு முன்பு ஜனவரி மாதத்தில் எழுதியது!

புதன், 10 ஜனவரி, 2018

குஜராத் போகலாம் வாங்க – விருந்தாவன் தோட்டத்தில் மதிய உணவு

இரு மாநில பயணம் - பகுதி - 3


இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!

நான் காலையிலேயே ஆம்தாவாத் வந்து நண்பரின் நண்பர் வீட்டினர் தந்த காலை உணவை ஒரு கை பார்த்திருக்க, திருவனந்தபுரத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்ட நண்பர்கள் காலை உணவு கூட ஒழுங்காகச் சாப்பிடாமல்/சாப்பிட முடியாமல் இருந்தார்கள். அதனால், எங்கள் திட்டப்படி பயணத்தினைத் துவக்க முடியாமல் மதிய உணவு தான் முதலில் என்ற முடிவு எடுத்தோம். எங்கள் குழுவில் வந்த ஒருவருக்கு வயது 58 – சர்க்கரை நோய் வேறு உண்டு என்பதால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்று சொல்ல, வழியில் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்திருந்த என் திட்டத்தினை மாற்ற வேண்டியிருந்தது. அதனால் ஓட்டுனர் முகேஷ்-இடம் நகருக்குள்ளேயே ஏதேனும் உணவகத்திற்கு அழைத்துச் செல்லும்படி கூறினேன்.

செவ்வாய், 9 ஜனவரி, 2018

சாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜிஷல்கம் சப்ஜி

அலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எடுத்து வருவார். இனிப்பும் காரமும் சேர்ந்து நன்றாகவே இருக்கும். குளிர் காலத்தில் இதை வாரத்திற்கு ஒரு முறையேனும் சாப்பிடுவது ரொம்ப நல்லது என்று சொல்வதோடு, “ஜோ காவே ஷல்கம், உசே நஹி ஆவே Bபல்கம்” என்றும் சொல்வார்.  ”அட, வர வர, இந்தத் தளத்தில் இந்தித் திணிப்பு ரொம்பவே அதிகமா இருக்கு!” என்று நீங்கள் நினைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை! ஷல்கம் – எந்தக் காய்கறி என்பதை கடைசியில் சொல்கிறேன். அதற்கு முன்னர் இந்த சப்ஜி எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்!

திங்கள், 8 ஜனவரி, 2018

குஜராத் போகலாம் வாங்க – நண்பேன்டா – குஜராத்தி காலை உணவு

இரு மாநில பயணம் - பகுதி - 2

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


காண்ட்வி - குஜராத்தி சிற்றுண்டி...
படம்: இணையத்திலிருந்து....

குஜராத் மாநிலத்திற்கு பயணம் செய்ய வேண்டும் என முடிவு செய்தவுடனேயே நான் அழைத்தது நண்பரின் நண்பர் குரு அவர்களைத் தான். அவர் மூலமாக வாகன ஏற்பாடு செய்து கொண்டோம். இரண்டு மூன்று முறை அவரை அழைத்து, அதுவும் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அவரை அலைபேசியில் அழைத்து வாகன ஏற்பாடு செய்யச் சொல்ல, கவலைப் படாதீர்கள் நான் ஏற்பாடு செய்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டார். அதே போல, எங்கள் பயணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே வாகனம் ஏற்பாடு செய்தது பற்றி, தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் பற்றி எல்லாம் என்னிடம் தெரிவிக்க எந்த கவலையும் இல்லாது இருந்தேன். சொன்னதைப் போலவே ஏற்பாடு செய்தாலும், அவரது பணியின் காரணமாக நாங்கள் சென்று சேரும் நாள் அன்று அவர் ஆம்தாவாத்-இல் இருக்க முடியாத சூழல்!

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

இந்தி திணிப்பு – அனுஷ்கா, தமன்னா, தீபிகா - இந்தி சினிமா
படம்: இணையத்திலிருந்து....

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு கல்லூரி நண்பர் எங்கள் கல்லூரி நண்பர்களுக்கான Whatsapp குழுவில் அன்றைய இரவு உணவு பற்றி கேட்க, நான் “phulka [Chapathi], Cabbage-Carrot-Mutter Subji” என எழுதியபோது “இந்தித் திணிப்பு” என கருத்துச் சொன்னார்! இந்தப் பதிவினை எழுதலாம் என நினைத்தபோதே நண்பர் இதற்கு என்னச் சொல்லப் போகிறாரோ என்ற நினைவும் கூடவே வந்தது! ஏனெனில் இன்றைக்கு நாம் பார்க்கப் போவது சில ஹிந்தி பாடல்கள்!

சனி, 6 ஜனவரி, 2018

வேட்டி தினம் அல்ல வெட்டி தினம்!ஜனவரி 6 – இன்று வேட்டி தினமாம். தில்லியில் அடிக்கும் குளிரில் வேட்டி கட்டிக்கொண்டு நடந்தால் ஃப்ரீஸ் ஆக வேண்டியது தான்! வேட்டி தினம் அன்று காலையிலிருந்து பதிவு எதுவும் வெளியிடாமல் இப்படி இரவு பதிவு வெளியிட்டால் – அதுவும் “வேட்டி தினம் அல்ல வெட்டி தினம்” என்ற தலைப்பில் பதிவு வெளியிட்டால் என்ன அர்த்தம்….

