சனி, 6 ஜனவரி, 2018

வேட்டி தினம் அல்ல வெட்டி தினம்!



ஜனவரி 6 – இன்று வேட்டி தினமாம். தில்லியில் அடிக்கும் குளிரில் வேட்டி கட்டிக்கொண்டு நடந்தால் ஃப்ரீஸ் ஆக வேண்டியது தான்! வேட்டி தினம் அன்று காலையிலிருந்து பதிவு எதுவும் வெளியிடாமல் இப்படி இரவு பதிவு வெளியிட்டால் – அதுவும் “வேட்டி தினம் அல்ல வெட்டி தினம்” என்ற தலைப்பில் பதிவு வெளியிட்டால் என்ன அர்த்தம்….

காலை எழுந்தவுடன் அலுவலகத்திற்கு வரச் சொல்லி அழைப்பு! வேலைகளை முடித்துக் கொண்டு அலுவலகத்திற்குச் சென்றபோது மணி 11.30! அலுவலகத்திலிருந்து புறப்பட்டு தலைநகரின் செக்டர் 8 ஆர்.கே. புரம் பகுதியில் இருக்கும் மலை மந்திருக்கு நண்பர் பத்மநாபன் அவர்களுடன் சென்று வீடு திரும்பும்போது நேரம் இரவு 09.40!

இதற்கு மேல் பதிவு எழுதி வெளியிடுவது சிரமம் – அதுவும் இரண்டு பேர் தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார்கள் – தில்லையகத்து கீதா அவர்களும் மியாவ் அதிரா அவர்களும்! இப்போது எழுத நேரமோ, மனதோ இல்லை! அதனால் இன்றைய பதிவு - பதிவுகள் எழுத ஆரம்பிப்பதற்கு முன் [அதாவது எட்டு வருடங்களுக்கு முன்] இருந்த ஒரு பழக்கம் – ”வெட்டி” ஒட்டுவது! பத்திரிகைகளில் வந்த சில விஷயங்களில், மனதுக்குப் பிடித்தவற்றை வெட்டி ஒரு A4 காகிதத்தில் ஒட்டி ஃபைல்களில் சேமித்து வைப்பேன். அப்படி ”வெட்டி” ஒட்டிய சில விஷயங்கள் இன்றைய பதிவாக……

ஒரு கவிதை: நியாயமா நண்பா ?

‘திருமண மலர்’ விளம்பரம் பார்த்தேன்!
குலம் கோத்திரம் கேட்டிருந்தாய்
இந்தியனாய் மாறினேன்!
படிப்பைக் கேட்டிருந்தாய்
புத்தகப் புழுவாய் மாறினேன்!
பணியைக் கேட்டிருந்தாய்….
இயந்திரமாய் மாறினேன்!
உயரம் கேட்டிருந்தாய்….
ஜிம்முக்குச் சென்றேன்
அழகைக் கேட்டிருந்தாய்…
பார்லருக்குச் சென்றேன்
நிறத்தைக் கேட்டிருந்தாய்
க்ரீமுக்கு மாறினேன்!
இத்தனை செய்தும் பலனில்லை – மறைவில்
நீ தட்சணைக் கேட்பதனால்!
மஞ்சள் கயிறு போதுமே…
உன் மனைவி ஆவதற்கு!
பூக்களைப் பறிப்பதற்கு…
பூவையே விலை கேட்கின்றாய்!
நியாயமா நண்பனே!

-    ரம்யா ஷான், புது தில்லி!

டப்பிங் திரைப்படங்கள்:

ஆங்கிலப் படங்களை தமிழில்/ஹிந்தியில் பார்ப்பதைப் போல கஷ்டம் வேறு ஒன்றுமில்லை! ஒரே ஒரு முறை பார்த்ததற்கே இரண்டு மூன்று நாட்கள் பித்து பிடித்தாற் போல இருந்தேன்! அப்படி ஆங்கிலப் படங்களை தமிழில் டப் செய்தால், தமிழ் டைட்டில் எப்படி இருக்கும்?

திங்கள்:  “ஆத்தா திரும்பி வராங்கோ!”

செவ்வாய்: “எட்டுக்கால் ஏழுமலை”

புதன்: “இது ஆவறதில்லை!”

வியாழன்: “கருவா பசங்க!”

வெள்ளி: “ஓட்டையாண்டி”

இந்த ஆங்கில படங்கள் எவை என பின்னூட்டத்தில் சொல்லலாமே!

ஒரு பொன்மொழி:

உங்கள் பிரச்சனைகளுக்கும் தீர்வுகளுக்குமான மிகக் குறைந்த தூரம் என்பது, உங்கள் முழங்கால்களுக்கும் தரைக்கும் உள்ள தூரம் தான். கடவுளிடம் முழந்தாளிடும் எவரும் எதையும் எதிர்கொள்ள முடியும்!

ஒரு கேள்வி – கவிதையாக!

