வெள்ளி, 18 ஜனவரி, 2019

பீஹார் டைரி – ராஜ்கீர் விஷ்வ ஷாந்தி ஸ்தூபா – எங்கும் அமைதி நிலவட்டும்…விஷ்வ ஷாந்தி ஸ்தூபா...
ராஜ்கிர், நாளந்தா, பீஹார்.

ராஜ்கீர் ஷாந்தி ஸ்தூபா அமைந்திருக்கும் இடத்திற்கு மின் தூக்கி வழியே சென்ற அனுபவத்தினை இந்த வாரத்தின் புதன் கிழமையில் எழுதி இருந்தேன். இதோ ராஜ்கீர் ஷாந்தி ஸ்தூபா பற்றிய தகவல்களுடன் இந்த வெள்ளியில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
 
ரத்னகிரி மலை என அழைக்கப்படும் 400 மீட்டர் உயரமுள்ள ஒரு மலை மீது உலக அமைதிக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு ஸ்தூபா தான் இந்த ராஜ்கீர் ஷாந்தி ஸ்தூபா. உடன் கட்டோலா மூலம் மேலே ஏறிச் சென்றால் மிகவும் அழகான இந்த ஸ்தூபாவினைப் பார்ப்பதோடு, மலை மீதிருந்து அழகிய ராஜ்கீர் நகரையும் பறவைப் பார்வையில் பார்க்க முடியும் என்பது கூடுதல் வசதி. ஏற்கனவே சொன்னது போல, நாங்கள் உடன் கட்டோலாவில் ஒரு த்ரில்லான பயணம் செய்து மலை உச்சியை அடைந்தோம். உடன் கட்டோலா நம்மை இறக்கி விடும் இடத்திலிருந்து இன்னும் சில மீட்டர் தொலைவு மலைப்பாதை/படிகள் வழியே நாம் மேல் நோக்கி நடக்க வேண்டியிருக்கும். நடக்கத் தயாராக இருங்கள் நண்பர்களே.


இப்படி வாகா காமிச்சா தானே பேன் எடுக்க முடியும்!


பாப்பின்ஸ் சாப்பிட்ட லங்கூர்

வழியெங்கும் குரங்குகளே பயப்படும் ஒரு குரங்கு வகையான லங்கூர் வகைக் குரங்குகள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றும் மாற்றி மாற்றி பேன் பார்த்துக் கொண்டிருந்தன – அந்தக் காட்சிகள் வெகு அழகு. சில மனிதக் குரங்குகள் அந்த நிஜக் குரங்குகளிடம் வம்பு செய்ய, தன் கோரப் பற்களைக் காட்டி பயமுறுத்தின. நிறைய பேர் அதற்கு தின்பண்டங்களைத் தருகிறார்கள். சில தொழில்முறை நிழற்படம் எடுப்பவர்கள் அங்கே வருபவர்களை குரங்குகளுடன் படம் எடுத்துத் தருகிறார்கள். ஒரு பெண்மணி அப்படி படம் எடுக்க ஆசைப்பட்ட போது, கையில் தின்பண்டம் இருந்தால் லங்கூர் குரங்கிற்குக் கொடுப்பது போல கொடுங்கள், நான் படம் எடுக்கிறேன் என்று சொல்ல, அந்த அம்மணி கொடுத்தது என்ன தெரியுமா? பாப்பின்ஸ் மிட்டாய்கள்! ஹாஹா… அந்தக்குரங்குக்கு நாக்கு மல்டி கலராக மாறியபின் எப்படி இருக்கும் என்ற யோசனை எனக்கு வந்தது! 


விஷ்வ ஷாந்தி ஸ்தூபா...
ஒரு கிட்டப் பார்வை...


பெரிய அளவு மணி...

