ஞாயிறு, 22 ஜனவரி, 2017

சிங்கத்தின் இருப்பிடத்தில் – புகைப்பட உலா…..


குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காட்டுப் பகுதிக்குச் சென்றபோது எடுத்த சில புகைப்படங்கள் இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கிர் என்ற பெயரில் பிரபலமாக இருந்தாலும், இந்த கிர் இருக்கும் கிராமத்தின் பெயர் சாசன் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  இதோ சாசன் கிர் பகுதியில் எடுத்த சில புகைப்படங்கள்…..


படம்-1: ஒண்டிக்கு ஒண்டி வரியா? தீர்ப்பு சொன்ன நீதிபதியைப் பார்த்துக் கேட்கிறதோ?


படம்-2:  இலைகளின் வண்ணத்தோடு ஒத்துப் போகும் சிங்கத்தின் வண்ணம்…..


படம்-3: சாலையில் படுத்துக் கொண்டு எங்களைப் பார்த்த சிங்கம் ஒன்று…..

உனக்கு அவசரம்னா ஒதுங்கிப் போ! நான் எழுந்து வழிவிட முடியாது!


படம்-4: ஒரு தடவை சொன்னா புரியாதா? ஒதுங்கிப் போ! சற்றே முறைப்புடன்….


படம்-5: வம்பு பண்ணா, நாங்களும் வருவோம், பார்த்துக்க….

பக்க வாட்டிலிருந்து மேலும் இரண்டு சிங்கங்கள்…..


படம்-6: எழுந்து வரவா, இல்லை நீயா ஓடிப் போயிடுறயா?


படம்-7: திரும்பவும் வார்னிங் தரேன்… ஓடிடு!


படம்-8: அட பயபுள்ள பயப்படாம ஃபோட்டோ எடுத்துட்டு இருக்கே!



படம்-9: ஃபோட்டோ மட்டும் எடுத்துக்கறதுன்னா ஓ.கே…  வம்பு கிம்பு பண்ணியோ மவனே… நீ காலி!





படம்-10: வேற வழியில்ல….  தாக்கத் தயாராக வேண்டியது தான்!





படம்-11: சிங்கத்தின் கால் அடிகள்…..



படம்-12: சிங்கக் கோட்டையில் மயிலுக்கு என்ன வேலை?


படம்-13: கருப்பு வெள்ளை க்கு இருக்கும் அழகு கலருக்கு இருப்பதில்லை!


படம்-14: 180 டிகிரி தலையைத் திருப்பிப் பார்க்க என்னால் முடியும் – உன்னால முடியுமா?


படம்-15: ரொம்ப நேரமா பார்த்துட்டே இருக்கேன்…  நீ யாரு? 


படம்-16: நான் தனியா இருக்கேன்னு சல்மான் கிட்ட யாரும் சொல்லிடாதீங்கப்பு…..


படம்-17: வனச்சாலையைக் கடக்க முடியாம வண்டி வருதே…..




படம்-18: ஐயா, சாலையைக் கடந்தாச்சு….  இப்ப ஃபோட்டோ புடிச்சுக்கோ…..



படம்-19:  எங்க சோடி நல்லாக்கீதா? சொல்லேன்….

 படம்-20: டாடா… அம்மா முன்னாடி போயிட்டாங்க…. நானும் போறேன்….



என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? சொல்லுங்களேன்…..

நாளை வேறொரு பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

24 கருத்துகள்:

  1. படங்கள் நல்லாருக்கு. கிர் காடுகள் நான் போகவேண்டிய லிஸ்டில் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சென்று வாருங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்....

      நீக்கு
  3. அழகோ அழகு வெங்கட்ஜி!!! அதுவும் கமென்ட்ல மான் சல் மானுக்கு விட்ட ரகசியத்தை ரசித்தோம்....சிங்கம் கமென்ட்ஶும் ...பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல..

    நாங்கள் கிர் ப்ளான் போட்டு புனே, மும்பை வரை மட்டுமே போக முடிந்தது...தவிர்க்க முடியாத காரணத்தினால் டூர் ப்ளான் கட் செய்ய வேண்டியதானது...அப்புறம் மகன் செல்லும் முன் வரை செல்ல முடியவில்லை. அது போல் காசிரங்கா வும்...அதை வட கிழக்கு மாநிலங்கள் ப்ளான் போட்டு வைத்தும் வீட்டில் எதிர்பாராத நிகழ்வு நடக்க போக முடியாமல் ஆனது..

    படங்களுக்கு மிக்க நன்றி ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சென்று வாருங்கள்.... எங்கே போயிவிடப்போகிறது கிர் வனமும், காசிரங்காவும்.... நேரம் அமையும்போது சென்று வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  4. படங்களும் அழகான சொல்லாட்சியும் .. ஆகா!..

    எழிலான படங்கள்.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  5. சிங்கத்தை அதன் குகையிலேயே - இடத்திலேயே சந்தித்த சிங்கம் வெங்கட்! பாராட்டுகள். படங்கள் ஜோர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்கம் வெங்கட்! அட நீங்க வேற யாராவது சுட்டுட போறாங்க! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. படங்கள் மட்டுமல்ல பொருத்தமான கமெண்ட்ஸும் சூப்பரா ரசிக்க முடிஞ்சது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆல் இஸ் வெல்....

      நீக்கு
  7. ஆகா
    அற்புதம்
    காணக் கிடைக்காத காட்சிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. பெயரிலேயே மான் இருக்க ,மானை ஏன் சுட்டாரோ சல்மான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  10. ராமரின் பர்ணசாலை முன் ஓடி விளையாடிய மாரீசப்பொன் மானோ சிங்கம் சிங்கிளாக எப்போதும் ரசிக்க வைக்கும் உங்கள் காமெண்டுகள் சிரிக்க வைத்தன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  11. புகைப்படங்களும் அவைகளுடன் தாங்கள் தந்திருக்கும் இரசனைமிக்க குறிப்புகளும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஙகளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  12. சிங்கம் மொறைக்கிற மாதிரி இல்ல , உங்க போட்டோக்கு ஸ்மைல் பண்ற மாதிரி ல இருக்கு :) , மான் புகைப்படம் செம!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மான் படம் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன் துரை.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....