பயணங்கள்
எப்போதுமே பிடித்தமானது – அது சாலை வழிப் பயணமாக இருந்தாலும் சரி, இரயில் பயணமாக
இருந்தாலும் சரி இல்லை ஆகாய மார்க்கமாக இருந்தாலும் சரி எல்லாமே பிடித்தது –
ஏனெனில் பயணம் செய்வது மட்டுமே முக்கியம்! பயணிக்கும்போது கிடைக்கும் நல்ல மற்றும்
கெட்ட அனுபவங்களை நமக்கு ஒரு பாடமாக மாற்றிக் கொள்ள முடியும்!
பீஹார் டைரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பீஹார் டைரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 8 ஏப்ரல், 2019
வெள்ளி, 5 ஏப்ரல், 2019
புதன், 3 ஏப்ரல், 2019
வெள்ளி, 22 மார்ச், 2019
பீஹார் டைரி – புத்த கயா – மஹா போதி ஆலயம்
புத்தகயா என்று தமிழில் நாம்
சொன்னாலும்/எழுதினாலும் இந்த இடத்தினை Bபோத்dh Gகயா என்று தான் அழைக்க வேண்டும்.
இந்த Bபோத்dh Gகயாவில் தான் புத்தர் போதி மரத்தின் கீழே அமர்ந்து ஞானத்தினை
அடைந்தார் என்பது வரலாறு. முழுமையாக வரலாறு பற்றி இங்கே சொல்லப் போவதில்லை. தெரிந்து
கொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள சுட்டியில் தகவல்களை படித்து அறிந்து கொள்ளலாம்.
Labels:
அனுபவம்,
கோவில்கள்,
பயணம்,
பீஹார்,
பீஹார் டைரி,
புகைப்படங்கள்,
பொது
திங்கள், 18 மார்ச், 2019
பீஹார் டைரி – புத்த கயா – தி க்ரேட் புத்தா மற்றும் சில தலங்கள்
80 அடியில் ஒரு அமைதிப்பார்வை...
புத்த கயா சென்ற போது முதன்மையான மஹாபோதி
புத்தர் கோவிலுக்குச் செல்லும் முன்னர் ஒரு பேட்டரி ரிக்ஷாவில் பல நாடுகளிலுள்ள
புத்த சமயத்தினர் புத்தருக்கு ஞானம் கிடைத்த ஸ்தலமான புத்தகயாவில் அமைத்திருக்கும்
வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வந்தோம் என்பதை தாய்லாந்து கோவில் பதிவில்
சொன்னது நினைவில் இருக்கலாம். இன்றைக்கு அப்படிப் பார்த்த சில வழிபாட்டுத் தலங்கள்
மற்றும் அங்கே கிடைத்த தகவல்கள், அனுபவங்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம்.
Labels:
அனுபவம்,
கோவில்கள்,
பயணம்,
பீஹார்,
பீஹார் டைரி,
புகைப்படங்கள்,
பொது
வெள்ளி, 15 மார்ச், 2019
பீஹார் டைரி – புத்தகயா - தாய்லாந்து கோவில் – நாளொரு உண்டியல் – நாளொரு பலன்
எங்கள் பீஹார் பயணத்தில்
முக்கியமாக நாங்கள் பார்க்க நினைத்த ஒரு இடம் என்றால் அது புத்தகயா. புத்தருக்கு
ஞானம் பிறந்த இடம். அங்கே அமைந்திருக்கும் புத்தர் வழிபாட்டுத் தலம் ரொம்பவே
சிறப்பானது. புத்தகயாவில் பார்க்க வேண்டிய இடங்கள் என நிறையவே இருக்கிறது. புத்த
மார்க்கத்தினை தழுவிய பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணமே இருக்கிறார்கள்.
Labels:
அனுபவம்,
கோவில்கள்,
பயணம்,
பீஹார்,
பீஹார் டைரி,
புகைப்படங்கள்,
பொது
புதன், 13 மார்ச், 2019
பீஹார் டைரி – நாளந்தா – கருப்பு புத்தரும் வெள்ளை மஹாவீரரும்
கருப்பு புத்தர்!
நாளந்தா அழிவுச் சின்னங்களைக்
காணச் சென்ற போது கூடவே அதன் எதிர்புறத்தில் இருந்த அருங்காட்சியகமும் பார்த்து
வந்ததைப் பற்றி எழுதி இருந்தேன். நாளந்தா அருகில் இன்னும் பல இடங்கள் – சில பழையவை,
சில புதியவை இருக்கின்றன. அப்படிப் பார்த்த இரண்டு இடங்கள் தான் இந்தப் பதிவில்
சொல்லப் போகிறேன். முதலில் மஹாவீரரைப் பற்றிப் பார்க்கலாம்.
