வியாழன், 14 செப்டம்பர், 2017

ஜில் ஜில் ஜிகிர்தண்டா – வீட்டிலே செய்யலாம் – ஆதி வெங்கட்.
என்னதான் மனைவியோட பதிவுன்னாலும், முன்னாடி நானும் கொஞ்சம் எழுதணுமே – அதுவும் என்னோட வலைப்பூவில் வெளியிடும்போது என் சார்பாவும் கொஞ்சம் எழுதித் தானே ஆகணும்.சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் மேலே இருக்கும் படத்தினைச் சேர்த்து “இது என்ன என்று சொல்லுங்க பார்ப்போம்!! தெரிஞ்சவங்க எதுக்கு இது என்று சொல்லுங்க??” என்று எழுதி இருக்க, என்னவென்று தெரியாம வாயைக்கொடுத்து மாட்டிக்கக் கூடாது என சர்வ ஜாக்கிரதையா Like Button தட்டிட்டு சும்மா இருந்தேன்.  விதம் விதமான பதில்கள் வந்தன! அதுல ஒரு பதில் ரொம்ப ஸ்வாரஸ்யம்! ”வானவில் மனிதன்” மோஹன்ஜி அண்ணா என் மனசுல இருந்ததை அப்படியே சொல்லிவிட, ஒரு ஸ்மைலிய போட்டேன்! அதைப் பார்த்த நம்ம “காணாமல் போன கனவுகள்” ராஜி உடனே என்னை நல்லா கோர்த்து விட்டுட்டாங்க! பாருங்களேன்!

சரி இப்ப, இன்றைய பதிவுக்கு போகலாம் வாங்க! Over to Adhi!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

ஜில்ஜில் ஜிகிர்தண்டா!மதுரைக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்றான ஜிகிர்தண்டாவை நான் சுவைத்தது திருச்சியில் தான்! திருச்சியின் NSB ரோட்டில் உள்ள வசந்த பவன் வாசலில் இந்த ஸ்டால் இருந்தது. மகள் ஐஸ்க்ரீமை ருசிக்க நானும் என்னவரும் ஜிகிர்தண்டாவை முதன்முறையாக சுவைத்தோம்.

ஆராயாமல் வெளியில் எதையும் சாப்பிடும் பழக்கம் இல்லாததால் இதில் என்னென்ன போட்டிருப்பாங்க? என்று என்னவரை கேட்க, சாதம், பால் எல்லாம் சேர்த்திருப்பாங்க என்றார்! சாதமா!!!

அங்கிருந்து சற்றே தள்ளி "மதுரை ஃபேமஸ் ஜிகிர்தண்டா" என்ற பெயர்ப் பலகையுடன் ஒரு கடை இருக்கவே, அடுத்த முறையிலிருந்து அங்கே செல்லத் துவங்கினோம். ஒரு தம்ளர் 30 ரூபாய்.

உடலுக்கு குளிர்ச்சி தரும், வயிற்றுப்புண்களை ஆற்றும் எனவும் தெரிந்தது முதல் இணையத்தில் தேடி தகவல்களை சேகரிக்கத் துவங்கினேன். நாமே வீட்டில் செய்யலாமே!

தேவையான பொருட்கள்:-

பாதாம் பிசின், சப்ஜா விதை, சுண்டக்காய்ச்சிய பால், நன்னாரி சர்பத், ஐஸ்க்ரீம். இவ்வளவே.

நாட்டு மருந்து கடையிலிருந்து பாதாம் பிசினையும், சப்ஜா விதையும் வாங்கிக் கொண்டேன். ஊறவைத்து எல்லாவற்றையும் கலந்தால் சுவையான ஜிகிர்தண்டா தயார்.

சுண்டக்காய்ச்சிய பாலுக்கு பதில் கண்டென்ஸ்டு மில்க்கும் சேர்க்கலாம். நீங்களும் செய்து சுவைத்துப் பாருங்களேன்.

