பொக்கிஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொக்கிஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 ஜூலை, 2023

காஃபி வித் கிட்டு - 176 - நல்ல மனம் வாழ்க - அம்மா - Bபப்ரு… - பூலோக ரம்பை - குழலிசை - இன்னொரு வானம் - முதல் அடி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஆறு பதிவினை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


சனி, 7 ஆகஸ்ட், 2021

காஃபி வித் கிட்டு-122 - சுமை - நகைச்சுவை - சமைத்த உணவு - ரத்த தானம் - பூக்கள் - விவசாயி - கரேரி ஆறு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட Mesmerising Meghalaya பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


இறைவன் சுமைகளைத் தந்திருக்கிறார். அதே நேரத்தில் சுமைகளைத் தாங்குவதற்கான தோள்களையும் தந்திருக்கிறார். 


******

சனி, 31 ஜூலை, 2021

காஃபி வித் கிட்டு-121 - மோனலிசா - ரஸ்கதம் - தாஜ்மஹால் - புதிய Blog - காசு யமன் - அம்மா - மழை வெள்ளம்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட Mesmerising Meghalaya பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


MISMANAGED SUCCESS IS THE LEADING CAUSE OF FAILURE; WELL MANAGED FAILURE IS THE LEADING CAUSE OF SUCCESS. 


******

செவ்வாய், 30 ஏப்ரல், 2019

கதம்பம் – இரயில் பயணங்களில் – தில்லி chசலோ – தில்லி டைரி – விதம் விதமாய் சுவைக்க…



தில்லி chசலோ – 21 ஏப்ரல் 2019

திருவரங்கம் இரயில் நிலையம்...

ஏழு வருடங்களுக்குப் பிறகு தில்லி chசலோ!!! முதலில் சென்னை நோக்கி பயணம்.

சனி, 6 ஜனவரி, 2018

வேட்டி தினம் அல்ல வெட்டி தினம்!



ஜனவரி 6 – இன்று வேட்டி தினமாம். தில்லியில் அடிக்கும் குளிரில் வேட்டி கட்டிக்கொண்டு நடந்தால் ஃப்ரீஸ் ஆக வேண்டியது தான்! வேட்டி தினம் அன்று காலையிலிருந்து பதிவு எதுவும் வெளியிடாமல் இப்படி இரவு பதிவு வெளியிட்டால் – அதுவும் “வேட்டி தினம் அல்ல வெட்டி தினம்” என்ற தலைப்பில் பதிவு வெளியிட்டால் என்ன அர்த்தம்….

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு - பொக்கிஷ ஓவியங்கள் – வரையப்பட்ட வருடம் 1943

 

எனது பதிவுகளில் அவ்வப்போது பழைய தீபாவளி மலர் புத்தகங்களிலிருந்து ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை ”பொக்கிஷம்” என்ற தலைப்பில் பகிர்ந்து கொள்வது வழக்கம்.  சில மாதங்களாக இந்தப் பொக்கிஷ பகிர்வுகள் வரவில்லை. இன்றைக்கு மீண்டும் ஒரு பொக்கிஷப் பகிர்வாக சில ஓவியங்கள்.  வண்ண ஓவியங்கள் தவிர சில கருப்பு-வெள்ளை ஓவியங்களும் உண்டு…. இதோ ஓவியங்கள்…..

 

ஜல்லிக்கட்டு – 1943-ஆம் வருடத்தின் தீபாவளி மலரின் அட்டைப்படமே ஜல்லிக்கட்டு பற்றிய அட்டைப்படம்! ஒரு காளையை அடக்கும் இளைஞர் அருகே மாலையுடன் காத்திருக்கும் ஒரு யுவதி…..  அந்த அட்டைப்படத்திற்கு விளக்கமும் உண்டு! அது இங்கே……

 படம்-1: ஏறு தழுவுதல்


தூநிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள் இப்

பூவைப் புது மலராள் – (சிலப்பதிகாரம்)

 

இந்த முரட்டுக் காளையை இப்படி அடக்கித் தழுவிப் பிடித்துக் கொண்டிருக்கும் இளைஞனைப் பாருங்கள். இவனுக்குச் சூட்ட வேண்டுமென்று மணமாலையும் கையுமாய் நிற்கும் அந்த அழகியையும் பாருங்கள். இவர்கள் தமிழர்கள் தான் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா? ஆம்; வீரத்திற்கே அழகை உரிமையாக்கிய அந்தப் பழங்காலத்தை நினைப்பூட்டும் ஒரு கல்யாணக் காட்சி இது.

