அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட ***** பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
********
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
********
இப்பிடி என்ன உக்கார வெச்சிட்டு பூஜை எல்லாம் முடிஞ்சு அப்புறம்தான் பிரசாதம் தருவேங்கறது என்ன நியாயம்...🙁 பக்கத்துல எதுக்கு வெண்ணை, தயிர் பானையெல்லாம் வெக்கணும்? அதுவும் சிந்தற மாதிரி... எனக்குப் புரியல....🙁 தொப்ப பசிக்குது... ஒரு குட்டி கோந்தய இப்படி படுத்தறது சரியில்ல.. ஆமாம்.... சொல்லிட்டேன்...
அதுவா கிருஷ்ணா,
உன் level of கட்டுப்பாடு & பொறுமையை test பண்ணத்தான் செல்லம்....
ரொம்ப முக்கியம்... இது torture....😏
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
********
ஏன் மயில் bro இப்ப எனக்கு எதுக்கு சிரசு மேல தாமரைப்பூ வெச்சு விடணும் இந்த வேலவன்?
நீ ஆடாம அசங்காம (ஆட்டம் போடாம சமத்தா) இருக்கத்தான் snakidha... அப்பத்தான் உன்னை *நல்ல* பாம்புன்னு சொல்லுவாங்க...
இல்லாட்டாலும் நான்🐍 அதுதான...🙁 குழப்பறானே....🤨
ஓம் ஷண்முகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻
********
சொல்ற goodmorning ஐ கொஞ்சம் சிரிச்சுக்கிட்டேதான் சொல்லேன்....
அவ்வளவுதான் முடியும்...😏. (விடிகாலைல (!!??) 9 மணிக்கே எழுப்ப வேண்டியது, அப்புறம் எங்க, goodmorning சொல்லு status ல போடணும்னு படுத்த வேண்டியது...சே.. ஒரு 🐕 ஜீவன் நிம்மதியா தூங்க முடியுதா இந்த வீட்டுல.....🙁
(For a change.....😊)
********
எப்படி கன்னுக்குட்டி உன் தலையில என்னோட தோகை அப்படியே நிக்குது? சூப்பர்👌🏻👌🏻
அதையேன் கேக்கற மயில் bro? எனக்கு நாமம் போட்டதோட நிக்காம மயில் தோகைய வேற fevicol போட்டு ஒட்டி வச்சிருக்கான் கிருஷ்ணா... பாசக்கார பய புள்ள. என்ன, அதை உரசி clean பண்றதுக்குள்ள என் மண்டை சொட்டையாயிடும்னு நினைக்கிறேன்..... ஹ்ம்ம்ம்..... நானும் மயிலாவோ குயிலாவோ பொறந்திருக்கலாம்...😒
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
பாத்தியா மயில் bro நந்தி அண்ணாவும் சிம்ம அண்ணாவும் எப்படி அழகா pose கொடுக்கறாங்க... நாமளும் பின்னாடி போய் இருக்கற gap வழியா தலைய நீட்டலாமா?
உன் பல்லை வெச்சுக்கிட்டு உன்னால சும்மா இருக்க முடியாது மூஞ்சூறு தம்பி..பேசாம இங்கே இரு.... அதான் safe எல்லார்க்கும்.....
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
********
அட பூவைத் தொடுக்காமயே உன் கூந்தல்ல வெச்சுக்கிற, அதுவும் நிக்குதே எப்படி ராதா?
அதுக்கு ஆயிரங்கால் ஜடை போட்டுக்கணும் கிருஷ்ணா, ஈசியா அதுல சொருகிடலாம்... எப்படின்னு காண்பிக்கட்டுமா?
பரவாயில்ல ராதா...அப்புறம் பாத்துக்கலாம்.... Don't strain... நிறைய விஷயம் தெரிஞ்சு வெச்சுக்கிட்டிருக்க.. very smart👌🏻👌🏻(இப்போ நான் ஆயிரம் கால் ஜடை போட்டுவிடக் கத்துக்கணுமா🙁 சும்மா இருந்திருக்கலாமோ....)
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
9 ஆகஸ்ட் 2026







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....