மோகன் லால் அவர்களின் மலையாளப் படப் பாடலான “ஜிமிக்கி கம்மல்”
பாட்டிற்கு சில பெண்கள் ஆடிய காணொளி மிகவும் வைரலாகப் பரவி இருக்கிறது…. அதில் ஆடி
இருக்கும் ஷெரில் எனும் பெண்ணுக்கு ரசிகர் மன்றம் கூட வைத்திருப்பதாகத் தெரிகிறது
– ஷெரில் ஆர்மி என்று சிலரும் கிளம்பியிருக்கிறார்கள்! ஓவியா ஆர்மிக்குப் பிறகு இப்போது
ஷெரில் ஆர்மி! என்னவோ போங்கடே! சரி அந்த காணொளி எல்லோருமே பார்த்திருக்கலாம். ஒரிஜினல்
சினிமா பாட்டு பார்த்ததுண்டா? என் நண்பர் ஒருவர் அந்த ஒரிஜினல் பாடலின் காணொளி அனுப்பி
இருந்தார். நீங்களும் பார்த்து ரசிக்க!
சில நாட்களுக்கு முன்னர் தீவிரவாதிகளால், அனந்த்நாக் பகுதியில்
சுட்டுக்கொல்லப்பட்ட உதவி துணை ஆய்வாளர் அப்துல் ரஷீத் அவர்களின் உடலைப் பார்த்த அவரது
மகள் ”ஜோரா” கண்ணீர் விடும் படம் மனதை மிகவும் கலக்கிய ஒன்று. இன்னும் எத்தனை இழப்புகளைத் தாங்கப் போகிறோம்……
மாலை நேரச் சூரியனை படம் எடுப்பதில் ரொம்பவே ஆர்வம் அதிகமா?
இல்லை, மாலை நேரத்தில் மட்டுமே சூரியனை படம் பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறதா என்பது
புரியாத புதிர். மாலை நேரச் சூரியனை நிறைய
படம் பிடித்திருக்கிறேன். பல முறை பயணங்களில், சாலையில் பயணித்தபடியே சூரியனை படம்
பிடிக்க முயல்வேன். அப்படி சமீபத்திய பயணத்தில் எடுத்த சூரியன் புகைப்படம்!
தனியார் பள்ளி
மாணவர்களையும் ஈர்க்கும் அதிசயம்: தரமான கல்வியால் வளரும் செல்வநாயகபுரம் அரசுப் பள்ளி:
ராமநாதபுரம் மாவட்டத்தின் சிறந்த அரசுப் பள்ளி தலைமை
ஆசிரியருக்கான விருது (2014), சிறந்த அரசுப் பள்ளிக்கான காமராசர் விருது (2015) என
பல விருதுகளையும், பரிசுகளையும் தொடர்ந்து பெற்று வருகிறது ராமநாதபுரம் மாவட்டத்தின்
முதுகுளத்தூர் ஒன்றியம் செல்வநாயகபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்தப்
பரிசுகளையெல்லாம் விட மேலாக, சிறந்த பள்ளிக்கூடம் என்று கிராம மக்கள் மனதார இப்பள்ளியை
அங்கீகரித்துள்ளனர். அதனாலேயே தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்கள் குழந்தைகளை பல
பெற்றோரும் இந்த அரசுப் பள்ளியில் சேர்த்து வருகிறார்கள்.
சில நாட்களாக, வட இந்தியாவின் சில மாநிலங்களில்
புரளி! பேய்/ஏதோ ஒன்று பெண்களின் தலைமுடியை வெட்டி எடுத்துக் கொண்டு போய்விடுவதாக செய்திகள் பரவி வருகின்றன.
கிராமத்துப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர பயந்து போய் இருக்கிறார்கள். தலைநகரை
அடுத்த சிறு இடங்களில் கூட இந்தப் பேய் உலவுவதாக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நடுவே
அவர்களாகவே வெட்டிக்கொண்டு இப்படி வதந்தி பரவ விடுவதாகவும் காவல் துறை செய்தி சொல்கிறது!
எப்படி இருந்தாலும் இந்த விஷயம் பயங்கரமாக பரவி வருகிறது! இதை வைத்து சிலர் பாடலும்,
காணொளிகளும் தயாரித்து வெளியிடும் அளவிற்கு இந்த விஷயம் பரவி இருக்கிறது. செய்தி இங்கே. ஒரு மாதிரி காணொளி கீழே!
மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஃப்ரூட் சாலட்! ஏப்ரல்
ஏழாம் தேதி அன்று ஃப்ரூட் சாலட் 200-வது பகுதி எழுதி, இத்துடன் இந்தப் பகுதியை நிறுத்திக்
கொள்ளப்போவதாக அறிவித்து இருந்தேன். தொடர்ந்து ஐந்து வருடங்களாக வாரத்திற்கு ஒன்றாக
எழுதி வந்த பகிர்வுகள் – ஒன்றிரண்டு வாரங்கள் தவிர மற்ற எல்லா வாரங்களிலும் இந்தப்
பெயரில் பல விஷயங்களைத் தொகுத்து வந்திருக்கிறேன். கடைசி என்று சொன்னபோதே பதிவில் கருத்திடும்
நண்பர்கள் – நிறுத்த வேண்டாமே, கொஞ்சம் ப்ரேக் விட்டு பிறகு தொடரலாமே என்றும் எழுதி
இருந்தார்கள். மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு
இதோ மீண்டும் ஃப்ரூட் சாலட்! இரண்டாவது இன்னிங்ஸ்
தொடர்கிறது!
இந்த வார செய்தி? மத்த
பகுதிகளை எல்லாம் பொறுமையா படிச்சுட்டு/பார்த்துட்டு வாங்க…. செய்தியை கடைசில சொல்றேன்!... யாருப்பா அது Scroll பண்ணி முதல்லயே கடைசிக்கு போறது?
இது அழுகுணி ஆட்டம்! இப்படி எல்லாம் பண்ணக்கூடாது!
ஒவ்வொரு முறை உணவை வீணாக்கும்போதும்
இந்த காணொளியை நினைவு கொள்ளுங்கள். விவசாயின் உழைப்பில் உருவாகும் உணவை வீணாக்க உங்களுக்கு
உரிமை இல்லை….
இந்தவாரகுறுஞ்செய்தி:
ஒருவன் உன்னை ஒரு முறை அடித்தால் அது அவனுடைய தவறு. அவனிடம்
இரண்டாவது முறையும் அடி வாங்கினால் அது உன்னுடைய தவறு!
இந்தவாரமுகப்புத்தகஇற்றை:
இட்லிக்கு நாலு விதமான சட்னி கிடைப்பது
வரம்…..
ஆனால் அது ஃப்ரிட்ஜிலிருந்து கிடைப்பது
சாபம்!
இந்தவாரWhatsApp தகவல்:
Skoda Octavia – 25 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய கார் – இரண்டு
வருடங்கள் ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பிரச்சனை – கார் விற்பனை செய்யும் நிறுவனம்
பிரச்சனைகளைத் தீர்க்காததால் இரண்டு கழுதைகளை வைத்து காரை இழுக்க வைத்திருக்கிறார்
– இது நடந்தது லுதியானாவில்! வித்தியாசமாய் ஒரு போராட்டம்!
ராஜா காது, கழுதை காது:
தலைநகரின் ஒரு பள்ளியின் வெளியே – தங்கள் குழந்தையை பள்ளியில்
சேர்க்க வந்திருக்கும் பெற்றோர்கள் இரண்டு பேருக்கும் வாக்குவாதம்…. தங்கள் மகனின்
பிறந்த நாளைச் சொல்லக் கேட்க, இரண்டு பேருக்கும் ஒழுங்கான தேதி நினைவில் இல்லை! – தங்கள்
மகனின் பிறந்த நாள் நினைவில் வைத்துக் கொள்ளவே இல்லையே என இருவருக்கும் வாக்குவாதம்!
‘நீதானே பெற்றுக் கொண்டாய், உனக்கு நினைவில் இருக்க வேண்டாமா….” என கணவன் கேட்க, “ஏன்
உனக்கும் தானே பிள்ளை இவன், உனக்கு நினைவிலிருக்க வேண்டாமா” என மனைவி கேட்க, பள்ளியின்
வாசல் அருகே இருந்த காவலாளி, Birth Certificate-ல இருக்கும் பார்த்து சொல்லுங்கடே….”
இனிதே முடிந்தது விவாதம்! நல்ல அம்மா, நல்ல அப்பா!
