India லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
India லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 ஏப்ரல், 2021

மேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி மூன்று - சுப்ரமணியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


IT IS NOT IMPORTANT IN LIFE THAT WHO IS AHEAD OR BEHIND US; WHAT TRULY MATTERS IS WHO IS WITH US IN LIFE. 


******


ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

மேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி இரண்டு - சுப்ரமணியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


BE THE TYPE OF ENERGY THAT NO MATTER WHERE YOU GO, YOU ALWAYS ADD VALUE TO THE SPACES AND LIVES AROUND YOU.


******


திங்கள், 6 ஜூலை, 2020

அந்தமானின் அழகு - A land of endless nature and deep rooted history – ஷ்வேதா சுப்ரமணியன்


அன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய காலையை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

TAKE EVERY CHANCE YOU GET IN LIFE, BECAUSE SOME THINGS ONLY HAPPEN ONCE.

வெள்ளி, 19 ஜூன், 2020

ஏழு சகோதரிகள் மின்னூல் – நான்கு பாகங்களாக – அமேசான் தளத்தில்…

 

அன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதோர் வாசகத்துடன் துவங்கலாம்.


”நாம் தலைகுனிந்து செய்யும் செயல் ஒன்று நம்மைத் தலைநிமிரச் செய்கிறது என்றால் அது புத்தக வாசிப்பு மட்டுமே!”

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

கத்புத்லி – ஹேமமாலினி நடனம் – புகைப்படங்களும் காணொளியும்



சென்ற ஞாயிற்றுக்கிழமை திடீர் பயணம் – ஹரியானாவில் உள்ள ஜஜ்ஜர் எனும் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு! அங்கே சென்ற போது பார்த்த கத்புத்லி என்று இங்கே அழைக்கப்படும் பொம்மலாட்டம் பார்க்க முடிந்தது. அப்போது நான் எடுத்த புகைப்படங்களும், குழுவில் இருந்த நண்பரின் மகள் எடுத்த காணொளியும் இந்த ஞாயிறில் உங்கள் பார்வைக்கு.


சனி, 11 நவம்பர், 2017

காதல் காதல் காதல், காதல் போயின் சாதல் – ஒரு முக்கோணக் காதல்



சமீபத்தில் ஒரு இளைஞரை சந்திக்க நேர்ந்தது. குருத்வாரா ஒன்றில் "கர் சேவா" [குருத்வாராக்களில், பொதுப்பணியை, எந்த வித சம்பளமும் பெறாமல், குருவிற்கு ஒரு தொண்டாகச் செய்வது] செய்து கொண்டிருந்தார். பரவாயில்லையே, இந்த வயதில் சேவை செய்யும் மனப்பாங்கு இருக்கிறதே என மகிழ்ந்தேன். அவரை நோக்கி ஒரு சிநேகப் புன்னகை வீச, அவரும் நகைத்து "சத் ஸ்ரீ அகால்" என்று சொல்ல, தலை அசைத்து, வாழ்த்தினேன். "இந்த வயதில் இப்படி சேவை செய்வது பெரிய விஷயம், உங்கள் மக்கள் தொண்டு தொடரட்டும்" என்று சொல்ல, மறுத்து தலையை ஆட்டி, கொஞ்சம் புன்னகைத்து, இது எனக்குக் கொண்டுக்கப்பட்ட தண்டனை என்றார். "கொஞ்சம் பொறுங்கள், எனது இன்றைய பணி பத்து நிமிடத்தில் முடிந்து விடும், பிறகு பேசலாம்" எனச் சொல்ல, காத்திருந்தேன்.

செவ்வாய், 7 நவம்பர், 2017

சாப்பிட வாங்க – சாக்லேட் தோசா – கோவா இட்லி – கிச்சடி - கோகுர் கேசர் சாய், இன்னும் பல!


சாக்லேட் தோசா


தலைநகர் தில்லியில் ஒரு வசதி – இரண்டு அரசாங்கம் – அட தில்லி அரசாங்கம் மற்றும் இந்திய அரசாங்கம் என்கிற இரண்டும் தாங்க! மாற்றி மாற்றி ஏதாவது விழா நடத்திக் கொண்டே இருப்பார்கள். சமீபத்தில் பர்யாடன் பர்வ் [சுற்றுலா பருவம்!] என்று ஒரு நிகழ்வு இருந்தது. சென்ற வாரக் கடைசியில் [3-5, நவம்பர், 2017] World Food India 2017 எனும் நிகழ்வு இந்தியா கேட் பகுதியில் நடந்தது. அதே சமயம் ஜன்பத் அருகே வடகிழக்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு. INA எனும் பகுதிக்கு அருகே இருக்கும் Dilli Haat சிற்பங்கள் சம்பந்தமான ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. இப்படி ஏதாவது நடந்தபடியே இருப்பது வழக்கம். பர்யாடன் பர்வ் சென்று வந்தாலும் அது பற்றி இன்னும் ஒன்றும் எழுதவில்லை – அலுவலகத்திலிருந்து மாலையில் சென்றதால் கையில் கேமரா/அலைபேசி இரண்டுமே இல்லை. படங்கள் இல்லை என்றாலும் எழுத வேண்டும்.

