திங்கள், 2 ஜனவரி, 2017

திரிபுரா – …. திரிபுர சுந்தரி – உணவாகா மீன்கள்


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 85

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


படம்-1: திரிபுர சுந்தரி கோவில், திரிபுரா....

வங்க தேச எல்லைப் பகுதியில் காட்சிகளைப் பார்த்து இரவு உணவை முடித்துக் கொண்ட பின் கொஞ்சம் தூங்கிவிட்டு வருகிறேன் என்று சென்ற பகுதியினை முடித்திருந்தேன்.  அதன் பிறகு சற்றே இடைவெளி! கிட்டத்தட்ட ஒரு வாரம்! இத்தனை உறக்கம் உடம்புக்கு ஆகாது! இதோ வந்து விட்டேன் – ஏழு சகோதரிகள் தொடரின் அடுத்த பகுதியுடன்…..


படம்-2: திரிபுர சுந்தரி கோவில், திரிபுரா....

அடுத்த நாள் காலையில் எழுந்து தங்குமிடத்திலிருந்து முதல் நாள் அழைத்துச் சென்ற ஓட்டுனர் ஷாந்தனுவின் வண்டியில் அன்றைய தினம் பார்க்க வேண்டிய இடங்களுக்குச் செல்ல புறப்பட்டோம்.  முதல் நாள் வங்க தேச எல்லைக்குச் சென்றோம் என்றால் இந்த நாளில் நாங்கள் முதன் முதலாய்ச் சென்றது ஒரு கோவிலுக்கு! திரிபுர சுந்தரி திருக்கோவில்…..  இக்கோவிலை மாதாபரி என்றும் அழைக்கிறார்கள்.  51 சக்தி பீடங்களில் இக்கோவிலும் ஒன்று என்று சொல்கிறார்கள்.  சக்தி பீடங்கள் பற்றிய கதை உங்களுக்குத் தெரிந்தது தானே…..


படம்-3: திரிபுர சுந்தரி கோவில், திரிபுரா....

சதி தேவியின் உடலை தனது சுதர்சனச் சக்கரம் கொண்டு 51 துண்டுகளாக்கினார் மஹாவிஷ்ணு. சிவனின் கோபம் தணிக்க இப்படிச் செய்து, சதி தேவியின் அந்த ஐம்பத்தி ஒரு உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள். இந்தியா முழுவதும் இப்படி சக்தி பீடங்கள் உண்டு. திரிபுரா மாநிலத்தின் மாதாபரி எனும் இவ்விடத்தில் சதி தேவியின் வலது கால் விழுந்ததாகச் சொல்கிறார்கள்.  இங்கே ஒரு அழகிய கோவில் – இக்கோவில் வடிவமைப்பு ஒரு ஆமையை ஒத்திருப்பதால் கூர்மபீடம் என்றும் அழைக்கிறார்கள்.  கோவிலின் முக்கிய தெய்வம் திரிபுர சுந்தரி!


படம்-4: திரிபுர சுந்தரி கோவில், திரிபுரா....
கல்யாண் சாகர்....

இக்கோவிலில் காளியின் இரண்டு சிலைகள் உண்டு – பெரிய சிலை  திரிபுர சுந்தரி மற்றும் (ch)சோட்டி மா என அழைக்கப்படும் சிறு சிலையும் உண்டு. இப்பகுதியை ஆண்டு வந்த அரசர்கள் வேட்டைக்குப் போகும்போதும், போருக்குச் செல்லும் போதும் இந்த சோட்டி மா சிலையை தங்களுடன் எடுத்துச் சென்று தங்குமிடத்தில் சிறு கூடாரம் அமைத்து அங்கே இச்சிலையை வைத்து வழிபடுவார்களாம்.  இப்போது மன்னரும் இல்லை, வேட்டையும் இல்லை – ஆகவே கோவிலிலேயே குடி கொண்டிருக்கிறாள்.


படம்-5: வெளியே இருந்த முதியவர்கள்....
திரிபுர சுந்தரி கோவில், திரிபுரா....


கோவில் அமைக்கப்பட்ட ஆண்டு கி.பி. 1501. அந்த சமயத்தில் ரங்கமாடி என அழைக்கப்பட்ட இப்பகுதியை ஆண்ட தன்யா மாணிக்யா எனும் அரசரது கனவில் தனது சிலை chசட்டாகிராம் எனும் பகுதியில் [தற்போது வங்கதேசத்தில் இருக்கும் பகுதி] இருப்பதாகவும் அச்சிலையை இங்கே கொணர்ந்து கோவில் அமைக்கும்படியும் சொன்னதாக ஒரு கதை. அப்படிக் கட்டிய திருக்கோவில் தான் இப்போதும் இருக்கிறது. என்றாலும் அவ்வப்போது புனரமைக்கப்பட்டு இன்றைக்கும் நன்றாகவே பராமரிக்கிறார்கள்.

படம்-6: பேப்பர் பூரி! [பேப்பரில்]
பூரி -சோளே....

கோவிலுக்கு எதிரே ஒரு பெரிய திருக்குளம் இருக்கிறது – குளத்திற்கு ”கல்யாண் சாகர்” என்று பெயர். அதுவும் மஹாராஜா தன்யா மாணிக்யா அவர்களால் உருவாக்கப்பட்ட திருக்குளம் தான். இத்திருக்குளத்தினைத் தோண்டும் சமயத்தில் தான் சோட்டி மா சிலை கிடைத்ததாகவும் சொல்கிறார்கள். திருக்குளம் முழுவதும் பெரிய பெரிய மீன்கள், சில ஆமைகளும் உண்டு. இந்த மீன்களை யாரும் பிடித்து உண்பதில்லை.  இங்கே இருக்கும் பெரிய ஆமைகளுக்கும் சில கதைகள் உண்டு. அக்கதை….


