ஞாயிறு, 27 ஜனவரி, 2019

பாண்டிச்சேரி – ஏரோவில் - நிழற்பட உலா

கடந்த மே மாதம் பாண்டிச்சேரி நகரில் இரண்டு நாட்கள் தங்கி கல்லூரி நண்பர்கள் சிலர் சந்தித்தோம். நெய்வேலியிலிருந்து பாண்டிச்சேரி அருகில் என்பதால் தமிழகத்தில் இருந்தவரை பல முறை சென்று வந்திருக்கிறேன். தலைநகரில் வேலையில் சேரக் காரணமாக இருந்த தேர்வு கூட பாண்டிச்சேரி சென்று தான் எழுதினேன். அப்போதெல்லாம் சும்மா சென்று சுற்றி வந்திருக்கிறேனே தவிர படங்கள் எல்லாம் எடுத்தது இல்லை. அங்கே தங்கியது கூட இல்லை. காலையில் சென்று மாலை/இரவு திரும்பி விடுவேன். அப்படித்தான் பல பயணங்கள் அமைந்திருக்கின்றன.  சென்ற வருடம் தொடர்பில் இருக்கும் சில நண்பர்களின் முயற்சியால் பாண்டிச்சேரி நகரில் கல்லூரி நண்பர்கள் சிலர் சந்திக்க முடிந்தது.

எங்கள் வகுப்பில் இருந்தவர்களில் ஏழு ஆண்களும், ஏழு பெண்களும் மே மாதம் [2018] சந்தித்தோம். சந்திப்பு பற்றி இது வரை எனது வலைப்பூவில் ஏனோ எழுதவில்லை. இந்த சந்திப்பு அவரவர் குடும்பத்துடன் சென்ற சந்திப்பு. எனது இல்லத்தரசியும் மகளும் வந்திருந்தார்கள். மனைவி அந்தச் சந்திப்பு பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தார் என்றாலும் நான் சந்திப்பு பற்றி எழுதவே இல்லை – விட்டுப் போனது! இந்த ஞாயிறும் அடுத்த ஞாயிறும் பாண்டிச்சேரி நகரில் எடுத்த சில படங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். சந்திப்பு மிகவும் நன்றாக நடந்தது. மறக்க முடியாத சந்திப்பு. ஒவ்வொரு வருடமும் இப்படிச் சந்திக்கலாம் என திட்டமிட்டு இருக்கிறோம் – எந்த அளவுக்கு அது சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அவற்றில் பாண்டிச்சேரி ஏரோவில் பகுதியில் எடுத்த சில படங்கள் மட்டும் இன்றைய ஞாயிறில் ஒரு தொகுப்பாக…. படங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன். படங்கள்/பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திப்போம்…. சிந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து...

34 கருத்துகள்:

 1. அருமையான காட்சிகள் ஜி.
  எல்லா வருடமும் நண்பர்கள் சந்தித்து கூடி மகிழ இறைவன் துணை செய்யட்டும் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 2. மிக அழகிய சூழல். சந்திப்பும் இனிதாக இருந்திருக்கும். அருமையான படங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 3. மிக அழகான படங்கள்.
  நாங்களும் ஆரோவில் போய் இருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. ஆரொவின் படங்கள் அனைத்தும் அருமை. பாண்டிச்சேரி போய் இருக்கிறோம். ஆரொவை பார்கவில்லை. உங்கள் பதிவு ஆரொவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 6. படங்கள் அழகு. முதல் படம் மிக மிக மிக அழகு. எத்தனை கிளைகள், எத்தனை விழுதுகள்.... பிரசுரிக்கப்பட்டிருக்கும் படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது இந்தப் படமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. ​புற்று போல துளைகளுடன் இருக்கும் படம் சூப்பர். எந்த நிமிடம் என்ன எட்டிப்பார்க்குமோ என்று திகில்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எறும்பு புற்று தான். ஆனால் வேறு எதுவும் எட்டிப் பார்க்கலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  பாண்டிச்சேரி ஏரோவின் படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன.
  முதல் படம் இயற்கையின் அழகோவியம் மிகவும் அற்புதமாக இருந்தது. பார்த்துக் கொண்டேயிருக்கத் தோன்றியது. கடல் படங்களும் மிகவும் அழகாக அருமையாக இருக்கிறது. கடலை, அதன் அலைகளை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசித்துக் கொண்டேயிருக்கலாம்.

