பனிபடர்ந்த மலைகளைக் கண்டாலே ஒரு ஆனந்தம் நமக்குள் உண்டாவது, அற்புத உணர்வு இல்லையா? மலைப்பகுதிகள், ஆற்றங்கரை, இயற்கை எழில் கொஞ்சம் பூங்காக்கள், மரங்களடர்ந்த வனப்பகுதி என எங்காவது செல்லும்போது நம்மை நாமே இழந்து இயற்கையில் ஒன்றிவிட முடிகிறது. பல சமயங்கள், என்னுடைய பயணங்களின் போது, அங்கேயே தங்கிவிட மாட்டோமா என்ற உணர்வு வரும். ஆனால் அங்கே இருந்து விட முடிவதில்லையே. நினைவுகளோடு திரும்பித் தானே ஆக வேண்டியிருக்கிறது.
நண்பர்
ஒருவர் வருடத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ, ஹரித்வார் நகருக்குச் சென்று, கங்கையாற்றின்
கரையில் இருக்கும் தங்குமிடம் ஒன்றில் நான்கைந்து நாட்கள் தங்கி வருவார். அத் தங்குமிடத்தில்
ஒரு வசதி, கரையிலேயே அமைந்திருக்கும் அவ்விடத்திற்கென்றே தனி Ghat உண்டு! அறையிலிருந்து
வெளியே வந்தால் அந்த Ghat-ல் குளித்துச் செல்லலாம். அறை ஜன்னல்களிலிருந்தே பிரவாகித்து
ஓடிக்கொண்டிருக்கும் கங்கையைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்! எப்போதும் அலுப்பின்றி,
சலுப்பின்றி, இப்படி ஓடிக்கொண்டிருக்கிறோமே என்ற எண்ணமின்றி ஓடிக்கொண்டிருக்கும் கங்கையைப்
பார்த்துக் கொண்டிருப்பது ஒரு பரவச அனுபவம்! அங்கே சென்று வந்த சில நாட்கள் வரை அந்த
மகிழ்ச்சியோடே இருப்பார் அவர்! எனக்கும் அங்கே சென்று சில நாட்கள் தங்கும் எண்ணம் உண்டு
என்றாலும், இது வரை அப்படி ஒரு பயணம் அமையவில்லை.
ஆற்றங்கரை
போலவே, பனிபடர்ந்த மலைகளைப் பார்த்துக் கொண்டு நேரத்தினை போக்குவதும் ஒரு வித மகிழ்ச்சியான
விஷயம். பனிபடர்ந்த மலைச் சிகரங்கள் இருக்கும்
ஒரு ஊருக்குப் பயணம் செய்த போது எடுத்த சில படங்கள் இந்த வார ஞாயிறில் உங்கள் பார்வைக்கு…..
எந்த ஊர், அங்கே பார்த்த இடங்கள், சில அனுபவங்கள் ஆகியவற்றை தற்போது எழுதிக் கொண்டிருக்கும்
“அரக்கு பள்ளத்தாக்கு” பயணத்தொடர் முடிந்த பிறகு எழுதுகிறேன். இப்போதைக்கு பனிபடர்ந்த மலைச்சிகரங்களை எடுத்த புகைப்படங்கள்
உங்கள் பார்வைக்கு!
என்ன
நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? உங்கள் எண்ணங்களை, பின்னூட்டத்தில் சொல்லலாமே!
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
//எப்போதும் அலுப்பின்றி, சலுப்பின்றி, இப்படி ஓடிக்கொண்டிருக்கிறோமே என்ற எண்ணமின்றி ஓடிக்கொண்டிருக்கும் கங்கையை//
பதிலளிநீக்குஓடிய தண்ணீரில் எந்தத் தண்ணீர் உங்கள் கண்ணில் பட்ட தண்ணீர்?!!!
படங்கள் அழகு. கேமிராக் கண் வழியே பார்த்தால் அழகு. நேரில் பார்த்தால் பரவசம்.
ஓடிய தண்ணீரில் எந்தத் தண்ணீர் உங்கள் கண்ணில் பட்ட தண்ணீர்!
நீக்குநல்ல கேள்வி! அடுத்த முறை சென்றால் இக்கேள்வியை எனக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டும்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
தங்களால் நாங்களும் கண்டோம்
பதிலளிநீக்குஅழகு ஐயா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஆகா..
பதிலளிநீக்குசிலுசிலு.. என அழகிய படங்கள்..
