எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, January 14, 2017

பொங்கலோ பொங்கல்….

அன்பின் நண்பர்களுக்கு,அனைவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.  உங்கள் அனைவருடைய குடும்பத்திலும் பொங்கல் தினமான இன்றும் வரும் எல்லா நாட்களிலும் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்து இருக்கட்டும்.  பொங்கல் பொங்குவதைப் போலவே செல்வமும், மன அமைதியும் பொங்கி வழியட்டும்.தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை.  பலரும் பணி நிமித்தமாக வெளி நாட்டிலோ, அல்லது வெளி ஊரிலோ இருக்க வேண்டிய சூழல்.  சென்ற முறை தீபாவளி/பொங்கல் சமயத்தில் ஊருக்குச் சென்று குடும்பத்துடன் இருக்க முடிந்தது.  இதோ இன்று பொங்கல் – விடுமுறை கிடைக்காத காரணத்தினால் ஊருக்குச் செல்ல முடியவில்லை!  சரி ஊருக்குத்தான் செல்லவில்லை, நண்பர்களோடு பொங்கல் கொண்டாடுவோம் என நினைத்தால் அதற்கும் வழியில்லை – இதோ அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறேன்!


எல்லா வருடங்கள் போலவே இந்த வருடமும் பொங்கல் சமயம் ஜல்லிக்கட்டு பிரச்சனையையும், கூடவே அதை வைத்து நடக்கும் அரசியலையும் நமக்கு காணத் தந்திருக்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமா, கூடாதா என்பது ஒரு புறம் இருக்கட்டும், இதையும் கேவலமாக உபயோகப்படுத்தும் பலரின் தந்திர புத்தி தான் கொஞ்சம் படுத்துகிறது – எல்லாவற்றிலும் அரசியல்! எதை எடுத்தாலும் அரசியல். இந்தச் சமயத்தில் காளைமாடுகளுக்கு தொல்லை தருகிறார்கள் என குரல் கொடுக்கும் அமைப்பினர் மற்ற மாநிலங்களில் தொடர்ந்து அனைத்து விலங்குகளுக்கும் நடக்கும் கொடுமைகளை கண்டுகொள்ளாது இருக்கிறார்கள்.  ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் எனச் சொல்பவர்களுக்கும் இந்த சமயத்தில் மட்டும் தான் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் – செய்பவை அனைத்துமே பரபரப்பிற்கும், ஊடகங்களில் செய்தி வர வேண்டும் என்பதற்காகவே செய்பவையாக இருக்கிறது……குடும்பத்தினருடன் விழாக்களைக் கொண்டாடுவது என்பது பொங்கல் சாப்பிட்டு, முட்டாள் பெட்டியின் முன் அமர்ந்து சினிமா பார்ப்பதும், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் [பெரும்பாலானவை சினிமா சம்பந்தப்பட்டவை] பார்ப்பதுமாகவே முடிந்து விடுகிறது.  பொங்கல் என்பதை விடுமுறை நாளாகவே, வீட்டில் அமர்ந்து சினிமா பார்க்கும் நாளாகவே மாற்றி விட்டார்கள் மக்களும், ஊடகங்களும். பல கிராமங்களும் பொங்கலை விமரிசையாகக் கொண்டாடுவதில்லை என்பது தான் சோகம்.  கொஞ்சம் கொஞ்சமாக பொங்கல் கொண்டாடுவதே மறந்து விடுமோ என்ற அச்சமும் இருக்கிறது.


நேற்று மகளிடம் பேசும்போது, பல்வேறு சேனல்கள் பொங்கலுக்காக திரையிடப்படும் சினிமாக்களின் பட்டியலைச் சொன்ன போது மயக்கமே வந்தது. எத்தனை திரைப்படங்கள், எத்தனை எத்தனை சானல்கள்!
சரி நண்பர்களே, எனக்கு அலுவலகத்திற்குச் சென்றாக வேண்டிய கட்டாயம்…. நீங்கள் அனைவரும் பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடுங்கள். அனைவருக்கும் மீண்டும் பொங்கல் நல்வாழ்த்துகள்….. 

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

22 comments:

 1. இனிய தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

   Delete
 2. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
  அனைவருக்கும் இனிய பொங்கல்
  நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி ரமணி ஜி!

   Delete
 4. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி விமலன் ஜி!

   Delete
 5. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 6. எல்லாமே அரசியல்தான் இங்கு! மாடும் அரசியல், விலங்குகள் எல்லாமே அரசியல்தான்! பாவம் அவை! சிறப்பான பதிவு....தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்! ஜி!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி!

   Delete
 7. பொங்கலுக்கு அரசு விடுமுறை என்னும் செய்தியைப் பார்த்த நினைவு. எல்லாப் பண்டிகைகளும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் தான் குறைந்த பட்சம் அதுபற்றி ஓரளவாவது தெரிவிக்கிறார்கள் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. சனிக்கிழமை பொதுவாகவே விடுமுறை தான். ஆனாலும் சில அவசர வேலைகளுக்காக செல்ல வேண்டிய சூழல்.

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி GMB ஐயா.

   Delete
 8. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 9. பொங்கல் நல்வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி புலவர் ஐயா.

   Delete
 10. பண்டிகை தினத்தன்றாவது தொலைக்காட்சிப் பெட்டிக்கு ஓய்வு கொடுக்கலாமே! நாங்கள் பொதுவாகவே குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் தான் பார்ப்போம். பண்டிகை நாட்களில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முழு ஓய்வு.

  இனிய பொங்கல் வாழ்த்துகள். உங்கள் கருத்துக்களை ஆதரிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதாம்மா....

   Delete
 11. தாமதமான பொங்கல் வாழ்த்துக்கள். தொலைக்காட்சிப் பெட்டிதான் நம் சமூக உறவுகளும், பாரம்பரிய பண்டிகைகளும் சிதைந்ததற்கு முக்கியக் காரணம் என்று நான் நினைக்கிறேன்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....