புதன், 8 ஆகஸ்ட், 2012

கண் திருஷ்டி பொம்மை செய்பவருடன் ஒரு உரையாடல்
[தயாராகும் திருஷ்டி பொம்மைகள்...]ஊர்களில் வீடுகள் மற்றும் கடைகளில் கண் திருஷ்டி பொம்மை அல்லது கண்ணேறு பொம்மைகள் தொங்கவிடப்படுவதை நாமெல்லாம் பார்த்திருப்போம்.  பார்ப்பதற்கு அசுரர்கள் [] அரக்கர்கள் போல இருக்கும் இந்தப் பொம்மைகளை வீட்டு வாசலிலோ, புதிதாய் கட்டப்படும் கட்டிடங்களின் வெளிப்பக்கத்திலோ கட்டி வைத்தால் தீய சக்திகளிலிருந்தும், தீய நோக்கோடு பார்ப்பவர்கள் கண்ணடியிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் என்பது நம்பிக்கை.  


[பட உதவி: கூகிள்]

வட இந்தியாவில் ஓடும் எல்லா வாகனங்களிலும் பின்பக்கம் வாகனத்தின் பதிவு எண் எழுதியிருக்கிறதோ இல்லையோ நிச்சயமாகபுரி நசர் வாலே தேரா மூ காலாஎன எழுதியிருக்கும்.  

இப்படி கண் திருஷ்டிக்காகக் கட்டப்படும் பொம்மைகள் எங்கே செய்யப்படுகிறது, அவர்களுக்கு என்ன வருமானம் கிடைக்கும் என்பது பற்றி என்றைக்காவது தோன்றியிருக்கிறதா நமக்கு? இவர்களைப் பற்றி நிச்சயம் யாருமே நினைத்திருக்க மாட்டோம்!  


[குலதெய்வம் கோவில் கோபுரம் - 1]
[ குலதெய்வம் கோவில் கோபுரம் - 2 ]


எங்களது குலதெய்வம் கோவில் விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அய்யூர் அகரம் என்ற இடத்தில் இருக்கிறது.  இந்த ஊர் திருஷ்டி பொம்மைகள் மற்றும் பெரிய பெரிய பிள்ளையார் பொம்மைகள் செய்வதில் பெயர் பெற்றது.  பிள்ளையார் சதுர்த்தியின் போது மும்பை நகரத்திற்கு இங்கிருந்துதான்   பெரிய பெரிய பிள்ளையார் பொம்மைகள் போகிறது.  நாம் இங்கே பிள்ளையாரை கவனிக்கப் போவதில்லை

கடந்த மே மாதம் கோவில் கும்பாபிஷேகத்திற்காக அங்கு சென்றிருந்த போது அங்கே ஒரு கூரை வீட்டின் முன் திருஷ்டி பொம்மைகள் செய்து வாசலில் காய வைத்திருந்தார்கள்.    அதன் அருகில் உட்கார்ந்து காய்ந்த பொம்மைகளுக்கு வண்ணம் பூசிக்கொண்டிருந்தனர் ஒரு தம்பதியினர்.  அந்த பொம்மைகளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, அந்த அம்மா என்னைக் கேட்டார்ஏங்க, என்னமோ நாங்க செஞ்ச பொம்மையெல்லாம் படம் பிடிக்கிறீங்களே, எங்களையெல்லாம் படம் பிடிக்க மாட்டீங்களோ?”.


[எங்களையெல்லாம் படம்புடிக்க மாட்டீங்களா?]

அதுக்கென்னமா படம் பிடிச்சுட்டா போச்சுஎன்று சொல்லி காமிராவில் கிளிக் செய்து கொண்டே அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.  

நான்: “ஏம்மா, இந்தப் பொம்மைகளை விழுப்புரம் சென்று விற்று வருவீர்களா?”

பொம்மை செய்யும் பெண்மணி:  நாங்க செய்யறதோட சரி. இங்கேயே வந்து வாங்கிட்டு போக ஒரு ஏசண்டு [Agent] இருக்காரு.  அவர் வாரம் ஒருக்க வந்து வாங்கிட்டு போவாரு.

நான்: ஒரு நாளைக்கு எத்தனை பொம்மை செய்வீங்க?

பொ.செ.பெ:  அப்படி கணக்கெல்லாம் கிடையாது. முதல்ல பொம்மைகளை வார்த்து எடுத்து வைப்போம்.  அது காய்ந்த பின்னாடி, அதுக்கு வெள்ளை வண்ணம் அடிப்போம். அதை காய வெச்சு, கலர் கலரா கண், நாக்கு எல்லாம் பெயிண்ட் அடிப்போம்.  ஒரு வாரத்துல 100 – 200 பொம்மைகள் வரைக்கும் செய்வோம்.  