இந்த நாள் இனிய நாள்:
மகளிர் தினக் கொண்டாட்டங்கள் அதிகமாக இல்லாத சில வருடங்களுக்கு
முன்னர் இதே மகளிர் தின நாளில் [8-ஆம் தேதி] தான் நான் வாழ்க்கையில் முதன் முதலாய்
ஒருவரைச் சந்தித்தேன். சந்தித்த மூன்றாம் நாள் அதாவது 10-ஆம் தேதி என் வாழ்க்கையை பகிர்ந்து
கொள்ள துணையாக வர நிச்சயிக்கப்பட்ட நாள்! நாட்கள் தான் எத்தனை வேகமாக ஓடுகின்றன…..
பொதுவாக இது மாதிரி முக்கியமான நாட்கள் ஆண்களுக்கு நினைவில்
இருப்பதில்லை என்ற குறை எல்லாப் பெண்களுக்கும் உண்டு. என் மனைவிக்கும்! இந்த முறை நினைவில்
வர இங்கேயே எழுதிவிட்டேன்! [ஆனால் 8-ஆம் தேதி அன்று சுத்தமாக நினைவில் இல்லை என்பதையும்
சொல்லி விடுகிறேன்!].
இந்த வார ரசித்த பாடல்:
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய பாடல் பார்க்க/கேட்க வாய்த்தது. அந்தப் பாடல், “கண்ணம்மா, கண்ணம்மா” என்ற
பாடல். கேட்ட முதல் முறையே ஏனோ
பிடித்தது. இதோ நீங்களும் கேட்க....
1979-ஆம் வருடம் வெளி வந்த பூந்தளிர்
எனும் படத்திலிருந்து ஒரு பாடல் இந்த வார ரசித்த பாடலாக….
இந்தவாரகுறுஞ்செய்தி:
”அவர்கள் மோசமானவர்கள் இல்லை, சற்று வித்தியாசமானவர்கள்” என்று
நீங்கள் நினைக்க ஆரம்பித்து விட்டால் பல சொந்தங்கள் நம்மை விட்டுப் பிரிவதிலிருந்து
தடுக்க முடியும்…..
இந்தவாரமுகப்புத்தகஇற்றை:
வாவ் புகைப்படம்!
இந்தவாரகாணொளி:
பொதுத் தேர்வு வரப் போகிறது. இச்சமயத்தில் குழந்தைகள் படும்
கஷ்டம், அவர்கள் மனதுக்குள் ஓடுகின்ற எண்ண ஓட்டம் என்ன என்பதை வார்த்தைகளில் சொல்ல
முடியாது. நிறைய வீடுகளில் அடுத்த குழந்தைகளுடன் ஒப்பீடு செய்து தங்களது குழந்தைகளுக்கு
மன அழுத்தத்தைத் தருவதுண்டு. அவர்கள் எண்ணம்
என்னவாக இருக்கும்…. இந்த காணொளியைப் பாருங்களேன்…. உங்களுக்கும் பயன்படலாம்!
இந்த வார படமும் கவிதையும்:
நான் எடுத்த புகைப்படத்திற்கான
கவிதை ஒன்று – எழுதியது யாதவன் நம்பி புதுவை வேலு…..
படம்:
படத்திற்கான கவிதை:
இலைகள் இணைந்து நடத்தும்
இயற்கையின்....
இன்பக் கலைக்கூடம் கண்டு!-
துன்பம் பாசிகள் எல்லாம்
துவண்டு!
தூர தேசம் செல்லத் துடிக்கிறதோ?
புதுவை வேலு
இந்த வார புகைப்படம்:
சூரஜ்குண்ட் மேளா-2017 சென்றபோது
நிறைய சிறுவர்/சிறுமியரின் புகைப்படங்கள் எடுத்திருந்தேன். அவற்றில் இந்த புகைப்படம் பிடித்தது. இரண்டு பேருக்கும்
அப்படி ஒரு ஒற்றுமை! அப்பா-அம்மா மொபைலில் எடுக்கும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த
போது நான் எடுத்த க்ளிக்!
நான் எடுத்த புகைப்படங்களுக்கு கவிதை
எழுத அழைப்பு விடுத்தது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா?
இதோ இந்த வார புகைப்படம்!
படித்ததில்பிடித்தது:
யாரோ உன்னைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய்
யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?
இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால்
அரவணைத்துக்கொண்டுள்ளது.
சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை
உனக்குத்தர மறுத்ததுண்டா?
இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை.
உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து
நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்...
உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன்.
அது மனதின் வேலை.
உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு. நீயும்
எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு.
எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.
சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.
சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது.
அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.
கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை.
வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.
இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால்
விளைவது.
அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே
தாழ்வாகக் கருதுகிறாய்.