புத்தகத்தில் அமரக் கூடாது
அது சரஸ்வதியின் அம்சம்!
அவள் மட்டும்
பூவில் அமர்ந்திருக்கிறாளே
இரக்கமில்லாமல்?

வெட்டி ஒட்டியதில் சில உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கும் பிடித்ததா என்ற உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லலாமே!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 


30 கருத்துகள்:

  1. அந்தக் கவிதையை ரொம்பவே ரசித்தேன் ஜி!!

    திங்கள் : மம்மி ரிட்டர்ன்ஸ்

    செவ்வாய் : ஸ்பைடர் மென்

    புதன் : மிஷன் இம்பாசிபிள்

    வியாழன் : மென் இன் ப்ளாக்

    வெள்ளி : ஹாலோ man

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாத் தான் சொல்லி இருக்கீங்க கீதா ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பொன்மொழி சூப்பர்ப்..

    ஒரு கேள்வி கவிதையாக..... ஹா ஹா நல்ல கேள்வி!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. கீதா அதிரா ராஜி ஏஞ்சல் ஆதிவெங்கட் கீதம்மா(திருச்சி) இத்தனை சகோதரிகள் இருந்தும் இந்த வேஷ்டி தினத்தில் நமக்கு ஒரு சகோதரிகளும் வேஷ்டி வாங்கி தரலைன்னு நினைக்கும் போது நெஞ்சு அப்படியே அடைப்பது எனக்கு மட்டும்தானா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெஞ்சு பொறுக்குதில்லையே என்று புலம்ப வேண்டியது தான் மதுரை.... கேட்டாலும் வாங்கித் தருவதில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ம்துரைத் தமிழன்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா மதுரை நீங்க வீட்டுல வேட்டியா அல்லது லுங்கி டான்ஸா....ஹா ஹா ஹா ஹா....
      சரி சரி எங்க அன்பு சகோதரர்கள் அனைவருக்கும் வேஷ்டி பரிசளிப்பு நாங்க சகோதரிகள் எல்லாரும் சேர்ந்து....இந்தாங்க பிடிச்சுக்கோங்க..

      http://mcrshopping.com/cat/men/buy-pure-white-cotton-dhotis-for-men-online-shopping-veshti

      கீதா

      நீக்கு
    3. ஆஹா... நாங்களே லிங்க் பிடிச்சுப் போய் காசு கொடுத்து வாங்கிக்கணுமா... நல்லா இருக்கே நியாயம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. புத்தகம் சரஸ்வதி என்றால் அந்த புத்தத்தை பழைய புக் கடையில் போடுவது தப்புதானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கேள்வி....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு

  5. புத்தகத்தின் மீது கால் தவறி பட்டுவிட்டால் மாற்று மதத்தை சார்ந்த தமிழர்களும் அதை கண்ணில் தொட்டு வைத்து கொள்ளுவது வழக்கம். நானும் இன்று வரை அப்படித்தான் செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கை தானே எல்லாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  6. நேற்று வேட்டி தினமா? தெரிந்துதான் என்ன செய்யப் போகிறேன்? நான் வேட்டி கட்டுவது திவச சமயங்களில்தான்!

    என்ன படங்கள் என்று கீதா சொல்லி விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதும் வீட்டில் வேட்டி தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. வெட்டி ஒட்டியதிலேயே அருமையான செய்திகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  8. மிக அருமை. வெட்டி ஒட்டிய விஷயங்களைத் தொடரவும். நண்பா கவிதை
    மனதைத் தொடுகிறது.
    படங்களின் மொழி பெயர்ப்பு சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  11. தமிழ் படமே இங்க எனக்கு தகராறு.. இதுல இங்க்லீஷ் படம் வேறையா?! மம்மி ரிட்டர்ன்ஸ் மட்டும்தான் தெரியுது. தட்சணை மற்றும் சரஸ்வதி கவிதை அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழே தகறாறு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  12. நியாயமா நண்பா கவிதையை ரசித்தேன் ஆங்கிலப் படங்களுக்குத் தமிழ் தலைப்பு கூகிளில் மொழி பெயர்ப்பு போல் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  13. எல்லா பதிலும் தில்லையகத்து கீதா சொல்லிட்டார். (இல்லைனா மட்டும் ரொம்பத் தெரியுமாக்கும்! ஹிஹிஹி அது என்னோட ம.சா.) இந்தப் பதிவு கண்ணில் படவே இல்லை. அதோட உங்க பதிவுக்கு வரவும் முடியலை! சுத்தி வளைச்சு அப்புறமா முகநூல் வழியா வர வேண்டி இருக்கு! கமென்ட் கொடுத்தால் கேட்கவே வேண்டாம்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலருக்கு பதிவு திறப்பதில்லை.... https://www.venkatnagaraj.blogspot.com என்று திறந்து பாருங்கள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....