 

வீரப் பரீட்சை செய்து மணமகனைத் தேர்ந்தெடுக்கும் இவ்வழக்கம் அந்தக் காலத்தில் ஆயர் குல மக்களிடையே வேரூன்றி இருந்தது.  மாடுகளே அவர்களுக்குச் செல்வம். ஒவ்வொரு பெண்ணும் தனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் ஒரு கன்றுக்குட்டியைச் செல்வமாக வளர்ப்பாள். செல்வப் பெயரிடுவாள். தினம் தன் கையால் புல்லூட்டுவாள். விதம் விதமாக சலங்கைகளும் பாசிகளும் சங்கும் கம்பளிக்கயிறும் கட்டி அலங்கரித்து அழகு பார்ப்பாள். அவளுக்கு விவாஹப் பருவம் வரும்போது கன்றுக்குட்டியும் கூடவே வளர்ந்து காளையாகும். ஒருவராலும் அடக்கமுடியாத வீரத்துடன் விளங்கும் அந்தக் காளையை எவன் அடக்குகிறானோ அவனுக்குத் தான் மணமாலை சூட்டுவாள்.

 

ஆயர்குல திலகமாகிய கண்ணனும் இந்த ஆயர்குல வழக்கத்தை அனுசரித்தானாம். நப்பின்னை என்ற கோபிகையின் அழகிலே ஈடுபட்டு, ஏழு காளைகளைத் தழுவி அடக்கி, அதற்குப் பரிசாக அந்த அழகியை மணந்து கொண்டான் என்று பண்டைத் தமிழ் நூல்கள் கூறுகின்றன.

 

இப்பொழுதும் நம் நாட்டில் இந்த வழக்கத்தின் சின்னமாக மாட்டுப் பொங்கலன்றும் அதை அடுத்த சில நாள்களிலும் மாடுகளுக்குக் கரும்பு, துணி முதலியவற்றைக் கட்டி மஞ்ச விரட்டு விடுகிறார்கள். ஆனால் விவாஹம் இதிலிருந்து பிரிந்து போய் விளையாட்டு மட்டும் தான் மிஞ்சியிருக்கிறது.

 

இந்நிலையில், ஏறு தழுவுதல் என்ற அந்த பழைய காட்சியையும் கல்யாணத்தையும் சிந்தித்துப் பார்ப்பதே ஊக்கமும் உத்ஸாகமும் தருகிறதல்லவா?

 

அட்டைப் படம் தவிர வேறு ஓவியங்கள் ஜல்லிக்கட்டு பற்றியவை அல்ல! என்றாலும் அழகிய ஓவியங்கள்.  அவையும் இதோ உங்கள் பார்வைக்கு!



படம்-2: இப்படம் ஒரு காவியக் காட்சி.... 


படம்-3: எப்ப வருவாரோ? எந்தன் கலி தீர்க்க.... 


படம்-4: ஒரு இயற்கைக் காட்சி....  


படம்-5: என்ன பேசிக் கொண்டிருப்பார்கள்? 


படம்-6: ஓய்வெடுக்கும் யாத்ரீகர்கள்.....


படம்-7: வட இந்திய நாட்டியம்.... 


படம்-8: என்ன யோசனை?


படம்-9: எல்லா ரூபாய் நோட்டும் செல்லுமா?.... 


 படம்-10: கண்ணுக்குள் காதல்.... 

என்ன நண்பர்களே, ஓவியங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தனவா?  பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். 


நட்புடன்

 

வெங்கட்

புது தில்லி. 

சனி, 21 நவம்பர், 2015

படமும் ‘ப”வில் வரும் பெயர்களும்!


சில வாரங்களுக்கு முன்னர் “பொக்கிஷம்பகுதியில் கவிதைப் போட்டி-2015 மற்றும் ஒரு போட்டியும்! என்ற பதிவில் ஆறுவது சினம் என்று படம் வெளியிட்டு அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி வார்த்தைகள் எழுதச் சொல்லி இருந்தேன்.  இன்று மீண்டும் ஒரு படம் – மீண்டும் ஒரு போட்டி!



படத்தைப் பாருங்கள். “ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர்களை உடைய பொருட்களாகச் சொல்லுங்கள். கவனமாகப் பார்த்தால் 20 பெயர்கள் வரையில் சொல்லலாம்!

