திங்கள், 30 அக்டோபர், 2017

தரம்ஷாலா, ஹிமாச்சல் பிரதேசம் – இரண்டாம் தலைநகரம்


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 1முன் குறிப்பு: சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2017 அன்று, ”அடுத்த பயணத் தொடர் – எங்கே – ஒரு புகைப்பட முன்னோட்டம்” என்ற தலைப்பில் திங்களன்று என் அடுத்த பயணத்தொடர் தொடங்கும் என்று சொல்லி இருந்தேன். சொன்னபடியே இதோ திங்களன்று தொடங்கிவிட்டேன்! :) என்ன நடுவில் சில வாரங்கள் கடந்து விட்டன! சரி தொடருக்குப் போவோம்!


அது என்ன, ஹிமாச்சலப் பிரதேசம் என்றால் உங்களுக்கு திருநெல்வேலி அல்வா போலவா? ரொம்பவும் பிடித்த மாநிலமா? ஏற்கனவே ”தேவ்பூமி ஹிமாச்சல்”, “ஹனிமூன் தேசம்” என்று இரண்டு பயணத் தொடர்கள் ஹிமாச்சலப் பிரதேசம் பற்றி எழுதி இருக்கிறீர்கள். இப்போது மூன்றாவதாக “இரண்டாம் தலைநகரம்” – இதுவும் ஹிமாச்சலப் பிரதேசம் பற்றி? ஏன் இப்படி? என நீங்கள் கேட்பதற்கு முன்னர் சொல்லி விடுகிறேன். இன்னும் கூட இங்கே செல்லும் ஆசை உண்டு! முடிந்தால் அங்கேயே தங்கிவிடும் ஆசையும் உண்டு! ஆனால் நடக்காது என்று தெரிந்தே இருக்கிறது! பார்க்க வேண்டிய இடங்களும் நிறையவே உண்டு! முடிந்தால் அந்த இடங்களுக்கும் பயணித்து தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!இரண்டாம் தலைநகரம்: இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் ஒரே ஒரு மாநிலத்திற்கு தான் இரண்டு தலைநகரங்கள் – தட்பவெப்பத்திற்குத் தகுந்தவாறு, ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய இரண்டு மாவட்டங்களும் ஆறு ஆறு மாதத்திற்குத் தலைநகரம். குளிர்/பனிப்பொழிவு அதிகமானதும் காஷ்மீரிலிருந்து ஜம்முவிற்கும், மீண்டும் ஜம்முவிலிருந்து காஷ்மீருக்கும் இடம் பெயரும் அரசாங்கம். அதற்கு ஆகும் செலவு பற்றியோ, அதிலிருக்கும் அரசியல் பற்றியோ இங்கே சொல்லத் தேவையில்லை. இதே போலவே ஹிமாச்சலப் பிரதேசத்திற்கும் இரண்டு தலைநகரங்கள். முதல் தலைநகரம் ஷிம்லா. இரண்டாம் தலைநகரமாக தரம்ஷாலாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார் தற்போதைய முதல்வர். இதிலும் அரசியல் உண்டு. என்றாலும் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் மாற்றம் இருக்காது. சில மந்திரிகள், அதிகாரிகள் அங்கே சென்று சில நாட்கள் தங்கி மக்கள் குறைகளைக் கேட்டுக் கொள்வார்கள். இந்த வருடத்தில் தான் இந்த ஏற்பாடு செய்திருக்கிறார் முதல்வர். [அடுத்த வருடம் தேர்தல்!]இந்த இரண்டாம் தலைநகரத்திற்குச் சென்று வர வேண்டும் என நினைத்திருந்தோம் – நானும் கேரள நண்பர் ப்ரமோத்-உம். ஒரு நன்னாளில், ப்ரமோத்-இடம் இருந்து அலைபேசியில் அழைப்பு. ”அலுவலக வேலையாக தலைநகரம் வருகிறேன், சில நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு தரம்ஷாலா சென்று வரலாமா?” என்று கேட்க, நானும் ஓகே சொன்னேன். அவருடன் கூடவே இன்னும் சில நண்பர்கள். ஹிமாச்சலப் பிரதேசத்திற்குச் செல்ல, இரயில் வசதிகள் அத்தனை சரியில்லை. மலைப்பகுதி என்பதால், பேருந்துகள் தான் இயங்குகின்றன. அதனால், தலைநகரிலிருந்து தரம்ஷாலா வரை பேருந்தில் சென்று அங்கேயே ஏதாவது ஒரு வாகனத்தினை அமர்த்திக் கொள்ளலாம் என முடிவு செய்தோம். நண்பர் வரும் தேதியைச் சொல்ல, பயணிக்க வேண்டிய தேதி முடிவானது. தலைநகரிலிருது தரம்ஷாலா வழியாக மெக்லாட்கஞ்ச் [McLeod Ganj] வரை செல்லும் Volvo B8R Euro-4 சொகுசுப் பேருந்தில் இணையத்தின் மூலம் முன்பதிவு செய்தேன். தரம்ஷாலா, மெக்லாட்கஞ்ச் தவிர இன்னும் சில இடங்களும் செல்லத் திட்டம். எந்தெந்த இடங்களுக்குச் செல்லப் போகிறோம் என திட்டமிட்டிருந்தாலும், அங்கே சென்ற பிறகு, நாங்கள் சென்ற இடங்கள் வேறாக இருந்தன! அதுவும் ஒரு வகையில் நல்லதாகவே இருந்தது. ஒரு சில இடங்கள் பற்றி அங்கே சென்ற பிறகு தான் எங்களுக்குத் தெரிந்தது. எங்களுக்கு வாகனம் தந்தவர் சொன்ன படி சென்ற இடங்கள் நிச்சயம் பார்க்க வேண்டியவை. அவை என்ன இடங்கள் என்பதையும் தொடரில் சொல்லத் தான் போகிறேன். காத்திருங்கள். இப்போதைக்கு இந்தியத் தலைநகரிலிருந்து, ஹிமாச்சலப் பிரதேசத்தின் இரண்டாம் தலைநகரத்திற்குப் புறப்படுவோம்!எங்கள் வீட்டிற்கு அருகேயிருக்கும் ஆர்.கே. ஆஷ்ரம் பகுதியிலிருந்து தான் பேருந்து புறப்படும் என்பதால், நான் வீட்டிலிருந்து புறப்படும்போது, அலைபேசி மூலம் ஆர்.கே. ஆஷ்ரம் பகுதியில் எந்த இடத்திற்கு வந்து சேர வேண்டும் எனக் கேட்க, மெட்ரோ பில்லர் எண் ஒன்றைச் சொல்லி அதற்கு எதிரே வாருங்கள் எனச் சொல்லி விட்டார் என்னிடம் பேசிய பேருந்து நிறுவனமான Lakshmi Holidays சிப்பந்தி. சரி அங்கே தான் பேருந்து நிறுத்தி வைத்திருப்பார்கள் எனப் பார்த்தால் அங்கே ஒரு பேருந்தும் இல்லை! சரி நண்பர்கள் வந்த பிறகு மீண்டும் தொடர்பு கொள்ளுவோம் என காத்திருந்தேன். நண்பர்கள் தலைநகரின் ஜந்தர் மந்தர் பகுதியில் இருக்கும் கேரள இல்லத்திலிருந்து வந்து சேர்ந்தார்கள். அப்போதும் பேருந்து வந்தபாடில்லை. பிறகு என்ன நடந்தது என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்….