நான்:  ஒரு பொம்மை வித்தா உங்களுக்கு எவ்வளவும்மா கிடைக்கும்?

பொ.செ.பெ.: அப்படி ஒண்ணும் பெரிசா கிடைக்காதுங்க.  ஒரு பொம்மைக்கு லாபம் இரண்டு ரூபாய் கிடைச்சா பெரிசு.  வாரம் முழுக்க பொம்ம செஞ்சா முன்னூறு நானூறு ரூபாய் லாபம் கிடைக்கும். அதை வைச்சு தான் பொழப்பு ஓடுது.  மழைக்காலங்களில் பொம்மை செய்யறது கஷ்டம்.  காயாது.  அந்த மாதிரி நாட்களில் கூலி வேல செய்யப் போயிடுவோம்.  வெளி ஊருக்கு விக்கறதுக்கு போனா கூடுதலா கொஞ்சம் காசு பார்க்கலாம்தான் . ஆனா பொம்மை செய்ய முடியாது.  தம்பி உங்க வீட்டுக்கு ஒரு பொம்மை வாங்கிட்டு போங்களேன்.  

தேவை இல்லையெனிலும் அவர்களிடம் இரண்டு கண் திருஷ்டி பொம்மைகள் வாங்கி வந்தேன்.  பழைய பேப்பரில் அழகாய் பொதிந்து சணல் கொண்டு கட்டிக் கொடுத்தார்கள்.  நன்றி கூறி திரும்பினேன்.  

இவர்களுக்கும் வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.  

அடுத்த பதிவினில் சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

65 கருத்துகள்:

 1. நல்ல பகிர்வு.
  புகைப்படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  //வெளி ஊருக்கு விக்கறதுக்கு போனா கூடுதலா கொஞ்சம் காசு பார்க்கலாம்தான் . ஆனா பொம்மை செய்ய முடியாது//

  ஏழை தொழிலாளிகளின் கஷ்டம் இது தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் புகைப்படங்களை ரசித்ததற்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
  2. இவர்களுக்கும் வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது

   படங்களுடன் பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள் !

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி.

   நீக்கு
 2. அருமை!!!

  வட இந்தியாவில் முக்கியமா நெடும் பயணம் போகும்போது பெரிய ட்ரக்குகளில் எழுதி இருக்கும் இந்த புரி நஸர் வாலா தேரி மூஹ் காலா கவனிப்பது ஒரு டைம்பாஸா இருந்துச்சு:-))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் இந்தப் பழக்கம் உண்டு. எந்தந்த வாகனத்தில் என்ன எழுதி இருக்கிறது எனப் பார்த்துக் கொண்டே வருவேன். சிலர் ரசனையாக எழுதி இருப்பார்கள். ஒரு சர்தார்ஜி ஓட்டிய லாரியின் பின்புறம் எழுதி இருந்தது ரொம்பவே குழப்பியது. பிறகு தான் புரிந்தது அவர் என்ன சொல்லவரார் என? :)

   என்ன எழுதி இருந்தது? 10 13 9 की A? :) படிப்பவர்களுக்குப் புரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.... :)))

   நீக்கு
 3. அருமை ! இவர்கள் (அ)சாதாரண மனிதர்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.... மோகன் நிச்சயம் நல்ல மனிதர்கள்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.

   நீக்கு
 4. எத்தனையோ குடிசைத் தொழிலாளர்களில் இவர்களும் ஒருவர்..
  நலிந்த நிலையில் இருப்பினும் தங்களின் கலையை
  உயிர்மூச்சாய் கொண்டு வாழ்பவர்கள்...

  நல்ல பதிவு நண்பரே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நலிந்த நிலையில் இருப்பினும் தங்களின் கலையை
   உயிர்மூச்சாய் கொண்டு வாழ்பவர்கள்...//

   உண்மை நண்பரே.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. இல்லை டீச்சர். இன்னும் காத்திருக்கிறேன். யாராவது சரியான பதில் சொல்றாங்களான்னு பார்க்கலாம்... :)

   நீக்கு
 6. தஸ் தேரா நோ(க்)கியா?...

