புதன், 1 நவம்பர், 2017

எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 2

முதல் பகுதி படிக்காதவர்கள் வசதிக்காக - பகுதி-1

படம்: இணையத்திலிருந்து...

தரம்ஷாலா செல்வதற்கு Lakshmi Holidays என்ற நிறுவனத்தின் Volvo பேருந்தில் தான் முன்பதிவு செய்திருந்தோம். நாங்கள் அனைவரும் பேருந்து புறப்படும் என்று சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே புறப்படும் இடத்தில் காத்திருக்க பேருந்து அங்கே இல்லை. தில்லியில் ஒரு பழக்கம். யாருமே சொன்ன சொல்லை காப்பதில்லை! பேருந்து இங்கே இல்லையே, முன்னரே புறப்பட்டு போய்விட்டதோ என்று நினைக்க வேண்டியிருந்தது. இணையத்தின் மூலம் முன்பதிவு செய்தபோது கொடுத்திருந்த தொடர்பு எண்ணில் அழைத்து மீண்டும் கேட்க, அவர் சொன்ன பதில் – கவலைப்படாதீங்க, பேருந்து நீங்கள் நிற்கும் ஆர்.கே. ஆஷ்ரம் பகுதியிலிருந்து புறப்படாது! அப்புறம் எங்கே இருந்து தான் பேருந்து புறப்படும்? அங்கே எப்படிச் செல்வது என்பது தான் அடுத்த கேள்வி!படம்: இணையத்திலிருந்து...

ISBT என அழைக்கப்படும் பேருந்து நிலையத்திற்கு அருகே இருக்கும் மஜ்னு கா டில்லா எனும் இடத்திலிருந்து தான் பேருந்து புறப்படும். உங்களை அங்கே அழைத்துச் செல்ல ஒரு மாருதி வேன் நீங்கள் நிற்கும் இடத்திற்கு இப்போது வரும், அதில் ஏறி மஜ்னு கா டில்லா வந்து சேருங்கள் என்று சொல்ல, சுற்றிலும் பார்த்தால், இரண்டு மூன்று மாருதி வேன்கள்! அதில் ஒருவரிடம் விசாரிக்க, இன்னும் சிலர் வருவார்கள், அவர்களும் வந்த பிறகு இந்த வேன்களில் உங்களை ஏற்றிக்கொண்டு மஜ்னு கா டில்லாவில் விடுவோம் என்று சொன்னார். மூன்று நான்கு வேன்களில் பயணிகளை ஏற்றிக் கொண்டு மஜ்னு கா டில்லா அருகே பேருந்து நிற்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்! வெளியூர் செல்லும் தனியார் பேருந்துகளுக்கு பகல் நேரங்களில் நகரத்திற்கு உள்ளே வர அனுமதி இல்லை என்பதால் இந்த ஏற்பாடு.

இதற்கு முன்னரும் இதே ஆர்.கே. ஆஷ்ரம் பகுதியிலிருந்து பேருந்தில் பயணித்திருக்கிறேன் என்றாலும், இப்படி வேன்கள் மூலம் மஜ்னு கா டில்லா சென்றதில்லை. இம்முறை தான் இப்படி! அங்கே சென்று பார்த்தால் எங்கள் பேருந்து போலவே பல வோல்வோ பேருந்துகள், தில்லியிலிருந்து பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசத்தின் பல இடங்களுக்கும் புறப்படத் தயாராக நின்று கொண்டிருந்தன. நாங்கள் சென்று எங்கள் உடைமைகளை பேருந்தின் அடிப்பாகத்தில் இருக்கும் அறைகளில் வைத்து விட்டு எங்களுக்குக் கொடுத்த இருக்கைகளுக்குச் சென்று அமர்ந்தோம். நாங்கள் மொத்தம் ஐந்து பேர்! நான்கு பேர் இரண்டிரண்டாக அமர்ந்து கொள்ள நான் தனித்து விடப்பட்டேன்! பக்கத்து சீட்டுக்கு யார் வரப் போகிறாரோ என்ற தவிப்பு எனக்குள்!

