புதன், 30 ஜனவரி, 2019

பிங்கி பாட்டி கரோ – ஆதி வெங்கட்
அடுக்கு மாடி குடியிருப்புகள் நிறைய இருக்கும் இந்தக் காலத்தில் ஒரு வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் இருக்கும் தடுப்பே ஒரு ஒற்றைக்கல் சுவர் தான். இது கூட பரவாயில்லை. தலைநகர் தில்லியில் ஒரு தெருவில் இருக்கும் வீடுகளுக்கும், அடுத்த தெருவில் இருக்கும் வீடுகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி கூட மிகவும் குறைவே.  Service Street” என்று சொல்லக்கூடிய சிறிய தெருவைத் தாண்டினால் அடுத்த தெருவில் உள்ள வீட்டின் பின் பக்கம் வந்து விடும்.  இந்த தெருவில் உள்ள வீட்டின் பின் பக்கத்திற்கும் அடுத்த தெருவில் உள்ள வீட்டின் பின் பக்கத்திற்கும் அதிக பட்சமாய் 30 அடி இடைவெளிதான்.
 
ஒற்றைக் கல் சுவராக இருப்பதால், இந்த வீட்டில் ஒரு பாத்திரம் விழுந்தால் கூட அடுத்த வீட்டில் சத்தம் கேட்கும் அளவுக்குத் தான் இருக்கிறது.   இதை விட மோசமான விஷயம் அடுத்த தெருவில் உள்ள வீட்டில் பேசுவது எல்லாம் கூட துல்லியமாய்க் கேட்கும்.

என் வீட்டின் பின்புற வீட்டில் உள்ளவர்கள் பேசும் எல்லாமே, நமக்குத் தேவையோ இல்லையோ நம் காதில் வந்து பாயும்.  இந்த வீட்டின் பெண்மணி ஆடும் தோய்ப்பு நடனம் பற்றி முன்பே ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்.  பெரும்பாலான நாட்களில் நாங்கள் காலையில் துயிலெழக் கேட்கும் சுப்ரபாதமே, “பிங்கி பாட்டி கரோ!” என்பது தான்.  ஹிந்தி புரிந்தால் உங்களுக்கு இதன் அர்த்தம் புரிந்து இருக்கும்.  இல்லையெனில் பதிவின் முடிவில் புரிய வைக்கிறேன்.

தில்லியில் பள்ளி காலை வெகு சீக்கிரமாகவே துவங்கி விடும். காலை ஆறே முக்கால், ஏழு மணிக்குள் அவளை அழைத்துச் செல்ல வாகனம் வந்து விடும். நாங்கள் அதிகாலையில் எழுந்து பெண்ணரசியை பள்ளிக்கு அனுப்ப சீக்கிரம் சீக்கிரமாக தயார் செய்து கொண்டு இருக்க, அங்கே அவர்கள் ”பிங்கி”யை தயார் செய்து கொண்டு இருப்பார்கள், என்ன, மேலே சொன்னபடியான வாக்கியங்கள் அவ்வப்போது  சத்தமாய் வந்து கொண்டிருக்கும்.

அதுவும் ஒரு முறை சொன்னால் கேட்க மாட்டார் அந்த பிங்கி.  திரும்பத் திரும்ப அவர் அம்மா ஐந்தாறு முறையாவது ”பிங்கி பாட்டி கரோ” என்று சொல்லவேண்டும், பிறகுதான் வேலை நடக்கும்.

சரி என்னடா அது “பாட்டியை” எதுக்குடா அடிக்கடி கூப்பிடறான்னு சந்தேகம் வருதா?  ஹிந்தியில் “பாட்டி கரோ” என்றால் ”டாய்லெட் போ” என்று அர்த்தம்.  இந்த பாட்டியை கேட்டு நாளை ஆரம்பித்தால் “இந்த நாள் இனிய நாள்” என்று சொல்ல முடியுமா என்ன?

