சனி, 11 நவம்பர், 2017

காதல் காதல் காதல், காதல் போயின் சாதல் – ஒரு முக்கோணக் காதல்சமீபத்தில் ஒரு இளைஞரை சந்திக்க நேர்ந்தது. குருத்வாரா ஒன்றில் "கர் சேவா" [குருத்வாராக்களில், பொதுப்பணியை, எந்த வித சம்பளமும் பெறாமல், குருவிற்கு ஒரு தொண்டாகச் செய்வது] செய்து கொண்டிருந்தார். பரவாயில்லையே, இந்த வயதில் சேவை செய்யும் மனப்பாங்கு இருக்கிறதே என மகிழ்ந்தேன். அவரை நோக்கி ஒரு சிநேகப் புன்னகை வீச, அவரும் நகைத்து "சத் ஸ்ரீ அகால்" என்று சொல்ல, தலை அசைத்து, வாழ்த்தினேன். "இந்த வயதில் இப்படி சேவை செய்வது பெரிய விஷயம், உங்கள் மக்கள் தொண்டு தொடரட்டும்" என்று சொல்ல, மறுத்து தலையை ஆட்டி, கொஞ்சம் புன்னகைத்து, இது எனக்குக் கொண்டுக்கப்பட்ட தண்டனை என்றார். "கொஞ்சம் பொறுங்கள், எனது இன்றைய பணி பத்து நிமிடத்தில் முடிந்து விடும், பிறகு பேசலாம்" எனச் சொல்ல, காத்திருந்தேன்.

சிறிது நேரம் கழித்து அவர் வர பேசினோம். கார்த்திக் [உண்மைப் பெயர் அல்ல!] தனக்கு எதற்கு இந்த தண்டனை தரப்பட்டது எனச் சொல்ல ஆரம்பித்தார். "நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன், இரண்டு பேரைக் கொலை செய்யும் முயற்சியும் சேர்ந்துகொண்டது!" அதற்கு தண்டனையாக இந்த கர் சேவா. அட இவரிடம் இப்படி ஒரு கதையா? எனக்கும் அன்றைக்கு பெரிய வேலை ஒன்றும் இல்லை. நேரம் கடத்த வேண்டும், அதனால் சொல்லுங்களேன் உங்கள் கதையை, எனக் கேட்க, சொல்ல ஆரம்பித்தார் கார்த்திக். கதை கௌகாத்தியில் ஆரம்பிக்கிறது.

வசந்த் மற்றும் பிரியங்கா [இவையும் உண்மைப் பெயர்கள் அல்ல!] கௌகாத்தியில் உள்ள கல்லூரியில் படிக்கும் சமயத்தில் காதல் கொள்ள, படித்து முடிப்பதற்குள் காதல் பாதையில் நீண்ட தூரம் பயணித்து விட்டார்கள். காந்தர்வ திருமணம் போல, கோர்ட் திருமணம் புரிந்து கொள்கிறார்கள். இப்படி கோர்ட் திருமணம் செய்து கொண்டது வசந்த் வீட்டிற்குத் தெரிந்தாலும், பிரியங்கா இந்த விஷயத்தினை தனக்குள்ளே வைத்துக் கொண்டு, வீட்டில் யாருக்குமே சொல்லவில்லை. இதற்கு நடுவே கல்லூரி படிப்பும் முடிகிறது. பிரியங்கா வீட்டில் இருக்க, வசந்த் அவர் வீட்டில் இருக்க, திருமணம் ஆனாலும் தனித்தனியாகவே வாழ்கிறார்கள். இப்படியே சில வருடங்கள் ஓடிவிட, அவர்களுக்குள் தொடர்பு இல்லை என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக காதலும் கசக்கிறது!

பிரியங்கா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்கிறார். அவரை நிறுவனம் பயிற்சிக்காக தலைநகரத்திற்கு அனுப்பி வைக்க பயிற்சி பெற்றுக் கொண்டே ஹாஸ்டலில் தங்குகிறார். சில நாட்களில் கார்த்திகை சந்திக்கிறார் பிரியங்கா.  அவர்களுக்குள் நட்பு உருவாகிறது. நட்பு காதலாக மலர்வதர்கான சூழல் இருக்கிறது. பிரியங்காவிற்கு கார்த்திக் மீது இருப்பது காதலா, இல்லை நட்பா என்று குழப்பம். ஆனால் கார்த்திக்கு சந்தேகமே இல்லை – பிரியங்கா மீது இருப்பது 100% காதல்!

