செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

ஓணம் கொண்டாட்டங்கள் - CGV - 08.08.2026 - விஜி வெங்கடேஷ்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.


இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.




*******


விஜி வெங்கடேஷ் அவர்களது இல்ல வளாகத்தில் நடந்த ஓணம் கொண்டாட்டங்கள் குறித்த பதிவு - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு விஜி வெங்கடேஷ்.


******


Onam celebrations at CGV - 08.08.2026:




இங்கு ஓணம் பண்டிகையை கொண்டாடும் கேரள குடும்பங்கள் சில இருப்பதால் அதை CGV community celebration ஆக கொண்டாடலாம் என்று தோன்றிட, அதை திருவாதிரகளி (நாம் ஏழு தான் கூட்டோடு சாப்பிடும் திருவாதிரை களி அல்ல 😊) அல்லது கைகொட்டிக்களி என்றழைக்கப்படும் விளக்கு, பூக்கோலத்தைச் (பூக்களம்) சுற்றி கைகொட்டி ஆடும் group dance ஆக நிகழ்த்தலாம் என்று நினைத்து ஆரம்பித்திருந்தார்கள். இவ்வருடம் நிகழ்த்தியது இரண்டாவது முறை. அதற்குத் தேர்ந்தெடுத்த தேதியிலேயே விசேஷம் 8.8.8 (2+6).


நடனமாட மொத்தம் 14 பெண்கள் சேர்ந்தோம். கிட்டத்தட்ட 10 நாட்கள் இரவு 8.30 லிருந்து 9.30 - 9.45 வரை கடுமையான பயிற்சி. பயிற்சி அளித்தவர் CGV யின் பிரதான நடன மணிகளான Smt வினிதா & Smt மஹாலக்ஷ்மி.🙏🏻


அதற்காக Smt வினிதா தேர்ந்தெடுத்த  பாடல் Sneham என்ற மலையாளப் படத்தில் வரும் kaiththapoo manamenthe chanchalaakshi சுட்டி கீழே…


Kaithapoo Manamenthe Chanchalakshi Full Video Song |  Sneham Movie Song | REMASTERED AUDIO


👆🏻இந்த link ஐ நான் இணைத்த காரணம் பார்த்து ரசிக்க மட்டுமே. எங்கள் நடனத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து 6 வித்தியாசங்கள் கண்டுபிடிக்க அல்ல என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்☺️) எனும் மிக அழகான பாடல். பாடியவர் (late) ராதிகா திலக்.. தேன் குரல்! (அதுவும் ஒரு வரியில் கொஞ்சும் எனும் வார்த்தைக்குப்பிறகு ஒரு சின்ன இடைவெளி விட்டு குயில் போல் எனும் வார்த்தையை உச்சரித்த விதம்! ஆஹா.. குயில் பொறாமைப்படும்.. தேர்ந்த நடனமணிகள் நடனம் ஆடினாலுமே அப்பாடலின் இனிமைக்கு முழுமையாக நியாயம் (justify) செய்துவிட முடியாது.அதற்கு சில points நிச்சயம் கூடுதல் தான்.. (உங்களை முன்னாடியே prepare பண்ணிவிட்டேன், அப்பாடா...☺️)


அப்பாடலில் வரும் நடன அசைவுகளை அப்படியே காப்பியடிக்காமல் சில steps களை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை தன் கற்பனையில் வடிவமைத்து கற்பித்தாள் வினிதா (மகாலட்சுமியும்). அதற்குத் தனி திறமை வேண்டும்👏🏻👏🏻👏🏻 ஆரம்பத்தில் முதல் மாடியில் இருந்த யோகா ஹாலில் ஆரம்பித்து பின்னர் இரண்டாவது மாடியிலுள்ள open terrace இல்  நிலா வெளிச்சத்தில் practice செய்து பிறகு பலரின் பெருமூச்சு +முழங்காலின்  முனகல் ஓசையை கருத்தில் கொண்டு  (இத்தனைக்கும் dance steps இல் ஒன்றிரண்டு steps தவிர மீதி steps எல்லாம் மிக மெதுவான pace இல் ஆட வேண்டியவைதான்! அதற்கே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது ஆடிய பெண்மணிகளின் வயதோ எடையோ காரணமல்ல… நாங்கள் ஏறி வந்த steps!😒😕) ground floor இல் உள்ள banquet ஹாலிலேயே practice செய்ய ஆரம்பித்து விட்டோம்.


