என் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, January 4, 2017

திரிபுரா – புவனேஸ்வரியும் தாகூரும்….ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 86

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


புவனேஸ்வரி கோவில், உதைபூர், திரிபுரா

அகர்தலாவிலிருந்து அதிகாலையிலேயே புறப்பட்டதால் சென்ற பகுதியில் பார்த்த திரிபுர சுந்தரி கோவில் அருகே இருந்த சிறிய உணவகம் ஒன்றில் காலை உணவாக பேப்பரில் கொடுக்கப்பட்ட பூரி, சிறிய தட்டில் சப்ஜி என சாப்பிட வேண்டியிருந்தது. வேறு வழியில்லை.  கோவில் இருக்கும் பகுதியான உதைப்பூர் மிகவும் பழமையான இடம். அகர்தலாவிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் கிராமிய சூழல் தான் – இத்தனைக்கும் இப்பகுதி, ராஜாக்கள் காலத்தில் தலைநகராக இருந்த இடம்!


பேப்பரில் பூரி -  சப்ஜி!

வேறு வழியின்றி பூரி – சப்ஜி, தேநீர் என காலை உணவு சாப்பிட்டோம். ஐந்து பேர் சாப்பிட 75 ரூபாய்க்கும் குறைவாகவே ஆனது! காலை உணவு முடித்துக் கொண்டு மீண்டும் ஒரு முறை கோவிலுக்கு வந்து திரிபுர சுந்தரி தேவியையும் chசோடா மாதாவினையும் தரிசித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.  அடுத்ததாய் நாம் செல்லப்போவது இன்னுமொரு கோவில் – உதைப்பூர் என அழைக்கப்படும் இப்பகுதியில் நிறைய கோவில்கள் இருந்ததாம் – இப்போதும் சில கோவில்கள் உண்டு என்றாலும் பல கோவில்கள் சிதிலமடைந்து பாழ்பட்டு விட்டன. 


பழைய கோவில் அருகே புதிய கோவில்!

அடுத்ததாய் நாம் பார்க்கப் போவது புவனேஸ்வரி கோவில். மிகவும் பழமையான கோவில் – வித்தியாசமான அமைப்பு கொண்ட கோவில் – தற்போது இங்கே பூஜைகள் ஒன்றும் நடைபெறுவதில்லை – இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் கீழ் இவ்விடம் பராமரிக்கப்பட்டு வருகிறது. கி.பி. 1660-ஆம் ஆண்டு மஹாராஜா கோவிந்த மாணிக்யா என்பவரால் கட்டப்பட்ட இக்கோவில் பல இடிபாடுகளைக் கடந்து இப்போது ஏதோ பராமரிக்கப்படுகிறது.  நாங்கள் சென்ற போது எங்களைத் தவிர அப்பகுதியில் வேறு சுற்றுலாப் பயணிகள் இல்லை என்பதால், கோவில் வாசலில் சிறு கடை வைத்திருந்த பெண்மணியிடம் கொஞ்சம் பேசினோம். 


கடை வைத்திருந்தவரின் பேரன்....
புவனேஸ்வரி கோவில், உதைபூர், திரிபுரா

வெளியூரிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவார்களா எனக் கேட்டதற்கு வருவார்கள் ஆனால் அத்தனை வசதிகள் இல்லை என்றார். அகர்தலாவிலிருந்து வந்து பார்த்துவிட்டு திரும்புபவர்கள் தான் அதிகம். வித்தியாசமான கட்டமைப்பு கொண்ட கோவிலுக்கும் ரபீந்த்ரநாத் தாகூர் அவர்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது! அவரது இரண்டு பிரபல படைப்புகள் இந்த புவனேஸ்வரி கோவில் மற்றும் இந்த இடத்தினை பின்புலமாகக் கொண்டவை.  அந்த இரண்டு படைப்புகள் ராஜரிஷி மற்றும் விசர்ஜன் ஆகியவை.


