புதன், 11 ஜனவரி, 2017

திரிபுரா – சேபாஹிஜில்லா – வனவிலங்கு சரணாலயம் – கண்ணாடி போட்ட குரங்கு!


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 89

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

நுழைவாயில்.... 

இயற்கைக் காட்சிகள், கோவில்கள் என சென்ற பிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது. நாங்கள் அடுத்ததாய் பயணித்தது ஒரு வனவிலங்குச் சரணாலயத்திற்கு! திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்தலாவிலிருந்து உதைப்பூர் சாலையில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது இந்த சேபாஹிஜில்லா வனவிலங்கு சரணாலயம்.  இங்கே இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் சரணாலயத்தில் விலங்குகள் பாதுகாக்கப்படுவது செயற்கைக் கூண்டுகளில்! இந்த வனவலிங்கு சரணாலயம் மிகவும் அழகாய் இருக்கும், நிச்சயம் பார்க்க வேண்டிய இடம் என்றெல்லாம் பார்த்து வைத்திருந்ததால் அங்கே சென்றோம்.


இந்தப் பகுதிக்குச் செல்லும் பாதைகள் வெகு அழகு. நிறையவே மரங்களும், செடிகளும் இருப்பதால் இயற்கையான சூழலில் பயணிக்கும் ஒரு உணர்வு ஏற்பட்டது.  இன்னும் இங்கே மரங்களை வெட்டி, கட்டிடங்களை கட்ட ஆரம்பிக்கவில்லை என்பது ஆறுதல் தந்த விஷயம்.  நாங்களும் சரணாலயத்திற்குச் சென்று இப்பகுதியில் மட்டுமே பார்க்கக் கிடைக்கும் ஒரு வகை குரங்கினைப் பார்க்கலாம் என நினைத்தோம்.  அது என்ன வகை குரங்கு? கொஞ்சம் பொறுங்கள். சொல்கிறேன்!

கட்டணங்கள்!

வனவிலங்குச் சரணாலயம், அதுவும் அரசாங்கத்தின் பராமரிப்பில் இருக்கிறது எனும்போதே எங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்தது – பராமரிப்பு அத்தனை சுகமாய் இருக்காது என்ற எண்ணத்துடன் தான் நாங்கள் அங்கே சென்றோம்.  எங்கள் எண்ணம் சரியானது தான் என்று அங்கே சென்றபோது தெரிந்து கொண்டோம். நுழைவுக்கட்டணம், புகைப்படக் கருவிக்கான கட்டணம், வீடியோ கருவிகளுக்கான கட்டணம், வண்டிகள் நிறுத்தக் கட்டணம் என அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள்! நுழைவாயில் அருகே கட்டணங்கள் எழுதி இருந்தது – VDO என்பது வீடியோ என்பதைக் கொஞ்சம் யோசித்தபின் தான் புரிந்து கொள்ள முடிந்தது!

நல்ல உறக்கம்! தூங்கும்போது கூட ஸ்டைல்!
கரடியின் குரல்: ஃபோட்டோ எடுக்காத...  ஃபோட்டோ எடுக்காத
டேய் தூங்கும்போது கூட விடமாட்டீங்களா ) 

தேவையான கட்டணங்களைச் செலுத்தி அதற்கான சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு அவற்றை சரிபார்த்துக் கொண்டிருந்தவரிடம் காண்பித்து உள்ளே நுழைந்தோம்.  மற்ற அரசு வனவிலங்கு சரணாலயங்களை விட பராமரிப்பு மோசமாகவே இருந்தது. இத்தனைக்கும் இங்கேயும் நிறைய சுற்றுலாப் பயணிகளும், இங்கே வருகிறார்கள். இந்த வனவிலங்குச் சரணாலயத்தில் கிட்டத்தட்ட 150 வகையான பறவைகள், வனவிலங்குகள், படகுத்துறை, யானைச் சவாரி என அனைத்தும் இருக்கிறது.  என்றாலும் நாங்கள் சென்ற சமயத்தில் யானைச் சவாரி வசதி இருக்கவில்லை. படகுத்துறையில் இருந்த படகில் பராமரிப்பு வேலைகள் இருக்கிறது என அந்த வசதியையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்கள்!

Gibbon Monkey! இது ஹூக்கூ... ஹூக்கூ என சத்தமிடுவது அழகு!

கரடி, கிப்பன் குரங்குகள், முள்ளம்பன்றி, பறவைகள் என பலதையும் பார்த்த பிறகு, இந்தப் பகுதியில் மட்டும் பார்க்க முடிகின்ற ஒரு வித குரங்கான Spectacled Monkey என அழைக்கப்படும் குரங்குகளைப் பார்க்கச் சென்றோம். ரப்பர் மரங்களின் இலைகளை மிகவும் விரும்பி உண்ணும் இந்த வகைக் குரங்குகள் அரிய வகைக் குரங்குகள். Endangered Species என்ற வகையில் இதைச் சேர்த்திருக்கிறார்கள். மிகவும் குறைவான அளவிலேயே இக்குரங்குகள் இப்போது இருக்கின்றன.  எதற்கு இந்தக் குரங்கிற்கு இந்த பெயர் என்ற கேள்விக்கு பதில் இந்த குரங்கினைப் பார்த்தாலே தெரிந்துவிடும்!

