வியாழன், 28 பிப்ரவரி, 2019

பந்தா பரமசிவம் – கதை மாந்தர்கள்
”ஹலோ, உங்களை எங்கேயோ பாத்திருக்கேன்… நீங்க டீச்சரா?”

புதன், 27 பிப்ரவரி, 2019

சிறையிலிருந்து ஒரு கடிதம்


நண்பர் ”எங்கள் பிளாக்” ஸ்ரீராம் அவர்களுக்கும், “தில்லையகத்து க்ரோனிக்கிள்ஸ்” கீதா அவர்களுக்கும் என் மீது, என் திறமை மீது அசாத்திய நம்பிக்கை!  என்னாலும் கதை எழுத முடியும் என்று சொல்லிக் கொண்டே இருக்க, நான் செய்த ஒரு முயற்சி தான் “சிறையிலிருந்து ஒரு கடிதம்”. இரண்டு மாதங்களுக்கு முன்னரே இந்தக் கதையை [அப்படிச் சொல்வது சரியா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்!]/பகிர்வினை தட்டச்சு செய்து ஸ்ரீராம் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். ஒன்றிரண்டு முறை படித்த பிறகு தான் அனுப்பி வைத்தேன் – ஆனாலும் பதிவு “எங்கள் பிளாக்” தளத்தில் வெளியான பிறகு தான் அதில் உள்ள தவறுகள் – சுனில்/அனில் பெயர் குழப்பங்கள் – தெரிந்தன. சில சமயங்கள் பதிவு வெளியாகும் முன்னர் படித்துப் பார்த்தாலும், நமது தவறுகள் நமக்குத் தெரிவதில்லை. அடுத்தவர்கள் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.  இங்கே அந்தப் பெயர் குழப்பங்கள் இல்லாமல் வெளியிடுகிறேன்.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

கதம்பம் – புளிக்காய்ச்சல் – உழைப்பாளி – தமிழ் இளங்கோ ஐயா – பிஸ்கெட் சாம்பார்
சாப்பிட வாங்க – புளிக்காய்ச்சல் – 22 ஃபிப்ரவரி 2019ரொம்ப நாளாச்சேன்னு நேற்று செய்தேன். புளியோதரை வேணுங்கிறவங்க வரிசையில நில்லுங்க :) அடிதடி கூடாது ஃபிரண்ட்ஸ்!

திங்கள், 25 பிப்ரவரி, 2019

மேஜையில் உதித்த மண்டையோடு – சுதா த்வாரகநாதன்
ஒரு வார இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  ஒரு பதிவில் மகள் பற்றி எழுதி இருந்தேன்.  இன்றைக்கு மகன் பற்றி எழுதப் போகிறேன்.

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

ஐம்புலன்களுக்கு விருந்து – நிழற்பட உலா - பகுதி ஒன்றுஎல்லா வருடம் போலவே, இந்த வருடமும் தலைநகர் தில்லியின் “தில்லி அரசாங்கம்” தலைநகரின் சாகேத் பகுதியில் உள்ள பூங்காவில் [Garden of Five Senses] தோட்டத் திருவிழா நடத்தியது 16-18, ஃபிப்ரவரி 2019 – மூன்று நாட்கள் மட்டுமே இந்தத் திருவிழா.

சனி, 23 பிப்ரவரி, 2019

காஃபி வித் கிட்டு – வனமாலி – சிமெண்ட் விளம்பரம் – முட்டை வியாபாரி - கலைஞர்காஃபி வித் கிட்டு – பகுதி – 21

ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு காஃபி வித் கிட்டு பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த சில நாட்களாக பணிச்சுமை ரொம்பவே அதிகம். நண்பர்களின் பதிவுகளைப் படிக்கவோ, இந்த வலைத்தளத்தில் என்னுடைய பதிவுகளை தொடர்ந்து எழுதவோ முடியாத நிலை. விரைவில் பணிச்சுமை தீர வேண்டும். பார்க்கலாம். வாருங்கள்… இன்றைய காஃபி வித் கிட்டு பதிவில் சில விஷயங்களைப் பார்க்கலாம்!

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

பொக்கிஷங்கள் – இருக்கா இல்லையா?திடீரென்று ஒரு ஞாபகம். க்ரே கலர் ஃபைலில் போட்டு பீரோவுக்குள் வெச்சிருந்ததாக நினைவு.

வியாழன், 21 பிப்ரவரி, 2019

கதம்பம் – தேன் நெல்லி – அப்பா சொல்லே வேதம் – கட்டபொம்மன் – பாலங்கள் – சிமிலி உருண்டை


சாப்பிட வாங்க – தேன்நெல்லியும் நீர்நெல்லியும் – 4 February 2019

நெய்வேலிக்குச் சென்று தன் தோழமைகளைப் பார்த்து வரச் சென்ற என்னவரிடம், கல்லூரித் தோழி ஒருவர் தன் வீட்டு தோட்டத்திலிருந்து  நெல்லிக் காய்களையும், எலுமிச்சம் பழங்களையும் கொடுத்து விட்டிருந்தார்.