என்னதான் வோல்வோ சொகுசு பேருந்து என்றாலும், கொஞ்சம் Bulky-ஆக ஒருவர் உங்கள் பக்கத்து இருக்கையில் அமர்ந்தால் கொஞ்சம், இல்லை இல்லை நிறையவே கஷ்டம் தான்! ஒரு முறை அப்படி ஒருவர் வந்து சேர இருவரும் முட்டிக்கொண்டே தான் பயணித்தோம்! நல்ல வேளை இந்த முறை தப்பித்தேன்! பக்கத்து சீட்டில் ஒரு பள்ளி/கல்லூரியில் படிக்கும் ஒரு இளம்பெண்! மாலை ஆறரை மணிக்கு பேருந்து என சொல்லி இருந்தாலும், மஜ்னு கா டில்லாவிலிருந்து பேருந்து புறப்பட்ட நேரம் இரவு எட்டு மணி! தலைநகர் தில்லியிலிருந்து தரம்ஷாலா வரையான தூரம் சுமார் 475 கிலோமீட்டர்! சண்டிகர் நகரைத் தாண்டிய பிறகு மலைப்பாதை என்பதால் பத்து மணி நேரமாவது ஆகும். ஆனால் பேருந்தினை மிக வேகமாகத் தான் செலுத்தினார் ஓட்டுனர். சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது பேருந்து.

மதியம் தலைநகர் தில்லியில் சாப்பிட்டது. பத்து மணிக்கு பசிக்க ஆரம்பிக்க, பேருந்து ஓட்டுனர் எங்கும் நிறுத்துவதாகத் தெரியவில்லை. இப்படி இரவு நேரத்தில் வாகனம் ஓட்டும் ஓட்டுனர்கள் பெரும்பாலும் நள்ளிரவில் தான் உணவு உண்ண வண்டியை நிறுத்துவார்கள். இவரும் அப்படியே! இரவு பன்னிரெண்டு மணிக்கு இரவு உணவு உண்பதற்காக ஒரு இடத்தில் நிறுத்தினார்! இரவு உணவு என்பதை நள்ளிரவு உணவாக்கினார்! நல்ல நேரம் பார்த்தார்! அதன் பிறகு வண்டியை எடுத்தவர் தொடர்ந்து மலைப்பாதையில் சீராக பேருந்தினை இயக்கிக் கொண்டிருந்தார். இப்படி மலைப்பகுதியில் செல்லும் இரவு நேரப் பேருந்துகளின் ஓட்டுனர்களும் நடத்துனர்களும் தங்களது மேல் வருமானத்திற்காக/அடிக்கும் சரக்கு செலவுக்காக, ஒரு வேலை செய்வதுண்டு. வழியெங்கும் இருக்கும் கடைகளுக்கு பொருட்களை தங்கள் வண்டியில் ஏற்றிச் செல்வார்கள்! Extra Income! பேருந்து முதலாளிக்குத் தெரியாமல்! எங்கள் ஓட்டுனரும் அப்படியே! இரவு பெரும்பாலான பயணிகள் தூக்கத்தில் இருக்க, இவர் பல இடங்களில் நிறுத்தி பொருட்களை ஏற்றி-இறக்கிக் கொண்டிருந்தார்!

இரவு பன்னிரெண்டு மணிக்கு நிறுத்தியது. காலை ஐந்து மணி ஆகியும் இயற்கை உபாதைகளுக்கு பேருந்தை எங்கேயும் நிறுத்தவில்லை! ஆண்களுக்காவது பரவாயில்லை. பெண்களின் நிலை தான் பரிதாபம்! சொல்லவும் முடியாமல் அடக்கவும் முடியாமல் திணறினார் பக்கத்திலிருந்து பெண். பேருந்து ஓட்டுனரிடம் சென்று சொல்ல, அத்துவானக் காட்டில் நிறுத்தி சாலையோரத்தில் சென்று வரச் சொன்னார். வேறு வழியின்றி சில பெண்கள் சென்று வந்தார்கள். ஒரு வழியாக காலை ஏழு மணிக்கு தரம்ஷாலாவின் பிரதான கடைத்தெருவில் எங்களை இறக்கி விட்டு பேருந்து மெக்லாட்கஞ்ச் நோக்கி புறப்பட்டது! பெரும்பாலும் எந்த ஊருக்குச் சென்றாலும், தங்குமிடம் முன்பதிவு செய்து கொள்வது வழக்கம் – ஆனால் ஹிந்தியில் சொல்வது போல, முஷ்டண்டேக்கள் [மீசை வைத்த ஆண்கள்!] மட்டுமே சென்றதால், அங்கே சென்று தங்குமிடம் தேடலாம் என விட்டிருந்தோம்!
  
