அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
********
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
********
ப்ப்பா தக தகன்னு எப்படி இருக்கான் கந்தன்! பார்க்கப் பார்க்க பரவசம்... ஆனா இந்த வேலைக் கையில தொடாமயே நிக்க வெச்சிருக்கானே... அதுதான் புரியல. அது என்னவோ பீடத்துல சொருகியிருக்கற மாதிரி வேற இருக்கு! ஒருவேளை illusion ஓ?
மயில் bro, கொஞ்சம் மனசுக்குள்ளயே யோசிச்சுக்கோ.... please...
ஹி ஹி sorry...😬
ஓம் ஷண்முகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻
*********
இன்னிக்கி சஷ்டியும் செவ்வாய்க் கிழமையும் சேர்ந்து வந்திருக்கு இல்ல மயில் bro, அதனால நம்ம முருகனுக்கு தலைமுதல் கால் வரை வைரக் கற்களாலேயே அலங்காரம் பாத்தியா... அற்புதம்.. அதுவும் அந்த cut shoe! பிரமாதம் இல்ல?
ஆமா சேவல் bro அட்டகாசமா ஜொலிக்கராரு.. ஆனா, நம்மள விட்டிருக்கலாம், இப்ப பாரு என் கொண்டையை அசைக்கவோ, தோகையை தூக்கவோகூட முடியல...
நீ பரவாயில்ல, எனக்குக் கல்லை எல்லாம் ஒட்ட வெக்கும்போது தூக்கின சிறகை இறக்கவே முடியல.. சரி சரி விடு.. காது கேக்கப் போகுது...ஏதோ அழகா இருக்கோமில்ல.... சந்தோஷப் பட்டுக்கோ....
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா🙏🏻🙏🏻🙏🏻
***********
கண்ணை மூடிக்கிட்டு தன்னை மறந்து ரெண்டும் சிரிக்கறதப் பாரு! நான் தான் வேலை வெட்டி இல்லாம தோகையை விரிச்சுக்கிட்டு சுத்தி சுத்தி வரேன்... கண்டுக்கணுமே! ம்ஹும்.... அப்படி என்னதான் பேசிக்குவாங்களோ! கிருஷ்ணன் தான் வெண்ணையை அபேஸ் பண்ணின பிரதாபத்தயெல்லாம் எடுத்து உடறான் போல இருக்கு.... நம்ம boss கேட்டுட்டு impress ஆகாம இருக்கணும்... ஹ்ம்ம்ம்ம்....🙁
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
**********
கழுத்த அப்படித் திருப்பி எங்கிட்ட என்னத்த பாக்கற மயில் bro?
ஒண்ணுமில்ல என் கழுத்துல மூணு necklace இருக்கு... உன் கழுத்துல எத்தனை இருக்குன்னு பாத்தேன்.....
ரொம்ப முக்கியம்... பாவம்னு அலங்காரம் பண்ணி விட்டா ரொம்பத்தான் ஜாஸ்தியா போய்க்கிட்டிருக்கு...
ஓம் ஷண்முகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻
********
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
23 ஆகஸ்ட் 2026





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....