வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

ஃப்ரூட் சாலட் – 10 – டபுள் டெக்கர் – இளவரசி டயானாஇந்த வார செய்தி:  தில்லியின் சராய் ரோஹில்லா ரயில் நிலையத்திலிருந்து ஜெய்பூருக்கு புதிதாக இரண்டடுக்கு ரயில் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.  சாதாரணமாக ஷதாப்தி வண்டிகளில், ஒரு பெட்டியில் 78 இருக்கைகள் இருக்கும்.  இந்த புதிய வண்டியில் 120 இருக்கைகள்.  12 குளிரூட்டப்பட்ட பெட்டிகள் உள்ள இந்த இரண்டடுக்கு ரயில் தில்லியிலிருந்து பிரதி தினமும் மாலை 05.35 மணிக்குக் கிளம்பி இரவு 10.05 மணிக்கு ஜெய்ப்பூர் சென்றடையும்.  அதே போல தினமும் காலை 06.00 மணிக்கு ஜெய்ப்பூரில் இருந்து கிளம்பி 10.30 மணிக்கு தில்லி வந்தடையும். 


[வெளிப்புறத் தோற்றம்]


[உட்புறத் தோற்றம்]
[படங்கள் உதவி:  கூகிள் இருக்க பயமேன்!]


தில்லிக்கும் ஜெய்ப்பூருக்கும் இடையே இருக்கும் 300 கிலோ மீட்டர் தூரத்தினை நான்கரை மணி நேரத்தில் கடக்கும் இந்த வண்டியில் செல்ல நீங்கள் தரவேண்டியது வெறும் 327/- மட்டுமே.

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இவ்வண்டி தயாரிக்கப்பட்டது பஞ்சாப் மாநிலத்திலுள்ள கபூர்தலாவில்.  இந்த வண்டியின் ஒரு பெட்டி தயாரிக்க ஆகும் செலவும் ரொம்பவே கொஞ்சம் தானாம்  – அதாவது மூன்று கோடி! சாதாரண குளிரூட்டப்பட்ட பெட்டி தயாரிக்க இதில் பாதி தான் ஆகுமாம்!

இந்தியாவில் ஏற்கனவே ஹௌராவிலிருந்து [D]தன்பாத்[dh] வரைக்கும் இந்த இரண்டடுக்கு ரயில் இருந்தாலும் எங்கள் ஊருக்கும்  வந்திருப்பதில் மகிழ்ச்சியே.  சீக்கிரமே இந்த வண்டியில் பயணம் செய்து ஜெய்பூர் போனாலும் போவேன். போய் வந்தால் நிச்சயம் அதைப் பற்றிய ஒரு பகிர்வு உண்டு!இன்னிக்கு தேதி 31 ஆகஸ்ட்…  1997-ஆம் வருடம் இதே நாளில் தான் ஒரு சோகமான விஷயம் நடந்தது.  டயானாவைத் தெரியாத ஆள் ஏது?  அதாங்க நம்ம இங்கிலாந்து இளவரசி டயானா.  இந்நாளில் தான் அவரது துணைவர் டோடி ஃபாயேத் என்பவருடன் காரில் பயணம் செய்யும்போது பாப்பராசி புகைப்படக்காரர்கள் துரத்தியதால் வேகமாகச் சென்று விபத்துக்குள்ளாகி இறந்து போனார். அவரது மரணம் இப்போது நினைத்தாலும் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது.

நாக்கில் எலும்புகள் இல்லை.  ஆனால் ஒரு இதயத்தினை சுக்கு நூறாக உடைக்கும் அளவிற்கு பலமானது நாக்கு.  ஆகையால் கவனமாக பேசுங்கள்.
இறந்த பிறகு, எல்லோரையும் தத்தமது தவறுகளை ஒரு காகிதத்தில் எழுதச் சொன்னார் கடவுள். சில நொடிகளுக்குப் பிறகு ஒருவர் சத்தமாகக் கேட்டது -   “மச்சி, பேப்பரைத் தூக்கி காமி”.  நண்பேண்டா!...
எக்மோர் ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது பக்கத்தில் ஒரு கணவன், மனைவி அவரது கைக்குழந்தை.  கூடவே ஒரு பெரியவர். 

பெரியவர்: “குழந்தையும் இவளையும் எதுக்கு கூட்டிட்டு வந்தே…. சின்னப் புள்ளைய தூக்கிட்டு வராதேன்னு சொல்லி இருந்தேனே?” 

