புதன், 18 ஜனவரி, 2017

திரிபுரா – Bபை Bபை திரிபுரா – அடுத்தது எங்கே?


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 91

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


தலைமைச் செயலகம் மற்றும் திரிபுரா சட்டசபை பார்த்த பிறகு நாங்கள் அறைக்குத் திரும்பினோம்.  சிறிது நேரம் ஓய்வெடுத்தபிறகு, கொஞ்சம் காலாற நடந்து வருவதோடு, இரவு உணவையும் முடித்துக் கொண்டு வரலாம் என்பது எங்கள் திட்டம்.  எங்களை தங்குமிடத்தில் விட்டுவிட்டு ஓட்டுனர் ஷாந்தனுவும் அவரது வீட்டுக்குச் சென்றுவிட்டார். அடுத்த நாள் காலையில் எங்களை வந்து விமான நிலையம் அழைத்துச் செல்லவேண்டும் என்பது தான் எங்கள் வேண்டுகோள்.  இன்னும் அவருக்குரிய கட்டணமும் தரவேண்டும்!

சாலை சந்திப்பில் 1971 போர் நினைவுச் சின்னம்...

வண்டியிலேயே சுற்றிக் கொண்டிருந்தால், எப்போது தான் காலாற நடப்பது. முழுவதும் விதம் விதமான போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தினால் மட்டும் போதாதே…. அதற்காகவே கொஞ்சம் நடந்து வருவது என முடிவு செய்து, தங்குமிடத்திலிருந்து நடக்க ஆரம்பித்தோம். நாங்கள் இருந்த மோட்டார் ஸ்டாண்ட் ரோடிலிருந்து கால் போன போக்கில் நடந்து ஒரு முக்கிய சாலை சந்திப்பில் இருந்த 1971-ஆம் வருட போரின் நினைவாக வைத்திருந்த ஒரு Army Tank வரை சென்று வந்தோம். 

வெத்தல வெத்தல வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ.....

வழியெங்கிலும் பான் [வெற்றிலை] விற்கும் கடைகள். இந்தப் பயணத்தில் நாங்கள் சென்ற அனைத்து மாநிலங்களிலும் பான்/குட்கா சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் – ஆண்/பெண், வயதானவர்கள்/சிறுவர்கள் எந்தவித வேறுபாடுமின்றி அனைவருமே பான்/குட்கா சாப்பிடுகிறார்கள். பெரும்பாலான இடங்களில் பெண்கள் தான் இந்த பான் விற்பனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.  அகர்தலாவிலும் நாங்கள் அப்படிச் சாலைகளில் நடக்கும்போது பல பான் கடைகளைப் பார்க்க நேர்ந்தது.  அலைபேசியில் ஒரு புகைப்படம் எடுத்திருக்கிறார் நண்பர் – அதை மட்டும் இங்கே பகிர்ந்து இருக்கிறேன். 

வழியில் இருந்த ஒரு கடையில் தேநீர் குடித்து இன்னும் கொஞ்சம் நடந்து ஒரு உணவகத்திற்குச் சென்று இரவு உணவினை முடித்துக் கொண்டோம்.  சப்பாத்தி, சப்ஜி எனக்கும், மற்ற நண்பர்களுக்கு அசைவ உணவும் சாப்பிட்டு தங்குமிடம் திரும்பி உடைமைகளை சரி செய்து வைத்து உறங்கச் சென்றோம். அடுத்த நாள் ஆறாம் சகோதரி மாநிலமான திரிபுராவிற்கு Bபை Bபை சொல்லிவிட்டு வேறு ஒரு மாநிலத்திற்குச் செல்ல வேண்டும்! 

இடது ஓரத்தில் ஓட்டுனர் ஷாந்தனு....


அடுத்த நாள் காலை ஓட்டுனர் ஷாந்தனு வந்து சேர, அவருடன் வாகனத்தில் பயணித்து விமான நிலையம் வந்து சேர்ந்தோம்.  விமான நிலையத்தின் வாயிலில் ஓட்டுனர் ஷாந்தனுவுடன் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து அவருக்கு விடை கொடுத்தோம்.  எங்கள் விமானத்திற்கான நேரத்திற்கு முன்னரே அங்கே வந்து விட்டோம் – கொஞ்சம் காத்திருந்த சமயத்தில், விமான நிலையத்தில் பராக்குப் பார்த்து, அங்கே 60 ரூபாய்க்கு விற்ற, வாயில் வைக்க முடியாத அளவு இருந்த தேநீரைக் குடித்து, எங்களுக்குள் “இதுக்குக் குடிக்காமலே இருந்திருக்கலாம்!” என்று சொல்லிக் கொண்டோம்! எங்கள் விமானத்திற்கான அழைப்பு வர, நாங்கள் முன்னேறினோம்.

