எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, January 1, 2017

நிலாச்சோறும் புது வருடக் கொண்டாட்டமும்….நெய்வேலியில் பல முறை நிலாச் சோறு சாப்பிட்டிருக்கிறோம். அம்மாவோ அல்லது அத்தைப் பாட்டியோ [அம்மாவின் அத்தை – இவர்கள் பற்றி எழுத வேண்டும்… என்னவொரு மனுஷி!] குழம்பு சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என தனித்தனியாகப் பிசைந்து எங்கள் எல்லோரையும் சுற்றி அமர வைத்து கையில் உருண்டை உருண்டையாக உருட்டிப் போடுவார்கள்.  ”எங்கள்” என்பதில் எங்கள் மூவரைத் தவிர பக்கத்து வீட்டு நண்பர்கள், வீட்டுக்கு வந்திருந்த சித்தப்பாக்களின் குழந்தைகள் என பலரும் அடக்கம். அது ஒரு கனாக்காலம்… 

சாதாரணமாகச் சாப்பிடுவதை விட அப்படி கைகளில் பிசைந்து போடும்போது கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவோம்.  பாசத்தோடு பிசைந்து கொடுக்கும் போது அதிகமான அளவு சாப்பிடுவது கூடத் தெரிவதில்லையே. ஒரு சின்ன வாழை இலைக் கீற்றில் தொட்டுக்கொள்ள பொரியல், ஊறுகாய் என வைத்துக் கொண்டு, கையில் போட்ட உருண்டைகளோடு உணவு உண்ண அமிர்தம்! அதுவும் தயிர் சாதம் சாப்பிடும்போது கட்டை விரலால் ஒரு குழி ஏற்படுத்த ஒரு சிறு கரண்டியால் அக்குழியில் ஒரு சொட்டு வற்றல் குழம்பு விடுவார் அத்தைப் பாட்டி!

இப்படி எல்லாம் இருந்தது வெறும் நினைவாக மட்டுமே இருக்கிறது. இன்றைய காலகட்டங்களில் இப்படி கைகளில் போட்டுக் கொடுக்க, கொடுத்ததைச் சாப்பிடுவதை விடுங்கள், கீழே அமர்ந்து சாப்பிடும் பழக்கமே போய்விட்டது! நிறைய வீடுகளில் ஹோட்டல்கள் போல டைனிங் டேபிள் சாப்பாடு தான்! இல்லை என்றால் கைகளில் தட்டை ஏந்திக்கொண்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்தபடியே தான் சாப்பிடுகிறார்கள் – தட்டில் என்ன இருக்கிறது, என்ன சாப்பிடுகிறோம் என்பது கூடத் தெரியாமல் சாப்பிடும் காலம் இது!

அத்தைப் பாட்டி, அம்மா போல இப்போது யாரும் சாதம் பிசைந்து கைகளில் போட மாட்டார்களா என்று பல முறை நினைத்ததுண்டு. அதுவும் தலைநகர் தில்லியில் தனியாக வாசம் என்பதால் தனி ஒருவனுக்கு சமைத்து தனியாகவே உண்பது வழக்கமாக இருக்கையில், இங்கே யார் வந்து கைகளில் போட்டுச் சாப்பிடச் சொல்லப் போகிறார்கள்! இந்தக் குறை என் போன்றே, இங்கே இருக்கும் சில குடும்பத்தினருக்கும் உண்டு! அவ்வப்போது இந்த வழக்கம் பற்றியும், நிலாச்சோறு சாப்பிடும் ஆசை பற்றியும் பேசும்போது திடீரென முடிவெடுத்து சில மாதங்கள் முன்னர் நண்பர் வீட்டில் இப்படிச் சாப்பிட்டோம். 

நேற்று காலையிலேயே அலுவலகத்திற்குச் சென்று மாலையில் வீடு திரும்பும்போது ஒரு அழைப்பு! இன்று இரவு நிலாச்சோறு – அதன் பிறகு புத்தாண்டை வரவேற்க ஒரு சிறு நிகழ்வு – இரவு ஒன்பது மணிக்கு வந்து விட வேண்டும் எனச் சொல்ல, ஆஹா புத்தாண்டை இப்படி வரவேற்க ஒரு வாய்ப்பு என, சரி எனச் சொல்லிவிட்டேன்.  சிறுவர்கள், பெரியவர்கள் என மொத்தம் 20 பேர் – அனைவருக்கும் உணவு சமைப்பது கடினமான வேலை. இருந்தும் மிகச் சிறப்பாக செய்து வைத்திருந்தார்கள். முள்ளங்கி, உருளைக்கிழங்கு சாம்பார், மாதுளை போட்ட தயிர் சாதம், தொட்டுக்கொள்ள மிளகாய் பஜ்ஜி, வெங்காய பகோடா என simple but delicious மெனு!