இந்த பாட்டியோட அர்த்தமே வேறு ஆகிவிடுவதால், தில்லியில் உள்ள தமிழ் குழந்தைகள் எவருமே தங்களது பாட்டியை “பாட்டி” என அழைக்காமல் ஹிந்தியிலேயே அப்பா வழி எனில் “தாதி [Dhadhi] எனவும் அம்மா வழி பாட்டி எனில் ”நானி” [Naani] என்றுமே   அழைக்கின்றனர். பாட்டியை பாட்டி என்று சொல்வது கூட குற்றமாக இருக்கிறது இங்கே! ஹாஹா…

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்.

ஆதி வெங்கட்

குறிப்பு:  கோவை2தில்லி வலைப்பூவில் எழுத ஆரம்பித்த காலத்தில் எழுதிய சில பதிவுகள், இங்கே இந்த வலைப்பூவில் ஒரு சேமிப்பாகவும், மீள் பதிவாகவும் வெளி வர இருக்கிறது. பெரும்பாலான பதிவுகள் உங்களில் பலர் வாசிக்காத பதிவுகள் தான். படித்துப் பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லலாமே!

32 கருத்துகள்:

 1. இனிய மகிழ்வான காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!

  ஏதோ பாப்பாவின் குறும்பு போல இருக்கே வரேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 2. குட்மார்னிங் மிஸஸ் வெங்கட்.. அண்ட் வெங்கட்! பாவம் பாட்டி!!

  பதிலளிநீக்கு
 3. சில தமிழ் வார்த்தைகளுக்கு வெவ்வேறு மொழிகளில் இருக்கும் மாற்றுப்பொருள்கள் எப்போதும் சுவாரஸ்யம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு மொழியிலும் இப்படி சில வார்த்தைகள்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. சில மொழி வார்த்தைகள் தமிழனின் பெயரைக்கூட அழைக்க முடியாதவாறு உள்ளது உண்மையே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா..... பல சமயங்களில் இப்படி ஆனது உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 5. புரிதல் பிரச்சனை எல்லா மொழிகளிலும் உண்டு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 6. ஒரு தெருவில் இருக்கும் வீடுகளுக்கும், அடுத்த தெருவில் இருக்கும் வீடுகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி கூட மிகவும் குறைவே. //

  இங்க அந்த அளவு கூட இடைவெளி கிடையாது. காம்பௌன்ட் வால் பின் தெரு வீட்டிற்கும் நம் வீட்டிற்கும் சேமாகத்தான் இருக்கும். அடுத்த வீடும் அப்படியே...அவங்க வீட்டு ஜன்னலை நாம் வீட்டிலிருந்து தொட்டுவிடலாம்...!!! அவர்கள் வீட்டிற்குள் முன் பக்கம் செல்லாமல் நம் வீட்டு மதிலில் உட்கார்ந்து அங்கு இறங்கிவிடலாம்...அப்படித்தான் எங்க ஏரியாவுல இருக்கு...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்பத்தூரில் அப்படித்தான் இருக்கும். இரு பக்கத்து வீடுகள், பின் பக்கம் வீடுகள் எல்லாத்துக்கும் நம்ம காம்பவுன்ட் சுவர் தான். ஆனாலும் வீடு உள்ள்ள்ள்ளே தள்ளி இருக்கும் என்பதால் பேசுவதெல்லாம் காதில் விழாது. பல சமயங்கள் அவங்க கூப்பிடறது எங்க காதிலேயே விழுந்ததில்லை. இப்போ அடுக்குமாடிகள் வந்தப்புறமாத் தான் இடைவெளி ஐந்தே அடிகள் இரு பக்கங்களில். முன்னால் பத்தடி, பின்னால் பத்தடி! வீடுகள் ரொம்ப நெருக்கம்! இப்படி ஆனதில் தான் நாங்க எங்க சொந்த வீட்டில் ரொம்பக் கஷ்டப்பட்டோம். :(