புதன், 20 பிப்ரவரி, 2019

ஒரு தையல்நாயகி உருவாகிறார்…நம்முடைய உடையை நாமே தைத்துக் கொள்வது என்பது பெரிய விஷயம். நல்ல டெய்லர் அமைவது என்பது வரம்!!! திருமணத்திற்கு முன் கோவையில் பக்கத்து வீட்டு தனலட்சுமி என்கிற தனா அக்காவிடம் கொடுத்து வந்தேன். அக்கா வேறு வீடு மாறிப் போன பின்பும் அப்பா ஆஃபீஸுக்கு போகும் வழியில் கொடுத்து விட்டுச் செல்வார்.

செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

சினிமாவுக்கு போன சீதாராமன்


முன் குறிப்பு: இந்தப் பதிவினை தட்டச்சு செய்து அனுப்பியதை நான் பார்த்த போது இரவு 11 மணிக்கு மேல்...  அப்படி ஒரு சிரிப்பு சிரித்தபடியே படித்தேன். அக்கம் பக்கத்து வீடுகளில் கேட்டிருந்தால், என்ன ஆச்சுப்பா இந்த ஆளுக்கு, நல்லாத்தானே இருந்தாரு என்று யோசித்திருக்கக் கூடும்! படித்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன். உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள் – வெங்கட்.

திங்கள், 18 பிப்ரவரி, 2019

கதம்பம் – தேன்குழல் – பிளாஸ்டிக் இல்லா சமையலறை – விஸ்வாசம் – ஜாடிக் குடும்பம்
சாப்பிட வாங்க – தேன்குழல் – 5 February 2019மாலை நேர நொறுக்குத் தீனிக்கு. எப்போதுமே நானே மாவரைத்து, உளுந்து வறுத்து மாவாக்கி, பொட்டுக்கடலையும் அதே போல் மாவாக்கி, இதர சாமான்களை சேர்த்து தேன்குழல் செய்திருக்கேன்.

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

பூக்கள் பூக்கும் தருணம்....
பூக்களை பார்த்தாலே எல்லோருக்கும் மனதில் ஒருவித சந்தோஷம், உற்சாகம், புத்துணர்ச்சி எல்லாம் பொங்கி வரும். இங்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தான் அதாவது கடுங்குளிர் சற்றே குறைந்து மிதமான சூழலில் மலர்கள் அணிவகுத்து நிற்கும். சென்ற வாரத்திலிருந்தே என்னவர் அலுவலகத்திலிருந்து வரும் வழியெங்கும் மலர்கள் பூத்து கிடப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். காண வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். இந்த மாதம் தான் ஜனாதிபதி மாளிகையின் உள்ளே இருக்கும் முகல் கார்டனிலும் மலர்களைக் காண அனுமதி வழங்குவார்கள். அங்கு சென்று வந்த பின் அந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

சனி, 16 பிப்ரவரி, 2019

நம்மால் முடிந்ததைச் செய்வோம்…கடந்த வியாழன் அன்று புல்வாமா, ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த நமது சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

ட்ரிங்க்ஸ் சாப்பிடாதீங்க ப்ளீஸ்.... – இரண்டாம் காதல்முன் குறிப்பு: நேற்று “அழ வைத்த அன்பு” பற்றி சொல்லும்போது, வேறு ஒரு காதல் கதையுடன் மீண்டும் விரைவில் வருகிறேன் என்று சொல்லி இருந்தேன். இதோ அதிக இடைவெளி விடாமல் அடுத்த நாளே வந்து விட்டேன். இன்றைய தினம் இரண்டாம் காதல் பற்றி பார்க்கலாம்! இதுவும் பேருந்துப் பயணத்தில் கேட்ட காதல் கதை தான்!

வியாழன், 14 பிப்ரவரி, 2019

அழ வைத்த அன்பு – காதலர் தினம்
“ஏய், DD.... DD... DD.... ஃபோன் அடிக்குது எடு DD....”

DD-இடமிருந்து ஒரு பதிலும் கிடைக்காது போக, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவரிடம் சைகையில் விசாரித்தார். அவரும் சைகையிலேயே பதில் சொன்னார் – “ஏதோ சண்டையாம்....”

