வியாழன், 26 ஜனவரி, 2017

பொங்கும் தேசிய உணர்வு


அன்பின் நண்பர்களுக்கு,

வணக்கம். 

 தலைநகர் தில்லியின் Central Park-ல்
பட்டொளி வீசிப் பறக்கும் நமது மூவர்ணக் கொடி….

இன்று 26 ஜனவரி – இந்திய குடியரசு தினம். அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். 

”அது என்னமோ தெரியல, உன்னை நினைச்சு பார்க்கும் போது கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது, ஆனா எழுதணும் நினைச்சா….” குணா கமல் மாதிரி சுதந்திர தினம், குடியரசு தினம் வந்துட்டா போதும் நம் மக்கள் அனைவருக்கும் தேசிய உணர்வு அப்படியே அருவி மாதிரி கொட்டும்…..  அடுத்த நாளே, “Bloody India, என்ன நாடுடா இது…. எங்கப் பார்த்தாலும் குப்பை, ஊழல், எல்லாமே திருட்டுப் பசங்க, யாருமே வேலை செய்யறதில்லை… என்னைத் தவிர மத்தவங்க எல்லாருமே கெட்டவங்க!” என்றும் ”இந்த தேசத்தில் சுதந்திரமே இல்லை” என்றும் பேசுவது வழக்கமாகிவிட்டது – இப்படிப் பேச சுதந்திரம் கொடுத்ததே இந்த இந்திய தேசம் என்பதை மறந்துவிட்டு பேசுவது எவ்வளவு சுலபமாக இருக்கிறது! 


மகள் வரைந்த பகத் சிங் ஓவியம்…..

எங்கு பார்த்தாலும் தேசிய உணர்வை காட்டிக் கொள்ள நினைக்கும் செய்திகள், எங்கெங்கும் காணொளிகள், முகப்புத்தக இற்றைகள், கட்செவி தகவல்கள் என தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்! அதைப் பார்க்கவே நிறைய நேரம் வேண்டும்! எத்தனை எத்தனை காணொளிகள்! அனைத்தையும் பார்க்க வேண்டுமென்றால் இந்த ஒரு நாள் போதாது!

குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய இரண்டு தினங்களில் மட்டுமல்லாது எல்லா நாட்களிலும், இது நம் தேசம், நம் நாடு, இந்த நாட்டின் முன்னேற்றம் நம் எல்லோருடைய கையிலும் இருக்கிறது, இந்த தேசத்தின் மக்கள் அனைவருமே, இனம், மதம், மொழி கடந்து, அனைவருமே நம் உடைய சொந்தங்கள், “இந்தியன்” என்ற ஒரே ஒரு அடையாளம் மட்டுமே என்ற உணர்வுடன் இருப்போம்….. நமக்குள் எதற்கு வேறுபாடு, சண்டை, சச்சரவு…. அனைவரும் ஒற்றுமையாக இருப்போமே.

எனக்கு வந்ததில் நான் பார்த்ததில் பிடித்த இரண்டு காணொளிகள் இங்கே இணைத்திருக்கிறேன். ”ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே” என்பதை இப்போதாவது புரிந்து கொள்வோம்…….

ஜெய் ஹிந்த்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

36 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுகும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   நீக்கு
 4. நல்ல சிந்தனை. பிறந்த நாள் அன்று மட்டும் குழந்தைகளைத் திட்டவே திட்டாமல் கொஞ்சிவிட்டு மறுநாள் எல்லாம் திட்டி, உதைப்பதில்லையா? நம் குழந்தை என்கிற உரிமையும், அது நன்றாயிருக்க வேண்டும் என்கிற எண்ணம்தானே காரணம். அதுபோலத்தான்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. அன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.. ஜய் ஹிந்த்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி

   நீக்கு
 6. மிக உயரிய சிந்தனை...நல்ல பதிவு தங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