மேலே ஷாந்தி ஸ்தூபா தவிர பௌத்த மோனாஸ்ட்ரி என அழைக்கப்படும் தலங்களும் உண்டு. ஸ்தூபாவின் நான்கு பக்கங்களிலும் அழகிய தங்கத்தால் ஆன புத்தர் சிலைகள் உண்டு. ஒவ்வொரு சிலையும் ஒரு வித அமைப்பாக இருக்கின்றது. அதிலும் புத்தர் பெருமான் படுத்திருக்கும் வடிவத்தில் இருந்த சிலை மனதை விட்டு அகல மறுக்கிறது.  புத்தர் பெருமானின் பிறப்பு, ஞானம் பெறுதல், அவரது போதனைகள் மற்றும் அவரது இறப்பினை ஒவ்வொரு சிலையும் தெரிவிப்பதாகச் சொல்கிறார்கள். ஜப்பானைச் சேர்ந்த புத்தமதத் துறவியான Nichidatsu Fuji [1885 – 1985] அவர்களால் அமைக்கப்பட்ட அமைதி ஸ்தூபாக்களில் ஒன்று தான் இந்த ராஜ்கீர் ஷாந்தி ஸ்தூபா. ஜப்பானிய பகோடா என அழைக்கப்படும் இந்த அமைதி ஸ்தூபாக்கள் இந்தியாவின் வேறு பகுதிகளிலும் உண்டு. ஒடிசா மாநிலத்தின் தௌலிகிரி பகுதியில் இருக்கும் அமைதி ஸ்தூபா பற்றி இங்கே படிக்கலாம்.
ஜப்பான் அரசாங்கமும் ஜப்பானில் புத்த மதத்தினைத் தழுவியவர்களும், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 1969-ஆம் ஆண்டு அமைத்த உலக அமைதி ஸ்தூபா தான் இந்த விஷ்வ ஷாந்தி ஸ்தூபா. உலகமெங்கும் இப்படி 80 இடங்களில் அமைதி பகோடாக்கள் அமைத்தார்கள். ஜப்பான் அணுகுண்டுத் தாக்குதலுக்கு ஆளான பிறகு, வன்முறையில்லாத உலகை உண்டாக்க இப்படி 80 இடங்களில் உலகளாவிய அமைதி ஸ்தூபாக்களை ஜப்பான் அரசாங்கம் நிறுவியிருக்கிறது. அதில் ஒன்று தான் இந்த ராஜ்கீர் விஷ்வ ஷாந்தி ஸ்தூபா.  ரொம்பவே அமைதியான இடம். இந்த இடத்திலேயே ஜப்பானியர்கள் மற்றும் புத்தமதத் துறவிகள் தங்கி புத்த மதத்தினை தொடர்ந்து வழி நடத்துகிறார்கள். இப்போதும் அங்கே சில துறவிகள் இருக்கிறார்கள்.அமைதியான அந்த இடத்தில் சில நிமிடங்கள் இருந்து காட்சிகளை ரசித்ததோடு சில நிமிடங்கள் அமைதியையும் ரசித்தோம்.  பெரிய மணி ஒன்றும் அங்கே அமைந்திருக்கிறது. புத்தர் பிரான் இந்த மலைப் பகுதியில் அவரது சீடர்களுக்கு போதனைகளைச் சொன்னதாகவும், இதே பகுதியில் இருக்கும் வேறு ஒரு மலைப்பகுதியிலும் புத்தர் பிரானின் பாதங்கள் பட்டதாகவும் செய்திகள் உண்டு. சிறப்பான ஒரு இடத்தில் நாங்களும் சென்று பாதம் பதித்தோம் என்பதில் மகிழ்ச்சி. எவ்வளவு அமைதி அந்த இடத்தில். ஆனால், நம் மக்கள் அங்கேயும் செல்ஃபி எடுத்துக் கொண்டும், உரத்த குரலில் பேசிக் கொண்டும் அங்கே நிலவிய அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தார்கள். போதாதற்கு சில பள்ளி மாணவ, மாணவிகள் வர அவர்களும் நிறைய சப்தம் போட்டார்கள். குழந்தைகள் தானே அவர்களைச் சொல்லித் தவறில்லை. சுற்றுலா வரும் இடத்தில் இப்படி நடந்து கொள்வது வாடிக்கை தான். பெரியவர்களே இப்படி இருக்கையில், சிறுவர்களை என்ன சொல்ல முடியும்.


மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன!..
Photographer at work!

அமைதி ஸ்தூபாவினைப் பார்த்து ரசித்த பிறகு கீழ்நோக்கிச் செல்ல மீண்டும் உடன் கடோலா அரங்கிற்கு வந்தோம். அங்கே யாரோ வேலையில்லா பட்டதாரி, அதாங்க VIP-இன் மனைவியும் குழந்தையும் ஒரு காவல்துறை ஊழியருடன் வர, மற்றவர்களை நிறுத்தி, அவர்கள் மூவருக்கும் வரிசையில்லாமல் முதல் இடம்! இந்த VIP Culture என்றைக்கு மாறுமோ! நாங்களும் கூட VIP தான் டோய் என்று சொல்லலாம் என நினைத்து, என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டேன். ஒரு வழியாக அவர்கள் சென்ற பிறகு நாங்களும் கீழ்நோக்கிச் செல்லும் ஒரு தொங்கு இருக்கையில் அமர்ந்து பயணித்தோம்.  விஷ்வ ஷாந்தி ஸ்தூபாவினை கண்டு வந்தது மனதுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தந்தது. ராஜ்கிர் பகுதியில் இன்னும் பார்க்க வேண்டிய சில இடங்கள் உண்டு. அவை பற்றி பிறிதொரு பகிர்வில் தெரிவிக்கிறேன்.என்ன நண்பர்களே, ராஜ்கிர் விஷ்வ ஷாந்தி ஸ்தூபா பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொண்ட படங்களையும் ரசித்தீர்களா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். 

நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திப்போம்…. சிந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

32 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட். இந்த லங்கூர் இனத்துக் குரங்குகளை நேற்று திருப்பதி மலை ஏறும்போது பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

   திருப்பதியில் இருந்து சென்னை திரும்பி வந்தாச்சா?


   இந்த லங்கூர் குரங்குகளுக்கு தமிழில் என்ன பெயர்?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. வெங்கட்ஜி லங்கூர் தமிழிலும் இதே பெயருடன் தான் சொல்லப்படுகிறது. என்ன வெள்ளை லங்கூர், நீலகிரி லங்கூர்னு இன்னும் நிறைய உட்பிரிவுகளோடு இருக்காங்க அவ்வளவுதான்...