அதுக்கு கணவன் சோகமா சொன்ன பதில் – “நான் வேண்டாம்னு தான் சொன்னேன்.  இவ தான் நான் வரலைன்னா நல்லா இருக்காது, நானும் வரேன்”னு வந்தா.  உங்க ரெண்டு பேர் கிட்ட நான் மாட்டிட்டு உதை படறேன் - ஃபுட்பால் மாதிரி!”

கேட்டுட்டு சிரிக்கறதா அழறதா தெரியல – மனுஷன் மிகவும் நொந்து போயிருக்கார் போல!

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்களின் ‘காசளவு நேசம்’ என்ற தொடர் தொலைக்காட்சியில் வந்தது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம்.  அதில் ஒரு சிறிய பகுதி – குழந்தைகளுக்கான ”ட்விங்கிள், ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்” கர்நாட்டிக், கன்னடம், மலையாளம், பஞ்சாபி என்று விதவிதமாய் பாடி இருப்பார் ரேவதி சங்கரன்.  அதன் காணொளி உங்களுக்காக – ரசிப்பீர்கள் என்ற நினைப்புடன்!  வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

புதன், 29 ஆகஸ்ட், 2012

கல்யாணம்… ஆஹாஹா கல்யாணம்…கல்யாணம்… ஆஹாஹா கல்யாணம்… அப்படின்னு ஒரு பழைய பாட்டு கேட்டு இருக்கீங்களா? கேட்கலைன்னா இப்ப கேளுங்க! அது சரி… இப்ப எதுக்கு இந்தப் பாட்டுன்னு கேட்கறீங்களா? கல்யாணம் எத்தனை வகைன்னு நேற்று படித்தேன். அது பற்றிய பகிர்வு இது. இது எங்க பார்த்தேன்னு கேட்கறதுக்கு முன்னாடி என்னன்னு பார்த்துடுவோமே!


திங்கள், 27 ஆகஸ்ட், 2012

மகத் எக்ஸ்ப்ரஸில் ஒரு பயணம்

திரிவேணி சங்கமம்காசி பயணம்பகுதி 1[வாரணாசி - பட உதவி : கூகிள்]இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு அலுவலகம் செல்ல விருப்பமில்லாதிருக்கும் ஒரு திங்கள் கிழமைகேரளத்திலிருக்கும் நண்பரிடமிருந்து   “சாரேஅலஹாபாத்-ல் ஒரு பணியுண்டு. அங்கே போகணும். நீங்களும் கூட வாங்கோ சாரேஎன்று மலையாளமும் தமிழும் கலந்த அழைப்பு அலைபேசியில்.  அவருக்கு அலஹாபாத்காசி இரண்டு இடங்களிலும் வேலையிருந்ததால், 28-29, ஜூலை அன்று அலஹாபாத் - காசி செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு.

பல நேரங்களில் ஒழுங்காக வேலை செய்யாத www.irctc.co.in தளத்தை மேய்ந்ததில் அலஹாபாத் செல்ல எந்த ரயிலிலும் பயணச் சீட்டு இல்லைஎல்லாமே Waitlisted.  இது வேலைக்கு ஆவாதுன்னு வெள்ளி அன்று செல்வதற்கு வியாழன் அன்று காலை 10 மணிக்குதத்கால்மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்தேன்

புது தில்லியிலிருந்து பீஹார் மாநிலத்தில் உள்ள இஸ்லாம்பூர் என்ற இடம் வரை செல்லும் 12402 மகத் எக்ஸ்பிரஸ்-ல் தான் பயணச்சீட்டு கிடைத்தது.  இரவு 08.10-க்குக் கிளம்பும் இந்த ரயில் அலிகர், டுண்ட்லா [பயணத்தின்போது இதன் அருகே இருக்கும்ஏடா” [Etah] எனும் இடத்திற்குச் சென்று வந்த அனுபவங்களை நினைத்துக் கொண்டேன்], ஃபிரோசாபாத், ஷிகோஹாபாத், இடாவா, கான்பூர், வழியாக அடுத்த நாள் காலை 05.10 க்கு 634 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் அலஹாபாத் [இலாஹாபாத் என்றும் இவ்விடத்தைச் சொல்கிறார்கள்] சென்றடைகிறதுவழக்கம்போலவே ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக 07.15 மணிக்கு செல்ல, எங்களை [என்னையும் கேரளத்திலிருந்து வந்திருந்த மூன்று நண்பர்களையும்] அலஹாபாத் இருகரம் கூப்பி வரவேற்றது.

