செவ்வாய், 31 ஜனவரி, 2017

சாப்பிட வாங்க: பாட்டிசாப்டா - பெங்காலி இனிப்பு….


பெங்காலிகளுக்கு இனிப்பு ரொம்பவே பிடித்தமானது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தானே…. நேற்றைய ஏழு சகோதரிகள் பதிவில் கூட வெல்ல ரஸ்குல்லா பற்றி எழுதி இருந்தேன். அந்தப் பதிவில் சொன்ன பெங்காலி நண்பர் வீட்டிற்கு நேற்று செல்ல வேண்டியிருந்தது.  மாலை அலுவலகத்திலிருந்து அவரது வீட்டிற்குச் சென்று அங்கே தேநீர் அருந்தியபோது கூடவே ஒரு இனிப்பும் சாப்பிடக் கொடுத்தார்கள்.  அந்த இனிப்பு இதுவரை நான் சாப்பிட்டது இல்லை!  வித்தியாசமாக இருக்கவே அதன் பெயரைக் கேட்டேன்! அதன் பெயர் பாட்டிசாப்டா! என்னது பாட்டி சாப்டாளா? இதற்கு தமிழில் அர்த்தம் தெரியுமா எனக் கேட்டு அவர்களுக்கு விளக்கம் சொன்னேன்!

பாட்டிசாப்டா

இரண்டு பாட்டிசாப்டா-வை இந்த பேரனும் சாப்பிட்டேன்!  அது என்ன பாட்டிசாப்டா? நண்பரின் மனைவி இந்த பாட்டிசாப்டாவைப் பற்றி சொன்னாலும், வீட்டிற்கு வந்த பிறகு முதல் வேலை இணையத்தில் இதற்கான குறிப்பினை தேடியது தான்! விடுமுறை நாளில் செய்து பார்க்க வேண்டும் என நினைத்திருக்கிறேன்.  இப்போதைக்கு இணையத்தில் பார்த்த குறிப்புகள் உங்களுக்காக இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்….

தேவையான பொருட்கள்:

ரவை – 250 கிராம், மைதா – 400 கிராம், சர்க்கரை – 200 கிராம், கோவா – 300 கிராம், பால் – 1 லிட்டர், எண்ணெய் – தேவைக்கேற்ப…..

எப்படிச் செய்யணும் மாமு?

பாலை நன்கு சுண்டக் காய்ச்சி, அதில் கோவா, மற்றும் கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். பால்கோவா மாதிரி ரொம்பவும் கெட்டியான பதத்தில் தேவையில்லை, கொஞ்சம் Liquid State-ல் இருந்தாலும் பரவாயில்லை!

ரவை மற்றும் மைதாவினைக் கலந்து, சர்க்கரையையும் சேர்த்து அதில் தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும் [நம்ம கரைச்ச மாவு தோசை பதத்திற்கு….]
தோசைக்கல் சுட வைத்து கரைத்து வைத்த மாவினை தோசை வடிவத்தில் ஊற்றவும்.  கொஞ்சம் வெந்த பிறகு பால்-கோவா கலவையை ஒரு ஸ்பூன் வைத்து, தோசையை சுருட்டி, நன்கு வேக வைக்கவும்.  பொன்னிறமாக வெந்த பிறகு தட்டில் எடுத்து வைத்து சுடச் சுட சாப்பிடலாம் பாட்டிசாப்டா! 

இது ரொம்பவும் பிடித்தமான இனிப்பு வகையாம்!  உங்களுக்குப் பிடிக்குமா எனத் தெரியவில்லை இருந்தாலும், கொஞ்சமாக செய்து பார்க்கலாம்!

படங்கள் மற்றும் குறிப்புகள் பாங்காங் எனும் தளத்திலிருந்து…. 

