நெடுஞ்சாலைகளில்
பயணம் செய்யும் போது வழியில் நல்ல கழிப்பறை வசதிகள் கிடைப்பதில்லை என்பது பயணம் செய்யும்
ஒவ்வொருவருடைய குறை! போலவே நல்ல உணவகங்களும் கிடைப்பதில்லை. அப்படி கிடைக்கும் உணவகங்களில்
உணவின் தரம் மிக மட்டமாக இருக்கும். உணவு நன்றாக
இருந்தால் அதற்கான விலை ரொம்பவே அதிகமாக இருக்கும். இப்படி எல்லாவற்றிலும் பிரச்சனை என்றால் எங்கே சாப்பிடுவது?
பயணம் செய்யும்போது விலை பற்றி கவலைப் படாமல் வயிற்றுக்குக் கெடுதல் செய்யாத நல்ல உணவாகக்
கிடைக்கிறதா என்பதை மட்டுமே பார்க்க வேண்டியிருக்கிறது.
தமிழகத்தில்
நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது, குறிப்பாக அரசு/தனியார் பேருந்துகளில் பயணம்
செய்யும் போது அவர்கள் நிறுத்தும் உணவகங்கள் மிகவும் மோசமான அனுபவங்களையே எனக்குத்
தந்திருக்கின்றன. குறிப்பாக சென்னையிலிருந்து
திருச்சி செல்லும் போது விழுப்புரம் அருகே ஏதோ ஒரு பாடாவதி உணவகத்தில் தான் நிறுத்துவார்கள்
எப்போதும். அங்கே ஒரு முறை உணவு சாப்பிட்டால்
போதும். அதற்குப் பிறகு நிச்சயம் அங்கே சாப்பிடத் தோன்றாது – பட்டினி கிடந்தாலும் கிடப்பேனே
தவிர அங்கே சாப்பிட மாட்டேன் என்று சபதம் எடுத்து விடலாம்! அப்படி இருந்தது அந்த உணவகமும்
அவர்கள் தரும் உணவும்!
ஒரு
முறை திருச்சியிலிருந்து மதுரை வழியே திருவனந்தபுரம் செல்லும் போது – அதுவும் இரவு
நேரப் பயணம் வழியில் ஒரு உணவகத்தில் நிறுத்தினார்கள் – அத்துவானக் காட்டில் இருந்த
அந்த உணவகத்தில் தேநீர் 20 ரூபாய்! அதுவும் தேநீர் என்ற பெயரில் சுடுநீர்! விலை பற்றி
கேட்டால் அடாவடியான பதில் – வேணும்னா குடி, இல்லைன்னா போயிட்டே இரு! உணவு பற்றி சொல்லவே
வேண்டாம். அவர்கள் வைத்தது தான் விலை – அவர்கள் நினைப்பது தான் தரம்! சாப்பிட வேண்டியது
பயணியின் தலையெழுத்து என்பது போன்ற நினைவு தான் அவர்களுக்கு!
வடக்கே,
பல ஊர்களுக்கு பயணிக்கும் வேளையில் நெடுஞ்சாலைகளில் சில குறிப்பிட்ட ஊர்களில் மட்டும்
நல்ல உணவகங்கள், வரிசையாக இருக்கின்றன. அவற்றைத் தவறவிட்டால் அதன் பிறகு நல்ல உணவகங்களோ,
நல்ல உணவோ கிடைப்பது கடினம். செல்வதற்கு முன்னரே
அதைப் பற்றி தெரிந்து கொண்டு தான் பயணிப்போம். போலவே குஜராத் மாநிலத்திலும் நெடுஞ்சாலைகளில்
நல்ல உணவகங்கள் இருக்கின்றன. குஜராத்தி தாலி
– ரொட்டி, சப்ஜி, கிச்டி, அப்பளம், மோர் என சுவையான உணவு கிடைத்து விடும். அல்லது சப்பாத்தி,
சப்ஜியும் கிடைத்து விடுகிறது.
சமீபத்தில்
குஜராத் மாநிலத்தில் பயணம் செய்தபோது ராஜ்கோட் அருகே ஒரு உணவகத்தில் தேநீர் அருந்த
வண்டியை நிறுத்தினோம். அந்த உணவகத்தின் பெயர்
“Horn OK Please!”. Bansal Petroleum என்ற
பெட்ரோல் பங்க் உரிமையாளர் பெட்ரோல் பங்க் வளாகத்திலேயே நடத்தும் உணவகம் தான் இந்த
Horn OK Please! முழுக்க முழுக்க நெடுஞ்சாலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் தான் இந்த உணவகத்தின்
Theme! ஒரு லாரியின் முகப்பினை வைத்து அதிலிருந்து உணவு தருகிறார்கள். உணவகத்தின் சுவர்களில் லாரிகளில் எழுதப்பட்டிருக்கும்
வாசகங்களை ஆங்காங்கே எழுதி வைத்திருக்கிறார்கள்.