தேடுதல் வேட்டையைத் துவக்கினோம்! பிரதான சாலையிலேயே இருந்த தங்குமிடங்கள் கேட்ட வாடகை மலைக்க வைத்தது! வாடகைக்கு அறை கிடைத்ததா இல்லையா என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

48 கருத்துகள்:

 1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. ஸ்ரீராம். has left a new comment on your post "எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!":

   நள்ளிரவு பேருந்தை உணவுக்காக நிறுத்தியது சரி, நீங்கள் சாப்பீட்டீர்களா? என்ன கிடைத்தது?

   வெங்கட் நாகராஜ்

   நாங்கள் உணவு உண்ணவில்லை. வாழைப்பழம் கிடைத்தது. அதை வாங்கி உண்டு விட்டோம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   எனது பதிவிற்கு வந்த சில கருத்துகளை தவறுதலாக அழித்து விட்டேன்! அதனால் தான் மீண்டும் இங்கே Copy-Paste செய்திருக்கிறேன்.

   நீக்கு
 2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. கரந்தை ஜெயக்குமார் has left a new comment on your post "எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!":

   தங்களோடு சேர்ந்து நாங்களும் பயணிக்கிறோம் ஐயா
   நன்றி
   தம+1

   வெங்கட் நாகராஜ் has left a new comment on your post "எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!":

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   எனது பதிவிற்கு வந்த சில கருத்துகளை தவறுதலாக அழித்து விட்டேன்! அதனால் தான் மீண்டும் இங்கே Copy-Paste செய்திருக்கிறேன்.

   நீக்கு
 3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University has left a new comment on your post "எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!":

   சீக்கிரம் அழைத்துச்செல்லுங்கள். நான் பார்க்க ஆசைப்பட்ட இடங்களில் இதுவும் ஒன்று.

   வெங்கட் நாகராஜ் has left a new comment on your post "எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!":

   ஆஹா.. நீங்கள் பார்க்க ஆசைப்பட்ட இடமா? முடிந்தால் செல்லலாம் இப்போதும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   எனது பதிவிற்கு வந்த சில கருத்துகளை தவறுதலாக அழித்து விட்டேன்! அதனால் தான் மீண்டும் இங்கே Copy-Paste செய்திருக்கிறேன்.

   நீக்கு
 4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. துரை செல்வராஜூ has left a new comment on your post "எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!":

   பயணம் தொடர்கின்றது.. வாழ்க நலம்!..

   வெங்கட் நாகராஜ் has left a new comment on your post "எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!":

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   எனது பதிவிற்கு வந்த சில கருத்துகளை தவறுதலாக அழித்து விட்டேன்! அதனால் தான் மீண்டும் இங்கே Copy-Paste செய்திருக்கிறேன்.

   நீக்கு
 5. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. நெல்லைத் தமிழன் has left a new comment on your post "எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!":

   தொடர்கிறேன். நள்ளிரவில் அகால நேரத்தில் என்ன சாப்பிடுவது? அவங்களும் எதைக் கொடுத்தாலும் சாப்பிட்டாகவேண்டும் என்பதால் தரம் குறைவாக வைத்திருப்பார்கள்.

   வெங்கட் நாகராஜ் has left a new comment on your post "எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!":

   அகால நேரத்தில் நிறைய பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்! சமீபத்தில் தில்லி திரும்பிய இரவு நேர விமானத்தில் மூன்று மணிக்கு உணவு தர சிலர் சாப்பிட்டார்கள்! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   எனது பதிவிற்கு வந்த சில கருத்துகளை தவறுதலாக அழித்து விட்டேன்! அதனால் தான் மீண்டும் இங்கே Copy-Paste செய்திருக்கிறேன்.

