சனி, 12 ஜனவரி, 2019

காஃபி வித் கிட்டு – தீராத மோகம் – கண்கரண்டி – ரங்கோலி - கணேஷா - சம்பள உயர்வுகாஃபி வித் கிட்டு – பகுதி – 18

மோகம் முப்பது நாள்:


மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் – இதைக் கேட்டிராதவர்கள் இருக்க முடியாது. திருமணம் ஆகும் ஆண்களுக்குக் கண்டிப்பாக இதைச் சொல்லாமல் இருக்க மாட்டார்கள். சிலருக்கு விதம் விதமான மோகங்கள்! நண்பர் ஒருவரின் மோகம் பற்றி தான் இன்றைக்குச் சொல்லப் போகிறேன்.

பத்து பன்னிரெண்டு நாட்களுக்கு முன்னர் அவரது அழைப்பு. வழக்கமான விசாரணைகளுக்குப் பிறகு ஆரம்பித்தார். “என்ன புது வருஷம் வந்துடுச்சு, என்னைக் கண்டுக்கவே மாட்டேங்கற?” என்றார்.  என்ன விஷயம் என்று கேட்க, காலண்டர், டைரி எல்லாம் தரவே இல்லையே என்றார் – நான் என்னமோ சிவகாசியில் மொத்தமாக காலண்டர்/டைரி தயாரிப்பவர் போல! என்னிடம் இல்லையே என்று சொல்ல, ”அலுவலகத்தில் உனக்கு வருமே, வந்தால் ஒரு ஆறேழு காலண்டர், ஐந்தாறு டைரி எல்லாம் எனக்கு எடுத்து வை!” “அடேய்…. அலுவலகத்தில் ஒரு காலண்டர்/டைரி கிடைக்கும் – அதையும் எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் வருடா வருடம் எடுத்துக் கொள்வார் – அட்வான்ஸ் புக்கிங்! வேற ஏது என் கிட்ட என்று சொன்னால் கேட்கவா போகிறார். ஏழு காலண்டர், ஆறு டைரி எனக்கு வேணும் – அவ்வளவு தான் என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தார்! காலண்டர்/டைரி மீது என்ன மோகமோ?

நேற்று ஒரு தகவல் அவரிடமிருந்து வந்தது – “இன்னும் காலண்டர்/டைரி எனக்கு வரல!” ஹாஹா…. பதிலே அனுப்பல! ஒரு காலண்டர் ஜோக் – சமீபத்தில் படித்தது உங்களுக்காக….


ரோஷ்ணி கார்னர் – ஒரு ஓவியம் – கிளாஸ் பெயிண்டிங்:

மகளின் ஓவியம் ஒன்று – சமீபத்தில் வரைந்தது.


இந்த வாரத்தில்… – முகநூலில் இருந்து:

எவ்வளவு அழகாக ரங்கோலி போடுகிறார்கள் பாருங்கள்.


ரசித்த காணொளி:

கண்கரண்டி வைத்து என்ன செய்ய முடியும் – சமையல் வேலை தவிர! இங்கே பாருங்க, அதை வைத்து என்ன செய்கிறார்கள் என!படித்ததில் பிடித்தது – தத்துவம்:

யாருக்கும் உன்னைப் பிடிக்கவில்லை என்றால், நீ இன்னும் நடிக்கக் கற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம்.

இந்த வாரத்தின் கார்ட்டூன்:

சம்பள உயர்வு உடனடித் தேவை….இந்த வாரத்தின் கவிதை - புதிரானது ....

நெய்வேலி நகரச் சகோதரி ஸ்ரீமதிக்கு நன்றி. 


💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛

யாரும் யாருக்காகவும் இல்லை
யாரும் யாருடனும் இல்லை
தொடக்கமும் முடிவும் தொலைந்த
கசங்கிய புத்தகமாய்
வாய்க்கிறது
வாழ்க்கை
கதையையும்
கதை மாந்தர்களையும்
புரிந்து கொள்ள
வாய்ப்பில்லாமல்
வெறும் வாசிப்பில்
கடந்து விடும்
வாழ்க்கை
முடிவை அறிவதற்கு முன்பே
முடிந்து விடும் வாழ்க்கை
என்னுடையது என்றாலும்
எனக்கானது அல்ல
வாழ்க்கை
கண்மூடி உறங்கும் போது
காணாமல் போகும்
வாழ்க்கை
விழித்திருக்கும் வேளைகளில்
வசப்படாமல் வாட்டும்
வாழ்க்கை
பொய்யென உணர்ந்ததை
பகிர்ந்து கொள்ளவும்
யாருமில்லை
உண்மையென உணர்த்தி
உறவு கொள்ளவும்
யாருமில்லை
விலகி ஓடவும்
வழியில்லை
விரும்பி வாழ்வதற்கும்
ஏதுமில்லை

©® " ஶ்ரீ "
SREEMATHI RAVI
28th DECEMBER 2018

💦🦋💦🦋💦🦋💦🦋💦🦋💦🦋💦🦋💦

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

48 கருத்துகள்:

 1. இனியகாலை வணக்கம் வெங்கட்ஜி!

  காபி குடிக்க வந்தாச்சு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதா ஜி!

   வாங்க.... காஃபி நல்லா இருந்ததா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 2. ரங்கோலி போடும் மாமியின் வேறு சில ரங்கோலிகளுடன் காணொளி வாட்சப்பில் வந்தது. இந்த மாமி தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்று அறிந்தேன். https://www.youtube.com/watch?v=WsOE2YVOr0k இந்தக் காணொளியும் சூப்பரா போட்டுருப்பாங்க

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் கொடுத்த காணொளியும் பார்த்தேன் இப்போது தான். எத்தனை திறமை இவருக்கு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. காலண்டர்டைரி பிரச்னை தேசீய பிரச்னைபோலவே... எனக்கும் உண்டு! ஹா ஹா ஹா குட்மார்னிங்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதிய நேரத்தில் தான் காலை வணக்கமே சொல்ல முடிகிறது இன்று! :)

   காலண்டர் பிரச்சனையும் தேசிய பிரச்சனை தான்! உங்களுக்கும் இப்பிரச்சனை இருப்பது அறிந்தேன்... We are sailing in the same boat! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. ரோஷ்ணிக்கு பாராட்டுகள். ஓவியங்கள் இன்னும் இன்னும் மேம்பாட்டு வருகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகளின் ஓவியங்கள் மேம்பட்டு வருகின்றன என்று நீங்கள் தெரிவித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. காணொளிகள் பின்னர்தான் பார்க்கவேண்டும். கார்ட்டூன் ரசித்தேன். கவிதை நெகிழ்த்தி விட்டது. ரசித்தேன் அனைத்தையும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளிகள் - முடிந்த போது பாருங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. ஆமாம் சிலருக்கு காலண்டர், டைரி மோகம்...அதுவும் வாங்க மாட்டார்கள் இப்படி யாரிடமாவது கேட்பதுண்டு..//சிவகாசியிலிருந்து..........// ஹா ஹா ஹா ஹா அதானே!!!

  காலண்டர் ஜோக் ரசித்தேன்...

  கவிதை நன்றாக இருக்கிறது! விரக்தி!

  சம்பள உயர்வு ...ஹா ஹா ஹா ஹா ஹா...

  தத்துவம் உண்மைதானோ?!! ஹை அப்ப நான் நல்லா நடிக்கறேனோ?!!!!!!!!!!!!! ஹிஹிஹிஹிஹி...

  அட! கண்கரண்டி வைத்து மெகந்தி!!.சூப்பரா இருக்கே!!!!!!.நான் பெரிய கண் தட்டு/வடிகட்டி இருக்குமே வீட்டில் ஸ்டான்ட் இல்லாமல் அதை வைத்து சாமி ரூமிலும், வாசலிலும் இப்படிப் புள்ளி வைத்துக் கொண்டு டிசைன் கோலம் போட்டதுண்டு.

  அனைத்தும் ரசித்தேன் ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்கரண்டி வைத்து கோலம்! ஆஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 7. தத்துவம் எனக்கு மிகவும் பிடித்தது ஜி
  ரங்கோலி மற்றும் சமையல் கரண்டியை ரசித்தேன்.
  முடிந்தால் நமக்கு நாலு காலண்டர் அனுப்புங்க ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா உங்களுக்கும் நாலு காலண்டர் வேணுமா.... :) நல்ல வேளை டைரி கேட்கல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 8. அதிகாலையில் சூடாய் பில்டர் காபி குடித்த சுகம் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா.

   நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் கருத்துரை. மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 9. மகளின் ஓவியம் அருமை... பாராட்டுகள்...

  ரங்கோலி ஆகா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. இந்த வாழ்க்கை பற்றி பல கவிஞர்கள் பலதும் சொல்கிறார்கள். வாழ்க்கை என்பது வியாபாரம் என்கிறார் ஒருவர். வாழ்க்கை வாழ்வதற்கே என்று அதே கவிஞர் வாழ்க்கையை அனுபவி என்கிறார். இங்கேயுள்ள கவிஞர் வாழ்க்கை என்னுடையது ஆனால் எனக்காக இல்லை என்கிறார். ஆக ஒரே குழப்பம் தான்.
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 11. உங்கள் இந்த பதிவை மிகவும் ரசித்தேன். சனவரி வந்தாலே நமைப்போல் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் நிலை சிரமமே.எல்லா ஜொக்கும் கார்ட்டூனும் மேலும் கவிதையும் அருமை. ரோஷ்ணி படமும் ரங்கொலி காணொளியும் நன்றாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... உங்க கிட்டயும் இப்படி கேட்க ஆள் இருப்பதில் மகிழ்ச்சி...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 12. நல்ல பதிவு! ரசித்தேன். காலன்டர் கேட்டவர் எங்களிடம் கேட்டிருக்கக் கூடாதோ! இங்கே என்னடானால் வருஷா வருஷம் டெய்லி ஷீட் ஒரு 5,6, மாதாந்தரி ஒரு 10 எனப் பார்க்கிறவங்க எல்லாம் கொடுத்துத் தள்ளறாங்க. அதுவும் டெய்லி ஷீட் சென்னையில் இருந்தவரை பக்தி, சக்தி வாங்கறச்சே அதோடு கூடப் பணம் கொடுத்து வாங்கறது தான். அதே போல் மாதாந்தரியில் தினமலரும். பேப்பரோடு வரும். பணம் கூடக் கொடுக்கணும். போனால் போகுதுனு சுந்தரம் ஃபைனான்ஸ் மட்டும் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுனு ஒரு மாதாந்தரி கொடுக்கும். அதையும் அவங்க அலுவலகம் போய் என்னமோ செக்கில் கையெழுத்துப் போட்டுத் தராப்போலக் கையெழுத்தெல்லாம் போட்டுட்டு வாங்கணும். ஆனால் இங்கே! ராத்திரி எட்டு மணிக்கு வாசல் கதவைச் சார்த்திட்டுப் படுக்கப் போனோம். ஏதோ சத்தம் கேட்கத் திறந்து பார்த்தால் ஒரு டெய்லி ஷீட். பில்டிங் ப்ரமோட்டர். இங்கே வந்ததில் இருந்து கொடுக்கிறார். அதுக்கப்புறமா ஒரு நாள் காலங்கார்த்தாலே அழைப்பு மணி! என்னனு பார்த்தால் எங்களுக்கு ரத்தப்பரிசோதனை செய்யும் க்ளினிக் டெக்னிஷியன் கையில் டெய்லி ஷீட் காலண்டருடன்! அதுக்கப்புறமா ஒரு நாள் வெளியே போயிட்டு வந்தால் யாரோ உள்ளே டெய்லி ஷீட்டைப் போட்டுட்டுப் போயிட்டாங்க! இந்த ஜிஆர்டியிலே எல்லாம் நாங்க நகையே வாங்கறதில்லை. ஆனால் வருஷா வருஷம் காலண்டர் தவறாமல் வருது. இரண்டு டெய்லி ஷீட்டைப் பையருக்கும் பெண்ணுக்கும் கொடுத்தால் பையர் வாங்கிண்டு போக மாட்டேன்னு பிடிவாதம். அங்கே இது பயன்படாது என்பது அவர் வாதம். கஷ்டப்பட்டுத் தலையில் கட்டினோம். இன்னொன்றை மைத்துனருக்குக் கொடுத்தோம். இன்னும் இரண்டில் ஒன்றை அவரின் அத்தை பிள்ளைக்குக்கொடுக்கலாம் என்று கேட்டால் அவர் என்னிடம் 2 டெய்லி ஷீட் இருக்கு, உனக்கு வேணுமாங்கறார். என்னத்தைச் சொல்றது போங்க! மாதாந்தரியை ஜன்னல், சுவர் என மாட்டியாச்சு. இரண்டை யாருக்கோக் கொடுத்தாச்சு. இந்த அழகில் போனவருஷக் காலண்டர் இரண்டு டெய்லி ஷீட் இன்னமும் இருக்கு. யாருக்கானும் வேணுமா? சொல்லுங்க! :)))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... உங்க கிட்ட நிறைய காலண்டர் இருக்கு போல. என் கிட்ட கேட்ட ஆளுக்கு உங்க முகவரி கொடுத்துடறேன்! ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
  2. கீதா அக்கா மாதாந்தரி காலண்டர் இருந்தால் எடுத்து வையுங்கள். மாத இறுதியில் திருச்சி வரும் வேலை இருக்கிறது.