தொடர்ந்து பயணிப்போம்

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


40 கருத்துகள்:

 1. தொடக்கமே... பக் பக் ஸூப்பர் ஜி
  ஆவலுடன் நானும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 2. படங்கள் அழகோ அழகு ஐயா
  அடுத்தப் பகுதிக்காகக் காத்திருக்கிறேன்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   நீக்கு
 3. கண் நிறைவான படங்கள்.. அழகு.. அருமை..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு

 5. சாரி மூன்றாவது படம் அட்டகாசம் என்பதற்கு பதில் முதல் படம் என்று சொல்லிட்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரவாயில்லை. உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 6. படங்களை பார்க்கும் போது அதில் உங்களின் ரசனை தெரிகிறது அழகான ரசனை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 7. படங்களை பார்க்கும்போதே அங்க போகனும்ம்ன்னு ஆவல் தூண்டுதுண்ணே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போயிட்டு வாங்க சகோ!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 8. ஆரம்பமே ஸஸ்பென்ஸ் ஆக இருக்கிறதே. தர்மஷாலாவை காணக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
  2. தரம்சாலாவா ,தர்ம சாலாவா என்று சரியாக சொல்லுங்கள் ,ஏன்னா ,அதுக்கு ஏற்ற மாதிரி நானும் தயாராகணும் ஜி :)

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. படங்கள் அட்டகாசம். முதல் படத்திலிருக்கும் வீட்டின் பின்புறம் அதலபாதாளம்!