  புரியலை. நீங்களே சொல்லிருங்க வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிட்டத்தட்ட சரியா வந்துட்டீங்க... “தஸ் தேரா நா கி ஏ” பஞ்சாபியில் உன் பெயர் என்ன? என்று கேட்கிறார் சர்தார்ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுகளுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 7. கிளிக்கிய நேரத்தில் ஒரு நேர்முகம் எடுத்த பெருமை உங்களையே சாரும்... ஆம் அவர்கள் வாழ்கையும் ஓடிக் கொண்டு தான் உள்ளது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கிளிக்கிய நேரத்தில் ஒரு நேர்முகம் எடுத்த பெருமை உங்களையே சாரும்... //

   அடடா... :)))

   தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சீனு.

   நீக்கு
 8. சில வீடுகளின் ஓனர் போட்டோவையே வீட்டு வாசலில் திருஷ்டி பொம்மைக்குப் பதிலாக மாட்டி விடலாமா என்று தோன்றும். அப்படி முசுடுகளும் உண்டு. ஒரு பொம்மைக்கு இரண்டு ரூபாய் கிடைத்தால் பெரிசு என்ற வார்த்தைகள் மனதை தைத்தன. இவ்வளவு உழைப்பிற்கு கிடைக்கும லாபம் மிகக் குறைவுதான். என்ன செய்ய... இரக்கமற்ற உலக வாழ்க்கை. இப்படியொரு வாழ்வை அறியத் தந்த உங்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சில வீடுகளின் ஓனர் போட்டோவையே வீட்டு வாசலில் திருஷ்டி பொம்மைக்குப் பதிலாக மாட்டி விடலாமா என்று தோன்றும். அப்படி முசுடுகளும் உண்டு. //

   :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   நீக்கு
 9. இவர்களை பேட்டி எடுத்து பதிவாக்கித் தந்தமைக்கு பாராட்டுக்கள்...

  செய்யும் தொழிலை சிறப்பாக செய்பவர்கள்...

  இவர்களைப் போல் (பல தொழில்களை) செய்பவர்களிடம் இருந்து பலவற்றை நாம் கற்றுக் கொள்ள முடியும்...

  /// இவர்களுக்கும் வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. ///

  பல பேர்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.. நன்றி சார்..

  நன்றி… தொடர வாழ்த்துக்கள்... (T.M. 8)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இவர்களைப் போல் (பல தொழில்களை) செய்பவர்களிடம் இருந்து பலவற்றை நாம் கற்றுக் கொள்ள முடியும்...//

   உண்மை தனபாலன்.

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. பதிவை படிக்கும் போதே எங்கள் ஊரில் இருக்கும் சிறு தொழிளாலர்கள் நினைவு வந்து விட்டது தொழிலை விடாது பிடித்துக்கொண்டு இருக்கும் அவர்களின் நிலை உயருமா என்ற கேள்விக்குறியுடன் ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தொழிலை விடாது பிடித்துக்கொண்டு இருக்கும் அவர்களின் நிலை உயருமா என்ற கேள்விக்குறியுடன் ....//

   சந்தேகம் தான் சகோ.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஜி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி.

   நீக்கு
 14. நல்ல அருமையான களப்பதிவு

  பாமரர்களின் வாழ்க்கையை அதன் எதார்த்தத்தை பதிவு செய்து இருக்கிறீர்கள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹைதர் அலி.

   நீக்கு
 15. ச்சே... இவ்வளவு மெனக்கிட்டு பொம்மை செய்றவங்களுக்கு ரெண்டு ரூபாதான் லாபம் கிடைக்குமா... ரொம்ம்ப்ப பாவம் இல்ல? அதுலயும் மழைக்காலத்துல தொழில் இருக்காதுன்றது இன்னும் கொடுமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிரஞ்சனா. நீண்ட நாட்களாக நம்ம பக்கம் காணலையே...

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் தமிழ்மணம் வாக்கிற்கும் மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.

   நீக்கு
 17. கண்ணேறு பொம்மை விற்பவர் பற்றி நான் ஒரு கவிதை எழுதினேன் என் வலைப்பூவில்.
  http://www.esseshadri.blogspot.in/2012/02/blog-post_07.html
  நல்லதொரு பகிர்விக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள பக்கத்தில் பிடித்திருக்கிறேன் என நினைக்கிறேன். மீண்டும் பார்க்கிறேன் நண்பரே..

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு
 18. பதிவும், புகைப்படமும் அருமை.... சாதாரண மனித்ர்கள் பற்றியான அற்புதமான கட்டுரை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.