செவ்வாய், 31 அக்டோபர், 2017

ஒண்ணாம் நம்பர் கடைக்கு சீக்கிரம் போ கோபால்!




சமீபத்தில் தமிழகத்தில் இருந்தபோது சில பேருந்து பயணங்கள். பெரும்பாலான பயணங்களில் சக பயணிகளின் சம்பாஷணைகளை கவனிப்பது பழக்கமாக இருந்தது. [உடனே ”ராஜா காது கழுதை காது பகுதிக்கு மேட்டர் நிறைய தேத்திட்டீங்க போல” என்று கேட்டால் பதில் இல்லை என்பதாகத் தான் இருக்கும்! நகரப் பேருந்தில் பயணங்கள், அதுவும் கிராமப் புறப் பயணங்களில் நிறையவே அனுபவங்கள் கிடைக்கின்றன. திருப்பராய்த்துறைக்கு சில முறைகள் பயணித்த போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம். மக்கள் இப்போதெல்லாம் நிறையவே அரசியல் பேசுகிறார்கள். அப்படியே நிகழ்வுகளை நேரில் பார்த்த மாதிரியே விமர்சிக்கிறார்கள். அந்த அரசியல்வாதிக்கு இத்தனை கோடி சொத்து, இவனுக்கு அவளோடு தொடர்பு என பேச நிறைய விஷயங்கள், அதையும் பொது வெளியில் சத்தமாகவே பேசுகிறார்கள். The Right to Speech!

திங்கள், 30 அக்டோபர், 2017

தரம்ஷாலா, ஹிமாச்சல் பிரதேசம் – இரண்டாம் தலைநகரம்


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 1



முன் குறிப்பு: சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2017 அன்று, ”அடுத்த பயணத் தொடர் – எங்கே – ஒரு புகைப்பட முன்னோட்டம்” என்ற தலைப்பில் திங்களன்று என் அடுத்த பயணத்தொடர் தொடங்கும் என்று சொல்லி இருந்தேன். சொன்னபடியே இதோ திங்களன்று தொடங்கிவிட்டேன்! :) என்ன நடுவில் சில வாரங்கள் கடந்து விட்டன! சரி தொடருக்குப் போவோம்!

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

புகைப்பட உலா – நவராத்ரி கொலு



நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஞாயிறில் ஒரு புகைப்பட உலா. நவராத்ரி சமயத்தில் நான் சென்ற வீடு/கோவில்களில் வைத்திருந்த கொலு பொம்மைகளை படம் எடுத்து பகிர்ந்து கொள்வதுண்டு. [புகைப்படம் எடுக்கச் செல்கிறேன் என்ற பெயரில் சுண்டல் சாப்பிடச் செல்வேன் என்று யாரும் தப்பாக புரிந்து கொள்ள வேண்டாம்! – யார்ப்பா அது, அது தான் உண்மை என்று குரல் கொடுப்பது!]. இந்த ஆண்டு நவராத்ரி சமயத்தில் தமிழகத்தில் தான் இருந்தேன் என்றாலும், கொலு பார்ப்பதற்கென்று சென்ற இடங்கள் ரொம்பவும் குறைவு – In Fact, ஒரே ஒரு வீட்டிற்குத் தான் என்னை அழைத்துச் சென்றார்கள்!! What a pity! வீட்டிலேயே கொலு வைத்திருந்ததால் அதற்கே நேரம் சரியாக இருந்தது [தினம் சுண்டல் உங்க கைவண்ணம் தானே என மதுரைத் தமிழனும், சகோதரி ராஜியும் கேட்டால் பதிலாக, நானில்லை என்று தான் சொல்லுவேன்!]

புதன், 13 செப்டம்பர், 2017

கொலுசே கொலுசே - கல்யாண் ஜுவல்லர்ஸ் – பயண முடிவு!