நமக்குப் பிடித்த ஏதாவதொரு காய், இலை போன்றவற்றை உபயோகிப்பதை காசியிலேயே விட்டு விடவேண்டுமென பெரியவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்அங்கு போவதற்கு முன்னரேவெட்கத்தினை விட்டுவிடுஎனச் சொல்வது போல, மகத் எக்ஸ்பிரஸின் கழிவறைகளில் தாழ்ப்பாளே இல்லைஎப்போது தான் இவர்கள் ரயில்களையும், நிலையங்களையும் சரியாகப் பராமரிக்கப்போகிறார்களோ தெரியவில்லை!


[திரிவேணி சங்கமத்தில் குளிக்கும் பக்தர்கள்]


அலஹாபாத் நகரத்தில் இரண்டு மூன்று பெரிய ரயில்வே நிலையங்கள் இருக்கின்றனஅதில் அலஹாபாத் ஜங்ஷன் என்ற இடத்தில் இறங்கி வெளியே வந்தால் நிறைய தங்குமிடங்கள் இருக்கின்றனசெல்வதற்கு முன்னரே இந்த ஊரைச் சேர்ந்த வட இந்திய நண்பரிடம் சொல்லி ஏற்பாடுகள் செய்து விட்டோம்அவர் ஏற்பாடு செய்திருந்த தங்குமிடம் வெகு அருகிலேயே இருந்தது

ரயில் நிலையத்திலிருந்து வெளியில் வந்து வடக்குப் பக்கத்தில் நின்றிருந்த ரிக்ஷாக்களில் ஒன்றில் ஏறி   தங்குமிடம் சென்றோம்இரண்டு பேர் உட்கார்ந்து செல்ல கட்டணம் வெறும் ஐந்து ரூபாய் மட்டுமேநாங்கள் பத்து ரூபாய் கொடுத்துவிட்டோம் – “இரண்டு 85 கிலோ தாஜ்மகால்” அமர்ந்து சென்றால் அவருக்குக் கஷ்டம் தானேஐந்து ரூபாய் தானே கேட்டேன், பத்து ரூபாய் வேண்டாமென அவர் சொல்ல, வற்புறுத்தி வைத்துக் கொள்ளச் சொன்னோம்ஆசையில்லாத மனிதர்

ஹோட்டல் பிரயாக்-ல் எங்களுக்கு பதிவு செய்திருந்த அறையில் சென்று தயாராகி, நண்பரின் வேலையை முடித்துக் கொண்டபிறகு ஒரு டாடா இண்டிகோ வாகனத்தினை வாடகைக்கு அமர்த்திக்கொண்டோம். அலஹாபாத் நகரத்திலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது காசி, பனாரஸ் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் வாரணாசிமாலையிலேயே எங்களுடன் வந்திருந்த இரண்டு நண்பர்களுக்கு தில்லி திரும்ப வேண்டியதால் விரைவாகச் சென்று மாலைக்குள் அலஹாபாத் திரும்பவேண்டும்அதனால் தான் வாகனம் அமர்த்திக்கொண்டுவிட்டோம்
[வாரணாசி - “G"காட் - ஒரு பார்வை]அலஹாபாத் நகரத்திலிருந்து வாரணாசி வரை செல்ல நிறைய ரயில்களும், பேருந்துகளும் இருக்கின்றனபேருந்துகள் நமது ஊரைப் போல சுத்தமாகவெல்லாம் இருக்காதுமழை பெய்து பேருந்துகளின் பக்கங்களில் படும் சேறு சகதியெல்லாம், அடுத்த மழையில் தான் சுத்தமாகும்.  பயணிகளும் பான் போட்டு, பின் இருக்கையில் இருப்பவர்களுக்கு அபிஷேகம் செய்தபடியே வருவார்கள்அதனால் வாடகை வாகனம் தான் சரியெனப்பட்டது!

பயணத்தின் போது கிடைத்த இனிய அனுபங்கள், பார்த்த காட்சிகள், சுவைத்த உணவு போன்ற விஷயங்களோடு அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.