நிலாச் சோறு என்று சொன்னாலும், தில்லியில் தற்போது நிலவும் தட்பவெப்ப நிலையில் வெட்ட வெளியில் அமர்ந்து சாப்பிடுவது முடியாத ஒன்று! வீட்டுக்குள்ளேயே நண்பரின் திருமதியைச் சுற்றி அமர்ந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் உருண்டை உருண்டையாக சாதம் கொடுத்தார் அவர். முதலில் குழந்தைகளுக்கு, அதன் பிறகு ஆண்களுக்கு, பின்னர் அனைத்து பெண்களும் அமர்ந்து கொண்டு என அனைவரும் பழைய நினைவுகளோடும் குதூகலத்தோடும், ஒருவரை ஒருவர் பரிகாசம் செய்தபடி சாப்பிட்டோம்.  இப்படி அடிக்கடிச் சாப்பிட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது தான் அனைவருடைய விருப்பமும்!அதன் பிறகு புத்தாண்டை வரவேற்க, தலைநகரின் Hotel Ashoka-விலிருந்து Cake தருவித்திருந்தார் நண்பர்.  இருப்பதிலேயே சிறியவர் ஒருவர் Cake வெட்ட, புத்தாண்டு நல்ல விதமாக பிறந்தது.  நள்ளிரவில் ஒரு சிறு துண்டு Cake-உம், சில துண்டுகள் Chips-உம் சாப்பிட்டு அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டோம். நண்பர்கள் அனைவருக்கு வாழ்த்துச் சொல்லி அங்கிருந்து புறப்பட்டபோது இரவு 12-30 மணி!

வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தேன்! வழியில் இருக்கும் CNG Pump அருகே Gas fill செய்ய வாகன வரிசை….  அதில் ஒரு வாகனத்தின் எல்லா கதவுகளும், பின்புற Boot-உம் திறந்திருக்க, அதிலிருந்து பஞ்சாபி பாட்டு அதிரடியாக ஒலித்துக் கொண்டிருந்தது. ஐந்தாறு சீக்கிய இளைஞர்கள் எந்த வித கவலையுமின்றி உற்சாகமாக பாடியபடியும், பங்க்ரா நடனம் ஆடியபடியும் புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்….. சில நிமிடங்கள் அவர்களின் நடனத்தைப் பார்த்து ரசித்த பிறகு வீடு திரும்பினேன்!புத்தாண்டு நல்லவிதமாய் தொடங்கி இருக்கிறது.  நல்ல விதமாகவே தொடரட்டும்.  அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்…

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

44 comments:

 1. நிலாச்சோறு சாப்பிட்டு ,புத்தாண்டை வரவேற்று, நல்ல விதமாய் இந்த ஆண்டை தொடங்கி இருக்கிறீர்கள். இந்த ஆண்டில் எல்லா நலமும் வளமும் பெற எனது உளங்கனிந்த நல் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   Delete
 2. பழைய நிநைவுகளை மீட்டுவிட்டீர்கள் ஜி......என் பாட்டி இப்படி செய்ததுஉண்டு. நான் என் மகனுக்கு, வீட்டிலுள்ள குழந்தைகளுக்குச் செய்வதுண்டு. மகன் ஊருக்குப் போகும் முன்னர் கூட இப்படிச் சாப்பிட்டுவிட்டுத்தான் சென்றான்....இப்போது பேசும் போது கூட அவன் சொல்கிகிறான் ம்மா எப்பம்மா னீ என் கைல சாதம் உருட்டி நான் சாப்பிட போறேன்...வெயிட்டிங்...என்று...

  நன்றாக என்ஜாய் செயதிருப்பீர்ககளே...ஜி..நல்ல அனுபவம்...

  புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜி தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்...ரோஷினி குட்டிக்கு. ஸ்பெஷலாக....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   Delete
 3. நிறைவான மலரும் நினைவுகள்..

  தங்களனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   Delete
 4. ஞாபகம் வருதே ஞாபகம் வருதே புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   Delete
 5. அன்போடு தயாரிக்கப் பட்ட அருமையான விருந்து. நிலாச் சோறு அனைவருக்கும் நினைவுகளை மலரச் செய்கிறது. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி ஜி!

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   Delete
 6. அருமை...

  இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   Delete
 7. http://sivamgss.blogspot.com/2008/09/blog-post_4319.html// ஹிஹிஹி, நாங்களும் எழுதி இருக்கோம்ல! :)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவும் இதோ படிக்கிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

   Delete
 8. Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.....

   Delete
 9. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சார் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி விஜயன் துரை.....