புதன், 13 பிப்ரவரி, 2019

கதம்பம் – சிறுகிழங்கு – மம்ஜாஸ் – NSB ரோட் உலா – உரத் தயாரிப்பு


வாங்க சாப்பிடலாம் - கூர்க்கங்கிழங்கு (அ) சிறுகிழங்கு – 29 January 2019வருடத்தில் இந்த தை மாதத்தில் மட்டுமே கிடைக்கும் கூர்க்கங்கிழங்கை சிறுவயதில் பாட்டி செய்து தந்து சுவைத்திருக்கிறேன்.

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

தமிழகப் பயணம் – தில்லி திரும்பியாச்சு….அதிகாலை 3 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து கடும் குளிரில் குளிப்பதற்கு வெந்நீர் வைத்து, அது சுடக் காத்திருப்பது ஒரு கொடுமை. கொஞ்சம் சோம்பேறித் தனத்துக்கு செவி சாய்த்து விட்டால், அன்றைக்கு முன்பதிவு செய்திருக்கும் விமானம் நம்மை விட்டு உயர உயரப் பறந்து போக 100 சதவீத வாய்ப்பு உண்டு. இறுக்கமாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ள முயலும் இமைக் காதலர்களைக் கொடுங்கோலனாக மாறி பிரித்தே வைத்து இருந்தேன். தண்ணீர் சுட்டதும் குளித்து தயார் ஆனேன். அப்போது காலை நான்கு மணி. அலைபேசி மூலம் நண்பரை அழைத்து நான் தயார் என்பதைச் சொல்லி அவர் தயார் ஆனதும் அழைக்கச் சொல்லி அவரது அழைப்பிற்கு காத்திருந்தேன்.

திங்கள், 11 பிப்ரவரி, 2019

மினிசோ – சின்னச் சின்னதாய் – சுதா த்வாரகநாதன்சமீபத்தில் தான் எனது மகள் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க ஒடிசா கல்லூரி ஒன்றில் இடம் கிடைத்தது. LKG முதல் கல்லூரி பட்டப் படிப்பு வரை அனைத்துமே தலைநகர் தில்லியில் தான் படித்தாள். பள்ளிப்படிப்பு முழுவதும், வீட்டிற்கு எதிரே இருந்த பள்ளியில் தான். கல்லூரியும் வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தான். இதுவரை வீட்டில் எங்களுடன் தங்கி படிப்பினை முடித்து விட்டாள். இப்போது, எங்களை விட்டு தனியாக, ஒடிசாவில் தங்கிப் படிக்க வேண்டும். சின்னச் சின்னதாய் அவளுக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் சேகரித்து வைக்க ஆரம்பித்தோம். தில்லி கல்லூரியில் வாங்க வேண்டிய சான்றிதழ்கள் அனைத்தையும் அவளே வாங்கிக் கொண்டு வந்தாள். ஒரு நாள் நான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப, முகத்தில் அதீத மலர்ச்சியுடன் கதவைத் திறந்தாள்.

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

என் இனிய தோழி...பத்து வயதிலிருந்தே என் இனிய தோழி அவள். பள்ளிப்பருவத்திலும், கல்லூரிப் பருவத்திலும், பின்பு வேலைக்கு சென்று கொண்டிருந்த காலத்திலும் கூட என்னோடு இருந்தாள். கல்யாணம் வரை இணைபிரியாது திரிந்தோம். கல்யாணம் முடிந்து தில்லி சென்ற பிறகு வேறு வழியின்றி பிரிந்து விட்டோம். அதன் பிறகு தோழியுடனான தொடர்பு முற்றிலும் விட்டுப் போயிற்று. இவளைப் போல அங்கும் சில தோழிகள் இருந்தாலும், அவர்கள் பேசும் மொழி ஹிந்தியானதால் அவ்வளவு ப்ரியம் இல்லை. பத்து வருடங்களுக்கு மேல் பிரிந்திருந்த தோழிகள்  இப்போது மீண்டும் இணைந்து மகிழ்ச்சியில் திளைக்கிறோம்.


வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

ஏக் காவ்ன் மே ஏக் கிஸான் ரகு தாத்தா

தலைப்பை பார்த்ததுமே புரிந்திருக்குமே உங்களுக்கு. ஆமாங்க நான் ஹிந்தி கற்றுக் கொண்ட அனுபவங்களை, அந்த சோகக் கதையை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஆறாம் வகுப்பு ஆரம்பத்திலேயே எங்க வீட்டுக்கு மேல் வீட்டில் உள்ள ஒரு ஹிந்தி கற்பிப்பவரிடம் என்னை முதல் தேர்வான ”பிராத்மிக்” (PRATHMIC) சேர்த்து விட்டார் என் அம்மா.