   நீக்கு
  3. மாதாந்திர காலண்டர் தற்சமயம் இரண்டு கைவசம். டெய்லி ஷீட் ஒண்ணு இருக்குனு நினைக்கிறேன். மாதாந்திர காலண்டரை உங்களுக்காகப் பத்திரப்படுத்தி வைக்கிறேன். :)))))

   நீக்கு
  4. ஆஹா.... திருச்சி வருகை உண்டா? மகிழ்ச்சி. மாதக் கடைசியில் வரும் திட்டம் எனக்கும் இருக்கிறது. முடிந்தால் சந்திக்கலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

   நீக்கு
  5. நானும் தமிழகம் வருகிறேன் மாதக் கடைசியில். சந்திக்கலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 13. //படித்ததில் பிடித்தது – தத்துவம்:
  யாருக்கும் உன்னைப் பிடிக்கவில்லை என்றால், நீ இன்னும் நடிக்கக் கற்றுக் கொள்ளவில்லை என்று அர்த்தம்.// உண்மை! :(

  சம்பள உயர்வு கார்ட்டூன் ஏற்கெனவே பார்த்திருக்கேனோ?

  ஶ்ரீமதி ரவி ரொம்பவே வருத்தமாகவும் மனச்சோர்வுடனும் இருக்கார். எல்லோருக்கும் வருவது தான்! சும்மா உதறி எறிந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கணும். பல சமயங்களிலும் நம்முடைய மனச்சோர்வு பல வேலைகளில் ஈடுபடும்போதும் தொடரும். அப்போ உம்மாச்சி முன்னாடி நின்னு என்னை ஏன் இப்படி ஆட்டி வைக்கிறேன்னு கேட்டுட்டு அடுத்தாப்போல் என்ன செய்யலாம்னு போயிடுவேன். :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்தாப்போல் என்ன செய்யலாம்னு போயிடுவேன்... நல்ல விஷயம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 14. ரோஷ்ணி ஓவியமும், காணொளிகளும் பார்த்துட்டேன். ரங்கோலி காணொளி வாட்சப்பில் கூடத் துரத்தியது. கண்கரண்டியின் உபயோகம் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 15. ஸ்ரீமதி ரவிக்கு ஏன் அத்தனை விரக்தி எல்லாம்தெரிந்துமிது சரியில்லயே படித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது தினம் கிழிக்க காலண்டர் என்மனைவிக்கு அவசியம் தேவை கிடைக வேண்டிய நேரத்தில் கிடைக்காது ரங்கோலி ஓவியம் பிரமாதம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 16. அழகிய கதம்பம்.. பாவம்தானே அவர்.. அந்த பீனிக்ஸ் மோல்ல 6 கலண்டரும் 5 டயரியும் வாங்கிப் போஸ்ட் பண்ணி விடுங்கோ:)) ஹா ஹா ஹா.

  ரோஸினியின் பெயிண்டிங் பிள்ளையார் அழகாக இருக்கிறார், என் குயிலிங் பிள்ளையாரை விட..