பாடலை ஒலிக்க விட்டு கூடவே ஆடிக்கொண்டும் steps ஐ count  செய்துகொண்டும் எங்களையும் கவனித்துத் திருத்திக்கொண்டுமிருந்தனர் இருவரும்...👍🏻👌🏻🤝


சும்மா சொல்லக் கூடாது, ஒவ்வொரு step ஐயும் திரும்பத் திரும்ப செய்ய வைத்து கிட்டத்தட்ட bend ஐ நிமிர்த்தி விட்டனர்! Hats off to them 🫡.


தினம் தினம் dance பற்றியே கனவுகள் வந்தன(அதிலும் சில steps தவறியது!☹️)


ஒரு வழியாக practice முடிந்து நிகழ்ச்சி நடைபெறும் நாள் நெருங்கி வந்தது. அனைவரும் கசவு எனப்படும் கேரள சேலையும் சிவப்பு blouse ம் அணிவது என்று முடிவு செய்தோம். Smt வினிதாவும் Smt கனகமும் (இருவரும் keralites) typical கேரளா style இல் முண்டும் சிவப்பு blouse ம் அணிந்து வருவதென plan. அதன்படியே அனைவரும் அந்த சிறப்பு மிக்க நாளில் மாலை 5.30 க்கு banquet ஹாலில்  கூடினோம்.. CGV வாசிகளான பார்வையாளர்களும்.


காலையிலேயே Banquet ஹால் வெளியே பெரிய பூக்கோலம் (பூக்களம்) போட்டுவிட்டோம். அதனருகில் ஒரு சிறிய விளக்கு, இரண்டு யானை பொம்மைகள் & ஒரு மரக்கால் (நெல் அளக்கும் பெரிய பித்தளைப் படி) ஒன்றும் அழகுக்காகவும் traditional touch க்காகவும் வைக்கப்பட்டன.


Banquet ஹால் உள்ளே சிறிய பூக்கோலமும் அதன் நடுவில் பெரிய விளக்கும் வைக்கப்பட்டது. 


நடனமாடும் எங்கள் ஒவ்வொருவரை பற்றியும் (எங்களுக்கே தெரியாத!) சில விஷயங்கள் சொல்லி சுவாரசியமாக அறிமுகப்படுத்திய Smt சித்ரகலா அழகாகப் பேசினார் (சற்று மிகையாக இருந்தாலும் ரசிக்கும்படி இருந்தது). என்னைப் பற்றிச் சொல்லும்போது 'நம் CGV யில் ஏதாவது நிகழ்ச்சி நடந்தால் போதும், உடனே அதைப் பற்றி கதை எழுதி (கிறுக்கி) விடுவார் என்று (ஒரு பயத்துடன்!!😕) அறிமுகப் படுத்தினார். இதற்கெல்லாம்  பயந்து தயங்கி எழுதாமல் (கிறுக்காமல்) விடும் ஜாதி நானில்லை..😊ஆகவே அந்த மாதிரி எண்ணம் ஏதாவது கிஞ்சித்தும் உங்களில் யாருக்காவது இருந்தால் அதை விட்டு விடவும்🤗. வேறு வழியில்லை… அதைப் படிக்கலாம் அல்லது படிக்காமல் தள்ளலாம்...நிம்மதி நிம்மதி உங்கள் choice.😁👍🏻