எனக்குத் தெரிந்த வார்த்தைகள் நாளை மாலை இதே பதிவில் வெளியிடப்படும்!

நாளை வேறு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

சனி, 14 நவம்பர், 2015

ப்பா.....



சில வாரங்களுக்கு முன்னர் பொக்கிஷம் பகுதியாக கி.ரா. அவர்கள் எழுதிய “பாப்ரிஎனும் கதையை எனது வலைப்பூவில் வெளியிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்...  இது வரை படிக்காதவர்கள் படித்து விடலாம்! யானை பற்றிய கதை அது. யானைகளுக்கும் உணர்வு உண்டு என்பதைச் சொல்லும் அருமையான கதை அது.  இரண்டு வாரங்களுக்குப் பிறகு இன்று மேலும் ஒரு கதை – பொக்கிஷப் பகிர்வாக.  இந்த வாரம் தி.ஜா. அவர்கள் எழுதிய கதைகளில் ஒன்று.  தலைப்பு ப்பா.....  முதல் எழுத்தை விட்டு விட்டேனோ என்ற எண்ணம் வரலாம். முதல் எழுத்தை விடவில்லை!

சரி கதைக்கு போவோம் வாங்க!



நான் தூங்குகிறேனா என்ன! இல்லையே.... நான் விழித்துக் கொண்டிருக்கிறேனே, பின்னே ஏன் இந்த சந்தேகம்? ஒரு நாய் எப்படி இங்கிலீஷில் குரைக்கும்?

நாய்க்கு மொழி ஏது? இருக்கிறது ஒரு மொழி தானே – குரைப்பு ஒன்று தானே மொழி.... இல்லா விட்டால் மீமீ என்று சன்னக்குரலில் குழையும் – வாலையும் குழைக்கும்.  பின்னே ஏன் எனக்கு மட்டும் ஒரு நாய் இங்கிலீஷில் குரைப்பது போல கேட்கிறது! கனவா! இல்லையே. அரை தூக்கம் கூட இல்லையே. நல்ல முரட்டு விழிப்பாகத் தானே உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். இங்கிலீஷில் தான் குரைக்கிறது, என்ன வார்த்தைகள் இவை.....

கூர்ந்து கேட்கிறார் அவர்,

“வௌவ் வௌவ்... டெர்ரி டோரியல் இம்ப்பரேட்டிவ் வௌவ் வௌவ்... டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ்இப்போது தெளிவாகக் கேட்கிறது.....  ஆமாம் ஒரு நாய் தான்... டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ் என்று தான் குரைக்கிறது.... இது என்ன டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ் அப்படி என்றால்?

அவர் வாசல் விளக்கைப் போட்டு கதவைத் திறந்து வெளியே பார்த்தார்.

குரைக்கின்ற நாய் அவர் பக்கம் திரும்பிற்று.

“கூப்புட்டீர்களா?என்று கேட்கிறது.

“இல்லையே.

“பின் ஏன் விளக்கைப் போட்டு கதவைத் திறந்தீர்கள்?

“நீதானே இங்கிலீஷில் குரைத்தாய்?

‘இங்கிலீஷிலா குரைத்தேன்?

“பின்னேடெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ்என்ன தமிழா இல்லே உருது என்ற எண்ணமோ?

எனக்கு அதெல்லாம் தெரியாது, அந்த ஜகதுசாரும் உப்பிலியும் பேசிக்கொண்டிருந்தார்கள், கேட்டேன். சரி நம்ம விஷயமாச்சே என்று அந்த வார்த்தையைப் பிடித்துக் கொண்டேன். அதையே சொல்லிக் குரைக்கிறேன்.

‘இதுக்கு என்ன அர்த்தம்?

“அதெல்லாம் இங்கே நடு வாசலில் நின்று பேச முடியாது.

“உள்ளே வந்து சொல்லேன்.

நான் உள்ளே வரலாமா?

“ஏன் வரக்கூடாது? இங்கிலீஷில் குரைக்கிறாய்?

“தெரு நாய் ஆச்சே நான்.

“பரவாயில்லே. இங்கிலீஷில் குரைக்கிறபோது உள்ளே வந்தால் என்ன? வா, வா.. உட்காரு....



