அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 31
பகுதி
30 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....
அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்
“அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!
இந்தக் குட்டிச் செல்லத்துக்கு தான் கொலுசு!
தௌலிகிரியில்
அமைந்திருக்கும் ஷாந்தி ஸ்தூபா பார்த்த பிறகு நாங்கள் சென்ற இடம் ஒரு கடை! அந்தக் கடை
புவனேஷ்வர் நகரில் இருக்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ் கிளை! தலைநகர் தில்லியில் இல்லாத நகைக்கடையா?
அதை விட்டு, ஒடிஷா மாநிலத் தலைநகர் புவனேஷ்வர் சென்று நகை வாங்குவீர்களா? என்றெல்லாம்
கேட்பதற்கு முன்னரே பதில் சொல்லி விடுகிறேன்! எங்களுக்காக அங்கே செல்லவில்லை. இரண்டு
நாட்கள் புவனேஷ்வர் நகரில் தங்கி அங்குள்ள இடங்களைச் சுற்றிப் பார்க்கும்போது எங்களுக்கான
வாகன ஏற்பாடு செய்ததோடு, சில வேளைகள் உணவளித்த திருப்பதி தேவஸ்தானத்தின் திருமண மண்டபம்
மற்றும் கோவிலில் பூஜை செய்பவருக்கு ஏதாவது மரியாதை செய்ய வேண்டும் என்பதால் தான் நகைக்கடை
பயணம்! அந்த இளைஞருக்கு ஒரு வயது ஆகப்போகும் சிறு பெண் உண்டு என்பதால், குழந்தைக்கு
ஒரு கொலுசு வாங்கலாம் என நினைத்தோம்! கடைக்குச் சென்றோம்.

