திங்கள், 28 ஜனவரி, 2019

தோய்ப்பு நடனம் - ஆதி வெங்கட்

இதென்ன புது மாதிரி நடனமாக இருக்கே! இதை ஆடுவது எப்படின்னு தெரிஞ்சிக்க விருப்பமுள்ளவர்கள்  கீழே படிங்க.
முன்னாட்களில் துணியெல்லாத்தையும் ஆத்தங்கரைக்கு எடுத்துட்டு போய் ஓடற தண்ணியில காலை வைச்சு, கரையோரமா கிடக்கும் கல்லில் பொறுமையா தோய்ச்சுட்டு அப்படியே குளிச்சுட்டும்  வருவாங்க.  துணியில் இருக்கும் அழுக்கை நாம் வெளுக்க, ஓடும் தண்ணீரில் இருக்கும் சிறு மீன்கள் நம் காலில் இருக்கும் அழுக்கைத் தின்னும்போது நாம் உணரும் குறுகுறுப்பு இருக்கே!ஆஹா அது ஒரு  அலாதியான ஆனந்தம். அகண்ட காவிரியில் இந்த அனுபவம் ஒவ்வொரு முறையும் நான் திருப்பராய்த்துறை செல்லும்போதெல்லாம்  கிடைக்கிறது.


அப்புறமா துவைக்கறதுக்குன்னு ஒரு மிஷின் வந்த பிறகு துணியையும் சோப்புத் தூளையும்  போட்டு தண்ணீரை திறந்து விட்டு, பட்டனை அமுக்கிட்டு  வந்துட்டா, மத்த வேலையெல்லாம் பாத்துட்டு இருக்கலாம்.  தோய்ச்சு முடிச்சு மிஷின்நான் தோய்ச்சு முடிச்சுட்டேனே அப்படின்னு ஒரு லாலி பாடின பிறகு எடுத்து காய வைச்சா போதும். எனக்கு மெஷின்ல தோய்க்கறதை விட கையால  தோய்க்கிறதுதான் பிடிக்கும். குளிர்காலத்தில தான் வேற வழியில்லாம மெஷின்ல தோய்க்கிறேன்.


கல்லுல துணியை அடிச்சு தோய்க்கும்போது வேற ஒரு வசதியும் இருந்துச்சு. வீட்டுக்காரர் மேல இருக்கிற கோபத்தை எல்லாம் துணிமேல காமிச்சு அடி அடின்னு அடிக்கலாம், அட நான் துணியைத்  தாங்க சொல்றேன்! இங்க வட இந்தியாவில் துணி தோய்க்கிற கல் கிடையாது.  அதுக்கு பதிலா ஒரு மரக்கட்டை வச்சிருப்பாங்க, கிரிக்கெட் பேட் மாதிரி அதுக்குப் பேரும்பேட் தான்.  அந்த பேட்டால துணியை அடி அடின்னு அடிச்சி விளாசுவாங்க பாருங்க... அது அந்த துணியை போட்டிருந்த ஆளையே அடிக்கற மாதிரி இருக்கும்.

எங்க பின்னாடி வீட்டுல ஒரு அம்மணி இருக்காங்க.  அவங்க வாஷிங்மெஷின்- தோய்க்கிறத வேடிக்கை பார்க்கறது எனக்கு ஒரு வாடிக்கை. மெஷின்- துணியைப் போட்டு ஒரு முறை தோய்த்த உடனே அந்த துணியை எடுத்து டிரையர்ல போட்டு குழாயடில வீசுவாங்க.    அங்க ஒரு தடவை வாளில போட்டு அலசுவாங்க.  அதுக்கப்பறம், வாஷிங் மெஷினையே தலைகீழாக்கி தண்ணியை வெளியேத்துவாங்க.  இத்தனைக்கும் அழுக்குத் தண்ணிய வெளியேத்தற குழாயும் நல்லாத்தான் இருக்கு. பிறகு வாளியில் அலசுன துணியை எடுத்து மெஷின்ல போட்டு 10 நிமிடம் தோய்க்க விடுவாங்க.