தவிர
அவர்கள் தரும் மெனு கார்டு கூட ஒரு வாகனத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது! பஞ்சாபி,
ராஜஸ்தானி, சைனீஸ், சௌத் இண்டியன், ஸ்னாக்ஸ் என அனைத்தும் இங்கே கிடைக்கும்! ஒவ்வொரு
பக்கத்திலும் கொடுக்கப்பட்ட உணவு வகைகளுக்கு வாகனம் சம்பந்தப்பட்ட பெயர்கள்! –
Soups மற்றும் Starters இருக்கும் பக்கத்திற்கு Liquid Checkup, Self Lagaao என்று
தலைப்பு! ஒவ்வொரு பக்கத்திலும் இப்படி தலைப்பு கொடுத்து சிறப்பாக மெனு கொடுக்கிறார்கள்!
வித்தியாசமான
இந்த உணவகம் ஒரு Chain of Restaurants. இதே
பெயரில் பல இடங்களில் அமைத்திருக்கிறார்கள் என்றாலும், நான் பார்த்தது ராஜ்கோட் அருகே. பெங்களூருவிலும் இந்த பெயரில் உணவகம் இருக்கிறது.
வித்தியாசமான பெயர், வித்தியாசமான தீம் என இருக்கும் இந்த உணவகம் ராஜ்கோட்டில் மிகவும்
பிரபலம். வழிப்போக்கர்கள் மட்டுமன்றி, ராஜ்கோட்
வாசிகளும் சனி, ஞாயிறில் இங்கே உணவு உண்ண வந்து விடுகிறார்கள்!
பெரும்பாலான
வட இந்திய உணவகங்கள், குறிப்பாக நெடுஞ்சாலை உணவகங்கள் போலவே இங்கேயும் வெளியே நாற்காலிகள்
தவிர கயிற்றுக் கட்டில்களும் போட்டு வைத்திருக்கிறார்கள். கட்டிலில் அமர்ந்து எதிரே ஒரு சிறிய ஸ்டூலில் உணவை
வைத்து சாப்பிட்டு, வேண்டுமெனில் ஒரு குட்டித் தூக்கம் போடலாம்! அல்லது கொஞ்சம் ஓய்வெடுத்துக்
கொண்டு பிறகு வாகனத்தினைச் செலுத்தலாம்! நாங்களும் இங்கே கொஞ்சம் ஸ்னாக்ஸ் மற்றும்
தேநீர் வாங்கிக் கொண்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டோம்.
வயிற்றுக்கு
சுத்தமான உணவு கிடைப்பது தவிர, இங்கே இருக்கும் கழிப்பறை வசதிகளும் சுத்தமாகவே இருக்கிறது
என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
ராஜ்கோட்
பக்கம் சென்றால், இந்த இடத்தில் உணவு சாப்பிடலாம்! ப்ரீத்திக்கு நான் கேரண்டி என்று
விளம்பரத்தில் சொல்வது போல Horn OK Please உணவகத்தின் சுத்தத்திற்கு நான் கேரண்டி!
வித்தியாசமான
வேறு ஒரு உணவகம்/உணவு பற்றிய குறிப்புகளை வேறொரு பதிவில் சொல்கிறேன்.
மீண்டும்
ச[சி]ந்திப்ப்போம்…..
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
நெடுஞ்சாலை உணவகம் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குநல்ல பகிர்வு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர் ஜி!
நீக்குநல்ல உணவகங்களை அறியத் தந்தது அருமை..
பதிலளிநீக்குதமிழகத்தில் இரவுப் பயணங்களின் போது -
நெடுஞ்சாலை உணவகங்களை நினைத்துப் பார்க்காமல் இருப்பதே நல்லது...
ஆனால். அங்கேயும் கூட்டம் அடித்து மோதிக்கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது?..
அங்கேயும் கூட்டம் - வேறு வழியில்லை என்பதாலோ...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
கெங்கட்ஜியே க்யாரண்டி கொடுத்தாச்சு அப்புறம் என்ன!!! அது சூப்பர் உணவகமாகத்தான் இருக்கும்!!!
