எங்கள் வீட்டில் மூவரும் பதிவர்கள்
என்பதால், “வலைப்பதிவர் குடும்பம்” என்று சொல்வது வலைப்பூ நண்பர்களுக்கு
வழக்கம். நான் “சந்தித்ததும்,
சிந்தித்ததும்” எனும் இந்த வலைப்பூவில் எழுதி வர, இல்லத்தரசி “கோவை2தில்லி”
என்ற வலைப்பூவில் எழுதி வந்தார். எங்கள் இளவரசியின் ஓவியங்களை “வெளிச்சக்கீற்றுகள்”
என்ற வலைப்பூவில் வெளியிட்டுக் கொண்டிருந்தோம். கோவை2தில்லியில் இப்போதெல்லாம்
பதிவுகள் எழுதுவதே இல்லை – எழுதுவது அனைத்தும் அவரது முகநூலில்! மகளின்
ஓவியங்களும் அப்படியே! முகநூலில் பகிர்ந்து கொள்வதோடு சரி. அந்த இரண்டு
வலைப்பூக்களில் கடைசியாக வந்த பதிவுகள்…..
கோவை2தில்லி – வண்ணங்களின் சங்கமம்
– ஜனவரி 9, 2017.
வெளிச்சக்கீற்றுகள் – க்ருஷ் – மே 9,
2016
இடையிடையே இல்லத்தரசியின் பதிவுகளை
எனது பக்கத்தில் வெளியிட்டிருந்தாலும், மகளின் ஓவியங்கள் பகிர்ந்து கொண்டது
மிகவும் குறைவே. அதனால் இனிமேல் எனது வலைப்பூவிலேயே அவர்களது பதிவுகளும்
வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறோம். அதனால் தான் முகப்பிலும் சில மாற்றங்கள்.
நாளை மகளின் ஒரு ஓவியம் வெளியிட இருக்கிறேன். அவ்வப்போது அவர்களின் பதிவுகள்
இங்கேயே வெளி வரும்!
எப்போதும் போல, பதிவுகளை வாசித்து,
உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்…. தொடர்ந்து நட்பில் இருப்போம்! சகோ தேனம்மை
அவர்கள் சொல்வது போல,
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
நாளை மீண்டும் ச[சி]ந்திப்போம்....
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
இது மிகவும் நல்ல ஐடியா
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குமூன்று சிந்தனைகளின் சங்கமம் ... நான் பெரிதும் வரவேற்கிறேன்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குஉங்க வீட்டு பதிவர்கள் ஒன்னு சேர்ந்தது பதிவர்கள் ஒற்றுமையா?! இது கொஞ்சமே கொஞ்சம் ஓவரா இல்ல?!
பதிலளிநீக்குகொஞ்சமே கொஞ்சம் ஓவர்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!
குழந்தையின் படங்களை வெளிவிடுவது போல அவரின் எண்ணங்களையும் கேட்டு எழுதி பதிவிடுங்கள் அதன் மூலம இன்றைய இளைய தலமுறையின் எண்ணங்களை அறிய இயலும். அல்லது ஒரு பிரச்சனை அல்லது நிகழ்வை சொல்லி அவர் எண்ன நினைக்கிறார் அவரின் தோழிகள் எண்ண நினைக்கிறார்கள் என்பதை கேட்டு அறிய செய்து அதை பற்றி பதிவிட செய்யுங்கள் அதாவது ஒரு தலைப்பை கொடுத்து அவரின் தோழிகளிடம் பேட்டி போல எடுத்துவர செய்து அதை பதிவிடலாம் இப்படி வித்தியாசமாக முயற்சி செய்யுங்கள்
பதிலளிநீக்குஉங்களின் மூவரின் முயற்சி நல்ல வெற்றி பெற என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் & பாராட்டுகள்
மகளிடம் சொல்கிறேன். நன்றி நண்பரே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
வாழ்த்துக்கள்!! பல பதிவர்கள் இணைந்த 'எங்கள் ப்ளாக' போல உங்கள் ப்ளாகும் சீரோடும் சிறப்போடும் வாழ்க!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.
நீக்குமூவரணிக்கு வாழ்த்துகள் ஜி!!!
பதிலளிநீக்குமும்மூர்த்திகள், மூவேந்தர்,முக்கனி, முப்பால், முத்தமிழ், முக்காலம், முக்கூடல், முப்படை, என்பது போல் முப்பதிவர் (இது சரியான வார்த்தையா தெரியல!!) எனலாமா!!!
கலக்குங்க....நாங்க ரெடி...வாழ்த்துகள் குடும்பதளம்!!
முப்பதிவர் - சரியான வார்த்தை இல்லை என்றே தோன்றுகிறது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
சபாஷ்... நல்ல முடிவு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்கு"வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!"
பதிலளிநீக்குபதிவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போவதால் இது சாத்தியமே!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப.கந்தசாமி ஐயா.
நீக்குதிரிவேணி சங்கமம்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா
தம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குநல்ல ஐடியா...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக் சரவணன்.
நீக்குநல்லது வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.
நீக்குநல்லது... தொடர்கிறோம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கே.பி. ஜனா ஜி!
நீக்குஅன்பின் வரவேற்பு..
பதிலளிநீக்குவாழ்க நலம்!..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குஉங்களுக்கும் எழுதும் ப்ரெஷர் குறையலாமில்லையா
பதிலளிநீக்குலாம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
அருமையான முடிவு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குவாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்கு