   நீக்கு
 19. அன்பு நண்பரே

  ஒரு வித்யாசமான பதிவு. நன்றாக ரசிக்கும் படியாக இருந்தது. வாழ்த்துக்கள்.

  10 13 9 की A? மறக்க முடியாத ஒன்று.
  விஜய்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!.

   நீக்கு
 20. மனம் தொட்ட பதிவு. அவர்களுக்காக பொம்மை வாங்கியதும் நெகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 21. நெகிழ்ச்சியான பதிவு. நன்றி வெங்கட் இந்த எளிய மனிதர்களை பேட்டி கண்டதற்கும், உங்களுக்கு தேவையில்லை என்றாலும் இரு பொம்மைகள் வாங்கியதற்கும்....

  மும்பைக்கு இங்கிருந்துதான் பொம்மைகள் போகின்றன என்பது ஒரு புதிய தகவல்...

  த.ம.14

  --பாலஹனுமான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி பால ஹனுமான் ஜி!

   நீக்கு
 22. இவர்களுக்கும் வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. :(

  ந‌ம்மாலான‌து ... தேவையில்லையெனினும் ரெண்டு வாங்கி அவ‌ர்க‌ளின் சிறு வ‌ருமான‌த்துக்கு உத‌வுவ‌து. ஏன்னா, இப்ப‌டி உழைக்க‌ அஞ்சாத‌வ‌ர்க‌ள் இனாமாக‌ த‌ந்தால் த‌ன்மான‌த்துட‌ன் அஞ்சுவ‌ர்... அப்ப‌டித்தானே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // ஏன்னா, இப்ப‌டி உழைக்க‌ அஞ்சாத‌வ‌ர்க‌ள் இனாமாக‌ த‌ந்தால் த‌ன்மான‌த்துட‌ன் அஞ்சுவ‌ர்... அப்ப‌டித்தானே!//

   ஆமாம் சகோ....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   நீக்கு
 23. செய்யும் தொழிலே தெய்வம். குடிசைத்தொழிலில் எத்தனை வகைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 24. புகைப்படத்தை அழகாய் எடுத்ததுடன், அவர்களின் பொருள் தேடும் வாழ்க்கையில் பிரதிபலிக்கும் மெல்லிய சோகத்தையும் பதிவு செய்து விட்டீர்கள் அவர்களுடனான பேட்டியில்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!.

   நீக்கு
 25. இடைத் தரகர்களே லாபம் பார்க்கின்றனர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை கார்த்திக். லாபம் பார்ப்பது இடைத்தரகர்கள்.... கஷ்டப்படுவது இவர்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக்.

   நீக்கு
 26. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ராசன்.

   நீக்கு
 27. 65வது சுதந்திர தின வாழ்த்துக்கள். வெங்கட் ஜீ

  பதிலளிநீக்கு
 28. கிராமம் பெயரும் அழகு. செய்யும் குடிசைத் தொழிலும் அழகு.
  இதற்காக நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியும் அழகு.
  இவ்வளவு நல்ல தொழில் செய்தும் அவர்கள் வாழ்க்கை முன்னேறாததுதான் வருத்தம். நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இவ்வளவு நல்ல தொழில் செய்தும் அவர்கள் வாழ்க்கை முன்னேறாததுதான் வருத்தம்.//

   உண்மை தான். வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 29. அவர்கள் வாழ்க்கையில் எப்போது திருஷ்டி கழியுமோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   நீக்கு
 30. பதில்கள்
  1. விருது பெற்றதை தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!.

   விருது கொடுத்த வை.கோ. ஜி. அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

   நீக்கு
 31. மிக நல்ல தகவல்கள். நல்வாழ்த்து சகோதரா புகைப்படங்களுடன் நன்று.
  சில நாட்களாக இங்கு நான் வரவில்லை. நீங்களும் மறந்து விட்டீர்களா?
  நலம். (ஏதொ தவறிவிட்டது ) பணி தொடரட்டும். வாழ்க!. பரிசுக்கும் வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பத்து தினங்களாக ஊரில் இல்லை. தமிழகம் சென்றிருந்தேன் அதனால் வலைப்பக்கம் வர இயலவில்லை. தொடர்ந்து வருவேன்.

   தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் ஜி.

   நீக்கு
 32. இதுபற்றியெல்லாம் அறவே தெரியாத எங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் தகவல் புகைப்படங்கள் போட்டு பேட்டியை அதிகரித்திருக்கலாம். மிகவும் சுருக்கமாக முடித்துக்கொண்டீர்களே.! தொடருங்கள்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....