திரும்பவும் டிரையர்ல போட்டுட்டு அது வேகமா சுத்தும்போது மெஷினை  கையில பிடிச்சுப்பாங்க, அது என்னமோ , இவங்க படுத்தற பாட்டைத் தாங்காம ஓடிப்போயிடற மாதிரி. ஏற்கனவே, அந்த மெஷின் பலகணில ஒரு சின்ன சந்துல தான் இருக்கு, அது எங்க ஓடறது? அது வேகமா சுத்தும்போது அதைப் பிடிச்சுட்டு இருக்கிறதுன்னால இவங்க, அந்த சின்ன இடத்திலேயே, அதுவும் நின்ன இடத்துலேயே நின்னு ஒரு ஆட்டம் ஆடுவாங்க பாருங்க , அதைக் காண கண் இரண்டு பத்தாது.   பரதநாட்டியம், குச்சிப்புடி, ப்ரேக், ஒடிசின்னு பலவிதமான ஆட்டங்களையும் கலந்து ஆடுனா எப்படி இருக்கும், அது மாதிரி அவங்க நடனம் இருக்கும்.

ஒரு நாள் அவங்க ஆடுற ஆட்டத்தை வீடியோ எடுக்கலாம்னு ஆசைதான், அதுக்கு உலகளாவிய பதிப்புரிமை எல்லாம் வித்து காசாக்கலாம்தான், ஆனா அப்படியே ஆடிக்கிட்டே அவங்க வீட்டு பலகணியிலேர்ந்து பாய்ஞ்சு வந்துடுவாங்களோங்கற பயத்துல இன்னும் வீடியோ எடுக்கல இதை எப்படி தைரியமா சொல்றீங்கன்னு கேட்கறீங்களா, அந்த அம்மணி ஹிந்திக்காரங்க! அதனால தமிழில்  நான் எழுதறதை  படிக்க முடியாதுன்னுன்ற தைரியம்தான்.

பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

ஆதி வெங்கட்

குறிப்பு: கோவை2தில்லி வலைப்பூவில் எழுதிய சில பதிவுகளை இங்கேயும் ஒரு சேமிப்பாக வெளியிடத் துவங்கி இருக்கிறேன். இப்போது வலையுலகில் இருக்கும் பலர் இந்தப் பதிவுகளை வாசித்ததில்லை என்பதால் இங்கே வாசித்து ரசிக்கலாம். 

42 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!

  தோய்ப்பு நடனம்!! ட்ராஃபிக் போலீஸ் நடனம்னு இடைல வந்தது போலவோ?!!! இதோ வரேன் பார்க்க ...விட்டது எல்லாம் பார்த்துட்டு வரேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. அவங்க ஆடுற ஆட்டத்தை வீடியோவை எடுத்து எனக்கு அனுப்புங்க நான் வெளியிடுறேனே கிடைக்கிற பணத்தில் எனக்கு ஒரு கமிஷன் கொடுத்துடுங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா..... தற்போது அந்த வீட்டில் நாங்கள் இல்லை. அந்தப் பெண்மணியும் அவ்வீட்டில் இல்லை...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 3. குட்மார்னிங் வெங்கட். போஸ்ட் கரு என்னன்னு தெரிஞ்ச உடனேயே நினைவுக்கு வந்த பாடல்.. "ஆத்துவெள்ளம் காத்திருக்கு.... அழுக்குத்துணி நிறைஞ்சிருக்கு..."

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

   இப்படி ஒரு பாடல் நினைவில் இல்லை. இப்போது இணையத்தில் தேடி கேட்டேன். திருவருட்செல்வர் படப் பாடல். நாகேஷ் மனோரமா நடிப்பில்.... நல்ல பாடல்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. //வீட்டுக்காரர் மேல இருக்கிற கோபத்தை எல்லாம் துணிமேல காமிச்சு அடி அடின்னு அடிக்கலாம்//

  .. ஹா.... ஹா.... ஹா... இப்படி வேற ஒண்ணு இருக்கா? எனக்கு ஆத்தங்கரை வசதியெல்லாம் லபிச்சதில்லை!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்படி எல்லாம் வாய்ப்பு தேடறாங்க.... :)

   ஆத்தங்கரை - திருச்சியில் தான் இப்படி வாய்ப்பு. நெய்வேலி/தில்லியில் இந்த வாய்ப்பு கிடைப்பது இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. அது மாதிரி டிரையர்ல போட்ட துணிகளை மெஷின் சுத்தும்போது சிலசமயங்களில் அது தடதடக்கும் சத்தத்தோடு உலா கிளம்பும். அதுமாதிரி சமயங்களில் அதைப் பிடித்துக் கொள்வதுண்டு. தொப்பையைக் கரைக்க ஒரு மெஷின் வைத்திருப்பார்களே... அது நினைவுக்கு வரும் உடல் குலுங்கும் குலுங்கில்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொப்பையைக் குறைக்க மெஷின்.... ஹாஹா... மெஷின் பிடித்து ஆட்டம் நீங்கள் போட்டு இருக்கீன்க..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. ஹாஹா... நல்ல பயிற்சி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. எனக்கு பிடிக்காத வேலையே துணி துவைக்குறதுதான். மெஷின்ல போட்டு எடுக்குறதுக்குக்கூட கசக்கும்!!