படம்-7: சர்க்கரைப் பாகில் மூழ்கிய இனிப்புகள்....
திரிபுர சுந்தரி கோவில், திரிபுரா.....

முன்பெல்லாம் வருடத்தின் ஒரு நாளில் குளத்திலிருக்கும் ஆமை ஊர்ந்து வெளியே வந்து கோவில் வரை வருமாம்.  கோவிலில் இருக்கும் திரிபுர சுந்தரி தேவியை வணங்கி அங்கே சில நிமிடங்கள் இருந்தபிறகு மீண்டும் குளத்திற்கே சென்று விடும் என்றும் சொல்கிறார்கள் இங்கே உள்ள வயதானவர்கள் சிலர்.  முன்பெல்லாம் குளத்தினைச் சுற்றி கரைகள்/சிமெண்ட் படிக்கட்டுகள் கிடையாது. முட்டையிடும் காலகட்டத்தில் ஆமைகள் முட்டையிட்டு தன் இனத்தினைப் பெருக்கின. இப்போது முட்டையிட வசதி இல்லை. தண்ணீரைச் சுற்றி தான் சிமெண்ட் படிக்கட்டுகள் கட்டிவிட்டார்களே… சில ஆமைகள் இயற்கையாகவே மரணம் எய்தியன.  இப்போது ஆமைகள் எண்ணிக்கை குறைந்தாலும் மீன்கள் நிறையவே இருக்கின்றன. 


படம்-8: செம்பருத்தி மாலைகள் விற்பனைக்கு....
திரிபுர சுந்தரி கோவில், திரிபுரா....
 
இங்கே தேவிக்கு செம்பருத்தி மாலைகள் தான் அணிவிக்கிறார்கள். பத்து ரூபாய்க்கு நிறைய செம்பருத்திகள் வைத்த மாலை தருகிறார்கள்.  பக்கத்திலேயே கோதுமை மாவு உருண்டைகள், பொரி ஆகியவையும் பத்து ரூபாய் பாக்கெட்டுகளாக விற்கிறார்கள் – அவற்றை வாங்கி கல்யாண் சாகர் குளத்தில் இருக்கும் மீன்களுக்கு அளித்து மகிழ்கிறார்கள் மக்கள்.  பல காலங்களாக பிளாஸ்டிக் பாக்கெட்டுகளிலிருக்கும் உணவினை மீன்களுக்குக் கொடுப்பதோடு பிளாஸ்டிக் பைகளையும் குளத்திலேயே போட, சில மீன்கள் அவற்றை உண்டு இறக்க, சில வருடங்களாக இப்பகுதியில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்திருக்கிறார்கள். 

இப்படி நிறைய காட்சிகளைப் பார்த்து, திரிபுர சுந்தரியை வணங்கி கோவில் பகுதியிலிருந்து வெளியே வந்தோம். அடுத்து என்ன செய்தோம், எங்கே சென்றோம் என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்…..

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

26 கருத்துகள்:



  1. இனிய புதுவருட நல் வாழ்த்துக்களோடு தொடர்கின்றேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.

      நீக்கு
  3. சுவாரஸ்யமான விவரங்கள். கண்கவரும் படங்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. கோயிலின் அமைப்பு வித்தியாசமாக இருக்கிறது ஐயா
    தொடருங்கள் தொடர்கிறேன்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. படங்கள், தகவல்கள் அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. நல்ல சுவாரஸ்யமான தகவல்கள்! ஜி பாவம் ஆமைகள்!.சர்க்கரைப் பாகில் மூழ்கிய இனிப்புகள் பாம்பே காஜா போல் இருக்கிறதே...அதுதானா?

    செம்பருத்தி மாலை பார்ப்பது முதல் தடவை! தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செம்பருத்தி மாலை - வங்க தேசம் முழுவதிலும் இப்படி செம்பருத்தி மாலை தான் காளிக்கு....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  7. திரிபுரா காரணம் பெயர் காரணம் தெரிந்தது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  8. திரிபுர சுந்தரி கோயிலை கட்டிய விதம் நன்றாக உள்ளது .ஆனால் அது ஏன்
    அந்த மாதிரி ஷேப்பில் கட்டியிருக்கிறார்கள் யோசித்துப் பார்த்தேன் புரிபடவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமைக்கூட்டின் மேல் அமைக்கப்பட்ட மாதிரி உருவம் இருக்கலாம். இந்தப் பகுதிக்கு கூர்ம பீடம் என்ற பெயரும் உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா.

      நீக்கு
  9. கண்கவரும் அழகிய படங்கள்..

    தகவல்களுடன் இனிய பதிவு.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  10. கதைகள் இல்லாத கோவில்களே அரிதாகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில்கள் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் கதை தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  11. தகவல்கள் படங்களுடன் பகிர்வு அருமை.

    செம்பருத்தி மாலைகளை முதன் முறையாக கொல்கத்தா காளி கோவில் முன்னர் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேற்கு வங்கம், பெங்காலிகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் செம்பருத்தி மாலை தான் காளிக்கு அணிவிக்கிறார்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.....

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....