   Delete
 10. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 11. சின்ன வயதில் அம்மா, அக்காக்கள், அண்ணன்கள், தம்பி என எல்லாரும் இரவு சாப்பாட்டை எப்பவும் வெளியில் அமர்ந்துதான் சாப்பிடுவோம்... அதுவும் முழுநிலா நாளில் விளக்கு இல்லாம நிலா வெளிச்சத்தில் சாப்பிடுவோம்... என்ன இனிமையான நாட்கள் அவை...

  இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 12. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  நிலாச் சோறு அனுபவங்கள் இனி வரும் தலைமுறைக்கு கிடைக்குமா

  குழந்தைகளோடு ஒருமுறை இப்படிக் கொண்டாட வேண்டும்

  எங்கே அந்த பஞ்சாபி பசங்கள் ஆடிய காணொளி என்று தேடினேன்..
  எல்லா நேரத்திலும் அப்படி முடியாது இல்லையா ..
  ரசனை

  ReplyDelete
  Replies
  1. பஞ்சாபி பசங்கள் ஆடிய காணொளி! - அந்த நேரத்தில் காணொளி எடுக்கும் சூழல் இல்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி மது.

   Delete
 13. 'நிலாச்சோறு' என்பதே ஒரு கவிதை அனுபவம்..! அருமை ! புத்தாண்டு வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி பி. பிரசாத்.

   Delete
 14. நல்ல அனுபவம். புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஸ்ரீராம்.

   Delete
 15. வணக்கம் சகோதரரே

  நிலா சாப்பாடு குறித்த தங்கள் பகிர்வு அருமையாய் இருந்தது. எனக்கும் என் மலரும் நினைவுகளை நினைக்கச் செய்தது. உண்மையிலேயே மறக்க முடியாத அந்த நாட்கள் இனிமையானவை. தாங்கள் இந்த வருடத்தின் ஆரம்பத்தை நிலா சோற்றுடன் துவக்கி புத்தாண்டை வரவேற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். வாழ்த்துக்கள்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 16. நிலாக் காயுது சோறு தின்ன நல்ல நேரமென்று பாடலாமோ :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி பகவான்ஜி!

   Delete
 17. நிலா சோறுடன் மலர்ந்தது புத்தாண்டு மகிழ்ச்சி.
  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி மாதேவி.

   Delete
 18. புத்தாண்டு வாழ்த்துக்கள் !! :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி மஹி...

   Delete
 19. நிலாச்சோறு என்றில்லை.வேலை அதிகமான ஒர் பொழுதில் சமைக்க நேரம் இல்லாமல் போனால் மீந்திருந்தும் உணவுகளை சேர்த்து குழைத்து எனக்கொரு பிடி,உனக்கொரு பிடி என வேலை செய்யும் தம்பிமாருக்கெல்லாம் கொடுப்பேன். சாப்பிட்டு விட்டு ஊரில் அம்மா கையால் சாப்பிட்ட நினைவு வருதுக்கா என சொல்லும் போது தித்திக்கும்.

  ஊரில் இருந்தது 12 வயது வரை தான் என்பதனால் அப்போவெல்லாம் இரவு உணவு நிலாவெளிச்சத்தில் தான். வீட்டு முற்றத்தில் அமர்ந்து அம்மா பிரட்டி தரும் சாப்பாட்டை சாப்பிடுவோம். அதே போல் காலையில் அப்படித்தான், மீந்திருக்கும் சோற்றில் தண்ணீரை ஊற்றி வைத்திருப்பார். அதில் உப்பும் தேங்காய்ப்பூவும் சேர்த்து பிரட்டி கையில் அள்ளி தருவார். அதெல்லாம் கனாக்காலம்.

  டெல்லியிலும் இந்த மாதிரி சாத்தியம் என்பதே ஆச்சரியம் தான்.

  ReplyDelete
  Replies
  1. தில்லியில் நண்பர் குழாம் உண்டு. இப்படிச் சிலர் இருப்பதால் தான் எனக்கும் பொழுது போகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி நிஷா.

   Delete
 20. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  சாதம் கையில் போட்டுச் சாப்பிடுவது.. அதன் இனிமையே இனிமை (அத்தோடு, தட்டு அலம்பும் வேலையும் இல்லை)

  ReplyDelete
  Replies
  1. தட்டு அலம்பும் வேலை இல்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 21. அமாவாசை முடிந்த ஓரிரு தினங்களில் நிலாச் சோறா. புதிய அனுபவம் பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. அமாவாசை அன்று கூட நிலாச்சோறு சாப்பிடலாம்! யார் கேட்கப் போகிறார்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி GMB ஐயா.

   Delete
 22. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....