Labels:
அனுபவம்,
பயணம்,
பீஹார்,
பீஹார் டைரி,
புகைப்படங்கள்,
பொது
திங்கள், 11 மார்ச், 2019
பீஹார் டைரி – நாளந்தா – அருங்காட்சியகம்
நாளந்தாவின் அழிவுச் சின்னங்களைப்
பார்த்த கையோடு அந்த இடத்தின் எதிர் பக்கத்தில் இருந்த அருங்காட்சியகத்தினையும்
பார்க்கச் சென்றோம். நுழைவாயில் அருகிலேயே மிகப் பிரம்மாண்டமான மணி ஒன்று நம்மை
வரவேற்கிறது. இத்தனை பெரிய மணியை வேறு எங்கும் பார்த்ததில்லை. அந்த மணியை சிறப்பான
மண்டபத்தில் தொங்க விட்டு அப்பக்கத்தில் சிறு பூங்காவினையும்
அமைத்திருக்கிறார்கள். அதனைப் பார்த்தபடியே அருங்காட்சியகத்திற்குள் நுழைவதற்கான
நுழைவுச் சீட்டினை வாங்கிக் கொண்டு உள்ளே செல்கிறோம்.
Labels:
அனுபவம்,
பயணம்,
பீஹார்,
பீஹார் டைரி,
புகைப்படங்கள்,
பொது
புதன், 6 மார்ச், 2019
பீஹார் டைரி – நாளந்தா – எரிந்த நூலகம் - அழிவின் சின்னங்கள்
நாளந்தா - அழிவின் சின்னங்கள்...
பீஹார் டைரி என்ற குறிப்போடு
பதிவுகள் எழுதி நிறைய நாளாயிற்று! தொடராக எழுதாமல் இப்படி தனித்தனி பதிவுகளாக எழுதுவதில்
ஒரு வசதி. Continuity விட்டுப் போய்விடுமே என்ற கவலையில்லை! முடிந்தால் எழுதலாம்
இல்லையென்றால் விட்டு விடலாம்! இதோ இன்றைக்கு ஒரு பீஹார் டைரி பதிவுடன் உங்களைச்
சந்திக்க வந்தாயிற்று. கடைசியாக எழுதிய பீஹார் டைரி பதிவு – வெந்நீர் ஊற்று – குதிரை வண்டி பயணம்!
– எழுதிய நாள் ஜனவரி 21! என்னே எனது சுறுசுறுப்பு! சரி வாருங்கள், இன்றைய பீஹார்
டைரி பதிவுக்குப் போகலாம்.
Labels:
அனுபவம்,
பயணம்,
பீஹார்,
பீஹார் டைரி,
புகைப்படங்கள்,
பொது
திங்கள், 21 ஜனவரி, 2019
பீஹார் டைரி – வெந்நீர் ஊற்று – குதிரை வண்டி பயணம்…
வாங்க... ஜாலியா ஒரு குதிரைப் பயணம் போகலாம்...
ராஜ்கீர் ஷாந்தி ஸ்தூபா பார்த்த
பிறகு அடுத்ததாக எங்கே என்ற கேள்வி பிறந்தது – ராஜ்கீர் பகுதியில் இன்னும் சில
இடங்கள் உண்டு பார்க்க என்றாலும் நாங்கள் சென்ற இடம் ஒரு கோவில் – அங்கே வெந்நீர்
ஊற்றும் இருக்கிறது – அங்கே தான் செல்ல வேண்டும். அங்கே செல்வதற்கு முன்னர் வேறு
சில விஷயங்களைப் பார்க்கலாம்.
Labels:
அனுபவம்,
பயணம்,
பீஹார்,
பீஹார் டைரி,
புகைப்படங்கள்,
பொது
ஞாயிறு, 20 ஜனவரி, 2019
வெள்ளி, 18 ஜனவரி, 2019
புதன், 16 ஜனவரி, 2019
திங்கள், 14 ஜனவரி, 2019
திங்கள், 7 ஜனவரி, 2019
ஞாயிறு, 6 ஜனவரி, 2019
ஞாயிறு, 30 டிசம்பர், 2018
வெள்ளி, 28 டிசம்பர், 2018
புதன், 26 டிசம்பர், 2018
பீஹார் டைரி – உழைப்பாளி – தேநீர் தந்த தேவன்
தேநீர் தந்த தேவன்
பீஹார் டைரி...