Spectacled Monkey....
படம்: இணையத்திலிருந்து....

கருத்தரித்தால் ஒரே ஒரு குட்டி மட்டுமே ஈனும் இந்த குரங்குகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது என்பது தான் சோகம். ஒரு கூட்டமாக வாழும் இந்தக் குரங்கினம் தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்து, குட்டிக் குரங்குகளை மாற்றி மாற்றித் தூக்கிக் கொண்டு, அதை மிகவும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாம்! எல்லா விலங்குகளைப் போல, குட்டிகள் அருகே யாராவது வந்து விட்டால் அவற்றுக்கு கோபம் அதிகம் வந்துவிடுகிறது! நாங்கள் சென்றபோது கூண்டில் தான் இந்த கண்ணாடிக் குரங்கு ஒன்றினைப் பார்க்க நேர்ந்தது. 

Spectacled Monkey...
படம்: இணையத்திலிருந்து....

இந்தக் குரங்குகள் மட்டுமல்லாது இது போன்று பல உயிரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது சோகமான விஷயம். இயற்கைக்கு மாறாக மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல்புரிந்து வர இயற்கையாக இருக்கும் பல விஷயங்கள் அழிந்து வருவது மன்னிக்க முடியாத குற்றம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.  இயற்கையான சூழலில் இருக்க வேண்டிய இந்த விலங்குகளைக் கூண்டுகளில் அடைத்து வைத்து, அவற்றை துன்புறுத்துவதும் நிறுத்தப் பட வேண்டும் என்று தான் தோன்றியது.  கூடவே இவற்றைப் பார்க்க வரும் மனிதர்களும் கூண்டில் இருக்கும் விலங்குகளைச் சீண்டுவதும், துன்புறுத்துவதும் நிறுத்தப்பட வேண்டும்.

புதிதாய் ஒரு குரங்கினத்தினையும் வேறு சில மிருகங்களையும் பார்த்த பிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது.  அடுத்ததாய் நாங்கள் சென்றது எங்கே, என்ன அனுபவம் கிடைத்தது என்பதை வரும் பகுதியில் எழுதுகிறேன். 

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

26 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. ,,புதிய குரங்கு...இயற்கை அதிசயம்...மகிழ்வும் வாழ்த்துகளும் சகோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. கண்ணாடிக் குரங்கினம் அழிந்து வருவது வேதனைதான் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 4. காக்கப்பட வேண்டிய உயிரினங்கள்...

  Spectacled Monkey..அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. புதிய வகைக் குரங்கு அழகு. ஆனால் மறைந்து வருவது வருத்தத்திற்குரியது. ஹ்ம்ம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

   நீக்கு
 8. சரணாலயம் என்றால் அடைத்து வைப்பது என்னும் பொருளா இத்தனைக்கும் அந்தக் கண்ணாடிக் குரங்குகள் தங்கள் குட்டிகளை நன்கு பராமரிக்கின்றன இருந்தாலும் கூண்டுக்குள்தானே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 9. >>> கூண்டில் இருக்கும் விலங்குகளைப் பார்க்க வரும் மனிதர்கள் அவற்றைச் சீண்டுவதும், துன்புறுத்துவதும் <<<

  இவர்களைக் கூண்டிற்குள் தள்ளி அடைத்து வைத்தாலும் தகும்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @ நொரண்டு.

   நீக்கு
 11. இயற்கைக்கு மாறாக மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல்புரிந்து வர இயற்கையாக இருக்கும் பல விஷயங்கள் அழிந்து வருவது மன்னிக்க முடியாத குற்றம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. /////////// உண்மை தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா...

   நீக்கு
 12. விலங்கினங்கள் பல அழிந்து வருவது வேதனையான விஷயம்....மனிதனின் சுயநலம்...அருமையான தொடர்...தொடர்ந்து உங்களுடன் ஊர் சுற்றுகின்றோம்..

  கீதா: ஏனோ எனக்கு விலங்கியல் பூங்கா ரசிப்பதில்லை. கூண்டிற்குள் விலங்குகளை அடைத்து இருப்பதாலாக இருக்கலாம்....பாவம். இயற்கையுடன் இருக்கும் விலங்கியல் பூங்கா என்றால் பிடிக்கும். மனிதனின் சுயநல புத்தியாலும், இயற்கைக்குயை எதிர்த்துக் கொண்டு வாழ்வதாலும் பல உயிரினனள் அழிந்துதான் வருகின்றன....அரசு நடவடிக்கை எடுத்தால்தான் உண்டு. மக்களும் விழிப்புணர்வு பெற வேண்டும். படங்கள் அழகு!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 13. இந்த குரங்குகள் எந்த கண் மருத்துவமனையில் செக் செய்து ,இந்த கண்ணாடியை வாங்கினவோ:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....