சனி, 28 அக்டோபர், 2017

சற்றே இடைவெளிக்குப் பிறகு….
அன்பின் நண்பர்களுக்கு,

வணக்கம். நலமா?


பதிவுகள் எழுதுவதில் அவ்வப்போது சுணக்கம் வருவதுண்டு. இரண்டு மூன்று தினங்கள் பதிவுகள் எழுதாமல் விட்டதுண்டு. சில சமயங்களில் 15-20 நாட்கள்! பதிவு எழுத ஆரம்பித்த பிறகு, ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும், இவ்வளவு பெரிய இடைவெளி இதுவரை இருந்ததில்லை! 16 செப்டம்பர் எழுதிய பதிவுக்குப் பிறகு நேற்று வரை பதிவுகள் எழுதவில்லை! திங்கள் முதல் அடுத்த பயணத்தொடர் ஆரம்பிக்கும் எனச் சொல்லி, முன்னோட்டமாக படங்களும் வெளியிட்ட பிறகு, சொன்னபடிச் செய்யாமல் இத்தனை நாட்கள் இடைவெளி! பல சமயங்களில், செய்கிறேன் எனச் சொல்வதைச் செய்யமுடிவதில்லை! சொல்வதைச் சொல்லிவிட்டு அது போல செய்யமுடியாவிட்டால் கொஞ்சம் மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது! இருக்கட்டும்!

தமிழகப் பயணம், சில வேலைகள், முடிக்க வேண்டிய சில கடமைகள் என ஏதோ ஒன்று காரணமாக இருந்தாலும், பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணமும் வரவில்லை. தலைநகர் திரும்பிய பிறகும் பதிவுகள் ஒன்றும் எழுதப் போவதில்லை என்று கூட வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தேன்! [சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டேன் என்பதையும் சொல்லி விடுகிறேன்! - உங்களுக்கு இருக்கும் ஒரே பொழுது போக்கு அது மட்டுமே, அதையும் விடப் போகிறீர்களா? அப்பப்ப இப்படி ஏதாவது முறுக்கிக்க வேண்டியது!] தலைநகர் திரும்பி சில நாட்களுக்குப் பிறகும் பதிவுகள் வெளியிடவில்லை. வீட்டைச் சுத்தம் செய்வது, அலுவலக வேலைகள், என கொஞ்சம் பிசி! சரி சொன்ன சொல்லை இப்போதாவது காப்பாற்ற வேண்டும் எனத் தோன்றியதால், அடுத்த பயணத் தொடருக்கான பதிவுகளை எழுதத் துவங்கி இருக்கிறேன். வரும் நாட்களில் வெளியிடுகிறேன்.

இந்த இடைப்பட்ட நாட்களில் சில ஸ்வாரஸ்யமான அனுபவங்கள், சில ஒரு நாள் பயணங்கள், சந்தித்த மனிதர்கள், நவராத்ரி/தீபாவளிக் கொண்டாட்டம், நீர் நிறைந்த அகண்ட காவிரியில் ஒரு உல்லாசக் குளியல் என நிறையவே பதிவு எழுத விஷயங்கள் கிடைத்தன. கூடவே நல்லதொரு ஓய்வு! இப்போதெல்லாம், இப்படி எந்த வேலையும் இல்லாமல் உண்பதும், உறங்குவதும், அரட்டை அடிப்பதுமாக இருப்பது பிடித்திருக்கிறது! கிடைத்த சில அனுபவங்களை, பயணப் பதிவுகளுக்கு நடுநடுவே அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.  சரி எழுதத் தான் இல்லை, மற்ற நண்பர்களின் பதிவுகளையாவது படித்து இருக்கலாம்! அதுவும் இல்லை! பதிவுலகம், முகநூல் என இரண்டிலுமே உலா வரவில்லை! அவ்வப்போது சில WhatsApp தகவல்களை பார்த்ததோடு சரி!