பிரியங்கா தலைநகரில் இருப்பது கோர்ட் திருமணம் புரிந்து கொண்ட வசந்த்-க்கு தெரிய, அவர் தலைநகர் வருகிறார். பிரியங்கா தங்கி இருக்கும் ஹாஸ்டலுக்குச் செல்ல, அங்கே பிரிந்திருந்த காதலர்கள், கோர்ட்டில் மணம் புரிந்து கொண்டவர்கள், வருடங்கள் கழித்து சந்தித்தவர்களுக்கு மறைந்திருந்த காதல் மீண்டும் துளிர்விடுகிறது. மூன்று மாத பயிற்சிக்குப் பிறகு கௌகாத்தி திரும்பி நம் வாழ்க்கையைப் புதியதாய்த் துவங்குவோம் என்று முடிவெடுக்கிறார்கள்.

இந்த சமயத்தில் கார்த்திக் ப்ரியங்காவினை சந்திக்க வர, வசந்த்-பிரியங்கா காதல், அவர்களுக்கிடையே பிரிவு, இப்போது மீண்டும் காதல் துளிர்த்து விட்டது தெரிகிறது. தெரிந்ததும் பிரச்சனை உருவாகிறது. தங்களுக்கு ஏற்கனவே கோர்ட் மூலம் திருமணம் ஆகிவிட்டது என்றும் அதனால் பிரியங்கா கார்த்திக்கை திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் சொல்ல, கார்த்திக் கோபப் படுகிறார். தன்னுடைய தந்தையின் துப்பாக்கியை எடுத்து வந்து, பிரியங்கா தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டுகிறார். கார்த்திக்-பிரியங்கா-வசந்த் மூவருக்கும் இடையே தள்ளு-முள்ளு நடக்க, துப்பாக்கியிலிருந்து குண்டுகள் வெளியே வர, பிரியங்கா-வசந்த் இருவரையும் குண்டுகள் துளைக்கின்றன. அவர்களுக்கு அடிபட்டதும் கார்த்திக்கும் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார்.

மூவருக்கும் அடிபட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார்கள். காவல்துறை கார்த்திக் மீது வழக்குகள் பதிவு செய்கிறது. மூவரும் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வெளிவருகிறார்கள். அவர்களுடைய பெற்றோர்களும் வர, பேச்சுவார்த்தை நடக்கிறது. ஏற்கனவே வசந்த்-பிரியங்கா திருமணம் நடந்திருப்பதால், கார்த்திக் தனது ஒருதலைக் காதலை விடுத்து, அவர்கள் இருவரையும் வாழ்த்தி வழி அனுப்ப வேண்டும் என முடிவு செய்கிறார்கள். தங்களுக்குள் முடிவு செய்து கொண்டால் போதாதே, கார்த்திக் மீது இருக்கும் வழக்கும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பதால் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய, ஒன்றரை வருடத்திற்குப் பிறகு தீர்ப்பு வருகிறது!

கார்த்திக், அரசுசார் சேவை நிறுவனம் ஒன்றுக்கு நன்கொடை தரவேண்டும். மேலும், குறிப்பிட்ட குருத்வாரா ஒன்றில் பதினைந்து நாட்கள் காலையில் மூன்று மணி நேரம் "கர் சேவா" செய்ய வேண்டும். பதினைந்து நாட்கள் முடிந்த பிறகு குருத்வாரா நிர்வாகிகளிடம் கர் சேவாவை சரியாகச் செய்து முடித்ததற்கான கடிதம் பெற்று வர வேண்டும் என்பது தான் நீதிபதி சொன்ன தீர்ப்பு. நான் கார்த்திக்கை சந்தித்த அன்று தான் பதினைந்து நாட்கள் முடிந்தது, அடுத்த நாள் நீதிமன்றம் சென்று வழக்கைத் தள்ளுபடி செய்ய தீர்ப்பு வாங்க வேண்டும் எனச் சொல்ல, "இனிமேலாவது அவர் வாழ்வில் வசந்தம் வீச வாழ்த்தி வந்தேன்.  பெற்றவர்கள் பார்த்து வைக்கும் பெண்ணை மணம் புரிந்து, கட்டியவளைக் காதலி! என்று வாழ்த்தி அங்கிருந்து நகர்ந்தேன்.

வாழ்க்கையில் தான் எப்படியெல்லாம் பிரச்சனைகள் உருவாகின்றன. சில தாமே வருகின்றன என்றால், சிலவற்றை நாமே இழுத்து விட்டுக் கொள்கிறோம்..... 