பீஹார் டைரி என எழுதியதில் இதுவரை
ஒன்பது பதிவுகள் எழுதியாயிற்று. இன்னும் எழுத செய்திகளும் பார்த்த இடங்களும் உண்டு.
முடிந்தபோது எழுதுகிறேன். முந்தைய பயணங்கள் பற்றிய பகிர்வுகளை தொடராக எழுதிய போது,
பலராலும் தொடர்ந்து படிக்க இயலவில்லை – தொடர்ச்சி விடுபட்டால் படிக்க முடியவில்லை
என்று சொன்னார்கள். நண்பர் ஒருவர் ஒரு பயணம் போனா, நீங்க பாட்டுக்கு இருபது
முப்பது பதிவு எழுதறீங்க, எல்லாத்தையும் தொடர்ந்து படிக்க முடியல, நடுவில்
விடுபட்டால் அப்புறம் படிக்கத் தோன்றுவதில்லை என்றும் சொல்லி இருந்தார். அவர்
சொன்னது மட்டுமல்ல, எனது பதிவுகளைப் படிப்பதையே விட்டுவிட்டார் எனத் தோன்றுகிறது!
பதிவுகள் அனைத்தையும் படிப்பதென்பது கொஞ்சம் கடினமான வேலை தான்! நானும் எல்லோருடைய
பதிவுகளையும் இடைவெளி விட்டுதான் படிக்க முடிகிறது!
உழைப்பாளி பற்றி சொல்ல வந்து
விட்டு, வேறு எதையோ பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். பீஹார் டைரி பதிவில் இந்த
உழைப்பாளி பற்றி பிறகு சொல்கிறேன் எனச் சொல்லி இருந்தேன். அதை நினைவூட்டலாம் என
ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டது பதிவின் ஆரம்பம்! பீஹார் டைரி – கண்ணாடி ஜாடியில் தின்பண்டம்
பதிவு எழுதிய போது, தேநீர் கடையைத் தேடிப் போனபோது பார்த்த ஒரு கடை ஒன்றில் கண்ணாடி
ஜாடியில் தின்பண்டங்கள் இருப்பதைப் பார்த்தது பற்றிச் சொல்லி இருந்தேன். அப்பதிவில்
தேநீர் கடை பற்றி பிறகு எழுதுகிறேன் எனவும் சொல்லி இருந்தேன். இதோ அந்த தேநீர்
தந்த தேவன் பற்றிய பகிர்வு இன்றைய பதிவாக….
நாங்கள் தங்கி இருந்த ஹாலிடே
ஹோமில் உணவகம் நடத்துபவர்கள் பயங்கர உழைப்பாளிகள் – காலையில் எழுந்திருப்பதே ஏழு
மணிக்கு மேல் தான்! எங்களுக்கோ காலையில் சீக்கிரம் புறப்பட வேண்டும். சரி வெளியே
சென்று தேநீர் கிடைக்கிறதா பார்க்கலாம் என வெளியே சென்றோம். ஆசியானா – தீகா சாலையில்
தான் எங்கள் ஹாலிடே ஹோம் இருந்தது. காலை நேரம் என்பதால் பெரும்பாலான கடைகள்
திறந்திருக்கவில்லை. ஒரே ஒரு கடையில் மட்டும் இந்த மனிதர் – எங்களுக்குத் தேநீர்
தந்த தேவன் – இருந்தார். குர்தா – பைஜாமா, குளிருக்கு இதமாக ஒரு பெரிய ஜாக்கெட்,
தலையில் கம்பளிக் குல்லாய் சகிதம், கடையைத் திறந்து வைத்துக் கொண்டு வரப் போகும்
வாடிக்கையாளருக்காகக் காத்திருந்தார்.
ஒரு சிறிய கேஸ் ஸ்டவ் – நான்கு அல்லது
ஐந்து கிலோ அளவுள்ள சிலிண்டர் – அதன் மேலேயே ஒரு பர்னர் பொருத்திய அடுப்பு
இங்கெல்லாம் கிடைக்கிறது. பெட்ரமாக்ஸ் லைட்டுக்கு பதிலாக, இந்த மாதிரி
சிலிண்டர்களில் லைட் பொருத்தியது கிடைக்கும் வட இந்தியாவில். அதே சிலிண்டரில்
ஒற்றை அடுப்பும் இணைக்கலாம். அப்படி ஒரு அடுப்பில் தேநீர் தயாரித்து கெட்டிலில்
வைத்திருக்கிறார். சுடச் சுட ஒரு கப்பில் – அந்த சிறிய கப்பில் 75 எம்.எல். அளவு
தான் பிடிக்கும்! – தேநீர் – ஐந்து ரூபாய் தான் விலை. என் கேரள நண்பருக்கு
காலையில் தேநீர் குடிக்காவிட்டால் கஷ்டம்! அதுவும் நல்ல பெரிய குடுவையில்
கொடுத்தாலும் குடிப்பவர்! இந்த கப் பார்த்த உடனேயே “சிறிய கப், வலிது கிட்டுமோ”
என்று என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார். கடைக்காரர் சிறியதில் கொடுத்துவிட்டதால்,
கவலைப்படாதே, எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என சொன்னேன்!
