வெள்ளி, 15 செப்டம்பர், 2017

ஃப்ரூட் சாலட் 207 – ஜிமிக்கி கம்மல் – தோலிலும் கலைவண்ணம் – தவளையாக இருக்காதீர்கள்!



இந்த வார செய்தி:

மோகன் லால் அவர்களின் மலையாளப் படப் பாடலான “ஜிமிக்கி கம்மல்” பாட்டிற்கு சில பெண்கள் ஆடிய காணொளி மிகவும் வைரலாகப் பரவி இருக்கிறது…. அதில் ஆடி இருக்கும் ஷெரில் எனும் பெண்ணுக்கு ரசிகர் மன்றம் கூட வைத்திருப்பதாகத் தெரிகிறது – ஷெரில் ஆர்மி என்று சிலரும் கிளம்பியிருக்கிறார்கள்! ஓவியா ஆர்மிக்குப் பிறகு இப்போது ஷெரில் ஆர்மி! என்னவோ போங்கடே! சரி அந்த காணொளி எல்லோருமே பார்த்திருக்கலாம். ஒரிஜினல் சினிமா பாட்டு பார்த்ததுண்டா? என் நண்பர் ஒருவர் அந்த ஒரிஜினல் பாடலின் காணொளி அனுப்பி இருந்தார்.  நீங்களும் பார்த்து ரசிக்க!




இந்த வாரத்தின் குறுஞ்செய்தி:

நினைவுகள் சுகமானது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால்…. அந்த நினைவுகள் கனமானது என்பது சுமப்பவனுக்கு மட்டுமே தெரியும்!

இந்த வார காணொளி

தோல்வி – வெற்றியின் முதல் படிக்கட்டு….


தோலிலும் கலை வண்ணம்:

ஆரஞ்சு பழத்தோலை நாமெல்லாம் உரித்து, தூக்கிப் போடுவோம், இல்லை என்றால் காய வைத்து குழம்பில் போடுவோம்! இங்கே ஒருவர் என்ன செய்கிறார் பாருங்களேன்!


படித்ததில் பிடித்தது:

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
*
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
*
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
*
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
*
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
*
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
*
எது அந்த தவளையை கொன்றது...?
*
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
*
ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......
*
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
*
ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*
மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
*
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது".

     புவனா புவி, முகப்புத்தகத்திலிருந்து….

இந்த வார WhatsApp:

கணவன் மனைவிக்கு இடையே நடந்த சண்டையின் போது….

கணவன்: உன்னைப் பார்த்து நான் பயப்படறேன்னு நினைச்சுடாதே….

மனைவி: பொய் சொல்லாதே…. என்னைப் பொண்ணு பார்க்க வரும்போது 6 பேரோட வந்தே…

நிச்சயம் பண்ணும்போது 100 பேரோட வந்தே….

தாலி கட்டும்போது 500 பேரை கூட்டிட்டு வந்தே….

ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன் வீட்டுக்குத் தனியாவே வந்திருக்கேன் பார்த்தியா! இப்ப புரியுதா யாரு தைரியசாலின்னு!

இந்த வாரத்தின் முகப்புத்தக இற்றை:

சார் பக்கத்து வீட்டுக்காரர் சம்சாரம் காணாம போய் மூணு மாசமாகுது” !...

“அதுக்கு நீ ஏன்யா போலீஸ்
ஸ்டேசனுக்கு வந்து புகார் குடுக்கற…?”

"சார் அந்த ஆளு புகாரே குடுக்காம
ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கான்
சார்

நாளைய பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


28 கருத்துகள்:

  1. இற்றை ஸூப்பர் ஜி இரசித்து சிரித்தேன் பொறாமைக்காரனின் புகாரை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  2. அனைத்தும் ரசித்தேன். சில ஏற்கனவே பார்த்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. அத்தனையும் பார்த்தவைதான்.. அந்த தவளை பதிவு வந்தாலே கடுப்பாவேன். ஏன்னா அத்தனை முறை படிச்சு அலுத்து போச்சு. வெற்றியின் படிக்கட்டு சூப்பர். அது மட்டும்தான் புதுசு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  4. ஜிமிக்கி கம்மல் ஒரிஜினல் பாட்டு நான் கூட சமீபத்தில்தான் கேட்டேன். மோகன்லால் கெட்டப் அதில் என்னைக் கவரவில்லை!

    ஆரஞ்சு பழத்தோல் காணொளி எனக்கும் வந்தது.

    தவளைக்கதையும் (அருமை) படித்திருக்கிறேன்.

