எனது பதிவுகளில் அவ்வப்போது பழைய
தீபாவளி மலர் புத்தகங்களிலிருந்து ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை ”பொக்கிஷம்”
என்ற தலைப்பில் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
சில மாதங்களாக இந்தப் பொக்கிஷ பகிர்வுகள் வரவில்லை. இன்றைக்கு மீண்டும் ஒரு
பொக்கிஷப் பகிர்வாக சில ஓவியங்கள். வண்ண ஓவியங்கள்
தவிர சில கருப்பு-வெள்ளை ஓவியங்களும் உண்டு…. இதோ ஓவியங்கள்…..
ஜல்லிக்கட்டு – 1943-ஆம் வருடத்தின்
தீபாவளி மலரின் அட்டைப்படமே ஜல்லிக்கட்டு பற்றிய அட்டைப்படம்! ஒரு காளையை அடக்கும்
இளைஞர் அருகே மாலையுடன் காத்திருக்கும் ஒரு யுவதி….. அந்த அட்டைப்படத்திற்கு விளக்கமும் உண்டு! அது இங்கே……
படம்-1: ஏறு தழுவுதல்
தூநிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள்
இப்
பூவைப் புது மலராள் – (சிலப்பதிகாரம்)
இந்த முரட்டுக் காளையை இப்படி அடக்கித்
தழுவிப் பிடித்துக் கொண்டிருக்கும் இளைஞனைப் பாருங்கள். இவனுக்குச் சூட்ட வேண்டுமென்று
மணமாலையும் கையுமாய் நிற்கும் அந்த அழகியையும் பாருங்கள். இவர்கள் தமிழர்கள் தான் என்றால்
உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா? ஆம்; வீரத்திற்கே அழகை உரிமையாக்கிய அந்தப் பழங்காலத்தை
நினைப்பூட்டும் ஒரு கல்யாணக் காட்சி இது.
வீரப் பரீட்சை செய்து மணமகனைத் தேர்ந்தெடுக்கும்
இவ்வழக்கம் அந்தக் காலத்தில் ஆயர் குல மக்களிடையே வேரூன்றி இருந்தது. மாடுகளே அவர்களுக்குச் செல்வம். ஒவ்வொரு பெண்ணும்
தனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் ஒரு கன்றுக்குட்டியைச் செல்வமாக வளர்ப்பாள். செல்வப்
பெயரிடுவாள். தினம் தன் கையால் புல்லூட்டுவாள். விதம் விதமாக சலங்கைகளும் பாசிகளும்
சங்கும் கம்பளிக்கயிறும் கட்டி அலங்கரித்து அழகு பார்ப்பாள். அவளுக்கு விவாஹப் பருவம்
வரும்போது கன்றுக்குட்டியும் கூடவே வளர்ந்து காளையாகும். ஒருவராலும் அடக்கமுடியாத வீரத்துடன்
விளங்கும் அந்தக் காளையை எவன் அடக்குகிறானோ அவனுக்குத் தான் மணமாலை சூட்டுவாள்.
ஆயர்குல திலகமாகிய கண்ணனும் இந்த ஆயர்குல
வழக்கத்தை அனுசரித்தானாம். நப்பின்னை என்ற கோபிகையின் அழகிலே ஈடுபட்டு, ஏழு காளைகளைத்
தழுவி அடக்கி, அதற்குப் பரிசாக அந்த அழகியை மணந்து கொண்டான் என்று பண்டைத் தமிழ் நூல்கள்
கூறுகின்றன.
இப்பொழுதும் நம் நாட்டில் இந்த வழக்கத்தின்
சின்னமாக மாட்டுப் பொங்கலன்றும் அதை அடுத்த சில நாள்களிலும் மாடுகளுக்குக் கரும்பு,
துணி முதலியவற்றைக் கட்டி மஞ்ச விரட்டு விடுகிறார்கள். ஆனால் விவாஹம் இதிலிருந்து பிரிந்து
போய் விளையாட்டு மட்டும் தான் மிஞ்சியிருக்கிறது.
இந்நிலையில், ஏறு தழுவுதல் என்ற அந்த
பழைய காட்சியையும் கல்யாணத்தையும் சிந்தித்துப் பார்ப்பதே ஊக்கமும் உத்ஸாகமும் தருகிறதல்லவா?
அட்டைப் படம் தவிர வேறு ஓவியங்கள்
ஜல்லிக்கட்டு பற்றியவை அல்ல! என்றாலும் அழகிய ஓவியங்கள். அவையும் இதோ உங்கள் பார்வைக்கு!
படம்-2: இப்படம் ஒரு காவியக் காட்சி....
படம்-3: எப்ப வருவாரோ? எந்தன் கலி தீர்க்க....
படம்-4: ஒரு இயற்கைக் காட்சி....
படம்-5: என்ன பேசிக் கொண்டிருப்பார்கள்?
படம்-6: ஓய்வெடுக்கும் யாத்ரீகர்கள்.....
