திங்கள், 16 ஜனவரி, 2017

திரிபுரா – இப்படித்தான் இருக்க வேணும் மாநில முதல்வர்… - மாணிக் சர்க்கார்



ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 90

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.



திரிபுரா தலைமைச் செயலகம்
படம்: நன்றி, திரு பிரமோத், கேரளா....

சேபாஹிஜில்லா விலங்குகள் சரணாலயத்தினைத் தொடர்ந்து நாங்கள் சென்றது திரிபுராவின் தலைநகர் அகர்தலாவிற்கு. தலைநகர் அகர்தலாவில் பார்த்த அரண்மனை அருங்காட்சியகம் பற்றி எழுதும்போது திரிபுரா மாநிலத்தின் சட்டசபை/மாநில அரசு அந்த அரண்மனையிலிருந்து தான் முன்னர் செயல்பட்டது என்று எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம். அந்த அரண்மனையை அருங்காட்சியகமாக மாற்ற முடிவெடுத்தபிறகு, சட்டசபை மற்றும் மாநில அரசின் தலைமைச் செயலகத்திற்கு தனி இடம் வேண்டுமே என ஒரு இடத்தினை தேர்ந்தெடுத்து அங்கே புதிதாய் கட்டிடங்கள் கட்டினார்கள். 

திரிபுரா சட்டசபை
படம்: இணையத்திலிருந்து....

அந்த கட்டிடங்களும் அரண்மனை போலவே மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் கட்டி இருக்கிறார்கள். திரிபுரா பற்றிய செய்திகள் அதிகமாக வெளியே வருகிறதோ இல்லையோ, திரிபுரா மாநிலத்தின் முதல்வரான திரு மாணிக் சர்க்கார் பற்றியும், அவரது எளிமை பற்றியும், எந்தவித ஊழலிலும் சிக்காத நேர்மை பற்றியும் நிறையவே செய்திகள் வருவதுண்டு. முடிந்தால் நேரில் சென்று அவரைச் சந்திக்கவும் நினைத்திருந்தோம். மாநிலத்தின் முதல்வர் - அவருக்கு எத்தனையோ வேலைகள் இருக்கும் என்பதால் நேரில் சந்திக்கும் எண்ணத்தினைக் கைவிட்டு, அரசு இயங்கும் இடங்களைப் பார்க்கலாம் என்று திரிபுராவின் தலைமைச் செயலகம் இருக்கும் பகுதிக்குச் சென்றோம். 

திரு மாணிக் சர்க்கார், திரிபுரா முதலமைச்சர்,
படம்: இணையத்திலிருந்து....

தலைமைச் செயலகம் செல்லும்போதே முதல்வர் மாணிக் சர்க்கார் பற்றியும் கொஞ்சம் பார்க்கலாம்.  22 ஜனவரி 1949-ஆம் வருடம், தையல் தொழில் செய்த திரு அமுல்யா சர்க்கார் என்பவருக்கும், அரசுத்துறையில் பணிபுரிந்த அஞ்சலி சர்க்கார் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்.  ஆமாம் இதே மாதம் தான், இன்னும் 6 நாட்களில் அவரது பிறந்த நாள்! வணிகவியல் துறையில் பட்டம் பெற்றவர் இவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து திரிபுரா மக்களின் நலனுக்காக உழைப்பவர்.  1998-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று திரிபுராவின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவர் – இன்று வரை அதே பொறுப்பில் மிகவும் சிறப்பாகவும் திறமையாகவும் பணிபுரிந்து வருபவர். கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று தொடர்ந்து நான்காம் முறையாக முதலமைச்சர் பதவியில் இருப்பவர்.

கிட்டத்தட்ட 19 வருடங்களாக முதலமைச்சர் பணியில் இருக்கிறாரே, நிறைய சொத்து சேர்த்திருப்பார் என நினைக்கலாம்… ஆனால் கடந்த தேர்தலில் தனது வங்கி இருப்பாக இவர் காண்பித்தது வெறும் 16000/- ரூபாய். இன்னமும் ஒரு சொந்த வீடோ, மகிழ்வுந்தோ இவருக்குக் கிடையாது. அவரது அம்மா இறந்த போது கிடைத்த ஒரு வீட்டையும், சொந்தக்காரர் ஒருவருக்குக் கொடுத்தவர் திரு மாணிக் சர்க்கார். எந்த விதமான ஊழல் வழக்குகளிலும் சிக்காதவர்.  அரசாங்கம் முதலமைச்சர் பதவியில் இருப்பதால் கொடுக்கும் அரசு ஊதியத்தினையும் கட்சியின் விதிகள் படி, கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சியிலிருந்து தரும் மாதத்திற்கு வெறும் 5000 ரூபாயைப் பெற்று வருபவர் இவர். இந்தியாவில் இருக்கும் அனைத்து முதலமைச்சர்களிலும் மிகவும் குறைவான மாத வருமானம் பெறுபவர் இவர் மட்டுமே என்றும் சொல்லலாம்.

சரி இவர் தான் இப்படி இருக்கிறார், இவரது வீட்டினர் பதவியை, துர்பிரயோகம் செய்வார்கள் என நினைத்தால் அதுவும் தவறு. 2011-ஆம் ஆண்டு வரை மத்திய அரசுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு மாணிக் சர்க்கார் அவர்களின் மனைவி, தனது சொந்த உபயோகத்திற்காக, அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்துவதில்லையாம். அவருக்கு தனியாக பாதுகாப்பு அதிகாரிகள் கூட கிடையாது! ஜாடிக்கேற்ற மூடி! அவரது மனைவியின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணமும், ஓய்வு பெற்ற போது, அரசாங்கத்திலிருந்து கிடைத்த தொகை மட்டுமே. இந்த தம்பதியினருக்குக் குழந்தைப் பேறு இல்லை.