  நான்காம் படத்தின் பாலம்! முதுகு சில்லிடுகிறது! ஆரம்பமே சஸ்பென்ஸுடனா! தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சம் பள்ளம் தான் வீட்டின் அந்தப் பக்கம்! வீடு பூட்டி இருந்தது.

   பாலம் - அப்படி நிறைய உண்டு ஏரிக்குப் போகும் பாதையில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   நீக்கு
 12. எல்லா படங்களும் பார்க்க பார்க்க அழகா இருக்கு , நீங்கள் பேருந்து ஏறி பயணிக்க காத்திருக்கிறோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   நீக்கு
 13. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thulasidharan V Thillaiakathu has left a new comment on your post "தரம்ஷாலா, ஹிமாச்சல் பிரதேசம் – இரண்டாம் தலைநகரம்":

   வாவ்! வெங்கட்ஜி அருமையான படங்கள்! அத்தனையும் மிக மிக நீங்கள் ரசித்து எடுத்திருக்கிறீர்கள். சூப்பர்ப்! இன்னும் அழகான படங்கள் வெளிவரும்!! தொடர்கிறோம்.. 3, 5 ஹெம ஆங்கிள்!!! ஏதோ பள பள இதழ்களில் வெளிவரும் புகைப்படங்கள் போல இருக்கு. ஐந்தாவது படத்தில் நீர் அந்தமான் நிக்கோபார் கடலின் கலர் போன்று இருக்கு..க்ரிஸ்டல் க்ளியர்..

   கீதா: மெற் சொல்லப்பட்ட கருத்துடன், ஜி எனக்கும் ஹிமாச்சல் இன்னும் போக வேண்டும் என்று உண்டு அத்தனை அழகான மாநிலம்.

   நீக்கு
  2. தவறுதலாக சில கருத்துகள் அழிக்கப்பட்டன. என்னுடைய மின்னஞ்சலிலிருந்து எடுத்து பகிர்ந்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 14. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. G.M Balasubramaniam has left a new comment on your post "தரம்ஷாலா, ஹிமாச்சல் பிரதேசம் – இரண்டாம் தலைநகரம்":

   கிரிக்கட் விளையாட்டால் தர்ஷாலா அறி முகம் பேரூந்து வரும் வழியாகைருகலாம் வரும்போது தொத்திக் கொள்ள வேண்டுமோ

   நீக்கு
  2. தவறுதலாக சில கருத்துகள் அழிக்கப்பட்டன. என்னுடைய மின்னஞ்சலிலிருந்து எடுத்து பகிர்ந்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 15. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Anuradha Premkumar has left a new comment on your post "தரம்ஷாலா, ஹிமாச்சல் பிரதேசம் – இரண்டாம் தலைநகரம்":

   முதல் படம் கொள்ளை அழகு...

   வீட்டை முன் கொண்டு..பின்னோடு மலைகள் உள்ள படங்கள் எப்பொழுதுசுவை சேர்ப்பவை...


   தரம்ஷாலா வை...தருமசாலா என நினைத்து படிக்க ஆரம்பித்தேன்..

   நீக்கு
  2. தவறுதலாக சில கருத்துகள் அழிக்கப்பட்டன. என்னுடைய மின்னஞ்சலிலிருந்து எடுத்து பகிர்ந்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 16. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha Sambasivam has left a new comment on your post "தரம்ஷாலா, ஹிமாச்சல் பிரதேசம் – இரண்டாம் தலைநகரம்":

   அடுத்ததை முன்னாடியே படிச்சுட்டேன். தர்ம்ஷாலாவும் பார்க்கணும்னு ஆசை. தலாய்லாமாவைப் போய்ப் பார்த்தீங்களா?

   நீக்கு
  2. தவறுதலாக சில கருத்துகள் அழிக்கப்பட்டன. என்னுடைய மின்னஞ்சலிலிருந்து எடுத்து பகிர்ந்திருக்கிறேன்.

   தலாய் லாமா - நாங்கள் சென்றபோது அங்கே இல்லை. ஏதோ சுற்றுப்பயணம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   நீக்கு
 17. எனக்கும் ஹிமாச்சல் ப்ரதேஷ் ரொம்பப் பிடிக்கும். ஒன்லி கோடை. இப்பதான் தொடரை வாசிக்க ஆரம்பிச்சேன். படங்களைப் பத்தி ஒன்னும் சொல்றதுக்கில்லை...

  அட்டகாசமா இருக்கு.!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....