அவரை அடுத்து Smt.Shirin ம் எங்களை உயர்த்திப் பேசி உற்சாகப் படுத்தினார் (ஆடுபவர்களில் பலரின் வயது (முதிர்ந்த) விஷயத்தைத் தொட்டிருக்கவேண்டாம்... it's ok.😒பாராட்டித்தான் பேசினார்....) அறிமுகம் முடிந்து பாடல் ஒலிக்க, நடனம் ஆரம்பித்தது.... நாங்கள் பயந்ததுபோலில்லாமல் அனைவரும் சரியாகவே ஆடி எங்கள் ஆசிரியர்களின் பெயரைக் காப்பாற்றினோம்.



பார்வையாளர்களின் கரவொலி CGV எங்கும் பரவி, அதையும் தாண்டி (புனிதமானது..😊)  பரவிற்று (நீங்கள் நம்பத்தான் வேண்டும்🙂).அனைவரும் ஏகோபித்தக் குரலில் once more எனக் கேட்க (இப்போதாவது perfect ஆக  ஆடுவீர்களா பார்ப்போம் என்பதற்காக அல்ல… எங்கள் நடனத்தில் மெய்மறந்து! சே... உண்மையை முழுமையாகச் சொல்ல விழையும்போது modesty prevents me! ☺️) இதில் முக்கியமாக சொல்ல வேண்டிய விஷயம், ஒவ்வொரு நாளும் practice session  ஐ எங்களை எதிர்நோக்க வைத்தது வினிதாவின் கல கல சுபாவமும் நகைச்சுவை உணர்வும்!  இருவரும்(வினிதா, மஹா) நாங்கள் சொதப்பும்போது எரிச்சல் அடையாமல் சிரித்துக்கொண்டு தட்டிக் கொடுத்து சொல்லிக் கொடுத்தது சிறப்பு👏🏻👏🏻(கோபித்துக் கொண்டால் இன்னும் ஜாஸ்தியாக சொதப்புவோம் என்பது அவர்களுக்குத் தெரியும்😁. ஸ்மார்ட் லேடீஸ் 👌🏻👌🏻)


Smt. Archana மிக அழகாக ஏற்பாடுகள் அனைத்தையும் மேற்பார்வை செய்து, ஒவ்வொரு நாளும் practice க்கும் வந்து எங்களை ஊக்குவித்து, videographer ஆகவும் செயல்பட்டு அசத்தினார். நன்றி🙏🏻 CGV manager Sri.முத்துராஜ் & Co திறம்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததற்கு நன்றி நன்றி🙏🏻🙏🏻


CGV வாசிகள் பலரும் தங்கள் குழந்தைகளுடன் வந்து பார்த்து ரசித்து ஊக்கப்படுத்தியது மனதை மகிழ்வித்தது. நன்றி நன்றி நன்றி🙏🏻🙏🏻


மொத்தத்தில் அனைவரின் பங்களிப்பால் இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறி மறக்க முடியாத அனுபவத்தைத் தந்தது...


அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களுடனும் நன்றிகளுடனும்,


💐💐💐🙏🏻🙏🏻🙏🏻


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

11 ஆகஸ்ட் 2026


3 கருத்துகள்:

  1. என்னது...  ஓணம் தாண்டி விட்டதா?  அதைக் கூட கவனிக்காமல் இருந்திருக்கிறேன்.  மீடியாவில் எங்குமே நான் செய்தியும் பார்க்கவில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓணம் பண்டிகை 26.08.2026 அன்று தான்.வளாகத்தில் கொண்டாட்டம் இப்போதே நடந்து முடிந்தது!

      நீக்கு
  2. அந்த நாள் இன்பமான நாளாக அகழிந்திருக்கிறது என்று தெரிகிறது.  நடனம், கொண்டாட்டங்கள் ஆஹா.... ஓஹோ...... பேஷ் பேஷ்...

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....