  கீதா: ஜி முதலில் குடியரசு தின வாழ்த்துகள்!! எவ்வளவு நல்ல கருத்து..// என்றும் ”இந்த தேசத்தில் சுதந்திரமே இல்லை” என்றும் பேசுவது வழக்கமாகிவிட்டது – இப்படிப் பேச சுதந்திரம் கொடுத்ததே இந்த இந்திய தேசம் என்பதை மறந்துவிட்டு பேசுவது எவ்வளவு சுலபமாக இருக்கிறது!// ஆனால் எனது பதிவு இன்றும் இப்படியாகிப் போனது...நேர்மறையாகச் சொல்ல நினைத்தாலும் இறுதியில் ஆதங்கம் வெளிப்பட்டுவிட்டது. அப்புறம் என்னையே சமாதானப்படுத்திக் கொண்டேன். நம் வீட்டில் தவறு நடந்தால் நாம் சுட்டிக் காட்டுவதில்லையா? ஆதாங்கப்படுவதில்லையா அப்படிச் செய்வதால் அன்பு, பாசம் இல்லை என்றாகிவிடாதே....நாம் சொல்லாமல் யார் நம் நாட்டிற்குச் சொல்லப்போகிறார்கள் என்ற ரீதியில் சமாதானம் செய்து கொண்டேன்..ஹாஹ்...என்றாலும் மாற்றம் நம்மிடருந்துதான் வர வேண்டும் என்று முடித்திருந்தேன்...இருந்தாலும் தங்கள் பதிவை வாசித்ததும் அப்படித் தோன்றியது கொஞ்சம் வெட்கப்படவும் வைத்தது ஜி!!!

  நல்ல பதிவு ஜி!!ஜெய்ஹிந்த்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்கு அளித்திருக்கும் சுதந்திரம்.... அதை நல்லவிதமாகவே பயன்படுத்துவோம்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @ நொரண்டு.

   நீக்கு
 9. வாழ்த்துக்கள். கொஞ்சம் கொஞ்சமாக நாம் முன்னேறிக்கொண்டுதானே இருக்கிறோம். வாழ்க பாரதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 10. இன்றைய குழந்தைகள் நாளைய குடிமக்கள் காணொளி ரசிக்க வைத்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 11. இரண்டு காணொளிகளும் அருமை.
  ரோஷ்ணி வரைந்த ஓவியம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 12. பகத் சிங் ஓவியத்தை வரைந்த தங்கள் மகளுக்கு பாராட்டுகள்!
  இனிய குடியரசுத் திருநாள் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 13. மகளுக்கு வாழ்த்துகள். காணொளிகளை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 14. எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள். மகள் வரைந்த ஓவியம் நன்று. என் பாராட்டுக்களைத் தெரிவியுங்கள். இரண்டாவது காணொலியை ஏற்கெனவே பார்த்துவிட்டேன். முதல் காணொலி அருமை. சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் குழந்தை தொழிலாளர்களை ஒழித்து அனைவருக்கும் கல்வி என்பதைச் செயல்படுத்த முடியவில்லையே என்பதை நினைத்தால் வேதனையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி வெங்கட்ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குழந்தை தொழிலாளர்கள்... வேதனை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஞா. கலையரசி ஜி!

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   நீக்கு
 16. 68 ஆண்டுக்கு உண்டான வளர்ச்சி இல்லை என்பதுதான் ஆதங்கம் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 17. அருமையான பதிவு. காணொளியைப் பார்த்துட்டுச் சொல்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 18. இரண்டுமே அருமை. ஆனால் இந்தக்குழந்தைத் தொழிலாளர்கள் விஷயம்! ஒரு பக்கம் வேண்டாம்னு சொன்னாலும் இன்னொரு பக்கம் அவங்க குடும்பத்துக்கு அவங்களோட தொழில் சம்பந்தமான உதவி தேவைப்படுகிறது. ஆகவே படிப்பும் குடும்பத்தொழில் அல்லதுகைத்தொழில் கற்கவும் உதவலாம். பாரம்பரியத் தொழில் எனில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குக் கற்பதும் எளிது! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....