   கீதா

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 2. அமைதியான இடமாவது தெய்வீகமான இடமாவது... நம் மக்களுக்கு எல்லாம் ஒன்றுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம் மக்களுக்கு எல்லாம் ஒன்று தான்.... உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. ராஜ்கிர் விஷ்வ ஷாந்தி ஸ்தூபா பற்றி அறிந்தேன். திரும்ப வரும்போது உடன்கட்டோலா இறக்கம் என்பதால் கூடுதல் த்ரில்லா, இல்லை பழகி விட்டதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீழே நோக்கி வரும்போது இன்னும் அதிக த்ரில்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. ராஜ்கிர் விஷ்வ ஷாந்தி ஸ்தூபா மிகவும் அழகாக இருந்தது. நான் சிக்கிம் மற்றும் ஒரிசா மாநிலத்திலும் இதை போன்று பார்த்திருக்கிறேன். குரங்குகள் இந்த இடத்தை கலகல என்று வைத்திருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 5. வடஇந்தியப் பயணத்தின்போது நான் பார்க்க ஆசைப்பட்ட, ஆனால் விடுபட்ட இடம். உங்களின் பதிவு என் ஆவலைப் பூர்த்தி செய்தது. அங்கு செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த மாதிரி ஷாந்தி ஸ்தூபா ஒடிசாவின் தௌலகிரியிலும் உண்டு ஐயா. முடிந்தால் அங்கே சென்று வாருங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 6. அமைதியான இடங்கள் இவ்வுலகில் சில இடங்களில் மட்டுமே இருக்கிறது அதை நமது மக்கள் என்றுமே உணர்வதில்லை ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. அது போன்றவர்கள் அடுத்தவர் சொல்வதைக் கேட்பதும் இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 7. அழகான இடம். அமைதியான இடத்தை அமைதியாக வைத்து இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
  படங்கள் எல்லாம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 9. அமைதியை அழிப்பதே நம் மக்களுக்கு வேலை! எங்கே போனாலும் சத்தமாகப் பேசிக்கொண்டு! புத்தர் சிலைகள் ஒவ்வொன்றும் அதி அற்புதம். இந்த இடம் பற்றி இப்போ நீங்க எழுதியதில் தான் முதல் முதலாகக் கேள்விப் படுகிறேன். விபரமான தகவல்களுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல இடம். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 10. தங்க நிற புத்தரின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அருமை.

  (என்னமோ தெரியல, ஒவ்வொருமுறையும் விஸ்வ ஷாந்தி என்று படிப்பதற்கு பதிலாக விஜய ஷாந்தி விஜய ஷாந்தி என்றே படித்திருக்கிறேன். என்னத்த சொல்ல. )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்பவும் விஜயஷாந்தி நினைவு உங்களுக்கு... :) அண்ணிக்கு ஒரு ஃபோன் போட வேண்டும் போல. ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 11. புத்தர் படங்கள் வெகு துல்லியம். அழகு கண்ணை பறிக்குது.

  குரங்கு பேன் பார்க்கும் லாவகம் செம!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 12. விஷ்வ ஷாந்தி ஸ்தூபா பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 13. துளசிதரன்: இது போன்ற இந்தியாவின் பல பகுதிகள் எல்லாம் உங்கள் மூலம் இப்படிச் சுற்றிப் பார்த்தால்தான் உண்டு. படங்கள் மிக அழகாக இருக்கின்றன.

  கீதா: ரொம்ப அழகாக இருக்கு ஜி படங்கள் மற்றும் இடமும், அதைப் பற்றிய தகவல்களும் தெரிந்து கொண்டோம்

  //இந்த VIP Culture என்றைக்கு மாறுமோ!// ஹையோ அதை ஏன் கேக்கறீங்க ஜி. இது நானும் அடிக்கடி நினைப்பதுண்டு...

  லங்கூர் குரங்குகள் ரொம்ப அழகு. ஆனால் இவர்கள் சேட்டை அதிகம். மற்ற குரங்குகளையும் தங்கள் ஏரியாவில் இருக்க விட மாட்டார்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 14. நம்மூரில் இன்னும் சுற்றுலா செல்லும் இடங்களைப் பற்றிய ஒரு ஃபீல் பலருக்கும் இருப்பதில்லை என்றே தோன்றுகிறது. அங்கு அமைதி காக்க வேண்டும் என்றால் அங்குதான் சத்தம் போட்டு பேசுவார்கள்...என்னவோ வேறு சமயமே இல்லாதது போல்....அந்தந்த இடங்குளுக்குன்னு ஒரு மரியாதை எட்டிக் இருக்கு அதை பலரும் பின்பற்றுவதில்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 15. தௌலிகிரி உங்கள் பதிவு வாசித்த நினைவு இருக்கு ஜி. அங்கும் கூட இப்படிப் படுத்திருக்கும் புத்தர் சிலை உண்டு...அந்த இடத்தின் கீழே ஆறு கூட உண்டுஇல்லையா ....நான் குறித்து வைத்த நினைவு...அதான்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....