என்ன நண்பர்களே, நீங்களும் இந்த ”பாட்டிசாப்டா”வை செய்து பார்ப்பது மட்டுமல்லாது சாப்பிடவும் செய்வீர்கள் தானே!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

35 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வித்தியாசமாகத்தான் இருந்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 2. சுலபக்குறிப்பு. செய்யத்தான் நேரமாகும். பால் சுண்டவே நேரமாகிடும். ஆனால் செய்து சாப்பிட ஆவல். குறித்துக்கொண்டுள்ளேன். நல்லா வேகவைக்கணும் என்று என்னதான் சிம்மில் வைத்து தோசைக்கல்லில் வைத்திருந்தாலும் கருகி விடாதோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுலபம் தான். செய்து பார்த்தால் சொல்லுங்க ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. ஜி நான் இந்த இனிப்பின் பெயரைக் கேட்டுருக்கிறேன்...ஆனால் செய்தது இல்லை..நான் சாப்பிட முடியாது என்றாலும் செய்து பாரத்திட ஆவல்...குறித்துக் கொண்டேன். நன்றி ஜி.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாப்பிட முடியாது என்றாலும் செய்து பார்க்க உங்களுக்கு இருக்கும் ஆவல் மகிழ்ச்சியூட்டுகிறது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 4. இனிப்பு இனிப்பு தான்!.. அருமை..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 5. நானும் பாட்டியும் சாப்பிட்டோம் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... உங்களுக்கும் பாட்டிக்கும் பிடித்திருந்ததா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 6. புதுவகையான இனிப்பு, இனிப்பு தோசை என்று அம்மா செய்வார்கள் மைதா, ரவை, சீனீ, தேங்காய்பூ கலந்து நெய்விட்டு தோசை .அது போல் இருக்கிறது சூடாய் இருக்கும் போது சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சூடாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்... நான் சாப்பிட்டது கொஞ்சம் ஆறிய பிறகு...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   நீக்கு
 9. பாட்டிசாப்டா - பெயரை மறக்கவே முடியாது... :))) ஒருமுறை செய்துபார்த்துவிடத் தூண்டுகிறது படமும் செய்முறையும்.. நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம் மறக்கமுடியாத பெயர் தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி ஜி!

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 11. பாட்டி சாப்பிட்டாளோ இல்லையோ,எனக்கு சாப்பிட ஆசையா இருக்கு :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாய்ப்பு கிடைத்தால் சாப்பிடுங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 12. சுவைத்துப் பார்க்கத் தூண்டுகிறது ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 13. ஆஹா !! படமே செமையா இருக்கே ..இதை இங்கே crepe என்று செய்வாங்க பில்லிங் மட்டும் பிரெஷ் க்ரீம் தேங்காய் ஸ்வீட் இப்படி இருக்கும்
  பாட்டி சாப்டா வீட்ல இருக்கவுங்களுக்காக செய்து பார்க்கிறேன் தேங்க்ஸ் ரெசிப்பிக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுட்டியில் ஆங்கிலத்தில் இருக்கிறது. அதையும் பாருங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.....

   நீக்கு
 14. பதில்கள்
  1. புதுசா தான் இருந்தது எனக்கும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கும்மாச்சி.

   நீக்கு
 15. வெங்கட்,

  பாட்டி சாப்பிட்டா மட்டும் போதுமா, நானும் சாப்பிடனும். கொஞ்சம் பார்சல் அனுப்பமுடியுமா?

  பதிவு சுவைக்கிறது.

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்சல் தானே... அனுப்பி வைத்தால் போகிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவில் பிள்ளை....

   நீக்கு
 16. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது....நானும் பாட்டி சாப்பிட்டாளா என்றே படித்துவிட்டேன். ரசனையாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விக்கிபீடியா போட்டி பற்றிய தகவல்களை உங்கள் தளத்தில் படிக்கக் காத்திருக்கிறேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 17. சூப்பர் !சாப்ட்ட உணவ சமையல் செய்வது எப்படினே எழுதிட்டீங்களே !! செம :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன் துரை.....

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....