   நீக்கு
 6. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. பூ விழி has left a new comment on your post "எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!":

   நள்ளிரவில் உணவு கடவுளே அதுவரை பசியுடனா எப்படியும் ரொட்டி இல்லனா பூரி இருந்திருக்கும் அந்த பக்கமெல்லாம் இப்படித்தானே

   வெங்கட் நாகராஜ் has left a new comment on your post "எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!":

   பசி தான். நாங்கள் வாழைப்பழம் உண்டோம். பூரி/சப்பாத்தி/நான் போன்றவை தான் கிடைக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

   எனது பதிவிற்கு வந்த சில கருத்துகளை தவறுதலாக அழித்து விட்டேன்! அதனால் தான் மீண்டும் இங்கே Copy-Paste செய்திருக்கிறேன்.

   நீக்கு
 7. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. Geetha Sambasivam has left a new comment on your post "எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!":

   சில சமயம் சுகமான பயணம், பல சமயம் கடினமான பயணம்! ஆனாலும் இப்படி வண்டியை நிறுத்தாமல் போவது என்பது கஷ்டம் தான்! இந்த வகையில் கர்நாடகா அரசின் பேருந்துகளை ஓட்டும் ஓட்டுநர்/நடத்துநர்கள் பரவாயில்லை. அவங்க நிறுத்திப் போயிட்டு வரச் சொல்லுவாங்க. கடைசி ஆள் வரும் வரைக்கும் பொறுமையாகவும் காத்திருப்பாங்க! பல முறை பார்த்திருக்கேன்.

   வெங்கட் நாகராஜ் has left a new comment on your post "எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!":

   வெகு சிலரே மற்றவர்களின் கஷ்டத்தினை புரிந்து கொள்கிறார்கள்! என்ன செய்ய.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   எனது பதிவிற்கு வந்த சில கருத்துகளை தவறுதலாக அழித்து விட்டேன்! அதனால் தான் மீண்டும் இங்கே Copy-Paste செய்திருக்கிறேன்.

   நீக்கு
 8. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. நிஷா has left a new comment on your post "எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!":

   இலங்கையில் கொழும்பு மட்டக்களப்பு, கொழும்பு யாழ்ப்பாணம் செல்லும் போதும் நள்ளிரவுகளில் தான் உணவு நிறுத்த தங்களுக்கு சார்பான பிடித்தமான இடம் வரும் வரை வண்டி ஓட்டுவார்கள். அப்படியான உணவு விடுதிகளில் பஸ் சாரதிக்கும், நடத்துனருக்கும் உணவு இலவசம் என சொல்வார்கள்.

   நடுக்காட்டில் டாய்லட்? லேடிஸ் எப்படி சமாளிக்க முடியும்?

   வெங்கட் நாகராஜ் has left a new comment on your post "எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!":

   லேடீஸ் எப்படி சமாளிக்க முடியும்?

   ரொம்பவே கஷ்டம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   எனது பதிவிற்கு வந்த சில கருத்துகளை தவறுதலாக அழித்து விட்டேன்! அதனால் தான் மீண்டும் இங்கே Copy-Paste செய்திருக்கிறேன்.

   நீக்கு
 9. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. வல்லிசிம்ஹன் has left a new comment on your post "எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!":

   மிகப் பிடித்த இடம் வெங்கட். ரம்யமாக இருந்திருக்கும். கூடப் பயணிக்கிறேன்.

   வெங்கட் நாகராஜ் has left a new comment on your post "எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!":

   ரம்யமான இடம் தான் மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   எனது பதிவிற்கு வந்த சில கருத்துகளை தவறுதலாக அழித்து விட்டேன்! அதனால் தான் மீண்டும் இங்கே Copy-Paste செய்திருக்கிறேன்.

   நீக்கு
 10. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. Thulasidharan V Thillaiakathu has left a new comment on your post "எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!":

   உங்களுக்கு ஏதாவது கிடைத்ததா இல்லையா சாப்பிடும்படி? மலையேற்றத்தில் இயற்கைக்காட்சிகளைப் பார்க்க முடிந்திருக்காது இல்லையா? இரவுப் பயணம் என்பதால். இரவுப் பயணம் அதுவும் பேருந்தில் பெண்களுக்கு சில சமயம் இயற்கை உபாதைகளைக் கழிக்க கொஞ்சம் கஷ்டம்தான் அதுவும் இது போன்ற மலைப்பகுதியில் கழிவறைகளும் இருக்காது. தரம்ஷாலா பார்க்க ஆவலுடன் தொடர்கிறோம்.