“நான் உட்கார வேண்டாம். அதெல்லாம் அதோ சோபாவில் வெல்வெட் குஷனில் சுகமாகத் தூங்கி, என்னைக் கண்டதும் பயந்து இறங்கி சமையல் உள்ளுக்குள் ஓடுகிறதே அந்த மியாவ் மியாவுக்கே உங்கள் சொகுசு சோஃபா வெல்லாம் இருக்கட்டும்

“சரி, நீ குரைத்ததற்கு அர்த்தம் சொல்லு/

“சொல்கிறேன். ஆனால் நான் ஒன்று கேட்கிறேன். முன்னால் அதற்குப் பதில் சொல்லுங்கள். அப்புறம் நான் சொல்லுகிறேன்.

“என்ன?

“நாயேன் உன்பாலன்றி எங்கே செல்வேன் என்று ஒரு பாட்டில் வருகிறதே கேட்டிருக்கிறீர்களா?

“கேட்ட ஞாபகம்.

“நாயேன் ஏழைபால் தயை செய்வாயேஎன்று பாட்டில் வருகிறது.

“ஆமாம்... ஆமாம்.... பாபநாசம் சிவன் பாட்டு என்று நினைக்கிறேன்.

“இருக்கலாம். பாடினவர் புத்திசாலிதான். பைரவி ராகத்தில் பாடியிருக்கிறார். பைரவி என்றால் எங்கள் நாய் இனத்தையும் குறிக்கும்.

“பொல்லாத நாயாக இருக்கியே?

“நல்ல நாய் என்று சொல்லுங்கள். நாயேன் உன் பாலன்றி எங்கே செல்வேன் என்று ஏதோ நாயாரைப் பற்றிக் கேட்கிறான் ஒரு மனுஷன். இதன் அர்த்தம் என்ன?”

அவர் யோசித்துவிட்டு நாய்க்குப் பதில் சொல்கிறார். “நாய் நன்றி உள்ள பிராணி. எசமானை விட்டு எங்கும் போகாது. வேறு யாரிடமும் வாலைக் குழைத்துக்கொண்டு பல்லை இளிக்காது.

“கரெக்ட்... எங்கள் எசமானில்லாத ஒருவன் நூறு பிஸ்கட்டைக் காட்டினால் கூடப் பல்லை இளித்துக் கொண்டு ஓடமாட்டோம். கட்சி மாற மாட்டோம். அப்படி இருக்கும்போது நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு. நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்றெல்லாம் கட்சி மாறும் மனிதர்களை ஏன் திட்டுகிறார்கள்? எங்களைத் திட்டுகிறார்களா? அந்த மனுசங்களைத் திட்டுகிறார்களா?

.....

“பதில் சொல்லுங்கள்.

.....

“என யோசிக்கிறீர்கள்?

எசமான் இருக்கிற நாய்தானே? இன்னொரு ஆள் நூறு பிஸ்கட்டைக் காட்டினால் கூட பல்லை, இளித்துக் கொண்டு போகாது என்று சொன்னாய். எசமான் இல்லாத நாய்கள் எத்தனை இருக்கு?

“என்னைப் போல இண்டிபெண்டெண்ட்டா, சுதந்திரமா எசமானே இல்லாத நாய்களைச் சொல்கிறீர்களா?

“ஆமா

“நீங்கள் இந்தக் கேள்வி கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். எனக்கு இந்தத் தெரு எசமான். இந்தத் தெருவில் உள்ள நீங்கள் இன்னும் மற்றவர்கள் அவர்களுடைய குடும்பம், குழந்தைகள் எல்லாரும் சேர்த்து மொத்தமாக எசமான். அப்படிச் சொல்வதை இந்தத் தெரு என் சொத்து மாதிரி, நான் உங்களுக்குக் காவலாளி. நான் இதை விட்டு வேறு எங்கும் போகமாட்டேன். இந்த ஊரிலேயே வேறு தெருவுக்கு அல்லது வார்டுக்கு தேர்தலுக்கு நிற்கமாட்டேன். நான் அந்த வேறு தெருவைச் சேர்ந்தவன் என்றெல்லாம் ‘டூப்அடிக்க மாட்டேன். நாய்களும் அதை ஒப்புக்கொள்ளாது. இந்த நாய் இந்தத் தெரு. அந்த நாய் அந்தத் தெரு, அந்தத் தெரு நாய் இங்கே வந்தாலும் கொதறித் தீர்த்து விடுவேன், வேற்று நாய் இங்கே வரவும் துணியாது; இண்டிபெண்டெண்ட் என்று யாரும் இந்த நாய் வர்க்கத்திலேயே கிடையாது. ஒரே தெருவுக்குள் ஒரு நல்ல மனிதன் இருந்தால் பிரியமாக இருப்பேன். பொல்லாத மனிதன் இருந்தால் ஒதுங்கி நிற்பே. இந்த அளவில் இண்டிபெண்டெண்ட் என்று சுமாராகச் சொல்லலாம். நல்ல ஆட்களிடம் பிரியம் காட்டுகிறவர்கள் தான் இண்டிபெண்டெண்ட். அது தான் நிஜமான சுதந்திரம்.