அரக்கு பள்ளத்தாக்குபகுதி 31

பகுதி 30 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


இந்தக் குட்டிச் செல்லத்துக்கு தான் கொலுசு!

தௌலிகிரியில் அமைந்திருக்கும் ஷாந்தி ஸ்தூபா பார்த்த பிறகு நாங்கள் சென்ற இடம் ஒரு கடை! அந்தக் கடை புவனேஷ்வர் நகரில் இருக்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ் கிளை! தலைநகர் தில்லியில் இல்லாத நகைக்கடையா? அதை விட்டு, ஒடிஷா மாநிலத் தலைநகர் புவனேஷ்வர் சென்று நகை வாங்குவீர்களா? என்றெல்லாம் கேட்பதற்கு முன்னரே பதில் சொல்லி விடுகிறேன்! எங்களுக்காக அங்கே செல்லவில்லை. இரண்டு நாட்கள் புவனேஷ்வர் நகரில் தங்கி அங்குள்ள இடங்களைச் சுற்றிப் பார்க்கும்போது எங்களுக்கான வாகன ஏற்பாடு செய்ததோடு, சில வேளைகள் உணவளித்த திருப்பதி தேவஸ்தானத்தின் திருமண மண்டபம் மற்றும் கோவிலில் பூஜை செய்பவருக்கு ஏதாவது மரியாதை செய்ய வேண்டும் என்பதால் தான் நகைக்கடை பயணம்! அந்த இளைஞருக்கு ஒரு வயது ஆகப்போகும் சிறு பெண் உண்டு என்பதால், குழந்தைக்கு ஒரு கொலுசு வாங்கலாம் என நினைத்தோம்! கடைக்குச் சென்றோம்.

திங்கள், 11 செப்டம்பர், 2017

ஒடிசா – தௌலிகிரி – ஷாந்தி ஸ்தூபா – புவனேஷ்வர்


அரக்கு பள்ளத்தாக்குபகுதி 30

பகுதி 29 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


தௌலி ஷாந்தி ஸ்தூபா, தௌலிகிரி, புவனேஷ்வர்....


காற்றில் அசைந்தாடும் தென்னை மரங்கள்...
ரகுராஜ்பூரிலிருந்து புவனேஷ்வர் வரும் சாலையோரத்தில்....


வறுமையும் ஒடிஷாவும்.....
ஒரு சாலைக் காட்சி....

ரகுராஜ்பூரில் ஓவியக் கலைஞர்களிடம் பேசி, அவர்களது திறமையைக் காண்பித்து வரைந்த சில ஓவியங்களை வாங்கிக் கொண்டு அங்கிருந்து புவனேஷ்வர் நோக்கிய பயணத்தினைத் துவங்கினோம். சாலையின் இரு மருங்கிலும் நிறைய தென்னை மரங்கள்! கடற்கரையிலிருந்து வரும் காற்றில் தென்னை மரங்கள் ஆடிக்கொண்டிருக்க, சுகமான பயணமாக இருந்தது. ஒடிசாவில் நான் பார்த்த இன்னுமொரு விஷயம் அங்கே இருக்கும் வறுமை. பார்த்த பல ஆண்கள், சிகப்பு வண்ணத்தில் இருக்கும் துண்டு கட்டிக்கொண்டு தான் இருந்தார்கள். குறிப்பாக கிராமங்களில்! நிறைய கிராமங்கள் சுதந்திரம் கிடைத்து 68 ஆண்டுகளுக்குப் பிறகும் வறுமையில் தத்தளிப்பது சோகமான ஒரு விஷயம். எல்லாம் அரசியல், எங்கும் அரசியல்! என்ன சொல்ல!

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்….



பனிபடர்ந்த மலைகளைக் கண்டாலே ஒரு ஆனந்தம் நமக்குள் உண்டாவது, அற்புத உணர்வு இல்லையா? மலைப்பகுதிகள், ஆற்றங்கரை, இயற்கை எழில் கொஞ்சம் பூங்காக்கள், மரங்களடர்ந்த வனப்பகுதி என எங்காவது செல்லும்போது நம்மை நாமே இழந்து இயற்கையில் ஒன்றிவிட முடிகிறது. பல சமயங்கள், என்னுடைய பயணங்களின் போது, அங்கேயே தங்கிவிட மாட்டோமா என்ற உணர்வு வரும். ஆனால் அங்கே இருந்து விட முடிவதில்லையே.  நினைவுகளோடு திரும்பித் தானே ஆக வேண்டியிருக்கிறது.


சனி, 9 செப்டம்பர், 2017

ஒடிசா – ரகுராஜ்பூர் – ஓவியங்கள்


அரக்கு பள்ளத்தாக்குபகுதி 29

பகுதி 28 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!