நட்புடன்


ஆதி வெங்கட்.

38 கருத்துகள்:

 1. மதுரை விளக்குத்தூண் அருகே ஜிகர்தண்டாவுக்கு ஃபேமஸ் கடை ஒன்று உண்டு. மூன்று வருடங்களுக்கு முன் அங்கு சென்று சாப்பிட்டிருக்கிறேன். அவர் பல்வேறு பொருள்களையும் பெரிய பெரிய டம்ளர்களில் சேர்க்கும்போது தொடர் போட்டோ எடுத்தேன். கைபேசியிலிருந்து அது காணாமல் போய்விட்டது! எனவே அதுபற்றி நான் போடவிருந்த பதிவும் கேன்சல் ஆனது பழைய கதை. சுவையான பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா....

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 4. ஜிகர் தண்டா சிறு வயதில் பள்லிக்கு செல்லும் முன் அல்லது லஞ் டையத்தில் வாங்கி சாப்பிடுவது மிக அருமையாக இருக்கும் கடந்த தடவை குழந்தையோட முருகன் இட்லி கடைக்கு சென்ர போது அங்கே இதனை பார்த்தது ஜிகர்தண்டாவின் பெருமையை என் குழந்தைக்கு எடுத்து சொல்லி அதை வாங்கி பருகினோம் அது நான் சின்ன வயத்தில் குடித்த அளவிற்கு சுவையாக இல்லை என்பது மட்டுமல்லாமல் குடித்த அரை மணி நேரத்தில் எங்கள் மூவருக்கும் தொண்டை கரகரத்து இருமல் வர ஆரம்பித்து விட்டது அதன் இரண்டு நாள் இருமல் தொடர்ந்தது முருகன் இட்லி கடைக்கு அன்றே தலை முழுகிவிட்டோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்....

   நீக்கு
 5. எனக்குப் பிடித்தது. முருகன் இட்லி கடையில் அவ்வப்போது சாப்பிடுவது. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்....

   நீக்கு
 6. நான் என்றும் பதினாரு வயது பையன் என்று நினைத்து கொண்டிருக்க இந்த ரிசிப்பியை பார்த்ததும் 10 வயதுதான் ஆன மாதிரி பழைய நினைப்பு எல்லாம் வந்துவிட்டது ஹும்ம்ம்ம்ம்ம் தம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட எனக்கு அண்ணனா நீங்க! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 7. ஐஸ்க்ரீமில் இருக்கும் சர்க்கரை போதுமா? வழக்கம்போல அளவுகளை நீங்கள் எழுதவில்லையே ஆதி?
  சுவையான குறிப்பு!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போதும் என்றே தோன்றுகிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
  2. மனோ அக்கா அவர்கள் ஐஸ்க்ரீமும் தவிர சுகர் சிரப் சேர்க்கிறார்கள் என்று முன்பு கேள்விப்பட்டதுண்டு. அன்று என் உறவினர் வாங்கிய போது அப்படித்தான் கலந்தும் கொடுத்தார்கள். நான் முன்பே சுவைத்திருக்கிறேன் என்றாலும் அன்றும் கொஞ்சம் சுவைத்தேன்....ஸ்வீட் எனக்கு அதிகமாகத் தோன்றியது. எனவே ஐஸ்க்ரீம் ஸ்வீட்டே வெங்கட்ஜி சொல்லியிருப்பது போல் போதும். நான் வீட்டில் செய்யும் போது தனியாகச் சேர்ப்பதில்லை...