  என் ஓரகத்தி மும்பைல கொஞ்ச நாள் இருந்தாங்க. நீங்க சொல்லும் துணி துவைக்கும் பேட் அவங்கக்கிட்ட இருக்கும் நான் பார்த்திருக்கேன்/
  அந்த கட்டையால் அடிச்சா எப்படி துணி வெளுக்கும்ன்னு புரில!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை பிடிப்பதில்லை. :)

   துணிதோய்க்கும் கல்லில் அடிப்பதற்கு பதிலாக கட்டையால் அடிப்பது தான். வடக்கில் பெரும்பாலும் இப்படித்தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
  2. எனக்கு பிடித்த வேலையே சிறுவயதில் துணி துவைய்ப்பதுதான் அதுவும் பெட்சீட் அடித்து துவைத்து வெயிலில் காயப்போட்டு இரவில் போர்த்தி கொள்ளும் போது கிடைக்கும் சுகமே தனி.... ராஜி உங்களை மாதிரி உள்ளவர்களுக்கு துணி துவைக்க அலுக்க காரணம் துணிக்கு பதிலாக கணவரை துவைத்து விடுவதினால் இருக்கும்

   நீக்கு
  3. ராஜியை வம்புக்கு இழுப்பது அப்படி ஒரு ஆனந்தம் உங்களுக்கு..... ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரை தமிழன்.

   நீக்கு
 8. மிஷின் வந்து பெண்களை சோம்பேறி ஆக்கி விட்டதே மிச்சம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கில்லர்ஜி ஐ அப்ஜெக்ட் யுவர் கருத்து!!!!!!!!!! அதென்ன ஜி பெண்களை சோம்பேறியாக்கிடுச்சுன்னு....ஆண்களையும் தான். ஹா ஹா ஹா ஹா..

   பெண்கள் வீட்டில் உள்ள அனைவரது துணிகளையும் தோய்க்கனுன்னா அது என்ன நியாயம்? துணி மட்டுமா பெட்ஷீட் எல்லாம் எவ்வளவு ஹெவியா இருக்கும்? நம்ம துணி மட்டும் நா பரவால்ல. ஒரு மூட்டைத் துணி!

   எனக்கு அந்த அனுபவமும் உண்டுன்றதுனாலதான் சொல்லறேன்...

   குழந்தைகள் ஓரளவு வளர்ந்தாச்சுனா அவங்க துணிய அது ஆண் குழந்தையானாலும் சரி பெண் குழந்தையானாலும் சரி அவங்களே தோச்சுக்க பழக்கனும்.
   ஆண்களும் வீட்டில் வேலைகளில் உதவ வேண்டும்.

   கீதா

   நீக்கு
  2. ஆஹா.... சொன்ன கருத்துக்கு எதிர் கருத்தோட நம்ம கீதாஜி வந்துட்டாங்க பாருங்க.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
  3. ஆணோ பெண்ணோ இருபாலரும் இப்பொழுது சோம்பேறிகள் தான்....

   இருவரும் வேலைகளை பகிர்ந்து கொள்வது நல்லது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 9. ஹா ஹா ஹா ஹா...ஆதி ஆமா துணிய துவைக்கும் போது பெண்கள் பேசிக்குவாங்க எங்கூர்ல குளத்துல...என்ன இன்னிக்கு இப்படி அடிக்கிற...வீட்டுல மாமியார் இல்ல வீட்டுக்காரர் மேல கோபமான்னு...

  எனக்கு குளத்தில் ஆற்றில் தோய்த்த அனுபவங்கள் நிறைய உண்டு..எல்லாம் கிராமத்தில் இருந்தவரை. அப்புறம் கல்யாணத்திற்குப் பிறகு நகரத்து வாழ்க்கை பெரும்பாலும்...