  தங்கள் நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சி. வருடந்தோறும் சந்திக்கும் முயற்சிக்கும் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு
 9. பாண்டிச்சேரி படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன. நானும் பலமுறை சென்று இருக்கிறேன். சென்னையில் வேலை பார்த்த போது வேளாங்கண்ணி சென்று விட்டு நண்பர்களோடு பாண்டிச்சேரி செல்வோம் நாங்கள் இரவி நேரத்தில் செல்வதால் பார் தவிர வேறு ஏதும் எங்கள் கண்களுக்கு தெரிவதில்லை... ஆனால் இன்றுதான் உங்கள் பதிவின் மூலம் பாண்ட்டிசேரியின் அழகை கண்டு கொண்ட்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் நினைவுகளை இப்பதிவு மீட்டு எடுக்க உதவியதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 10. படங்கள் அருமை! குறிப்பாக அந்த முதல் படம்..! அந்த இடத்தின் தண்மையை உணர முடிந்தது.
  கல்லூரி நண்பர்களை சந்திப்பது தனி சுகம். தொடர வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

   நீக்கு
 11. நான் 9 த் படிக்கும்போது போனது அப்புறம் இருமுறை போயிருக்கிறேன் ..இப்போ நிறைய கெஸ்ட் ஹவுசெல்லாம் வந்து ரொம்ப வித்யாசமா இருக்குனு கேள்விப்பட்டேன் .படங்களில் பசுமையை காணும்போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு .பாண்டிச்சேரி பீச்சில் வித்யாசமான பாசிமணி மாலை இருக்குமே அதெல்லாம் இன்னும் விற்கிறார்களா அங்கே .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏரோவில் பீச்சில் பாசிமணி கடைகள் இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.

   நீக்கு
 12. படங்கள் எல்லாம் மிக மிக அழகு!

  ஆல மரம் விழுதுகள் கிளைகள் அந்தப் படம் அட்டகாசம் என்றால் ஓனான், ஜோடி மைனாக்கள், அழகு....கடல் ஆஹா அந்த வண்ணம் எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.

  பாண்டியில் இருந்தவரை சென்றிறுக்கிறேன். அங்கிருக்கும் பசுமை ரொம்ப நல்லாருக்கும். ஈஸ்ட் கோஸ்ட் ரோடிலிருந்து ஒரு சாலை பாண்டியின் திண்டிவனம் ரோடில் வந்து சேரும் ஜிப்மரின் முன்....அந்த சாலை செமையா இருக்கும்...பயணம் செய்ய. ஆனால் கொஞ்சம் ஏகாந்தமான சாலை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகான சாலைகள். நல்ல ஊர் பாண்டி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 13. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன. இந்த இடமும் சென்றதில்லை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாண்டி நல்ல ஊர். வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு
 14. பாண்டிச்சேரிக்கு ஒரேயொருமுறை போய் இருக்கேன். பீச் தவிர வேற எங்கும் போனதில்லைண்ணே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல ஊர். பீச் தவிர நிறைய இடங்கள் பார்ப்பதற்கு உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 15. அழகிய படங்கள்...நாங்களும் சென்றது உண்டு இங்கு ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 17. அப்படியே அந்த ஆலமரத்தடியிலே இத்தனை சுத்தமாக இருக்கும் மண் தரையில் ஓர் துண்டைப் போட்டுக் கொண்டு படுத்தால் சுகம்! ஆனால் கீழே படுக்கத் தான் முடியறதில்லை. அடுத்த கூரையின் கீழேயும் படுக்கலாம். அங்கே பெஞ்சுகள் இருக்கு போல! மைனாக்கள் கூக்குரல் இடாமல் சமர்த்தாக போஸ் கொடுத்திருக்கின்றன. எல்லாப் படங்களும் அருமை. என்னவோ தெரியலை. பாண்டிச்சேரியிலேயே என் தம்பி இருந்தும், இன்னும் சில உறவினர்கள் இருந்தும் இன்று வரை அங்கே போனதில்லை. அந்த வழியாகக் கூடப் போனதில்லை! :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மரத்தடியில் உறக்கம்.... நெய்வேலி நகரில் இருந்த வரை மரத்தடியில் உறக்கம் வாய்த்தது. தலைநகர் சென்ற பிறகு இழந்த பல விஷயங்களில் இதுவும் ஒன்று.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....