கோவில் அருகே தாகூர் சிலை...
புவனேஸ்வரி கோவில், உதைபூர், திரிபுரா

இக்கோவிலை ஒட்டிய படைப்புகள் என்பதாலோ என்னமோ, கோவிலுக்கு சற்று அருகே ரபீந்த்ரநாத் தாகூர் அவர்களுக்கும் ஒரு சிலை இங்கே நிர்மாணம் செய்திருக்கிறார்கள். பழமையான வீடுகள் தவிர இடிபட்ட பல பழைய கட்டிடங்களும் இங்கே உண்டு. இப்பகுதியில் கோம்தி நதி ஓடிக்கொண்டிருக்கிறது. புவனேஸ்வரி கோவிலே கோம்தி நதியின் கரையில் தான் அமைந்திருக்கிறது.  கோம்தி நதியில் ஓடும் தண்ணீரைப் பார்த்தால் அழுக்குத் தண்ணீர்!


கோம்தி ஆறு...
புவனேஸ்வரி கோவில், உதைபூர், திரிபுரா


பழமையான வீடுகள்....
புவனேஸ்வரி கோவில், உதைபூர், திரிபுரா 

சரியான பராமரிப்பு இல்லாததால் இங்கிருந்த பல கட்டிடங்கள் இடிபட்டு ஏதோ ஒன்றிரண்டு மட்டுமே இருக்கின்றன.  நாங்கள் சென்ற போது புனர் நிர்மாணப் பணிகள் நடந்து கொண்டிருந்தன.  இந்தியாவின் பல பகுதிகளில் இருந்த பொக்கிஷங்களை இது போலவே இழந்து விட்டோம் என்பது ஒரு சோகம்.  அடுத்ததாய் நாங்கள் சென்றது ஒரு அற்புதமான இடத்திற்கு! அந்த இடத்திற்குச் சென்ற போது நாங்கள் நிறைய தமிழர்களைப் பார்க்க நேர்ந்தது! அங்கே என்ன அனுபவம் கிடைத்தது, தமிழர்கள் அங்கே என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

26 comments:

 1. ஐந்து பேர் சாப்பிட ரூ.75க்கும் குறைவாகவே. ஆச்சர்யம்தான்.

  ReplyDelete
  Replies
  1. ஆச்சரியம் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 2. பேப்பரில் பூரி தரப்பட்டதால் அது எண்ணெயை கொஞ்சமாவது உறிஞ்சிக் கொண்டிருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. எண்ணை உறிஞ்சுவதற்காகவே பேப்பரிலோ! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. அடுத்த பகுதியை வாசிக்க ஆவலோடு உள்ளேன்...

  ReplyDelete
  Replies
  1. விரைவில் அடுத்த பகுதியும் வரும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. Replies
  1. தொடர்வதற்கு நன்றி நண்டு @நொரண்டு.....

   Delete
 5. உணவின் விலை வியப்பைத்தருகின்றது ஐயா
  தொடர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. கிராமியப் பகுதி என்பதால் விலை குறைவு தான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 6. பழமையான இடம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 7. சாப்பாட்டின் விலை மிகக் குறைவுதான்...சிறிய ஊர்களுக்குச் செல்லும் போது விலை குறைவாகத்தான் இருக்கிறது இங்குமே கூட. இல்லையா?
  பல பொக்கிஷங்களை நாம் இழந்து கொண்டுதான் வருகிறோம் ஜி..

  நல்ல அனுபவம்தான் ஜி! அங்கே தமிழர்களைப் பற்றி அறிய தொடர்கின்றோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 8. தாகூர் சிலை அருமை தொடர்கிறேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 9. படத்திலேயே இவ்வளவு அழுக்காய் தெரியும் இதுவா கோம்தி ஆறு :)

  ReplyDelete
  Replies
  1. கோம்தி என்ற பெயரில் வேறு ஆறும் உண்டு. இது அகர்தலாவின் கோம்தி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 10. கிராமங்கள் என்றாலும் -
  போதும்!.. என்ற மனமாகக் கூட இருக்கலாம்..

  எப்படியோ அந்த மக்கள் நல்வாழ்வு வாழட்டும்..

  இவற்றையெல்லாம் பதிவில் வழங்கும் தங்களுக்கும் மகிழ்ச்சி நிறையட்டும்..

  ReplyDelete
  Replies
  1. போதும் என்ற மனம்.... இருக்கலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 11. திரிபுரா கண்டு கொண்டோம்.

  "பல பொக்கிசங்களைஅழியவிட்டு விட்டோம்" நமது பிரதேசத்திலும்தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 12. சுவாரஸ்யமான தகவல்கள்! படங்கள் அழகு! குட்டிப்பையன் சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 13. Replies
  1. தங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயந்தி ரவி ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....