வியாழன், 7 பிப்ரவரி, 2019

பாவம் யார் கணக்கில் சேரும் – சுதா த்வாரகநாதன்


சமீபத்தில் தான் எங்களுடைய சதாபிஷேகம் திருக்கடையூரில் நடைபெற்றது. நிகழ்வு முடிந்த பிறகு உறவினர்கள் உடன் சேலம் நோக்கி வண்டியில் திரும்பினோம். வண்டியில் போகும்போது, பொழுது போக வேண்டுமே, எனக்கு மருமகள் முறையாகும் தீபா எனும் பெண் ஒரு கதையைச் சுவைபடச் சொல்லிக் கொண்டு வந்தாள். அந்தக் கதை.....

புதன், 6 பிப்ரவரி, 2019

கோடை விடுமுறை நினைவுகள்


கோடை விடுமுறை என்றாலே கோடை வாசஸ்தலங்களுக்கும், சுற்றுலா மையங்களுக்கும் சென்று வருவது என்பது  இப்போதைய கலாச்சாரமாகி விட்டது. ஆனால் என் சிறு வயதில் ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் நான் பிறந்த ஊரான சிவகங்கைக்குத் தான் அழைத்துச் செல்வார்கள். கடைசி பரீட்சை முடிந்த அன்றே கிளம்பி விடுவோம். கோயமுத்தூரிலிருந்து பேருந்து பிடித்து மதுரை சென்று அங்கிருந்து இன்னொரு பேருந்தில் ஒரு மணிநேர பிரயாணத்தில் சிவகங்கையை சென்றடைவோம். பெரும்பாலும் அப்பாவும் வருவார். இல்லையென்றால் அம்மா, நான் தம்பி மூன்று பேரும் செல்வோம். கோவையிலிருந்து மதுரைக்குமணிநேரம். சிவகங்கைக்கு 1 மணிநேரம். ஆக மொத்தம்மணிநேர பிரயாணத்தில் சிவகங்கையை அடையலாம். இதுவே அன்றைய நாளில் எனக்கு பெரிய பயணமாகத் தோன்றும். இப்போதோ தில்லிக்கு 40 மணிக்கும் மேற்பட்ட ரயில் பிரயாணத்தை நான் மேற்கொள்வதை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

சாப்பிட வாங்க - பல்லே பல்லே சோலே


வட இந்தியர்கள் சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள நிறைய சப்ஜி [Side Dish] செய்வார்கள். அதில் முக்கியமான சப்ஜிகளில் இந்த சன்னா மசாலாவும் ஒன்று. இதற்கு காபூலி [Kabooli] சன்னா, பெரியதாக இருக்கும் வெள்ளைக் கொண்டக் கடலை கிடைத்தால் நன்றாக இருக்கும். அப்படிப் பட்ட சன்னா மசாலா செய்முறையை தெரிந்து கொள்வோமா?

திங்கள், 4 பிப்ரவரி, 2019

பீட்ஸா நைவேத்தியம் – ஆதி வெங்கட்
இன்னும் இரண்டே நாளில் கோகுலாஷ்டமி வரப்போகிறது என்கிற நிலையில் உமாவுக்கு அவள் அம்மாவின் ஞாபகமாகவே இருந்தது.

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

மாதம் பனிரெண்டு – ஓவியம் பனிரெண்டுதலைநகரின் பிரதான அருங்காட்சியகத்தில் ஓவியங்களின் பிரதிகள் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் சில ஓவியங்கள் பனிரெண்டு மாதங்களுடன் சம்பந்தப்பட்டவை. “Bபாராமாசா” என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு ஓவியம் என ராஜஸ்தானின் சிறந்த ஓவியங்கள் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். இந்த ஓவியங்கள் இணையத்திலும் நிறையவே கிடைக்கின்றன – பார்ப்பதற்கும் வாங்குவதற்கும். சமீபத்தில் எனக்கும் சில ஓவியங்களின் தொகுப்புகள் கிடைத்தன. மூன்று தொகுப்புகள் – அவற்றில் முதலாவதாக இந்த பனிரெண்டு மாதங்களுக்கான பனிரெண்டு ஓவியங்களின் படங்கள் இந்த ஞாயிறில் பார்க்கலாம்….


சனி, 2 பிப்ரவரி, 2019

வண்ட்டூ மாமா – ஆதி வெங்கட்வண்ட்டூ மாமாவை பற்றி சில விஷயங்கள் எழுதலாம் என்று நினைத்ததன் விளைவே இப்பதிவு...

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

பெயர் காரணம் என்றொரு தொடர் பதிவு – ஆதி வெங்கட்பெயர் காரணம் – உங்கள் பெயருக்கான காரணம் என்ன என்பதை எழுதச் சொல்லி பதிவுலகில் ஒரு தொடர் பதிவு – பெரும்பாலான பதிவர்கள் எழுதினார்கள். நானும் எழுதினேன். கோவை2தில்லி வலைப்பூவில் எழுதிய பதிவு இன்றைக்கு மீண்டும் இங்கே.