அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நாளொரு நூலும் பொழுதொரு குறும்படமும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
********
வயசு - 30 ஜூலை 2026:
இன்று காலை ஆர்த்தோவிடம் சென்றிருந்தேன்!
என்ன பிரச்சனை? என்று கேட்டுவிட்டு ப்ரிஸ்க்ரிப்ஷனில் எழுதுவதற்காக அவர் என்னிடம் உன் வயசு என்ன? என்று கேட்டு நான் சொல்வதற்கு முன்னர்,
அவராக முப்பத்தி....!!? என்று சொல்ல வருவதற்குள்...
மை மைண்ட் வாய்ஸ்...:)
வாவ்! கேட்க நல்லாத் தான் இருக்கு!
அப்படியா தெரியுது??
என்று வடிவேல் சார் வாய்செல்லாம் காதில் கேட்குது...:)
ஒரு பத்து வருஷத்த குறைச்சு தான் சொல்றார் பாவம்..:) அப்பாவி மனிதராகத் தெரிகிறார்...:)
ஆனா என்ன செய்ய!!! மனதை சமாதானம் செய்து கொண்டு 44 என்றேன்..:)
இன்றைய நாள் இனிய நாள்!
******
ரோஷ்ணி கார்னர் - Still life drawing:
Poster coloursஐ உபயோகித்து மகள் தீட்டியுள்ள ஓவியம்!
*********
Blinkit bag - 03.08.2026:
Blinkit எனக்கு அறிமுகமானது டெல்லியில் தான்! மூன்று வருடங்களுக்கு முன்பு மகளும் நானும் என்னவருடன் சில நாட்கள் இருந்து விட்டு வரச் சென்ற போது அங்கே சமையலுக்கு தேவையான பொருட்களை அவ்வப்போது blinkitல் ஆர்டர் செய்து வாங்கிக் கொண்டோம்! பத்து நிமிடத்தில் டெலிவரி செய்யப்பட்டதும் பொருட்களை திக்கான பேப்பர் பேகில் தந்ததும் எனைக் கவர்ந்தது!
Sanitary pads ஆர்டர் செய்த போது அதனுடன் sampleக்காக Biodegradable padsம் போட்டு தந்திருந்தார்கள்! சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார்கள்! இதைப் பற்றி அப்போதே என் பதிவுகளில் கூட எழுதியிருக்கிறேன்! இப்போது தான் blinkit திருவரங்கத்தில் எங்கள் இல்லம் வரை இந்த செயலி வந்திருக்கிறது!
இந்த மாதத்திற்கான மளிகைப்பொருட்களை இம்முறை blinkitல் தான் ஆர்டர் செய்து வரவழைத்தேன்! இதுவரை திருவரங்க வாழ்வில் 14 வருடங்களாக ஒரே கடை தான்! மாற்றியதே இல்லை! கடையில் லிஸ்ட்டை கொடுத்து விட்டால் டோர் டெலிவரி செய்து விடுவார்கள்! பொருட்கள் தரமாகவும், விலையும் நியாயமாகவும் இருக்கும்!
சரி! எதற்கு இன்று blinkit புராணம் என்றால் சொல்கிறேன்! இதுவரை எனக்கு கிடைத்த blinkit paper bagsஐ தூக்கியெறிய மனமின்றி organiser ஆகத் தான் பயன்படுத்தியிருக்கிறேன்! இதை வைத்து வேறு ஏதாவது செய்து பார்க்கலாமா என்று நினைத்த போது தான் மகள் சில விஷயங்களை என்னிடம் சொன்னாள்!
அவள் சொன்ன பிறகு இணையத்தில் தேடினால் blinkit bag crafts என்ற பெயரில் நிறைய பேர் நிறைய விஷயங்களை பதிவு செய்திருக்கிறார்கள்! அந்தக் கவரில் நமக்கு கிடைக்கும் கார்ட்டூன்ஸை பொருத்து நாம் எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்! அதைப் பார்த்த போது தான் அடடா! அப்படிக்கூட செய்திருக்கலாமே! மிஸ் பண்ணிட்டோமே! என்று ஒரு விஷயம் தோன்றியது!
ஒரு சமயம் என் பிறந்தநாளையொட்டி என்னவர் டெல்லியில் வாங்கிய புடவை ஒன்றை blinkit coverல் பேக் செய்து நண்பர் ஒருவரிடம் கொடுத்தனுப்பியிருந்தார். அது ஃபிப்ரவரி மாதம் என்பதால் அந்தக் கவரில் Valentine day சம்பந்தப்பட்ட நிறைய கார்ட்டூன் பிக்சர்ஸின் உரையாடல் அழகாக இருந்தது! அதைக் கூட ஏதாவது செய்திருக்கலாம்..:)
சரி! இப்போது கிடைத்த இரண்டு bagsஐயும் ஒன்றை அப்படியே பாதியாக மடித்து wardrobe organiser ஆக மாற்றிக் கொண்டேன்! மற்றொன்றை பாதியாக கட் பண்ணி, பிடியுள்ள பகுதியை அப்படியே உள்ளே இறக்கி bagன் thicknessஐ கூட்டி பின் செய்துவிட்டேன்! மேலே அலங்காரத்திற்காக துணியை ஒட்டிவிட்டேன்! இப்போது பேப்பரால் ஆன கூடை ரெடி..:)
இந்தக் கூடையில் நமக்குப் பிடித்த வகையில் துணிகளோ, புத்தகங்களோ வைத்துக் கொள்ளலாம்! இது பேப்பர் பேக் தான் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்..:) உங்களுக்கும் இதுபோன்ற பைகள் கிடைக்குமானால் நீங்களும் இப்படி செய்து பார்க்கலாம்.
********
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
4 ஆகஸ்ட் 2026



உங்கள்பாடு பரவாயில்லை.. உங்கள் மருத்துவர் உங்கள் வயதை பத்து வயது குறைத்துச் சொல்கிறார். என் பக்கம் ஒரு கடைக்காரர் என் மாமாவிடம் இது யார் அண்ணனா? என்று அவரிடம் என்னைக்காட்டிக் கேட்டு கடுப்பேற்றினார்!
பதிலளிநீக்குரோஷ்ணி ஓவியம் ரொம்ப சூப்பர். அதென்ன போஸ்டர் கலர்?
பதிலளிநீக்குபிளிங்க் இட் பைகளை தூக்கி எறிய மனம் வராதுதான். நாங்களும் சேர்த்து வைத்திருக்கிறோம். ஆனால் உங்களை மாதிரி அதை வேறு உபயோகத்துக்கு மாற்றவில்லை. உங்கள் ஐடியா சூப்பர்.
பதிலளிநீக்குஇன்றும் பதிவு கணினியில் பார்த்தால் வற்றி போன காவிரியில் ஓரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஓடுமே அது போல இடது ஓரமாக ஒதுங்கி கிடைக்கறது!
பதிலளிநீக்கு