வெள்ளி, 27 ஜனவரி, 2017

ஃப்ரூட் சாலட் 192 – அப்பா – கேட்டாரே ஒரு கேள்வி! – மௌனம் நல்லது!


இந்த வார செய்தி:



வலையுலக நண்பர் ஸ்ரீராம் – “எங்கள் பிளாக்”-இல் எழுதுபவர்களில் ஒருவர் – வலையுலகம் அறிந்த ஒருவரை நான் அறிமுகம் செய்து வைப்பது எனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியுது…. அவர் புத்தாண்டு சமயத்தில் வரும் வருடம் எப்படி இருக்கும், என்ன ஆசைகள் என்று பதிவர்களிடம் கேட்டு பதிவர்களின் எண்ணங்களை அவரது பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.  அப்படி அவர் கேட்ட பதிவர்களில் அடியேனும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி. வலையுலக நண்பர் திரு பரிவை சே. குமார் மற்றும் ரஞ்சனிம்மா ஆகிய இருவரின் சிறந்த கருத்துகளோடு எனது எண்ணங்களும் நேற்று வெளியாகி இருக்கிறது – எங்கள் பிளாக் தளத்தில்…. 


எனது எண்ணங்களையும் அவர்களது தளத்தில் வெளியிட்ட “எங்கள் பிளாக்” நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  படிக்காதவர்கள் படிக்கலாமே…..

இந்த வார குறும்படம்:

சமீபத்தில் பார்த்து வியந்த ஒரு குறும்படம் இது.  பின்னணி இசை மட்டுமே ஒலிக்க, மனிதர்களே இல்லாமல் மிகச் சிறப்பாக அப்பாக்கள் வகிக்கும் முக்கியமான குடும்பப் பொறுப்பைச் சொல்லும் ஒரு குறும்படம் இது.  இந்த குறும்படத்தினை இயக்கியவருக்கு வயது 20 மட்டுமே! அவர் Sara Rozit, எகிப்து நாட்டினைச் சேர்ந்தவர். Luxor Film Festival-இல் இந்தக்குறும்படம் விருது பெற்றிருக்கிறது என்பதையும் சொல்லிவிடுகிறேன்.  சிறந்ததோர் குறும்படத்தினை நீங்களும் பார்த்து ரசிக்கலாமே!



இந்த வார முகப்புத்தக இற்றை:

அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்…. - காரணங்கள் இன்றி!




இந்த வார விளம்பரம்:

நம் மக்களுக்கு பிடித்தமான ஒரு விஷயம் இலவசம் – யாராவது இலவசமாக எதாவது கொடுக்க மாட்டார்களா என ஏங்குவது பலருக்கும் வழக்கமாக இருக்கிறது.  ஐந்து ரூபாய்க்கு காய்கறி வாங்கிக் கொண்டு, ”கொஞ்சம் கொத்தமல்லி குடும்மா” என்று கேட்காமல் இருப்பதில்லை.  இப்படி இருப்பவர்களுக்கு “The Free Store” என்று பதாகை வைத்து, எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால்…..  பாருங்களேன் என்ன நடக்கிறது என! ஒரு சிலர் இந்தக் காணொளியைப் பார்த்திருக்கலாம் – கொஞ்சம் பழைய காணொளி என்றாலும் பார்க்காதவர்கள் வசதிக்காக இங்கே….



இந்த வார WhatsApp:

கேட்டாரே ஒரு கேள்வி...  



ராஜா காது கழுதைக் காது:

பாதுகாப்பு காரணங்களுக்காக குடியரசு தினத்தின் முன் தினம் எங்கள் அலுவலகத்திற்கு மதியம் விடுமுறை! வீட்டுக்குப் போய் தூங்கி இருக்கலாம். அதை விடுத்து நண்பர் பத்மநாபனுடன் தலைநகரின் Central Park – Connaught Place சென்று அங்கே பட்டொளி வீசிப் பிறக்கும் தேசியக் கொடியை படம் எடுத்து கொஞ்சம் “வெய்யில் வாங்கலாம்” என பூங்காவில் அமர்ந்தோம். நிறைய காட்சிகள் பார்க்கக் கிடைத்தன…..  அதைப் பற்றி பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன். 16 வயது யுவதியும் 17 வயது யுவனும் [அது எப்படி அவங்க Birth Certificate நீ தான் Sign பண்ணியான்னு கேட்கக் கூடாது……] கைகளைக் கோர்த்து நடந்த போது யுவதி பேசியது – ”நான் என்னோட இன்னுமொரு Boy Friend கூட பேசினா உனக்கு ஏன் கோபம் வருது……” 

நல்லா வருவீங்கடே!

இந்த வார புகைப்படம்:

பதஞ்சலி – சொல்லும்போதே இது என்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  இப்போது அனைத்தும் “பதஞ்சலி” பெயரில் கிடைக்கிறது.  ராம் தேவ் பாபா, பதஞ்சலி நிறுவனத்தின் மூலமாக பள்ளி திறந்தால் குழந்தைகளின் சீறுடை இப்படித்தான் இருக்கும் என்று ஒரு புகைப்படம் பார்க்க நேர்ந்தது....  அந்தப் புகைப்படம்....



Jokes apart…  பதஞ்சலி நிறுவனத்தின் சில பொருட்கள் நன்றாகவே இருக்கிறது….

படித்ததில் பிடித்தது:



மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

38 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @ நொரண்டு.

