ஞாயிறு, 20 ஜனவரி, 2019

பீஹார் டைரி – குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் – நிழற்பட உலா…ராஜ்கீர் ஷாந்தி ஸ்தூபா அமைந்திருக்கும் இடத்தில் லங்கூர் வகைக் குரங்குகள் நிறைய இருந்தன என எழுதி இருந்தேன். அதிலும் மலையுச்சியில் அத்தனை லங்கூர் குரங்குகள். ஒவ்வொன்றும் அதனதன் வேலையில் ஆழ்ந்து இருக்க, சில மனிதர்கள் அவற்றைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள். தின்பண்டங்களை அவற்றுக்குக் கொடுப்பதால் சில கெடுதல்கள் உண்டாகலாம் என அவ்வப்போது அரசாங்கம் சொன்னாலும் நாம் கேட்டால் தானே… முன்னரே ஒரு பெண்மணி குரங்குக்கு இரண்டு ரூபாய் பாப்பின்ஸ் கொடுத்ததை எழுதி இருந்தேன். சிலர் பழங்கள் வாங்கிக் கொடுக்க, சிலரோ கேக்ஸ், பிஸ்கெட் போன்று தங்களிடம் இருந்தவற்றை அவற்றுக்குக் கொடுத்தார்கள். 

நான் அங்கே இந்த லங்கூர் குரங்குகளை நிறைய படங்கள் எடுத்தேன். அவற்றில் சில மட்டும் இன்றைய ஞாயிறில் ஒரு தொகுப்பாக…. படங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன். படங்கள்/பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.


அன்னையின் அரவணைப்பில் கவலைகள் இன்றி.....


அங்கே என்னமோ நடக்குதே.... போய் பார்க்கலாமா.....


ஆங்க்.... இப்படித்தான் நல்லா காலைத் தூக்கினா தான் பேன் பார்க்க வசதி........ 


பேன் பார்க்கறேன்னு நினைக்காதீங்க... எனக்கு கை ஜோசியம் பார்க்கவும் தெரியும்.....


யேய்... போதும்பா... நான் போகணும்.........


யே.. அங்க ஒருத்தன் நம்மள ஃபோட்டோ புடிக்கிறான்........


என்ன பார்க்கறே... நீ பார்க்கறத நானும் பார்க்கிறேன்.....


நீ உன் வேலையைப் பாரு... நான் தூங்கற வேலையைப் பார்க்கிறேன்....


ஆஹா... என்ன சுகம் என்ன சுகம்!


யோவ்... போதும் போய்யா... எவ்வளவு ஃபோட்டோ தான் எடுப்ப நீ! ஒரு அளவு வேண்டாமா........

நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திப்போம்…. சிந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

30 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட்.. லங்குர்களின் தொகுப்பா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம். ஆமாம் லங்கூர் குரங்குகளைப் படம் எடுத்ததன் தொகுப்பு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. படங்களை ரசித்தேன். வரிகளையும்! சில படங்களுக்கு எனக்கு வேறு வரிகள் தோன்றின!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்குத் தோன்றிய வரிகளையும் சொல்லலாமே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 4. படங்கள் நல்லா இருக்கிறது.

  விலங்குகளுக்கு உணவு கொடுப்பது தவறுதான். நான் கர்நாடகாவில் ஒரு அருவிக்குச் சென்றிருந்தபோது, அங்கு இருந்த ஏகப்பட்ட குரங்குகள் சர்வ சாதாரணமாக கடைகளிலிருந்தும் பொருட்களை எடுத்துச் சாப்பிட்டன. நான் வாங்கிய ஒரு ஐஸ்கிரீமை, என் மேல் குரங்கு ஏறி பறிக்கமுயன்றதால் கீழே போட்டுவிட்டேன். அதை சர்வ சாதாரணமாக எடுத்து நாம் பாக்கெட் பிரிப்பதுபோல் பிரித்து சாப்பிட்டது. அவங்க உணவுப் பழக்கமும் மாறுது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தில்லி நகரில் நகர நிர்வாகம் கூட அடிக்கடி சொல்கிறது - குரங்குகளுக்கு உணவு கொடுக்கக் கூடாது என... ஆனால் கேட்பதே இல்லை மக்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 5. அழகர் கோவில் , பழமுதிர்சோலையில் போகும் இடம் எல்லாம் குரங்குகளுக்கு உணவு கொடுக்காதீர்கள் என்று அறிவிப்பு பலகைகள் வைத்து இருக்கிறார்கள், யார் கேட்கிறார்கள் !

