சனி, 16 பிப்ரவரி, 2019

நம்மால் முடிந்ததைச் செய்வோம்…



கடந்த வியாழன் அன்று புல்வாமா, ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த நமது சகோதரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
 
கணவனை இழந்து தவிக்கும் மனைவி, அப்பாவை இழந்து தவிக்கும் மகன், மகனை இழந்து தவிக்கும் பெற்றோர்கள் என ஒவ்வொரு குடும்பமும் கண்முன்னே வந்து போகிறது.

எதற்கு இத்தனை காழ்ப்புணர்வு – அரசியல் – உயிரிழப்பு? 

எத்தனை தான் வேறுபாடுகள் இருந்தாலும், அடுத்தவருடைய உயிரைப் பறிக்க ஒருவருக்கும் உரிமை இல்லை.

இந்த சமயத்தில் நம்மால் இயன்ற உதவியைச் செய்யலாம். உயிரிழந்த CRPF ஜவான்களுக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு தளத்தின் மூலம் உதவலாம். இந்த தளம் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  அதனால் தான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அந்த தளம் கீழே….


அத்தளத்தில் இருவித வசதிகள் உண்டு – ஏதேனும் ஒரு உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு உதவலாம் – அல்லது அந்த நிதியில் உங்கள் சிறுதுளியைச் சேர்க்கலாம். ஒரு உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு 15 லட்சம் வரை தருகிறார்கள். மேலகதிக விவரங்கள் இத்தளத்தில் உண்டு. அதன் மூலமாகவே நிதி உதவி செய்ய முடியும். நீங்கள் கொடுக்கும் நிதிக்கு வரிவிலக்கு உண்டு. இத்தளத்தின் மூலம் நம் நாட்டின் பாதுகாப்புப் பணியில் உயிர் நீத்த Assam Rifles, BSF, CISF, CRPF, ITBP, NDRF, NSG மற்றும் SSB ஆகிய எட்டு படைகளைச் சேர்ந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதவி செய்கிறார்கள்.

நமது இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு உதவி செய்ய இதைப் போலவே Army Welfare Fund Battle Casualties என்ற ஒரு வசதியும் இருக்கிறது.  அந்த நிதிக்கு உங்களால் ஆன தொகையினை அனுப்ப முடியும். அதன் தகவல்கள் கீழே உள்ள பக்கத்தில் இருக்கிறது.

நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடியாத நம்மால், அப்படி பணி செய்து, அதில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்வது நிச்சயம் முடியும். என்னால் முடிந்த உதவியை, இத்தளத்தின் மூலம் பணமாக அனுப்பி விட்டேன். சிறு துளி பெரு வெள்ளம் என்பதை நினைவில் கொள்வோம். என்னதான் தனியார் நிறுவனங்கள் மற்றும் சில அரசு சாரா குழுக்கள் இப்படி நிதியை வழங்குகிறோம் என்று சொல்லி பணம் வசூலித்தாலும், அரசு மூலம் உதவி செய்வது நல்லது. பல நிறுவனங்கள்/குழுக்கள் இப்படி பணம் வசூலித்து மோசடி செய்வது நிறையவே நடக்கிறது.

இந்தத் தகவல்களை இங்கே தருவது தெரியாதவர்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவிக்க மட்டுமே. யாரையும் கட்டாயப்படுத்தவோ, இதில் எந்த அரசியல் நோக்கமோ இல்லை என்பதையும் இங்கே குறிப்பாகச் சொல்லி விடுகிறேன். முதலாம் தளத்தின் செயல்பாடுகள், எந்த வீரருக்கு எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது என்பதை முழுவதுமாக தளத்திலேயே பார்க்க முடியும் என்பது கூடுதல் வசதி.

மீண்டும் இறந்த சகோரர்களுக்கு எனது அஞ்சலி. அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...... 

நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திப்போம்...

என்றென்றும் அன்புடன்

வெங்கட்
புது தில்லி.

24 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. எத்தனை தான் வேறுபாடுகள் இருந்தாலும், அடுத்தவருடைய உயிரைப் பறிக்க ஒருவருக்கும் உரிமை இல்லை.//

    ஆமாம் ஜி! மிகுந்த மன வேதனை தரும் விஷயம். வீரர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    தளம் குறித்துக் கொண்டாயிற்று ஜி. மிக்க நன்றி.

    அரசு மூலம் உதவி செய்வது நல்லது. பல நிறுவனங்கள்/குழுக்கள் இப்படி பணம் வசூலித்து மோசடி செய்வது நிறையவே நடக்கிறது.//

    ஆமாம் ஜி மிக மிக சரியே. அரசு மூலம் செய்வது நல்லது,...கூடுதல் தகவல் எந்த குடும்பத்திற்குப் எவ்வளவு போய் சேர்கிறது என்ற விவரங்கள் உட்பட கொடுப்பது மிக மிக நல்ல விஷயம்.

    சிரம் தாழ்ந்த அஞ்சலிகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே எல்லாவற்றிலும் அரசியல். இன்னும் பலர் சக மனிதனை நேசிக்கக் கற்கவில்லை என்பது வருத்தமான உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. குட்மார்னிங். ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  4. இதுவரை இந்த தளம் பற்றி அறிந்ததில்லை. லிங்க் எடுத்து நானும் நண்பர்களுக்குப் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நண்பர்கள் குழுவில் பகிர்ந்து கொள்வது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. வீரர்களுக்கு அஞ்சலிகள் மற்றும் வணக்கங்கள்!

    செய்தித்தாளில் வாசித்த போதே மனம் மிகவும் வேதனை அடைந்தது. நம் நாட்டையும், மக்களையும் காக்க இவ்வீரர்கள் எவ்வளவு போராடுகிறார்கள் பனியிலும், மழையிலும், வெயிலிலும்.

    சுட்டி கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஜி. நம்மல் முடிந்ததைச் செய்வோம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  7. ஆழ்ந்த அஞ்சலிகள் உதவும்பணம் சேர்ந்தால் நல்லது அதிலும் ஊழல் வராதுஎன்பது நிச்சயமில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  8. மறைந்த சகோதரர்களுக்கு இதய அஞ்சலிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  9. வீரர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். நாம் அனுப்பும் பணம் அவர்களுக்குச் சரியாகப் போய்ச் சேர வேண்டும். இறந்தவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  10. மனமே கலங்குகிறது. நல்ல வேளையாக நீங்கள் கருத்தைக் கலக்கும்
    வீடியோக்கள் .என்ன செய்யலாம். நாட்டின் மானம் காக்கப் புறப்பட்ட நல் வீரர்களை அழித்து,அவர்கள் குடும்பங்களைத் தவிக்க விட்டிருக்கிறார்கள்
    நீங்கள் கொடுத்திருக்கும் லிங்கை மகன் களுக்கு அனுப்புகிறேன். மிக நன்றி வெங்கட்.
    அந்த வீரர்களுக்கு ஆண்டவன் அமைதி அளிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா

      நீக்கு
  11. உயிர்நீத்த வீரர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். அவர்களுடைய குடும்பத்தார்க்கு அனுதாபங்கள். எல்லோரும் நம்மாலான உதவியை செய்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  12. மறைந்த வீரர்களுக்கு அஞ்சலிகள். கண்டிப்பாக நம்மால் முடிந்த உதவியை செய்வோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....