பூரி ஜகன்னாத் தரிசனம் முடிந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் தங்கியிருந்த இடமான புவனேஷ்வர் நோக்கிய பயணத்தினைத் துவங்கினோம். ஆனால் நேரடியாக புவனேஷ்வர் செல்லாமல், வழியில் ஒரு கிராமத்திற்குச் சென்ற பிறகு செல்ல வேண்டும் என்று எங்கள் நண்பர், ஓட்டுனரிடம் சொன்னார். அந்த கிராமம், ரகுராஜ்பூர் எனும் கிராமம். கோவிலிலிருந்து புவனேஷ்வர் செல்லும் நெடுஞ்சாலை வழியே சென்றால் 15 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ரகுராஜ்பூர் கிராமம் இருக்கிறது.  சிறிய ஊர் என்றாலும், அந்த ஊர் மிகவும் பிரசித்தமான ஒரு ஊர். அந்த ஊரில் இருப்பவர்கள் பெரும்பாலும் கலைஞர்கள் மட்டுமே. வீட்டுக்கு வீடு கலைஞர்களின் கைவண்ணங்களைக் காண முடியும்!

வியாழன், 7 செப்டம்பர், 2017

பூரி ஜகன்னாத் – ஆனந்த பஜார் – உலகின் மிகப்பெரிய உணவகம்…


அரக்கு பள்ளத்தாக்குபகுதி 28

பகுதி 27 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


மஹாபிரசாதம் - மண்பாண்டங்களில்....
பூரி ஜகன்னாத் மந்திர்....

கடந்த மூன்று பகுதிகளாக, பூரி ஜகன்னாத் கோவில் பற்றிய சில சிறப்புத் தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. கோவிலுக்குச் சென்றபோது எங்களுக்குக் கிடைத்த அனுபவம் உங்களுக்கும் கிடைக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் சற்றே விவரமாக எழுதி இருக்கிறேன் என்றாலும் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும். கோவிலில் தரிசனம் செய்து கொண்ட பிறகு கோவிலின் ஒரு பகுதியாக, வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கும் ஆனந்த பஜார் எனும் இடத்திற்குச் சென்றோம். இந்த ஆனந்த பஜார் எனும் பகுதியை உலகின் மிகப்பெரிய உணவகம் என்று அழைக்கிறார்கள்! ஏன் அப்படி? ஒரு லட்சம் பேர் வந்தாலும் இங்கே உணவு கிடைக்கும் – அதுவும் வந்த சில மணி நேரங்களில்! கோவில் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பலர், தங்கள் வீட்டு விசேஷங்களுக்குக் கோவிலிலிருந்தே உணவு பெற்றுக்கொள்ள முடியும் என்றால் பாருங்களேன்.

புதன், 6 செப்டம்பர், 2017

பூரி ஜகன்னாத் – சிலை மாற்றமும் ரத யாத்திரையும்…

அரக்கு பள்ளத்தாக்குபகுதி 27

பகுதி 26 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!

நிகழ்வு பற்றிய மணல் சிற்பம்
படம்: இணையத்திலிருந்து....

சென்ற பகுதியில் பூரி ஜகன்னாத் கோவில் பற்றிச் சொல்லும் போது இக்கோவிலில் இருக்கும் மரச் சிலைகள் ஏன் என்ற காரணத்தினையும் கதையையும் பார்த்தோம்.  இந்தப் பகுதியில் மரச்சிலைகள் மாற்றப்படுவது பற்றியும் வருடா வருடம் நடக்கும் ரத யாத்திரை பற்றியும் சில தகவல்களைப் பார்க்கலாம்.  

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

பூரி ஜகன்னாத் – மரச் சிலைகளின் கதை…


அரக்கு பள்ளத்தாக்குபகுதி 26

பகுதி 25 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


பூரி ஜகன்னாத் - ஒரு ஓவியமாக....

சென்ற பகுதியில் பூரி ஜகன்னாத் கோவில் பற்றிச் சொல்லும் போது இக்கோவிலில் இருப்பது மரத்திலால் ஆன சிலைகள் என்று குறிப்பிட்டிருந்தேன்.  ஏன் மரச் சிலைகள் என்பதற்கும் ஒரு காரணமும் கதையும் உண்டு.  அக்கதையையும் மற்ற சில விவரங்களையும் இப்பகுதியில் பார்க்கலாம்.  

திங்கள், 4 செப்டம்பர், 2017

பூரி ஜகன்னாத் – மூன்று மரச்சிலைகள் – பிரம்மாண்டமான கோவில்!

