ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

ஐம்புலன்களுக்கு விருந்து – நிழற்பட உலா - பகுதி ஒன்றுஎல்லா வருடம் போலவே, இந்த வருடமும் தலைநகர் தில்லியின் “தில்லி அரசாங்கம்” தலைநகரின் சாகேத் பகுதியில் உள்ள பூங்காவில் [Garden of Five Senses] தோட்டத் திருவிழா நடத்தியது 16-18, ஃபிப்ரவரி 2019 – மூன்று நாட்கள் மட்டுமே இந்தத் திருவிழா.


வெள்ளிக்கிழமை அலுவலகம் உண்டு. சனி, ஞாயிறு இரண்டு நாட்களுமே எங்கள் பகுதியில் ஒரு நிகழ்ச்சி – காலை முதல் இரவு வரை இருந்த நிகழ்ச்சி. இதற்கிடையே, சனி அன்று அலுவலகமும் செல்ல வேண்டியிருந்தது. அலுவலகத்திற்குச் சென்று சில வேலைகளை முடித்து, நடுவே கிடைத்த சில மணி நேரத்தில் இந்த பூங்காவிற்கு நண்பர் பத்மநாபன் உடன் சென்று வந்தேன்.

உங்களுக்கும் பத்மநாபனுக்கும் வேற வேலையே இல்லையா? இப்படி அடிக்கடி ஊர் சுத்தறீங்களே? என்ற கேள்விகள் வேறு வந்த வண்ணம் இருக்கிறது! ஆனாலும், ஏதோ நடுவில் இப்படி கொஞ்சம் சுற்றினால் தான் பணிச்சுமை மறக்க முடிகிறது! சில விஷயங்களை பொதுப்படையாக எழுத முடியாது. ஒரே நாளில் வேலைப்பளு அதிகரிக்க, அதைச் சரி செய்ய பல நாட்கள் கண்கள் எரிய எரிய, கணினியில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. கைவிரல்கள் கெஞ்சுகின்றன – என்னை விட்டுவிடேன், எனக்குக் கொஞ்சம் ஓய்வு கொடேன் என்று!  சரி பூங்காவில் உலவ வந்துவிட்டு இப்படிச் சொந்தப் புலம்பல் எதற்கு!  வாருங்கள் இந்த வாரத்தில் பூங்கா உலாவின் முதல் பகுதியாக பதினைந்து நிழற்படங்கள்.

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில நிழற்படங்களோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

32 கருத்துகள்:

 1. இனிய மகிழ்வான காலை வணக்கம் வெங்கட்ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
 2. பூக்கள் அத்தனையும் ஹையோ செம செம அழகு!!! டாலியா வகை இல்லையா பல வண்ணங்களில் இருப்பது...அழகு..

  பூக்களாலேயெ மயில் வடிவம் எல்லாம் அழகு...கலைத்திறன்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டாலியா பல வண்ணங்களில் இருந்தன.... ஒவ்வொன்றும் அழகு...

   இன்னும் நிறைய வடிவங்கள் பூக்களால் செய்து இருந்தார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 3. ஒட்டகச் சிவிங்கி, மாடு ஆஹா செம...

  உயரமான மனிதர்கள் எப்படி கட்டையில் நின்றுகொண்டு நடக்கிறார்கள்? ...அங்கேயே நின்று கொண்டு இருந்தார்களா அல்லது நடக்கவும் செய்தார்களோ!!? எப்படியானாலும் மிகுந்த பயிற்சி தேவை...

  ரசித்தேன் ஜி..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கட்டை வைத்து நடக்க மட்டுமல்ல சின்னச் சின்ன நடனம் கூட ஆடினார்கள். எத்தனை பயிற்சி செய்ய வேண்டி இருக்கும்.... திறமைசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. பூக்கள் அணிவகுப்பு ரசித்ததில் ம்கிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 6. மிகவும் அருமையான படங்கள். அவ்வப்போது இவ்வாறு பூக்களை ரசிப்பது மன அமைதியை ஏற்படுத்தும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன அமைதி - அதை நாடிதானே எல்லோரின் ஓட்டமும்.,

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன் ஜி!

   நீக்கு
 8. படங்கள் எல்லாம் அழகு. மலர்களால் பறவைகள், விலங்குகள் செய்து இருப்பது மேலும் அழகு.
  வாத்திய இசைக்கு ஏற்ப நீண்ட கம்பில் இளைஞர்கள் ஆடும் படம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. தோட்டத்திருவிழா ரசித்தேன். அருமையான புகைப்படங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 11. பூக்களின் அணி வகுப்பு பிரமாதம். எல்லாப் படங்களும் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  ஒவ்வொரு கலர்களிலும் மின்னும் பூக்கள் மிகவும் அழகாக இருக்கிறது. விலங்குகளும், பறவைகளும் பூக்களாலேயே செய்யப்பட்டிருப்பதை ரசித்தேன். மிகவும் அழகான கலைநயத்துடன் செய்துள்ளார்கள். தோகை விரிக்கும் மயில் மிகவும் அழகாயுள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 13. அழகிய படங்களின் அணிவகுப்பு. பூக்களால் ஆன மயில் லால்பாக் மலர்கண்காட்சியை நினைவுபடுத்தியது.

  படங்களை இந்த முறை சிறிய அளவில் பதிந்துள்ளீர்கள். க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்த்துக் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா...

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 16. One could see the beautiful flower pictures without visiting the place. Nice for sharing.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....