படம்-7: வட இந்திய நாட்டியம்....
படம்-8: என்ன யோசனை?
படம்-9: எல்லா ரூபாய் நோட்டும் செல்லுமா?....
அருமையான படப்பகிர்வு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஆஹா! அற்புதமான ஓவியங்கள் ! தமிழ் நூலகத்தில் தங்கள் பகிர்ந்தது கொண்டு நான் இங்கே வந்தேன். மிக்க நன்றி !
பதிலளிநீக்குதங்களது முதல் வருகையோ?.... மிக்க மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிருஷ்ணமூர்த்தி பாலாஜி ஐயா.
அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @ நொரண்டு.
நீக்குஅருமையான காட்சித் தொகுப்புகள்.இரசித்தேன் நன்றி ஐயா.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம்.
நீக்குஅழகு ஒவியங்கள்...அந்த காலத்தில், பெண் கொடுக்கும் போது மாடும் செல்வமாகச், சீராக கொடுக்கப்படுமாம்....
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அழகு...ஜி நன்றி ஜி பகிர்விற்கு..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குபொக்கிசம்... அருமை...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஉயிரோட்டமுள்ள ஓவியங்கள்.கண்ணுக்கு விருந்து. இப்பதான் பாலகணேஷ் facebook ல ஜெயராஜ்,மாருதி,லதா ஓவியங்களை போட்டு கலக்கிட்டு இருக்கறத பாத்தேன்.
பதிலளிநீக்குபால கணேஷ் [வாத்யார்] இடம் இப்படி நிறைய பொக்கிஷப் படங்கள் உண்டு.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
படங்களும் பதிவும் நன்று!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.....
நீக்குஇப்படிப்பட்ட படங்கள், பளபள என்று வார்னிஷ் பேப்பரில் இருக்கும் ,சிறிய வயதில் நானும் ரசித்ததுண்டு :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குஓவியங்கள் அருமை ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குபடங்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷம்தான்.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.
நீக்குஓவியங்கள் அருமை.
பதிலளிநீக்குபொக்கிஷபகிர்வு அருமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குதேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ள அனைத்து ஓவியங்களும் அருமை.
பதிலளிநீக்குகாலத்து ஏற்ற முதல் படம் வெகு அருமையான தேர்வாக உள்ளது.
பாராட்டுகள், ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குEye-catching photos
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஐயா.
நீக்குபகிர்வுக்கு நன்றி. உங்கள் வீட்டில், உங்கள் அப்பா காலத்து ஆனந்த விகடன், கல்கி தீபாவளி மலர்கள் இன்றும் அப்படியே இருக்கின்றன என்று நினைக்கிறேன். பாராட்டுகள்.
பதிலளிநீக்குஎனது வீட்டில் இல்லை ஐயா. தில்லித் தமிழ்ச் சங்கத்தில் உள்ள நூலகத்தில் இப்படி நிறைய தீபாவளி மலர்கள் உண்டு. அவ்வப்போது ஏதாவது ஒன்று எடுத்து படிப்பது வழக்கம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.
அர்த்தம் பொதிந்த பொக்கிஷங்கள்,,,/
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன் ஜி!
நீக்குஅந்த கால ஒவியங்களில் இருக்கும் அழகு இந்த கால ஒவியங்களில் இருப்பதில்லை
பதிலளிநீக்குஅச்சிட வசதி குறைவான இருந்த காலத்தில் இருந்த ஓவியங்கள் தான் எத்தனை அழகு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
மிக அருமையான பதிவு தோழரே. படங்கள் மிகச் சிறப்பு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சோலச்சி.
நீக்குதோப்பரையில் தண்ணீர் இறைக்கும் ஓவியம் மிகச் சிறப்பாக உள்ளது தோழர்
பதிலளிநீக்குதோப்பரை - புதியதாக ஒரு வார்த்தையைக் கற்றுக் கொண்டேன் சோலச்சி. நன்றி.
நீக்குகடற்த கால நினைவுகளைத் தூண்டின...நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்குகலைநயம் மிக்க சித்திரங்கள்..
பதிலளிநீக்குமனம் மகிழ்ச்சியில் ஆழ்கின்றது..
வாழ்க நலம்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குஏறு தழுவுதல் போய் மஞ்சு விரட்டாகி இப்போது ஜல்லிக் கட்டாகி விட்டது ஏறு தழுவினால்தான் பெண் என்றால் இப்போது பலருக்கும் திருமணம் நடக்காது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
நீக்குஉண்மையில் இவைகள் பொக்கிஷங்கள் தான்! பகிர்ந்தமைக்கு பாராட்டுகளும் நன்றியும் !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குபல ஆண்டுகளாய் தமிழரின் கலாச்சாரத்தோடு கலந்தது 'ஜல்லிக்கட்டு' என்பதை கால் அடி படத்திலேயும் இரண்டடி செய்யுளிலும் சொன்னது 'நச்'
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பி. பிரசாத்.
நீக்கு