“ரைட். ஆனா, நீ என் கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலியே?

“எது?

“டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ்.

“நாசமாப் போச்சு, அதைத்தான் இத்தனை நேரமும் சொல்லிக் கொண்டிருந்தேன். ஜகது எதையோ உப்பிலியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த உலகத்தில் தான் படைத்த ஜீவஜந்துக்கள் எல்லாவற்றுக்கும் ஆண்டவன் ஒரு நிலம், ஒரு டெரிடரி கொடுத்திருக்கிறாராம். அந்த நிலத்தில் வேறு யாரும் உரிமை பாராட்டக்கூடாது. அது அதுக்கு தன் பிராந்தியத்துக்கு மேல் ஒரு ஆட்சி, ஒரு உரிமை உண்டு. அதுதான் டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ் என்று ஜகது உப்பிலியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். கட்சி மாறிகளைப் பார்த்து நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று கிண்டல் பண்ணுகிறான்களே, நெசம்மா நாய்களுக்கு இது தெரிஞ்சதுன்னா நம்மை எல்லாம் என்ன பண்ணுமோ என்று ஜகது சொல்லிக் கொண்டிருந்தார். “கரெக்ட் தெருவுக்கு ஒரு நாய் இருந்தால் போருமே ஆயிரம் பூட்டுக்கு சமானம்என்று உப்பிலி மாமா கூட சொல்லிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தேன். இந்த டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ்என்கிற வார்த்தை கடகட வென்றும் படபட வென்றும் அதிகாரத்தை வெளிப்படுத்துகிற மிடுக்கு வார்த்தையாக இருந்தது. அதைச் சொல்லிச் சொல்லிக் குரைக்கிறேன். குரைக்க குரைக்க எனக்கே ஒரு தன்னம்பிக்கை மிடுக்கு பெருமிதம் எல்லாம் உடம்பில் மதமதக்கிறது. இனிமேல் உப்பிலி மாமா மாமாங்கத்து ஒரு தடவை வீட்டைப் பூட்டிக் கொண்டு போனால் கூட வாசல் பூட்டு, கொல்லைப் பூட்டு மட்டும் போட்டால் மட்டும் போதும். நான் இருக்கிறேன். நீங்களும் கவலைப்பட வேண்டாம். இந்தத் தெருவுக்கு நான் ராஜா. இது என் டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ்.

நாய் கம்பீரமாகப் பார்த்தது.

“நல்ல ஆளப்பா நீ.....

“ஆளப்பாவா? நாயப்பா.....என்று நாய் வெளியே போயிற்று.

“கதவை சாத்திக் கொள்ளுங்கள். வௌவ் வௌவ் வௌவ் டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ், டெர்ரிடோரியல் இம்ப்பரேட்டிவ்.

ஏதோ தெருவுக்கே பட்டா வாங்கி விட்டதுபோல் நாய் வீராப்பாகக் குரைக்கத் தொடங்கிற்று.

என்ன நண்பர்களே தி.ஜா அவர்களின் “ப்பாகதையைப் படித்து ரசித்தீர்களா? 1984-ஆம் வருடத்தில் தி.ஜா. அவர்கள் கடைசி காலத்தில் தினமணிக் கதிரில்  எழுதிய தொடர் கட்டுரைகளில் ஒன்று இந்தக் கட்டுரை. கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

நாளை வேறு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

சனி, 7 நவம்பர், 2015

கரடிக்கு காதல் பிடிக்காது!


பஞ்சாபி பாடகர் [DH]தலேர் மெஹந்தி பாடிய துணுக் துணுக் துன் நா நா... மிகவும் பிரபலமான ஒரு பாடல்.  வெளி வந்த புதிதில் பெரும்பாலான இளைஞர்கள் முணுமுணுத்த ஒரு பாடல். அப்படி ஒரு மோகம் அந்தப் பாடலின் மீது.  வெளிவந்த சில காலம் வரை நடந்த பெரும்பாலான வட இந்திய திருமணங்களில் இசைக்கப்பட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடி ஆடி ஓய்ந்த ஒரு பாடல்....  நீங்கள் கேட்டதுண்டா? கேட்காதவர்கள் இங்கே கேட்கலாம்!  இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் பதிவு கூட துணுக்.. துணுக் தான்! ஆனால் வேறு துணுக் துணுக்.....