   நீக்கு
  2. இப்பொழுது அனேக ஊர்களில் இப்படித்தான் இடைவெளி இல்லா வீடுகள் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
  3. தனி வீடாக இருந்து பக்கத்தில் ஃப்ளாட் என்றால் இன்னும் நிறைய பிரச்சனைகள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 7. இந்த பிங்கி பாட்டி கரோ தெரியுமே!!! கக்கா!!! ஹா அஹ ஆ ஹா அதானே அர்த்தம்!! என் தங்கை (கஸின்) தில்லி அவள் அப்படித்தான் அவள் குழந்தைகளைச் சொல்லுவாள் முன்பு சிறிய வயதில் அப்படித் தெரியும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.. அதே தான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 8. பாவம் நம்ம குழந்தைகள் தமிழ்ல பாட்டின்னு சொல்ல முடியாம போகுது பாருங்க....ஆனா என் தங்கையின் குழந்தைகள் இப்போது பெரியவர்கள் ஆகிவிட்டார்கள்தான் வீட்டில் பாட்டின்னுதான் சொல்றாங்க. ஹிந்திவாலாக்கள் முன்பு என்ன சொல்றாங்கனு தெரியலை...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாட்டி தாத்தாவை ஹிந்தியில் அழைத்தால் அவர்களுக்குப் புரியாது. ஹிந்தி நண்பர்கள் முன்னர் தமிழில் அழைக்க முடியாது.... குழந்தைகள் பாடு கஷ்டம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 9. முன்பு படித்து ரசித்து சிரித்த பதிவு.
  இன்று எங்கள் மேல் மாடியில் பள்ளி செல்லும் குழந்தைகள் இருக்கிறார்கள், பெற்றோர்கள் தினம் பல்தேய், குளி , காலை கடனை முடி சீக்கீரம் கிளம்பு என்று சொல்வது கேட்டுக் கொண்டு இருக்கிறது.
  "நேரமாச்சு சீக்கீரம் கிளம்பு" இது தாரகமந்திரமாய் இருக்கு தினம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெர்ய்ம்பாலான வீடுகளில் இதே நிலை தான் இன்று....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 10. பதில்கள்
  1. கொடுமை தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 11. முன்னர் படிக்கலை. சில சமயங்களில் குழந்தைகளுக்கு இப்படித் தான்! காலை எழுந்ததும் போக முடியாது. எங்க பொண்ணு வரலைனு சொல்லிட்டு யூனிஃபார்ம் போட்டுக் கொண்டு ஷூ, சாக்ஸ் மாட்டிக்கொண்டு சைகிளில் அவ அப்பா ஏற்றும் சமயம் போகணும் என்பாள். அப்புறமா எல்லாத்தையும் கழட்டி, மாத்திப் போக வைச்சுட்டுப் பின்னர் மறுபடி எல்லாத்தையும் மாட்டிவிட்டு அனுப்புவேன். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... வடக்கே பள்ளி மிகவும் சீக்கிரம் ஆரம்பித்து விடும் என்பதால் இன்னும் தொல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 12. குளிர்காலம்னா கேட்கவே வேண்டாம். உள்ளே ஒரு உள்ளாடை அதோடு ஒரு ஆடை, வெளியே மற்றொரு ஆடை, முழங்கால் வரை சாக்ஸ், மேலே ஸ்வெட்டர், அதன் மேலே ஒரு ஜெர்கின் என மாட்டிவிட்டுப் படுக்க வைச்சு ரஜாயையும் போர்த்தி விட்டால் அப்போத் தான் அவசரமா நம்பர் ஒன் வரும்! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குளிர்காலத்தில் நாங்களும் இப்படி அவதி அடைந்தது உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 13. முதலில் என் இரண்டாம் பேரனின் நாளுமஅவனது இரண்டு வயது வரைபாட்டியில் தான் துவங்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 14. குழந்தை வயதில் பாட்டி கரோ!

  ரொம்ப அதிக வயதானால் பாட்டி மரோ!

  இதுதானே வாழ்க்கை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாட்டி மரோ.... :( இப்படியும் சிலர்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 15. பாட்டி என்பதற்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறதா? இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன். முதலில் புரியவில்லை என்னவென்று. வாசித்து வந்ததும் புரிந்தது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....