      நீக்கு
  2. எங்கள் தளத்தை இங்கு சொல்லியிருப்பதற்கும் எண்ணெய் பற்றிய குறிப்புகளும் ரொம்ப நன்றி வெங்கட்.

    16, 17 வயது எண்ணங்கள் சுவாரஸ்யமானது. காத்திருக்கிறேன். காணொளிகளைத் திறக்க மாட்டேன்!! பதஞ்சலி கோதுமை மாவுதான் நீண்ட நாட்களாக உபயோகிக்கிறோம். சீப் அண்ட் பெஸ்ட்! அவர் கலந்துகொண்ட மல்யுத்தப் போட்டி பற்றிய செய்தி பார்த்தேன்.

    மௌனத்துக்கு விலையேது? சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை.. விலை ஏதும் இல்லை..ம்ம்.....ம்ம்.....ம்ம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதஞ்சலி கோதுமை மாவு இதுவரை பயன்படுத்தியது இல்லை. நண்பர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் வாங்கி பார்க்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. அருமை
    அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. இந்த ஃப்ரூட் சாலட்டில் நகைச்சுவை கொஞ்சம் தூக்கல்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.

      நீக்கு
  7. உங்கள் கருத்துகளை எங்கள் ப்ளாக் தளத்திலும் வாசித்தோம் ஜி!!! எல்லோரது விருப்பக் கருத்துகள் எதிர்பார்ப்புக் கருத்துகள் சொல்லியிருந்தீர்கள். ஒருஓபன் டாக்!!

    அன்பே சிவம் - லவ் ஆல் தத்துவம் அருமை

    விளம்பரக் காணொளி ஹஹாஹஹ் ரகம்

    அப்பா குறும்படம் வாவ்! வார்த்தைகள் இல்லை விவரிக்க

    இளசுகளைப் பற்றிய பதிவுக்கு வெயிட்டிங்க்..

    பதஞ்சலி படம் ஹஹஹ

    மௌனம் ஆம் அதே பல சமயங்களில் மௌனம் நல்லது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  8. நாங்கள் தமிழ்மண வோட்டு பற்றி சுத்தமாகக் கண்டுகொள்வதில்லை..ஆனால் இன்று உங்கள் பட்டையில் ஒரு நெகட்டிவ் வோட்டு கண்ணில் பட்டது... அதிசயமாக இருக்கிறதே உங்கள் பதிவுக்கும் நெகட்டிவ் வோட்டிங்கா வியப்பாக இருக்கிறது!!! ஒரு வேளை கைதவறி விழுந்திருக்குமோ என்னவோ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்மண ஓட்டு - அதைப் பற்றி நானும் கவலைப்படுவதில்லை....

      எனக்கும் நெகட்டிவ் ஓட்டு! போட்டவருக்கு, இந்தப் பதிவில் என்ன பிடிக்கவில்லை என்று தெரியவில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  10. அனைத்தும் அருமை...பதஞ்சலி பள்ளி சீருடை ..செம்ம

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  11. அதானே!..

    கேட்டாலும் கேட்டாள் - நியாயமான கேள்வி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

      நீக்கு
  13. இந்தவாரத் தொகுப்பு எல்லாம் நல்லா இருந்தது. ராஜா காதில் ஆணின் சந்தேகப்புத்தியைக் கோடிகாண்பித்துவிட்டு, நகைச்சுவையில் பெண்களும் அப்படித்தான் என்ற தொனியோடு இருந்ததை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தானாகவே அமைந்திருக்கிறது - இரண்டு பக்கமும் இப்படித்தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  14. அப்பாக்கள் பற்றிய காணொளியை முன்பே நான் என் பதிவு ஒன்றில் பகிர்ந்த நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம்... நான் பார்த்த நினைவில்லை...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  15. அப்பன்டா என்று காலரை தூக்கிக்கலாம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  16. பதஞ்சலி சோப், பதஞ்சலி ஷாம்பூ, பதஞ்சலி பற்பசைனு மாறி இரண்டாண்டுகள் ஆகின்றன. திருச்சி, ஶ்ரீரங்கத்திலேயே கிடைக்கின்றன. பதஞ்சலி பாஸ்மதி அரிசிதான் சாப்பாட்டுக்கும்! பதஞ்சலி கோதுமை மாவு எனக்குப் பிடிச்சது, ரங்க்ஸுக்குப் பிடிக்கலை! அதனால் அது மட்டும் ஆஷீர்வாத் செலக்ட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே ஆஷீர்வாத் மல்டி க்ரெயின் ஆட்டா......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  17. எங்கள் ஶ்ரீராமைப் பாராட்ட வார்த்தைகள் இல்லைனா, அவருக்குப் பாராட்டின் மூலம் நன்றி தெரிவித்த உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. :) காணொளி பின்னர் தான் பார்க்கணும். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது பாருங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

      நீக்கு
  18. பழக்கலவையில் உள்ள அனைத்தும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  19. "கருப்பு வளையல் கையுடன் ஒருத்தி,
    குனிந்து வளைந்து வாசல் பெருக்க,
    வாசல் சுத்தமாச்சு மனசு குப்பையாச்சு."

    Central Park, Connaught Place சென்று வந்ததிலிருந்து 'கல்யாண்ஜி' ஞாபகம் வந்து விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்யாண்ஜி! என்ன ஒரு ஆளுமை!

      ஆனா நமக்கு மனசு குப்பை ஆகலையே அண்ணாச்சி! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....