அரக்கு பள்ளத்தாக்குபகுதி 25

பகுதி 24 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


பூரி ஜகன்னாத் மந்திர்
வெளிப்புறத் தோற்றம்

கோனார்க்-இல் அமைந்திருக்கும் சூரியனார் கோவில் பார்த்த பிறகு, சிற்பங்களின் அழகையும், அதைச் செதுக்கிய சிற்பிகளின் உழைப்பு, கலைநயம், நளினம் ஆகியவற்றை எண்ணி அதிசயத்தபடியே அங்கிருந்து மனமே இல்லாமல் புறப்பட்டோம். ஒவ்வொரு சிற்பங்களையும் பார்ப்பதற்கே அரை மணி நேரமாவது வேண்டும் – அத்தனை நெளிவு-சுளிவு, நுணுக்கமான வேலைப்பாடு! கோனார்க் நகரிலேயே தங்கிக் கொண்டு சில நாட்கள் சிற்பங்களைப் பார்த்து வியக்க வேண்டும்! வெகு சிலர் மட்டுமே இப்படி சிற்பங்களைப் பார்த்துப் பார்த்து ரசிக்கவே ஒரு வார காலம் இங்கே தங்குவதுண்டு! குறிப்பாக வெளிநாட்டவர்கள்! நம்மவர்கள் சிலர் “என்ன இங்கே இருக்கு! உடைந்து போன சிலைகள் தானே!” என்று சொல்கிறார்கள். அழிவுக்குக் காரணம் மனிதர்களும் தானே…. எதனையும் ரசிக்க ஏதுவாய் மனது வேண்டும். அது எல்லோரிடமும் இருப்பதில்லையே!

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

ஒட்டக எலும்பில் ஆபரணங்கள்…



சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்திற்கு நான்கு நாட்கள் பயணம் சென்றிருந்தேன். ராஜஸ்தான் என்றாலே ஒட்டகங்கள் நினைவுக்கு வருமே உங்களுக்கு! ராஜஸ்தான் மட்டுமல்லாது குஜராத் மாநிலத்தில் கூட நிறைய ஒட்டகங்கள் உண்டு.  சில மாதங்களுக்கு முன்னர் ஆடு மாடு மேய்ப்பது போலவே, நிறைய ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டு போன காட்சியைப் பார்த்ததோடு, அதை காணொளியாகப் படம் பிடித்து உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தது நினைவில் இருக்கலாம்! பார்க்காதவர்கள் வசதிக்காக, நூற்றுக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் சாலையைக் கடக்கும் காட்சியைப் பகிர்ந்து கொண்ட பதிவின் சுட்டி கீழே.

வியாழன், 31 ஆகஸ்ட், 2017

கோனார்க் – சூரியனார் கோவில் – அற்புதச் சிற்பங்கள் - அழிவின் விளிம்பில்….



அரக்கு பள்ளத்தாக்குபகுதி 24

பகுதி 23 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்அரக்கு பள்ளத்தாக்குஎன்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!




கோனார்க் சூரியனார் கோவில், ஒடிஷா

Bபிரஜா தேவி கோவில் தரிசனம் முடித்த பிறகு, கோவில் அமைந்திருக்கும் ஜாஜ்பூரிலிருந்து நாங்கள் தங்கியிருந்த புவனேஷ்வர் நகருக்கு வந்து சேர்ந்தோம். இரவு உணவை முடித்துக் கொண்ட பிறகு நல்ல ஓய்வு. நாள் முழுவதும் பயணமும், அலைச்சலும் இருக்கும் போது, இரவு நல்ல ஓய்வு எடுத்துக் கொள்வது மிக முக்கியம். அப்போது தான் அடுத்த நாள் பயணிக்கவும், இன்னும் சில இடங்கள் பார்க்கவும் நமக்கு உடல் ஒத்துழைக்கும்.  பெரும்பால பயணிகள் இரவு வெகு நேரம் உறங்காமல் இருந்து அடுத்த நாள் திண்டாடுவார்கள் – பல குழுக்களில் பயணித்திருப்பதால் அப்படி அவதிப்படும் சிலரைப் பார்த்த அனுபவம் உண்டு! நல்ல உறக்கத்திற்குப் பிறகு நாங்கள் அடுத்த நாள் தங்க முக்கோணம் என அழைக்கப்படும் மூன்று நகரங்களில் [புவனேஷ்வர், கோனார்க், பூரி] இரண்டாம் நகரமான கோனார்க் நோக்கி பயணித்தோம்.