இந்த இடைவெளியில் பதிவுகளே வரவில்லையே என என்னைப் பற்றி நினைத்த, மின்னஞ்சல், WhatsApp, முகநூல் மூலம் விசாரித்த அனைத்து நட்புக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. தொடர்ந்து நட்பில் இருப்போம்…

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

47 கருத்துகள்:

 1. தீபாவளி சமயம்பலகாரம் செய்ய வீட்டம்மாவிற்கு உதவியதால்தான் நீங்கள் பதிவு எழுதாதற்கு காரணம் என்று அல்லவா ரூமர் வந்துச்சு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓஹோ இப்படி கூட ரூமர் உண்டா! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 3. ம்ம்ம்ம்ம், இத்தனை நாட்கள் இருந்துட்டு எங்க வீட்டுக்கு வராமலேயே போயாச்சு! நாங்களும் அடுத்தடுத்து ஏதேதோ பிரச்னைகள், வேலைகள்னு இருந்ததால் கூப்பிட முடியவும் இல்லை! இதிலேயாவது பார்க்க முடிஞ்சது! :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வீட்டுக்கு வர இயலவில்லை - ஏதேதோ வேலைகள்... ஆனால் உங்கள் எங்கள் வீட்டில் சில நிமிடங்கள் சந்தித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 5. மீண்டும் புத்துணர்வுடன் பதிவுகள் எழுத வாழ்த்துகள் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 6. வருகை கண்டு மகிழ்ச்சி. பதிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 8. தங்களுக்கு அன்பின் நல்வரவு..
  காவிரிக் குளியலில் கிடைத்த சுறுசுறுப்பு இன்னும் பற்பல பதிவுகளுக்கு ஊக்கம் தரும்..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 9. உங்கள் பயண அனுபவங்கள் படிக்க ஆவலுடன் வெயிட்டிங்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 11. எங்களை விட்டு ஓடிப்போக முடியுமா?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 13. நானும் அப்படியே
  நானும் தொடரனும்
  உங்க்கள் அடுத்த பதிவை எதிர்பார்த்து
  ஆவலுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 14. ஆயிரம்காரணங்கள் இருந்தாலும் பதிவு எழுதப் போவதில்லை என்னும் எண்ணத்தைமாற்றிய உங்கள் துணைவியாருக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 15. பழபோண்டா சாப்பிடும்போது உங்க ஞாமகம் வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா பழ போண்டா என்னை நினைக்க வைத்திருக்கிறதே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி vic!

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாவி அதிரா.

   நீக்கு
 17. வாருங்கள் வாருங்கள்
  பயணப் பதிவுகளையும்
  ஓவியங்களாய் படங்களையும்
  அள்ளி அள்ளித் தாருங்கள் என
  தங்களைஅன்போடு வரவேற்கிறோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 18. வருக! வருக!! சுவையான அனுபவங்களைத் தருக! தருக!! என கேட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 19. நினைப்பேன் காணவில்லையே என்று தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 20. வாங்கோ! வாங்கோ! Waiting for your beautiful photos and of course interesting write ups

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   நீக்கு
 21. வலைப்பக்கம் மீண்டும் வந்தமைக்கு நன்றி. தயவு செய்து தொடர் பதிவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சிலசமயம் விட்டுப்போன பதிவுகளை படித்து விட்டு தொடரலாம் என்று இருக்கையில் நாட்கள் ஓடி விடுகின்றன. அப்புறம் அந்த தொடரே விட்டுப் போய் விடுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தொடர் பதிவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.//

   இப்போதெல்லாம் பயணத் தொடர் மட்டுமே எழுத முடிகிறது. நேரம் எடுத்து மற்ற பதிவுகளும் எழுத முயற்சிக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   நீக்கு
 22. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Anuradha Premkumar has left a new comment on your post "சற்றே இடைவெளிக்குப் பிறகு….":

   வாங்க...வாங்க...

   அழகிய படங்களுன் பதிவுகளை காண ஆவல்....

   நீக்கு
  2. தவறுதலாக சில கருத்துகள் நீக்கப்பட்டன. மின்னஞலிலிருந்து அவற்றை மீண்டும் பதிவிட்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....