பதிலளிநீக்குகீதா: தென்னகத்தில் குறிப்பாகத் தமிழகத்தில் நெடுஞ்சாலை உணவகங்கள் மிக மிக மோசம். அடாவடித்தனம் அதிகம். வட இந்தியாவிலும் உண்டு என்றாலும் தென்னகம் போல் இல்லை. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் உணவகம் சூப்பராக இருக்கிறதே!! நீங்கள் அக்மார்க் குத்திவிட்டீர்கள்! ஸோ குறித்துக் கொண்டாயிற்று!
பகிர்விற்கு மிக்க நன்றி ஜி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குவட இந்தியாவில் நெடுஞ்சாலை உணவகங்கள் சிறப்பாகவே செயல் படுகின்றன. ஆனா நம்மாளுக இட்லி தோசைலேந்து பூரி சப்பாத்திக்கு மாற மாட்டேங்குறாங்களே....
பதிலளிநீக்குஎங்கே சென்றாலும் இட்லி தோசை தேடுவது பலருக்கும் இயல்பு... வடக்கிலேயே இருப்பதால் எனக்கு சப்பாத்தி தான்!
நீக்குதங்களது முதல் வருகை மகிழ்ச்சி தந்தது. தொடர்ந்து சந்திப்போம்.....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆல் இஸ் வெல்!
கடவுள் புண்ணியத்தில் விழுப்புரம் நடுவழி கொள்ளையடிச்சான் ஹோட்டலில் இதுவரை சாப்பிட்டதே இல்லை. அஞ்சு ரூபாய் கொடுத்து மூக்கைப் பொத்திக் கொண்டு சூ சூ. அதுவும் வேற வழியில்லாமல்.
பதிலளிநீக்கு(இனியாவது சென்னை - நாகர்கோவில் பஸ்ஸை ராஜ்கோட் வழியா விடுங்கப்பா!)
மூக்கைப் பொத்திக்கொண்டு.... வேறு வழியே இல்லை! மூக்கைப் பொத்தி மூச்சு முட்டினாலும் தவறில்லை என்று தோன்றச் செய்யும் இடங்கள்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....
Horn OK Please ...wow சூப்பர்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
நீக்குபாராட்டப்பட வேண்டிய விஷயம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஸூப்பர் ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஎன் மகன் அங்கெல்லாம் பயணிப்பான் அவனுக்குத் தெரிவிப்பேன்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
நீக்குஅறிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.
நீக்குஅட அட. நீங்கள் சொல்லும் போதே அங்கே சாப்பிட வேண்டுமென்று நா சொல்கிறதே! அருமை. சிறப்பான உணவகம் , சிறப்பான பதிவு. நமது வலைத்தளம் : சிகரம்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.
நீக்குசிறப்பான உணவகம்தான். உணவகம் நன்றாக இருந்தாலே, பயணத்தின்போது சாப்பிட யோசிப்போம். சுமார்னா, அந்தப் பக்கமே திரும்பமாட்டேன். (பொதுவாக, டிரைவர்/கண்டக்டருக்கு நல்ல உணவும், பயணிகளுக்கு ரொம்ப சுமார் உணவும்தான் கொடுப்பார்கள். இல்லைனா, டிரைவர்கள் அங்கே நிறுத்தமாட்டார்கள், புகார் செய்வார்கள் என்பதால்) நான் சென்னை-திருச்சி சென்றபோது, நெடுஞ்சாலையில் (பண்ருட்டி/கடலூர் அருகே?) நிறுத்தினார்கள். அங்கு கும்பகோணம் காஃபி, தரமான ஸ்னாக்ஸ், முந்திரி வகையறா போன்றவை இருந்தனல். கொடைக்கானல்-சென்னை வழியில், வத்தலக்குண்டு என்ற இடத்தில், தனியார் காம்ளெக்ஸில் (ஈடன் கார்டன் என்று ஞாபகம்) நிறுத்தினார்கள். ரொம்ப சுத்தமாக இருந்தது. எல்லா சௌகரியங்களும் இருந்தன. ஆனால் அதற்கு அடுத்து, சென்னை அருகே நிறுத்திய இடம் ரொம்ப மோசமாக இருந்தது. ஆண்களுக்குப் பரவாயில்லை. பெண்களுக்குத்தான் கஷ்டம்.
பதிலளிநீக்குநெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது பெண்கள் படும் அவஸ்தை சொல்ல முடியாதது தான்..... இந்தியா இன்னும் நிறையவே முன்னேற வேண்டும். மக்களும்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.