நாளை மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

30 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. பாடாய் படுத்துகிறது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. வித்தியாசமான காதல் கதைதான். அதைவிட தண்டனை நல்லாக் கொடுத்திருக்காங்க. திருந்த சந்தர்ப்பம் இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குற்றம் சாட்டப்பட்டவரின் வயதினை கருத்தில் கொண்டு கொடுத்த தீர்ப்பு.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 3. சிலவற்றை அல்ல, பலவற்றை நாமே இழுத்துவிட்டுக்கொள்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலவற்றை..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   நீக்கு
 6. ‘காதல் என்பது எதுவரை கல்யாண காலம் வரும் வரை’ என்பார் கவிஞர் கண்ணதாசன். ஆனால் இங்கோ கல்யாணம் ஆன பிறகும் காதல் பிறந்திருக்கிறது கணவன் அல்லாத இன்னொருவரிடம். இது காலத்தின் கோலம் தான். நல்லவேளையாக எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் பிடித்த பாடல். நல்லபடியாக முடிந்தது என்பதில் தான் எனக்கும் மகிழ்ச்சி.

   நீக்கு
 7. கால மாற்றம் என்னத்த சொல்ல Lakshmi - Short Film பாத்திங்களா அதன் பின்ணூட்டம் அனுமார் வால் மாதிரி போய்கிட்டேஇருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கும் அதே பேச்சாக இருக்கிறது. அது என்ன படம் என்று இனிமேல் தான் பார்க்க வேண்டும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி vic.

   நீக்கு
 8. ஒரு நாவலை சுருக்கி குட்டி கதையாக்கி விட்டீர்களே... பாராட்டுகள்!!👍

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாவல் - இதுவே அதிமாக எழுதிவிட்டேனோ என்று தோன்றியது எனக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   நீக்கு
 9. ம்ம்ம்ம்ம், இந்தக் காதல் தான் எல்லோரையும் என்ன பாடு படுத்துகிறது! :( நல்லபடியாக முடிந்ததோடு மட்டுமில்லாமல் தீர்ப்பும் நல்ல தீர்ப்பு!

  "லக்ஷ்மி" படம் பார்க்காமலேயே இன்று இப்போத் தான் சிறிது நேரம் முன்னாடி விமரிசனம் எழுதிட்டு வந்திருக்கேன்! முடிஞ்சாப் பாருங்க! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குற்றம் சாட்டப்பட்டவரின் வயதை கருத்தில் கொண்டு தரப்பட்ட தீர்ப்பு.

   உங்கள் பதிவும் படித்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 10. சிலவற்றை நாமே இழுத்து விட்டுக் கொள்கிறோம்...

  இதுதான் உண்மை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 11. காதல் இப்படித்தான் பலவழிகளில் பிரச்சனையை இழுத்து கொள்ளும் காதலுக்கு கண்ணுல்லைனு சொல்லறாங்க இதுக்குதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

   நீக்கு
 12. குருத்வாராவில் சேவை செய்தவர் கதை கேட்க கஷ்டமாய் இருந்தாலும் தண்டனை அவரின் மனமாற்றத்திற்கும் மன அமைதிக்கும் உதவும் என்று தெரிகிறது.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 13. காதல் படுத்தும் பாடு! ஆம் ஜி நீங்கள் சொல்லுவது போல் சிலவற்றை நாமே இழுத்துவிட்டுக் கொள்கிறோம்...

  தண்டனை வித்தியாசமான அழகான தண்டனை என்றே தோன்றுகிறது. அதுவும் குருத்வாராவில் சேவை. இப்படியான சேவைகள், கண்டிப்பாக கார்த்திக்கின் மன நிலையை மாற்ற உதவியிருக்கலாம்..உதவியும் இருக்கும். இப்போது ஜெயில் கைதிகளுக்குக் கூட யோகா தியானம் எல்லாம் கற்றுக் கொடுக்கிறார்களே. அது போன்று இச் சேவை!! வித்தியாசமான தீர்ப்பு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 14. ஒரு நல்ல கதைக்கு கரு! உங்கள் பதிவு!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் கதைக்கும் ரொம்ப தூரம் கீதா ஜி!. நீங்கள் ஏன் முயற்சிக்கக் கூடாது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 15. காதலுக்கு எப்போதும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கத் தோன்றும் ஒரு சின்ன கதை கேள்விப்பட்டது ராஜாய் மற்றும் காந்திஜி யின் மக்கள் காதல் வயப்படுகிறார்கள் பெற்றோரிடம் அனுமதி கோர ஓராண்டு காலம் இவர்கள் சந்திக்காமலும் பேசாமலும் இருந்தால் அப்போதும் இதே தீவிரமிருந்தால் அனுமதி என்று கேட்ட நினைவு உண்மைக்காதல் காணாமல் இருந்தாலும் குறையாது என்பது படிப்பினை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....