   கீதா

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 8. அட! அப்போ அது தீஞ்சுபோன பால் பாத்திரம் இல்லையா?
  நானும் இவ்வளவு நாளா ஜிகர்தண்டான்னா என்னென்ன சேர்ப்பங்களோன்னு பயந்துகிட்டே சாப்பிட்டதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தீஞ்சு போன பால் பாத்திரம்! :) நான் ஒண்ணும் சொல்லல! போட்டுக் கொடுத்துடாதீங்கப்பு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   நீக்கு
 10. Face book_ல் பகிர்ந்த போதே பார்த்தேன். சுவையான பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 11. மதுரைப் பதிவர் விழாவில் முதன் முதலாக ஜிகிர்தண்டா சுவைத்தேன் அதன்பின் உறவுகளுடன் பயணம் மேற்கொண்டபோதுமதுரையிலவர்களுக்கு இதன் பெருமை கூறி சுவைக்க வைத்தேன் வீட்டில் செய்யலாம் என்றால் பாதாம் பிசின் சப்ஜா விதை இவற்றை இங்கு என்ன பெயர் சொல்லிக் கேட்பது தெரியவில்லையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 12. ஜிகர்தண்டாவை நான் சுவைத்ததே இல்லண்ணே. மதுரைக்கு பலமுறை சென்றும் அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்ல...

  என் கமெண்டால வீட்டுல எதாவது பின்விளைவு நடந்துச்சுதுன்னும் சொல்லி இருக்கலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின் விளைவுகள்! அதெல்லாம் சொல்லறதுக்கு இல்ல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 13. ஜிகிர் தண்டா - இந்தப் பெயர்தான் வாயில் நுழையவில்லை. ஒரு நல்ல தமிழ்ப் பெயர் வைத்தால் நன்றாக இருக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜிகிர் தண்டாவிற்கு தமிழ்ப் பெயர்! :) டண்டா என்ற ஹிந்தி சொல்லுக்கு குளிர்ச்சியான எனப் பொருள். அது தான் சிதைந்து நம் ஊரில் தண்டா என வந்திருக்க வேண்டும். ஜிகிர் கூட ஹிந்தி வார்த்தை தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஐயா.

   நீக்கு
 14. ஆஹா..ஜிகிர் தண்டா ...நானும் மதுரையில் தான் முதன் முதலில் ருசித்தேன்....

  இப்பொழுது எல்லாம் திருச்சி அரசனிலே கிடைக்கிறது..

  எனக்கும் சின்னவருக்கும் favorite..

  சுவையும் அதிகம்..விலையும் அதிகம்...அங்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 15. 2010 ல் திருச்சியில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அருகில் ஒருமுறை..
  ஏண்டா குடித்தோம் என்றாயிற்று!.. - அத்தோடு சரி..

  திருச்சி செய்த களேபரத்தில் வேறங்கும் நினைத்துக் கூட பார்ப்பதில்லை!..

  சமீபத்தில் நெல்லையில்!.. அருமை!..

  ஊரில் இருந்து குவைத்திற்கு வரும்போது - பாதாம் பிசின், சப்ஜா விதை மற்றும் சில மூலிகைப் பொருட்களைக் கொண்டு வந்து விடுவேன்..

  அப்புறமென்ன - கலக்கல் தான்!..
  பதிவு - ஜிகர்தண்டா போல ஜில்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 16. இங்கே அது வெறும் ஐஸ்க்ரீம் தான்! த ம 9

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத்.

   நீக்கு
 18. துளசி: மதுரையி இருந்த போது குடித்ததுண்டு. அப்புறம் குடிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. நானே ஸ்வீட்டான பிறகு இதற்கெல்லாம் தடா தான் ஹாஹாஹா..

  கீதா: ஆதி சூப்பர் ஜிகிர்தண்டா...இதில் ஃப்ளேவர் கூட மாற்றி கலக்கலாம்...ஃபெல்லூடாவின் ஒரு வகைதான் இதுவும்....ஃபெல்லூடாவில் சேமியாவும் போடுஅதுண்டு....சில ஜவ்வரிசி கூட போடுகிறார்கள்...சப்ஜா விதையும் உண்டு...சூப்பர் ரெசிப்பி..மிகவும் பிடிக்கும் ஆனால் ஸ்வீட் கேர்ல் ஸோ நோ!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....