வாழ்க நலம்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குபனி படர்ந்த மலைச் சிகரங்களை தாங்கள் எடுத்திருக்கும் புகைப்படங்களின் மூலம் காணும் வகை செய்த தங்களுக்கு நன்றி! படங்கள் அருமை. பாராட்டுகள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குபனிபடர்ந்த மலைகளைக் கண்டாலே ஒரு ஆனந்தம் நமக்குள் உண்டாவது, அற்புத உணர்வு இல்லையா? மலைப்பகுதிகள், ஆற்றங்கரை, இயற்கை எழில் கொஞ்சம் பூங்காக்கள், மரங்களடர்ந்த வனப்பகுதி என எங்காவது செல்லும்போது நம்மை நாமே இழந்து இயற்கையில் ஒன்றிவிட முடிகிறது. பல சமயங்கள், என்னுடைய பயணங்களின் போது, அங்கேயே தங்கிவிட மாட்டோமா என்ற உணர்வு வரும். ஆனால் அங்கே இருந்து விட முடிவதில்லையே. நினைவுகளோடு திரும்பித் தானே ஆக வேண்டியிருக்கிறது. //
பதிலளிநீக்குஉண்மை ஜி! நானும் அப்படி நினைப்பதுண்டு. பனி சூழ்ந்த மலைகளை அதுவும் பிரம்மாண்டமான இமயமலையைக் கண்டதும், அதுவும் ஜன்னல் வழி கைக்கெட்டும் தூரத்தில் பியாஸ் சல சலவென நுரைத்து பெரும் இனிமையான சத்தத்துடன் துள்ளி துள்ளி ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே அந்த இனிய சத்தத்தில் இரவு உறங்கி காலையில் வெளியில் வந்தால் பியாஸில் கால் நனைத்து என்று மணாலிக்குச் சென்றிருந்த போது அங்கேயே இருந்துவிட மாட்டோமா என்று தோன்றியதுண்டு. என்ன ஒரு பரவசம்! ஹரித்வாரில் ஆம், நீங்கள் சொல்லியிருப்பது போல் என் தங்கை (குர்காவ்னில்) இருப்பவள் குடும்பம் இப்படி உறவினர் வரும் போது அங்கு சென்று தங்கி வருவார்கள். இம்முறை கூட நான் அங்கு வந்திருந்த போது நான் புறப்பட்ட அடுத்த தினம் அங்கு உறவினருன் சென்றார்கள். இம்முறை மலையேற்றம், ராஃப்டிங்க் என்று ரெசார்ட்டில் தங்கி அதற்கான ஏற்பாடுகளைச்செய்யும் ஒரு சுற்றுல்லா நிறுவனம் மூலம் சென்று வந்தார்கள். என்னை மிகவும் கெஞ்சினார்கள் அதுவும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் ஆனால் செல்ல முடியாத சூழல் என்பதால் செல்ல வில்லை.
படங்கள் அழகு ஜி!
கீதா
உங்கள் உறவினருடன் ஹரித்வார் சென்றிருக்கலாம். நல்ல அனுபவம் கிடைத்திருக்கும் உங்களுக்கு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
இந்த முறை உங்கள் தயவால் பனி படர்ந்த மலைச்சிகரங்களைக் கண்டோம். உங்களது பயணங்கள் தொடரட்டும், நாங்கள் பார்க்கவேண்டும் அல்லவா?
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குவாவ்.... படங்கள் அழகு அண்ணா...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குபனி படர் சிகரங்களைப் பார்க்கவில்லை நானும் ஹர்த்வார் ரிஷிகேஷ் சென்றிருக்கிறேன் கடலையும் யானையையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்போலிருக்கும் பனி படர் சிகரங்களையுமா
பதிலளிநீக்குபனிபடர் சிகரங்களையும் பார்க்க எனக்குப் பிடிக்கும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
இவையெல்லாம் நம் சிந்தயை தூண்டுபவை/
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன் ஜி!
நீக்குஅருமையான காட்சிகள் ஜி.
பதிலளிநீக்குஒரு வாரத்திற்குப் பிறகு இன்றுதான் கணினி திறக்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஇந்த ரசனையெல்லாம் காசைப் பற்றி கவலை இல்லாதவர்களுக்கு மட்டுமே சாத்தியம் ஜி :)
பதிலளிநீக்குகாசைப் பற்றி கவலை இல்லாதவர்களுக்கு மட்டும்! :) சில சமயங்களில் காசு பற்றி கவலை கொள்ளாமல் இருப்பதும் சுகம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
அருமை, அழகு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆரோக்கியதாஸ்.
நீக்குஅருமையான அழகான படங்கள்.
பதிலளிநீக்குமலையின் அழகு எப்போதும் மனதை கவரும்.
பனிமலை , மலையின் மீது மேகம் சூழ்ந்து இருப்பது எல்லாம் அழகுதான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குபடங்கள் அனைத்தும் அருமைண்ணே
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!
நீக்குநான் ஶ்ரீராமுக்கு "பனச் சிகரங்கள்" தலைப்பில் படங்களை அனுப்ப வைத்திருக்கிறேன். இங்க பாத்தா அதே டாபிக். இருந்தாலும் அனுப்புகிறேன்.
பதிலளிநீக்குநீங்கள் எடுத்த புகைப்படங்களைக் காணும் ஆவலில் நானும்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
பனிமலை படங்கள்...கண்களுக்கு 'குளுகுளு' !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத்.
நீக்கு