வெள்ளி, 5 ஜனவரி, 2018

முடிவில்லாத பிரச்சனைகள் – யாருக்குத் தான் இல்லை பிரச்சனை
படம்: இணையத்திலிருந்து....

பொதுவாக நம்மில் பலரும் சொல்லும் ஒரு வாக்கியம் – “இன்னிக்கு யார் முகத்தில் முழித்தேனோ? இன்னிக்கு நாள் நல்லாவே இல்ல! பிரச்சனைகள் நிறைய!”  தலைநகரில் தனியாக இருக்கும் நான் ”யார் முகத்தில் முழித்தேனோ?” எனச் சொல்ல முடியாது! காலையில் விழித்தவுடன் முதல் முதலாகப் பார்ப்பதே – பாத்ரூம் கண்ணாடியில் தான்! என்னை நானே பார்த்துக் கொள்கிறேன் – நல்லதோ கெட்டதோ, ஒவ்வொரு நாளும் நடப்பது யாருடைய கையிலும் இல்லை! இன்றைக்கும் அப்படித்தான் – ஆனால் இன்றைய நாள் நன்றாக இல்லை! – வாக்குவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் என எல்லாமே சரியானபடி அமையவில்லை. அலுவலகத்திலும் சில சில்லறைப் பிரச்சனைகள். என் பிரச்சனைகளை பெரிதாக வெளியே சொல்வதில்லை, தீர்வு காண்பது தான் வழக்கம். இன்றைக்கும் அப்படியே!

புதன், 3 ஜனவரி, 2018

ப்ரெட் சாண்ட்விச்-உம் வெங்காய சாம்பாரும்!ப்ரெட் சாண்ட்விச் கூட வெங்காய சாம்பாரா? என்னய்யா காம்பினேஷன் இது! இட்லிக்கு பன்னீர் பட்டர் மசாலா தொட்டு சாப்பிட்ட மாதிரி – ஓ நார்த் சவுத் காம்போவா என்று கேட்கப் போகிறார் ஒரு சாப்பாட்டுப் பிரியர்! விஷயத்துக்கு வருகிறேன்! நேற்று கிடைத்த ஒரு அனுபவம் பற்றி தான் இன்று சொல்லப் போகிறேன்! எங்கம்மா அடிக்கடி ஒரு வசனம் சொல்வார்கள் – “காணாத கண்ட கம்பங்கூழ, சிந்தாத குடிடா சில்லி மூக்கா!” என்பது அந்த வசனம்! அதற்கு அர்த்தம் நேற்று நடைமுறையில் பார்க்கக் கிடைத்தது!

செவ்வாய், 2 ஜனவரி, 2018

குஜராத் போகலாம் வாங்க – இரு மாநில பயணம் – புதிய தொடர்


ஒட்டகத்த கட்டிக்கோ, கெட்டியாக ஒட்டிக்கோ!
ஒட்டகத்தின் வாய்ஸ்: எலேய், கை வைக்காத, கடிச்சுடுவேன்!

சென்ற ஞாயிறன்று குஜராத் மாடல் – அப்படி என்னதான் இருக்கு? என்ற தலைப்பில் குஜராத் மற்றும் தியு [Diu] சென்றபோது எடுத்த சில புகைப்படங்களை, அடுத்த பயணத்தொடருக்கான முன்னோட்டமாக பதிவு செய்திருந்தேன். என்னது, நீங்க இன்னும் அந்தப் பதிவையே, பார்க்கலையா, புகைப்படங்களை பார்த்து ரசிக்கலையா….  ரொம்ப தப்பு! முதல்ல அந்தப் பதிவை படிச்சிட்டு வந்துடுங்க ப்ளீஸ்! ஏற்கனவே ஒரு முறை நண்பர் குடும்பத்தினரோடு குஜராத் மாநிலத்திற்கு சென்று வந்திருக்கிறேன் – அப்போது கிடைத்த அனுபவங்களை பதிவுகளாக எழுதி இருக்கிறேன் – மின்புத்தகமாகவும் வெளி வந்திருக்கிறது. பதிவுகள், மின்புத்தகம் ஆகியவற்றை எனது வலைப்பூவின் வலப் பக்கத்தில் இருக்கும் சுட்டிகள்/Drop Down Menu வழியாக நீங்கள் படிக்கலாம்.

திங்கள், 1 ஜனவரி, 2018

கட்டிப்புடி கட்டிப்புடிடா… - ஆங்கிலப் புத்தாண்டில்…
என்னய்யா இது, புது வருஷமும் அதுவுமா, காலையிலேயே இப்படி கட்டிப்புடி கட்டிப்புடிடான்னு தலைப்பு வைச்சு ஒரு பதிவு போடறியே – அதுவும் காலங்காத்தால? என்று நினைத்து, மனதில் என்னைத் திட்டுவதற்குள் சொல்லி விடுகிறேன் – இது வேறு!