தேநீர் அருந்தியபடியே அவரிடம்
பேச்சுக் கொடுத்தோம். காலை நான்கு மணிக்கே எழுந்து கடையைத் திறந்து விடுவாராம்.
கங்காஜியின் [கங்கை நதி] அப்புறத்தில் அவருடைய வீடு. மனைவி, மக்கள் அங்கேயே
இருக்க, இவர் மட்டும் இங்கே இந்த சாலையோரக் கடை நடத்துகிறார். காலை நான்கு
மணிக்குக் கடை திறந்தால் இரவு பதினொன்று மணி வரை கடை திறந்து வைத்திருப்பாராம்.
தேநீர், பிஸ்கெட், குட்கா, பான்மசாலா, சிகரெட் போன்றவற்றை விற்பனை செய்கிறார். கடை
என்றால் பெரிய கடை ஒன்றும் இல்லை. நான்கு குச்சிகள் நட்டு ஒரு சிறு கொட்டகை. மரச்
சட்டங்களை வைத்து அதன் மேல் பொருட்களை வைத்திருக்கிறார். இரவு அங்கேயே தங்கி
விடுவாராம்.
அச்சாலை பிரதான சாலை என்பதால்
கொஞ்சம் போக்குவரத்து இருக்கும். சாலையில் போவோர் வருவோர் தேநீர் குடிக்க
வருகிறார்களோ இல்லையோ, பான், குட்கா, சிகரெட்/பீடி போன்றவற்றிற்காக நிச்சயம்
வருவார்கள் என்கிறார். கூடவே தேநீர் பிஸ்கெட் இருந்தால் விற்பனை ஆகிறது என்கிறார்.
ஐந்து ரூபாய் ஒரு கப் – இவ்வளவு சிறிய கப்-பில் தருகிறீர்களே, இது போதுமா? எனக்
கேட்க, இங்கே இப்படித்தான், ஐந்து ரூபாய்க்கு மேலே விலை என்றால் வாங்க
மாட்டார்கள். அதனால் ஐந்து ரூபாய்க்கு தேநீர் விற்கிறேன். ஐந்து ரூபாயில் பெரிய
கப்பில் கொடுத்தால் கட்டுப்படியாகாது என்று சொல்ல, எங்களுக்கு மீண்டும் இரண்டாம்
முறையாக கப்பில் தரச் சொன்னோம். இன்னுமொரு சிறிய கப்பில் அளந்து எங்களுக்கு
ஊற்றினார்!
சின்ன கப்பில் தேநீர் – எனக்கும் நண்பருக்கும்
போதவில்லை. அதனால் இரண்டு முறையாக வாங்கிக் குடித்த பிறகும் நண்பருக்கு திருப்தி
இல்லை! மூன்றாம் முறையாக இன்னுமொரு கப் தேநீர் வாங்கிக் குடித்தார் – அந்தச் சிறிய
கப் தேநீர் தொண்டை நனைவதற்குள் தீர்ந்து போன மாதிரி இருந்தது! குஜராத் அர்தி சாய், மஹாராஷ்ட்ரா
கட்டிங் சாய் மாதிரி இங்கே சின்னக் கப் சாய்! எப்படியோ, காலை நேரத்தில் கடை
திறந்து, அதுவும் குளிர் நேரத்தில் காலையிலேயே எழுந்து கடை திறந்து வைத்து
உழைக்கும் அந்த உழைப்பாளிக்கு நன்றி சொல்லி, அவரது வியாபாரம் நன்கு நடக்க
வாழ்த்தும் சொல்லி, குடித்த தேநீருக்கான காசு – 25 ரூபாய் [ஐந்து சிறிய கப்]
கொடுத்து அங்கிருந்து புறப்பட்டோம். அந்த உழைப்பாளிக்கு எங்கள் சார்பிலும் உங்கள்
சார்பிலும் ஒரு பூங்கொத்து!
வேறு சில செய்திகளோடு மீண்டும்
ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
Labels:
அனுபவம்,
கதை மாந்தர்கள்,
பயணம்,
பீஹார்,
பீஹார் டைரி,
புகைப்படங்கள்,
பொது