பொக்கிஷப் பகிர்வில் இன்றைக்கு நாம் அப்படி சில துணுக் துணுக் விஷயங்களைப் பார்க்கப் போகிறோம்.  1966-ஆம் ஆண்டு வெளி வந்த ஆனந்தவிகடன் பத்திரிகைகளிலிருந்து எடுக்கப்பட்ட துணுக்குகள் இவை. தி.ஜானகிராமன் அவர்கள் எழுதிய “உயிர்த்தேன்எனும் நாவல் ஆனந்த விகடன் பத்திரிகையில் அப்போது வந்தது. அதன் எல்லா பகுதிகளையும் எடுத்து பைண்டிங் செய்து வைத்த புத்தகம் சமீபத்தில் பழைய புத்தக நிலையத்தில் கிடைத்தது. அப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட துணுக்குகள் இவை.  பொக்கிஷப் பகிர்வில் இன்றைக்கு பழைய துணுக்குகளை படிக்க நீங்க தயார் தானே!











என்ன நண்பர்களே இந்த சனிக்கிழமையில் பொக்கிஷப் பகிர்வாக வெளியிட்ட துணுக்குகளை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.  

சனி, 31 அக்டோபர், 2015

பத்து எண்றதுக்குள்ளே!



நம்ம சினிமா டைரக்டர்களுக்கு, அவங்க எடுக்கற படத்துக்கு என்ன பேர் வைக்கறதுன்னே குழப்பமா இருக்கு.  மனசுல தோணியதை எல்லாம் பேரா வைச்சுடுறாங்க – கதைக்கும் தலைப்புக்கும் சம்மந்தம் இருக்கா, இல்லையா அப்படின்னு பார்க்கறதே இல்லை. புதுசா படம் பேரு ஒண்ணும் தோணலையா, இருக்கவே இருக்கு – பழைய படங்களோட பேரு! ஏதாவது நல்ல ஓடுன [தியேட்டர விட்டு இல்லீங்க] படத்தோட பேரை வைச்சு ஒரு படம் எடுக்கறாங்க!

வருஷத்துக்கு 300-400 படம் வெளியிட்டா என்ன தான் பண்ண முடியும்! இதுல தனது படத்துக்கான பெயர் என்று முன் பதிவு செய்து வைத்திருப்பதையும் பயன்படுத்த முடியாதே....  அதனால இப்படியெல்லாம் பேர் வைக்க வேண்டியிருக்கு! 

அது சரி படத்துக்கு பேர் வைக்கறது இருக்கட்டும்....  இந்தப் பதிவுக்கு எதுக்குப்பா பத்து எண்றதுக்குள்ள!அப்படின்னு பேர் வைச்சு இருக்கீங்க – அதைச் சொல்லுங்கப்பு முதல்ல!என்று யாரும் சண்டைக்கு வருவதற்கு முன் நானே சொல்லிடறேன் – பெரிசா ஒண்ணும் காரணமில்லை....  நீங்க பத்து எண்றதுக்குள்ள நானே சொல்லிடறேன்.  இன்னிக்கு சில படங்களோட விளம்பரம் பார்க்கப்போறோம்...  அத்தனையும் அந்தக் கால படங்கள்! சில படங்களோட பேர் கூட நம்மில் பலர் கேட்டிருக்க வாய்ப்பில்லை! கூடவே இன்னும் சில வித்தியாசமான விளம்பரங்கள்!

அந்தமான் காதலிஅப்படின்னு ஒரு படம் வந்தது... 1978-வருடம்னு நினைக்கறேன். அப்படத்திலே வரும் “நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்!இன்னிக்கும் ரசிக்கும் பாடல்!  ஆனா, இன்னிக்கு நான் சொல்லப் போற படம் இது இல்ல! அந்த படம் “அந்தமான் கைதி.  எம்.ஜி.ஆர், சாரங்கபாணி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.














இப்படி சில விளம்பரங்களை இந்த சனிக்கிழமையில் பொக்கிஷப் பகிர்வாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி! என்ன நண்பர்களே... இந்த விளம்பரங்கள் பற்றி தெரிந்தவர்கள் சொல்லலாமே!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.