திரிபுரா மாநில முதல்வரைப் பற்றி படிக்கும்போதே நம் மனதுக்குள் மற்ற மாநிலங்களின் முதல்வர்களும், அவர்களது அளவிடமுடியாத சொத்து விவரங்களும், படை பலங்களும் நினைவில் வந்து தொலைக்கிறது! இப்படி லட்சத்தில் ஒருவர் மட்டுமே இருக்க முடியும் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு தொடரலாம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை!

எங்கள் ஓட்டுனர் ஷாந்தனுவும் தனது மாநில முதல்வர் மிகவும் நல்லவர், மக்களுக்காகவே பாடுபவர் என்று தனது அனுபவங்களையும் சொல்லிக் கொண்டே எங்களை தலைமைச் செயலகம் அருகே அழைத்துச் சென்றார். வண்டியில் சென்றபடியே சில படங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  தங்குமிடத்தில் சற்றே ஓய்வெடுத்த பிறகு என்ன செய்தோம் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

32 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. போற்றுதலுக்கு உரிய முதல்வர்
    ஏக்கப் பெரூமூச்சுதான் வருகிறது ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. >>> இந்தியாவில் இருக்கும் அனைத்து முதலமைச்சர்களிலும் மிகவும் குறைவான மாத வருமானம் பெறுபவர் இவர் மட்டுமே!>>>

    பெயருக்கேற்றார் போல் மாணிக்கம் தான்!..

    நமக்கெல்லாம் திரு. மாணிக் சர்க்கார் போன்றவர்கள் முதல்வராக அமையமாட்டார்களா?..

    ம்...ஏக்கப் பெருமூச்சு தான் மிச்சம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  4. இவர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இந்த அளவு விவரங்கள் தெரியாது . நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

      நீக்கு
  5. முதல்வர்களில் முதன்மையானவர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  6. கொடுத்துவைத்த மாநிலம் திரிபுரா!! நமக்கும் இப்படி ஒரு முதல்வர் கிடைக்க மாட்டாரா என்ற ஏக்கம் வரத்தான் செய்கிறது ஜி! மாணிக் சர்க்கார் மாணிக்கமே மாணிக்கமான சர்க்காரும் நடத்துகிறார்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  7. shithead media avoids Manic Sarkar
    No wonder..
    He cannot afford them...
    Shame on Media..
    nice post ji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  8. இவருக்கு முன் முதல்வராய் இருந்த நிரூபன் சக்கரவர்த்தியும் இவரைப் போன்றே மிகவும் எளிமையானவர் !நமக்கு ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

      நீக்கு
  10. பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் மிகவும் எளிமையானவர்களாகவும், தேவலோகத்திலிருந்து இறங்கி ஏதோ போனால் போகுது என்று மக்களுக்குச் சேவை செய்ய வந்தவர்களாகத் தன்னைக் காட்டிக்கொள்ளாதவர்களாகவும் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. அவர்கள் ஆட்சியில் இருந்தால், முதலமைச்சர்கள் மிகவும் எளிமையாகவும், கொஞ்சம்கூட சொத்து சேர்க்காதவர்களாகவும், பண ஆசை அறவே இல்லாதவர்களாகவும் இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால் இது திரிபுரா (இதற்கு முன்பு முதல்வர்களாக இருந்தவர்களும்தான்), மேற்கு வங்கம் ஆகிய இரண்டு மா'நிலங்களில் மட்டும்தான் (கேரளாவிலுமா? சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவர்களும் மிகவும் எளிமையானவர்களே.. அச்சுதானந்தன், முன்பு நம்பூதிரிபாட், போன்றவர்கள்). ஆட்சியில் இல்லாதபோதும் அவர்கள் அரசியலை 'கடமை' போன்று செய்கிறவர்கள். 20 நல்ல அரசியல்வாதிகளை எழுத ஆரம்பித்தால், அதில் பெரும்பாலும் கம்யூனிஸ்டுகளே இருப்பார்கள். ஆனாலும் மக்கள் (இந்தியா முழுவதும்) ஏன் இவர்களைப் பெரும்பான்மையாக ஆதரிப்பதில்லை என்பதில் எனக்கு ஆச்சரியம்தான்.

    மாணிக் சர்க்கார் போன்றவர்களைப் பாராட்டி எழுதியது மகிழ்ச்சி அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  11. பொதுவாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் எளிமையானவரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  12. ஜோதிபாசுவிற்குப் பின் மனதில் நிற்கும் முதல்வர்களில் முக்கிய இடத்தைப் பிடித்தவர் இவர். இக்காலத்தில் இவரைப் போன்ற மனிதர் இருக்கிறார் என்பதையறிந்து மகிழவேண்டும். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  14. ரொம்ப முன்னரே எங்கள் ப்ளாக் பாஸிட்டிவ் பதிவில் இவரைப்பற்றி சொல்லியுள்ளோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  15. பதிவை வாசிக்கும்போது ஏனோ நமது தமிழகம் நினைவுக்கு வருகிறது. அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

      நீக்கு
  16. இப்படி ஒரு முதல்வர் இருக்கிறார் என்பதை உங்கள் பதிவின் மூலம்தான் தெரியவருகிறது..இவர்களை பற்றிய செய்திகளை மீடியாக்கள் மறைத்துவிட்டு அராஜக முதல்வர்களை மட்டும் பிரபலபடுத்தி செய்திகள் வெளியிட்டு வருகின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....