இந்தத் தொடரின் பெயர் ஏழு சகோதரிகள் பயணத் தொடர்!  இது வரை  ஆறு சகோதரி மாநிலங்களுக்கு – அதாவது மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலாயா, திரிபுரா ஆகிய ஆறு மாநிலஙக்ளுக்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  இனி ஏழாம் சகோதரி மாநிலமான மிசோரம் பற்றி தான் நான் சொல்லப் போகிறேன் என்று நினைத்திருந்தால் அது தவறு! எங்களுடைய இந்தப் பயணத்தில் ஏழு சகோதரி மாநிலங்களில் நாங்கள் பயணிக்காது விட்ட ஒரே மாநிலம் – மிசோரம்!


விமான நிலையத்தில் காத்திருந்தபோது......
யாரை இப்படிப் பார்க்கிறோம்? 
எங்களுடன் வந்த நண்பர் தனியாக உட்கார்ந்து என்னவோ செய்து கொண்டிருக்க அதை வேடிக்கைப் பார்க்கிறோம்!

மிசோரம் மாநிலத்திலும் பார்க்க வேண்டிய இடங்கள் இருந்தாலும், அதற்கென்று நான்கு நாட்களாவது வேண்டும்! ஆனால் எங்களிடம் இருந்தது இரண்டு நாட்கள் மட்டுமே. வேறு வழியில்லை! மிசோரம் மாநிலத்திற்குப் பிறிதொரு சமயத்தில் செல்லலாம் என்று முடிவு செய்து அதைத் தவிர்த்து மற்ற ஆறு மாநிலங்களுக்குப் பயணித்தோம்.  என்றாலும், திரிபுராவிலிருந்து தில்லி/திருவனந்தபுரத்திற்கு நேரடியாக விமானங்கள் இல்லாத காரணத்தினால் அடுத்த மாநிலத்திற்குச் செல்ல முடிவு எடுத்தோம். அந்த, நாங்கள் சென்ற வேறொரு மாநிலம், எந்த மாநிலம், அங்கே என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

22 கருத்துகள்:

  1. பயணியுங்கள் ஐயா
    நாங்களும் உடன் வந்து கொண்டேஇருக்கிறோம்
    தம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. நல்லதொரு சுற்றுப்பயணம்..
    பல்வேறு கலாச்சாரங்களையும் கண்முன்னே காட்டிய படங்களுடன் இனிய பதிவுகள்..

    தங்களுடன் பயணம் செய்த உணர்வு..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது முதல் வருகையோ... மிக்க மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஜி.....

      நீக்கு
  6. அருமையான தொடர் பல மாநிலங்களைக் கண்டதொரு உணர்வு. தொடர்கின்றோம் வெங்கட்ஜி!

    கீதா: இரு நாட்கள் இருப்பதால் சிக்கிம் போயிருப்பீர்களோ என்று தோன்றியது என்றாலும் அங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு டைரக்டாக ஃப்ளைட் கிடையாது என்பதால் அடுத்த மாநிலம் மேற்கு வங்காளம் தானே??!!!

    தொடர்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தது எந்த மாநிலம் எங்கே? நாளை சொல்லி விடுகிறேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  7. இந்த ஏழுமாநிலத் தொடர் முடிந்ததும் உங்கள் பொதுவான கருத்துகளை எழுதுவீர்கள் அல்லவா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா உங்களுக்குப் போரடித்து விட்டது போல பயணங்கள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  8. அந்த வெற்றிலைக்காரர் எத்தனை அழகாய் வெற்றிலைகளை அடுக்கி வைத்திருக்கிறார்! தொடரும் பயணம் சுவாரசியம் மிகுந்ததாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை அழகாய் அடுக்கி வைத்திருக்கும் வெற்றிலை! கூடவே ஆபத்தான புகையிலும் உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  10. உங்களின் பயணத்தின் நாங்கள் உடன் வந்துகொண்டிருக்கிறோம். அவ்வப்போது நேரமின்மை காரணமாக தொடர முடிவதில்லை. இருந்தாலும் பின்னர் வந்து தொத்திக்கொள்கிறோம். உங்களின் பதிவும், எழுத்தும் அந்த அளவிற்கு எங்களை ஈர்த்துவிட்டன. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து வருவதற்கு மிக்க நன்றி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. இடையில் சில பகுதிகள் விடுபட்டுவிட்டது! நேரம் கிடைக்கையில் படிக்கிறேன்! தொடருங்கள் சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது படியுங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....