  காலுக்கு கோலம் மிக அழகு.. ஆனா பெரும்பாலும் எங்கும் இந்த ஹெனாவை உபயோகிக்கும்போதுதான் படம் காட்ட்டுகிறார்கள் அது கழுவியபின் எவ்வளவு அழகு என்பதைக் காட்டுபவர்கள் குறைவு..

  கவிதை ஓகே. அப்போ இன்று சாப்பாட்டு ஐட்டம் ஏதுமில்லைப்போல:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாப்பாடு ஐட்டம்..... ஹாஹா சரியா கவனித்து இருக்கீங்க அதிரா... அடுத்த வாரம் கொடுத்திடலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 17. காலண்டர் ஜோக் வருடா வ்ருடம் பத்திரிக்கையில் படிப்போம். இப்போது உங்கள் பதிவில் சூப்பர்.
  காணொளியில் கை திறமைகள் வியக்க வைக்கிறது.
  ரோஷ்ணியின் பிள்ளையார் ஓவியம் அழகு.
  கவிதை சோகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 18. டெய்லி காலண்டர் சூப்பர்,
  கண்கரண்டி வச்சு கோலமும் போடுவாங்க சகோ. எங்கூட்டுல அடிக்கவும் பயன்படும். ஆனா, யாரைன்னு கேட்கக்கூடாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 19. காஃபி வித் கிட்டு வழக்கம் போல் சுவாரஸ்யம். ரங்கோலியும், கரண்டி மெகந்தியும், உங்கள் மகளின் ஓவியமும் கண்களை கவர்கின்றன. ஸ்ரீமதியின் கவிதை மனதி கணக்க செய்து விட்டது. எனக்கும் சில சமயங்களில் இப்படியாகும். அப்போதெல்லாம் கீதா அக்கா சொன்னது போல் உம்மாச்சியோடு கொஞ்சம் சண்டை போட்டு விட்டு அடுத்த ஜோலியை பார்க்க போய் விடுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உம்மாச்சியோடு சண்டை... ஹாஹா. உம்மாச்சியோடு சண்டை போடலாம், கொஞ்சலாம், பேசலாம்... அதான் சிறப்பு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

   நீக்கு
 20. இந்த காலண்டர் மற்றும் டைரி பைத்தியம் சிலருக்கு உண்டு. இப்போது செல் போனிலேயே காலண்டர் இருப்பதால் சிலர் காலண்டர் தேவை இல்லை என்று நினைக்கிறார்கள். எனக்கென்னவோ காலை எழுந்ததும் டெய்லி காலண்டரில் தேதி கிழித்து, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்கள் அல்லது போன் மொழிகளை படித்தால்தான் திருப்தி. அதே போல் மாதாந்தரியில் ஜி.ஆர்.டி. காலண்டர்தான் என் விருப்பம். இங்கே இனிமேல்தான் ஜி.ஆர்.டி. காலண்டர் வாங்க வேண்டும். அது தமிழில் இருக்குமா அல்லது கன்னடத்தில் இருக்குமா என்று தெரியவில்லை.
  சென்னையில் இருந்தவரை எங்கள் எல்.ஐ.சி.ஏஜெண்ட் இரண்டு மாதாந்தரி காலண்டரும், இரண்டு டைரிகளும் கொடுப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லத்தரசி கூட தினம் தினம் டெய்லி ஷீட் கிழித்து பொன்மொழி படிப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

   நீக்கு
 21. மஸ்கட்டில் எங்கள் உயர் அதிகாரி ஒருவர் திருச்சியைச் சேர்ந்தவர். டிஸம்பர் மாதம் ஊருக்கு வரும் எல்லோரிடமும் காலண்டர் வாங்கிக்கொண்டு வரச்சொல்லுவார். அதுவும் அவருக்கு சில specifications உண்டு. அவர் வீட்டிற்குச் சென்றால் ஹால், இரண்டு படுக்கை அறைகள், சாப்பாடு அறை, சமையலறை என்று எல்லா இடங்களிலும் ஒரு டெயிலி ஷீட் காலண்டர் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லா ஆறுகளிலும் காலண்டர்..... ஹாஹா... வித்தியாசமான மனிதர்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

   நீக்கு
 22. I love daily sheet to track all details. Most are crazy on diary. Roshini Ganesha glass painting is sweet. Rangoli by karandi is inspiring.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....