  மெஷின் அப்படித்தான் சில சமயம் ட்ரையரில் துணிகளை கரெக்ட்டா அழுத்தி வைக்கலைனா தட தடன்னு சத்தம் போட்டு ஓடும். இல்ல மெஷின் வைக்கப்பட்டிருக்கும் தரை சரியா ஃப்ளாட்டா இல்லைனாலும் அப்படித்தான். அப்ப பிடிச்சுக்கனும்....அதுவும் குறிப்பா செமி ஆட்டோமெட்டிக்தான்...ஃபுல் ஆட்டோமேட்டிக்கில் இந்தப் பிரச்சனை கிடையாது...

  நல்ல பிஸினஸை விட்டுட்ட்டீங்களே ஆதி!! அந்த வீடியோதான்...அட்லீஸ்ட் எங்களுக்காகவாவது எடுத்திருக்கலாம் ஹிஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செமி ஆட்டோமேட்டிக் மெஷினில் இப்படி பிரச்சனை உண்டு.

   காணொளி எடுக்க வாய்ப்பு அமையவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 10. முன்பே படித்து இருக்கிறேன், மீண்டும் படித்து ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 11. //அந்த அம்மணி ஹிந்திக்காரங்க! அதனால தமிழில் நான் எழுதறதை படிக்க முடியாதுன்னுன்ற தைரியம்தான்.//
  உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான். அந்த வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தகால் உங்களை மாதிரி தைரியசாலி யாரும் இல்லை என்று தைரியமா சொல்லலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா..... நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை.... மகிழ்ச்சி நண்பரே. அனைவரும் நலம் தானே.... இப்பொழுதும் ஆஸ்திரேலியாவில் தானே ?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
  2. இன்னும் ஆஸ்திரேலியா தான் குடியிருப்பு

   நீக்கு
  3. மகிழ்ச்சி....

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 13. பதிவில் நகைச்சுவை எடுப்பாய் இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 14. Hi Venkat , This is venkat from bangalore, i am looking for bus details from delhi to manali.
  found some private bus details below.
  i am looking for genuinity of these travels, meaning bus quality, safety & others.
  The reason their tariff is less than HRTC. Please help me to share the details.
  If possbile please share your contact #
  My email id - venkatraman_j@yahoo.com
  laxhmi holidays,shubh yatri holidays,
  holiday appeal,tanishq holidays tours
  Himachal tourist volvo bus, Himachal holiday tours,
  Royal travels delhi.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் சகோதரி

  தோய்ப்பு நடனம் சூப்பர். முன்பே தங்கள் பதிவாக படித்து ரசித்துள்ளேன். இன்று மீண்டும் முழுவதுமாக படித்து ரசித்தேன். நல்ல நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறீர்கள்.அந்த வீடியோ இல்லையென்றாலும், நானும் மனக்கண்ணில் பார்த்து ரசித்தேன்.

  பொதுவாக கையில் துவைத்து உலர்த்தி உடுத்திக்கொண்டால் துணிகள் நன்றாகத்தான் இருக்கும்.ஆனால் அடுக்கு மாடி குடியிருப்பில் அமர்ந்து கொண்டு துவைத்தால், கீழே குடியிருப்பவர்கள் நம்மை துவைத்து பிழிந்து விடுவார்களே என்ற பயத்தில்தான் மெஷினை நம்ப வேண்டியதாய் ஆகி விட்டது. இனி துணிகளை போட்டால் அயர்ன் பண்ணி கையில் கொடுக்கும் மெஷின் (வெளிநாட்டில உள்ளதை போல் இங்கும்) வந்து விட்டாலும் நன்றாகத்தான் இருக்கும். நாமும் ஆடாமல் அசையாமல் வாங்கிக் கொண்டு நகரலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுக்கு மாடி குடியிருப்புகளில் அடித்துத் துவைப்பது முடியாத வேலை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு
 16. உங்கள் பதிவு ரசிக்கும்படி இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 17. அருமையான பதிவு ஆதி. வெகு இனிமையான
  நகைச்சுவை. உங்க ரசனை சுவாரஸ்யம்.
  இங்கேயும் ட்ரையர் டவல்ஸ் போட்டா ஆட்டம் போடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 18. நான் இப்போவும் என்னோட துணிகளைக் கைகளாலேயே தோய்த்துக் கொள்வேன். வாஷிங் மெஷின் இருக்குத் தான்! ஆனால் பெரும்பாலும் அவரோட வேஷ்டி, துண்டுகள், போர்வைகள், தலையணை உறைகள், கர்ட்டன்கள், சோஃபா உறைகள் எனத் தோய்ப்பது தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....