    வாட்ஸாப் பும் படித்திருக்கிறேன்.

    ஹிஹிஹி இற்றையும் படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோகன் லால் - பாடலில் கடைசியில் தான் வருகிறார் - ஆசிரியர் ரோல் போல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. >>> கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன் வீட்டுக்குத் தனியாவே வந்திருக்கேன் பார்த்தியா!<<<

    தனியா வந்தாலும் ஆயிரம் பேர் வந்ததுக்கு நிகர்..

    இனிய தொகுப்பு.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  6. ஜிமிக்கி கம்மல் ட்யூன் வெரி காட்சிங்!! ஆனால் தமிழ் அர்த்தம் முதல் இரண்டு வரிக்கு யூ ட்யூபில் போட்டிருந்தார்கள் - வெறுத்துப் போய் விட்டது!!
    ஆரஞ்சு பழத் தோல் வித்தை அருமை! எவ்வளவு தூரம் பழகி, மனதில் இருந்த உருவத்தை வடிவமைத்திருக்கிறார்!! எங்கள் வீட்டில் ஆரஞ்சு தோலை துவையல் செய்து சாப்பிடுவோம், எப்போதாவது!
    மற்ற துணுக்குகளையும் ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகிமா, நானும் ஆரஞ்சுத் தோலில் துவையல், பச்சடி செய்வது உண்டு! :)

      நீக்கு
    2. பாடல் கேட்கும்போது நன்றாக இருந்தாலும் முதல் நான்கு வரிகளின் அர்த்தம் மோசம் தான்! இப்போதெல்லாம் பல பாடல்களின் நிலை இது தானே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

      நீக்கு
    3. ஆரஞ்சுத் தோலில் துவையல் - சாப்பிட்டதில்லை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  7. ஆரஞ்சு பழத்தோல் குதிரை கவர்ந்தது .
    "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......சிந்திக்க வைத்தது . கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன் வீட்டுக்குத் தனியாவே வந்திருக்கேன் பார்த்தியா! இப்ப புரியுதா யாரு தைரியசாலின்னு! திகைக்க வைத்தது
    "சார் அந்த ஆளு புகாரே குடுக்காம
    ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கான்
    சார் சிரிக்க வைத்தது அருமை சார் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமல்.

      நீக்கு
  8. ஆரஞ்சுத் தோல் வராத இடமே இல்லை போல! முதல் காணொளி இன்னும் பார்த்ததில்லை. மற்றவை ஏற்கெனவே அறிந்தவை. கடைசி இரண்டும் ஹிஹிஹிஹி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  10. படித்த்சதில் பிடித்ததுஎனக்கும் பிடித்ததுஇரண்டாவ்து காணோளி வரவில்லை ப்லாக்க்ட் என்று வருகிறது மற்றவற்றையும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  11. இந்த வார பழக்கலவையில் தாங்கள் தந்த ‘தோலிலே கலை வண்ணம்’ வியக்க வைத்தது. அந்த ஜிமிக்கி கம்மல் பாடல் பற்றி எனது கருத்து.

    ஜிமிக்கி கம்மல் பாட்டின் பொருள் தெரியாமல் ‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ என்று பாடுவதுபோல் இந்த பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் நாம். அதனுடைய பொருள் “என்னுடைய அம்மாவின் ஜிமிக்கி கம்மலை அப்பா திருடிக் கொண்டு போய் அதை விற்று சாராயம் வாங்கிக் கொண்டு வந்தார். இதனால் கோபமடைந்த அம்மா அந்த சாராய பாட்டிலை எடுத்து தானே முழுவதையும் குடித்துத் தீர்த்துவிட்டாள்'’ என்பது தெரிந்தால் நாம் அதை பாடிக்கொண்டு இருப்போமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொருள் தெரியாமல் பாடுகிறார்கள் - உண்மை தான். இப்போது பெரும்பாலான பாடல்களின் அர்த்தம் இப்படித்தான் இருக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  12. இந்தச் ஜிமிக்கிக் கம்மல் கேரளத்தில் படாத பாடு படுகிறது!!! அர்த்தம் தெரிந்தவரே அப்படித்தான்....

    இற்றை எல்லாம் ரசித்தோம் ஜி. படித்ததில் பிடித்தது நல்ல கருத்து மிகவும் பிடித்தது.

    ஆரஞ்சுத் தோலில் கலைவண்ணம் வாவ் போட வைத்தது!! என்ன ஒரு கலைநயம் மிகவும் ரசித்தோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  13. அனைத்தும் நன்று தவளை பிரமாதம த ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....