   வெங்கட் நாகராஜ் has left a new comment on your post "எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!":

   இயற்கை உபாதைகள் - கஷ்டம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   எனது பதிவிற்கு வந்த சில கருத்துகளை தவறுதலாக அழித்து விட்டேன்! அதனால் தான் மீண்டும் இங்கே Copy-Paste செய்திருக்கிறேன்.

   நீக்கு
 11. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

   நீக்கு
  2. நானெல்லாம் இந்த விஷயத்தில் தயக்கமே காட்டுவதில்லை! வண்டி ஓட்டுநரிடமே விஷயத்தைச் சொல்லி வண்டியை ஏதேனும் ஓர் பெட்ரோல் பங்க் முன்னால் நிறுத்தச் சொல்லிடுவேன். இது பேருந்துப் பயணமானாலும் சரி, நாங்க மட்டும் தனியாகக் காரில் பயணம் செய்தாலும் சரி! இயற்கை உபாதை எல்லோருக்கும் உள்ளது தானே!

   நீக்கு
  3. KILLERGEE Devakottai has left a new comment on your post "எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!":

   ஆண்களாவது ஓட்டுனரிடம் சொல்லி விடலாம் பெண்கள் என்ன செய்ய முடியும் ?

   எனது பதிவிற்கு வந்த சில கருத்துகளை தவறுதலாக அழித்து விட்டேன்! அதனால் தான் மீண்டும் இங்கே Copy-Paste செய்திருக்கிறேன்.

   நீக்கு
  4. KILLERGEE Devakottai has left a new comment on your post "எங்கே தேடுவேன், பேருந்தை எங்கே தேடுவேன்!":

   ஜி தொடர்ந்து முயல்கிறேன் ஓட்டு விழுந்து விட்டதாக பொய் சொல்கிறது.
   மீண்டும் வருவேன்.

   எனது பதிவிற்கு வந்த சில கருத்துகளை தவறுதலாக அழித்து விட்டேன்! அதனால் தான் மீண்டும் இங்கே Copy-Paste செய்திருக்கிறேன்.

   நீக்கு
  5. ஓட்டுனரிடம் சொல்வது நல்லது. நல்லவராக இருந்தால் நிச்சயம் சரியான இடத்தில் நிறுத்துவார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
  6. பெண்களின் நிலை கடினமானது தான் கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
  7. ஓட்டு பற்றிய கவலை வேண்டாம் ஜி! :) அது பெரிய விஷயமே இல்லை - உங்களைப் போலவே எனக்கும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 12. தரம்ஷாலாவில் வாடகைக்கு அறை கிடைத்ததா இல்லையா என்பதை அறிய தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 13. இரவுப்பயணம் - என்னதான் நாம் டிரைவர் மீது நம்பிக்கை வைத்தாலும் கடைசிவரை பயம் இருக்கத்தான் செய்து இருக்கும். - உங்களோடு நானும் தொடர்கின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடைசி வரை பயம்! சில சமயம் எனக்கும் உண்டு - அவர்கள் ஓட்டும் விதம் பொறுத்து!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   நீக்கு
 14. பக்கத்து சீட்டில் ஒரு பள்ளி/கல்லூரியில் படிக்கும் ஒரு இளம்பெண்!
  ////
  பயணம் இனித்திருக்குமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை என்றாலும் இனித்திருக்கும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 15. நிறையவே கருத்துகள் நீக்கப்பட்டிருக்கின்றனவே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னுடைய சிறு தவறால் சில கருத்துகள் நீக்கப்பட்டன.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 16. இரவு நேரப்பயணம் எனக்கு விருப்பமில்லை. விமானம், ரயில் என்றால் ஓக்கே. சாலை... அதுவும் மலைப்பாதை என்றால் ரொம்ப யோசிக்கணும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....