  நெல்லைத்தமிழன் சொல்வது போல் அவைகளின் உணவு பழக்கம் மாறி விட்டது. மாற்றி விட்டோம்.
  முன்பு புறாக்கள் சிறுதானியங்களை உண்டது. இப்போது சமைத்த உணவு சாப்பிட பழகி விட்டது.
  சோளரவை போட்டேன் சாப்பிடவில்லை, சாதம் சாப்பிடுகிறது இந்த சோளரவையை சாப்பிட்டவே இல்லை.

  படங்கள் எல்லாம் அழகாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் மா... கேட்பதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 6. படங்கள் மற்றும் வரிகள் அனைத்தும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 7. வாவ்வ்வ்வ்வ் என் கிரேட் குரு.. என்னா அழகு.. யோகா, மெடிரேசன் எல்லாம் செய்கிறார்கள்.

  படங்கள் சூப்பர் குவாலிட்டியாக இருக்கு இம்முறை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... உங்களுடைய குருவா இவர்.... :) ஆமாம் அவர்கள் செய்யும் யோகாவுக்கு முன் மனிதர்கள் செய்யும் யோகா எம்மாத்திரம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 8. //யோவ்... போதும் போய்யா...//
  என்று சொன்னதால்தான் விட்டீர்களோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... அப்படி இருந்தால் எப்படி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 9. எல்லா படங்களும் மிக அழகாக இருக்கின்றன அதற்கான உங்கள் தலைப்புகளும்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு
 10. ஆஹா நம்மவங்க!! லங்கூர் வகை செம அட்டகாசம் பண்ணும்..சூப்பரா இருகும் ஜி. உங்க படங்கள் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு கரெக்ட்டா அவங்க சேஷ்டைகளைப் பிடிச்சுருக்கீங்களே!!

  மூனாவது படத்தைப்பார்த்ததும் எனக்கு இப்படித் தோனிச்சு...இது யாருடா நாம நம்ம குடும்ப விஷயம் பேசிட்டிருக்கும் போது டிஸ்டர்ப் பண்னுறது..அப்படினு

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Who is the disturbance என ஒரு படத்தில் கவுண்டமணி பேசும் நகைச்சுவை வசனம் நினைவுக்கு வருகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 11. நாலாவது படம் பார்த்ததும்..."காலைத் தூக்கு சரியா தூக்கு எங்க சுளுக்கிருக்கு பார்ப்போம்...இங்கயா வலிக்குதுனு அழுத்திப் பார்த்து.." அப்படி மற்றவர் சொல்லுவது போலத் தோன்றியது...ஹா ஹா

  5 வது படத்தைப் பார்த்ததும்...."எதுக்கு கைய இழுக்கறீங்க.....பாருங்க இப்படித்தான் கைக்கு மஜாஜ் கொடுக்கனுமாக்கும்...."

  6 வது படம்...அட நில்லுங்க ஃபோட்டோ எடுக்கறாய்ங்க பேனோடு போய் நிப்பாங்களா ஹூக்கும்..."

  7...டேய் ஷேம் ஷேம் பப்பி ஷேம்..நு சொல்லப்போறாங்க ஃபோட்டோக்கு இப்புடியா உடமபைக் காமிக்கறது!!!!!

  8. ச்சே இந்த மனுஷங்கள பாருங்க மறைஞ்சு நின்னு நம்ம வேலைய பார்த்தா அதையும் ஃபோட்டோ எடுக்கறாங்கப்பா...ஹூம் ப்ரைவசியே இல்ல....

  9. ஏலேய் அங்கன பாரு ஃபோட்டோ புடிக்கறாங்கடே...உறங்கிட்டிருக்க....எந்திரி எந்திரி...எந்திரிச்சு ஓடிப் போய் முகம் கழுவி தலை சீவிட்டு பௌடர் போட்டு வாடே!...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களுக்கான உங்கள் கமெண்டுகள் செம.... பௌடர் போட்டு வாடே! ஹாஹா. அனைத்தும் ரசித்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 12. கீழிருந்து இரண்டாவது படம்...

  "இந்தா இவன் கைக்கெடைல அந்தக் கடலை பொட்டலத்தை ஒளிச்சு வைச்சுட்டு உறங்குறான்..பாரு."

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 14. படங்களும் படம்சார் வரிகளும் அருமை.

  அப்படியே ஒரு selfi எடுத்து போட்டிருக்கலாம். அதன் கீழ் என்ன மாதிரி படம்சார் வரி போட்டுருப்பீர்கள் என்று கொஞ்சம் யோசிச்சேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்கும் செல்ஃபிக்கும் ரொம்ப தூரம் அண்ணாச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. படங்கல் அனைத்தும் மிக நன்றாக இருக்கின்றன வெங்கட்ஜி.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....